புதன், ஆகஸ்ட் 17, 2011

அ.....லட்சியமாய்
அ.....லட்சியமாய்


என்னவள் வரும் வழியினிலே

இரவின் அமைதியிலே

நிலவின் ஒளியினிலே

தென்றலது தழுவலிலே

அழகு மரங்கள் அசைவினிலே

மலர்கள் மணம் வீசையிலே

காதல் மனம் கவிதையிலே

பாடிய பாட்டின் போதையிலே

எனை ஆட்கொண்ட உறக்கத்திலே

கனவில் வந்த சொர்க்கத்திலே

உனை காண்பதே என் லட்சியமாய்

ஆனால் உன் பார்வையோ

அங்கும் அலட்சியமாய் .........


ஆர்.வி.சரவணன்

நான் எனது கல்லூரி காலங்களில் எழுதிய கவிதை இது
இதுவும் நான் தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டது தான்
5 கருத்துகள்:

 1. அங்கேயுமா? பாவம் நண்பா நீங்க...

  பதிலளிநீக்கு
 2. நல்லா எழுதியிருக்கிங்க!
  (இப்ப எழுதினதுன்னு சொன்னா மாட்டிக்குவோம்’னு கல்லூரி காலங்களில் எழுதினதுனு சொல்லிட்டீங்களா?!!!!!!!!!!!!!!!!..............)

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

  நல்லா எழுதியிருக்கிங்க!
  (இப்ப எழுதினதுன்னு சொன்னா மாட்டிக்குவோம்’னு கல்லூரி காலங்களில் எழுதினதுனு சொல்லிட்டீங்களா?

  நிஜமாகவே என் கல்லூரி காலங்களில் எழுதியது தான் தென்றல் சரவணன்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு காதல் கவிதை...
  மிகவும் ரசிக்கும்படியாய் அழகாய் எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ....
  (சேர வேண்டிய நபருக்கு இந்த தூது சேர்ந்துச்சா ,,,,????)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்