வியாழன், ஏப்ரல் 23, 2015

ஓ காதல் கண்மணி


ஓ காதல் கண்மணி 


"என்ன படம் பார்த்தே ?"

"கண்மணி"

"பிடிச்சிருக்கா ?"

"ம். முதல் பாதி"

"ஏன் இரண்டாம் பாதி"

"ஒரு முடிவெடுக்க, ரொம்ப தான் பேசறாங்க"

"என்ன முடிவு"

"கல்யாணம் பண்ணிக்கலாமா னு பேசிக்கிறாங்க"

"அப்ப முதல் பாதியில"

"கல்யாணம் பண்ணிக்கணுமானு யோசிக்கிறாங்க"

"பிளஸ் என்ன அதை சொல்லு"

"கண்ணுக்குள்ளேயே நிக்கிற நித்யா,துள்ளலாய் துல்கர், மறக்க முடியாத லீலா சாம்சன், மறுக்கவே தோணாத கணபதி சாரி பிரகாஷ் ராஜ், சர்ச்ல ரெண்டு பேரும் சந்திச்சு பேசிக்கிற சீன், வசனங்கள்"

"மைனஸ்"

"முந்தைய படங்களின் (கேரக்டர்களின்) ஞாபகங்கள் , பரபரப்பில்லாத கிளைமாக்ஸ்"

"பி.சி ஸ்ரீராம்"

"மழையில் நனைய விட்டிருக்கார். காபி ஷாப் சீன அழகுபடுத்தியிருக்கார்"

"ரகுமான்"

"(மெண்டல்) மனதில் நம நம'

"ஆமா நீ ஏன் ரெண்டு வார்த்தைல பதில் சொல்லிட்டு இருக்கே ?"

"மணி படம் பார்த்த எபெக்ட்"

"அதுக்குன்னு படத்தோட டைட்டில கூட பாதியா சொல்வியா"

"ஓகே வை மட்டும் தானே விட்டேன்"

"அப்ப படம் உனக்கு ஓகே இல்லியா"

"ஓகே கண்மணி னு சொல்ல வச்சிருக்கணும்."


ஆர்.வி.சரவணன் 

3 கருத்துகள்:

 1. எதிர்மறைக் கருத்தை அருமையாகப் பகிர்ந்தவிதம் நன்று.

  பதிலளிநீக்கு

 2. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்