செவ்வாய், ஏப்ரல் 27, 2010

விழி தீண்டல் .....


விழி தீண்டல் .....

குடையை மீறி உனை தொடும் மழையை பொறுக்கின்றாய்
ஆடையை மீறி உனை தழுவும் தென்றலை பொறுக்கின்றாய்
சன்னல் திரை மீறி உனை எட்டும் நிலவை பொறுக்கின்றாய்
என் விழி தீண்டலை மட்டும் ஏனடி வெறுக்கின்றாய்


அன்பே என் தோற்றம் மிக மிக அழகானது உன் விழி தூரிகை பட்டதால்

தூண்டிலில் மீன்கள் மாட்டும் இது அதிசயமல்ல உன் விழி மீன்களில் தூண்டிலாய் நான் மாட்டினேன் இதுவே அதிசயம்

உன் விழி பார்வை செல்லும் இடமெல்லாம் நான் இருக்க பார்க்கிறேன்
மானின் வேகத்தையும் மிஞ்சும் உன் பார்வை வேகத்தின் முன் தோற்கிறேன்


உன் பார்வைக்கு பொருள் எந்த அகராதியிலும் கிடைக்கவில்லை
கிடைத்தது என்னவோ
உன் வெட்க புன்னகையில் தான்

ஆர்.வி .சரவணன்


4 கருத்துகள்:

  1. ஆஹா, காதல் என்றும் இனிமைதான்!!!



    ("சொல் சரிபார்ப்பை" எடுத்து விடுங்கள்
    சரவணன்.)

    பதிலளிநீக்கு
  2. //அன்பே என் தோற்றம் மிக மிக அழகானது உன் விழி தூரிகை பட்டதால்//....ஓ... அப்போ ஒரு அழகான ஓவியமா மாறிடுவீங்களா:)

    விழி தீண்டல் .....
    தலைப்பும் கவிதையும் ரொம்ப அழகா இருக்கு!

    பதிலளிநீக்கு
  3. //மானின் வேகத்தையும் மிஞ்சும் உன் பார்வை வேகத்தின் முன் தோற்கிறேன் //

    நல்ல கவிதை வரிகள் .

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்