செவ்வாய், செப்டம்பர் 28, 2010

புது பைக் வேண்டும்


புது பைக் வேண்டும்
உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும் இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்தவுடன் அப்பா, அம்மா, அக்கா, தங்கை அனைவரும் என்ன புது பிரச்னையுடன் வருகிறாள் என்று தெரியாமல் மனசுக்குள் குமைந்தார்கள் என்ன பிரச்னையுடன் வருகிறாள் என்று தெரியவில்லையே என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள்

வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார் பிடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள்

அம்மா, "இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு இருக்கு அதுக்கு செலவு பண்ணனும் உன் அக்கா வீட்டுக்காரர்இருக்கார் மூத்த மாப்பிள்ளை.அவருக்கே வாங்கி தராத போது உன் புருசனுக்கு மட்டும் எப்படிம்மா வாங்கி தர முடியும்"


"இதை நான் சொல்லாமே இருப்பேனா சொல்லியாச்சு அதுக்கு எங்க மாமியார் சொல்றாங்க அவங்களுக்கு கேட்க துப்பில்லை அதுக்காக நாங்க கேட்காமே இருக்க முடியுமா னு சொல்றாங்க"


" கல்யாணம் பேசறப்ப இதெல்லாம் பேசவே இல்லையே உமா
பின்ன எப்படி அவங்க கேட்கலாம் " இது அப்பா

" அப்பா நீங்க இங்க உட்கார்ந்து கிட்டு ஆயிரம் பேசலாம் அங்க நான் படற அவஸ்தை எனக்கு தான் தெரியும்"

"இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு நிக்குதம்மா "இது அக்கா

"என்னோட கல்யாண வாழ்க்கையே நின்னு போயிடும் போல இருக்குக்கா"


"மாப்பிள்ளை என்ன சொல்றார்."இது அப்பா

"என் பிரெண்ட் அத்தனை பேருக்கும் வண்டி வாங்கி கொடுத்திருக்காங்க அவங்கவங்க மாமனார் வீட்டில் நான் மட்டும் தான் சைக்கிள் லே போறேன் எனக்கு அசிங்கமா இருக்கு ஒரு பைக் வாங்கி தர கூட உங்க வீட்டுக்கு யோக்கியதை இல்லியா னு கேட்கறார்."

"முடிவா என்ன தான் மா சொல்லியிருக்கே"

"வந்தா வண்டியோட வரேன் இல்லேன்னா என்னை தலைமுளுகிடுங்க னு சொல்லிட்டு வந்திருக்கேன்"

"அவங்க சொல்லலேன்னாலும் நீயே அவங்களுக்கு எடுத்து கொடுப்பே போலிருக்கு " இது தங்கை

"சும்மாருடி அவமானப்பட்டு வந்திருக்கிறது எனக்கு தான் தெரியும் உனக்கென்ன"

வேறு வழி இல்லாமல் உமாவின் அப்பா மாப்பிளையை கடைக்கு வர சொல்லி அவருக்கு பிடித்த பைக்கை பணம் செலுத்தி வாங்கி கொடுத்தார்.

உமாவின் புகுந்த வீட்டில் எல்லோருக்கும் வாயெல்லாம் பல்
"பரவாயில்லை இப்பவாவது வாங்கி கொடுக்குனும்னு மனசு வந்துதே உங்கப்பாவுக்கு "என்றார் மாமியார் பெருமூச்சுடன்

"கூடவே புது வண்டி வந்திருக்கு ரெண்டு பெரும் கோயிலுக்கு போயிட்டு வாங்க" என்று சொன்னார் மாமனார்.

உமாவின் கணவன் சந்தோசமாய் " வா உமா போயிட்டு வரலாம்" என்றான்.

"உமா நான் வரலைங்க நீங்க போயிட்டு வாங்க"

"ஏன் அப்படி சொல்றே"

"எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்ச காசுலே வந்த இந்த பைக்கை நான் அவரை படாதபாடு படுத்தி வாங்கிட்டு வந்திருக்கேன் நீங்க தானே ஆசைபட்டீங்க நீங்களே போயிட்டு வாங்க நான் ஆசைப்படலே

"உங்களுக்கு மாமனார் வாங்கி
கொடுத்த வண்டிலே போறது தான் கௌரவம்"
ஆனா எனக்கு நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுலே வாங்கின இந்த சைக்கிள் லே போறது தான் கௌரவம் "

என்று சொல்லிவிட்டு தலை நிமிர்ந்து வீட்டினுள் செல்லும் அவளை பார்த்து அவர்கள் தலை குனிந்தனர்.

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, செப்டம்பர் 24, 2010

பனி விழும் இரவு


பனி விழும் இரவு

மனம் கவர்ந்த பாடல்கள் 3

மௌன ராகம் படத்தில் இடம் பெற்ற பனி விழும் இரவு ...............

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்றாலும் இந்த பாடலில் இளையராஜா செய்திருக்கும் ஜாலம் தனித்துவம் வாய்ந்தது போல் தோன்றும் (எனக்கு).

இந்த பாடல் ஆரம்பத்தில் அவர் இசையை தொடங்கும் போதே நம்மை கை பிடித்து பனி விழுந்து கிடக்கும் இரவுக்கு அழைத்து சென்று விடுவார்

கூடவே லா...லா...லா... என்று பெண்களின் கோரஸ் நம்மை வரவேற்பது போல் தோன்றும் இனிமை. அதை தொடர்ந்து S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி குரல்களில் அதே வசீகரம் நம்மை மயிலிறகாய் வருடும் அதிசயம்.

பல்லவி முடிந்தவுடன் வரும் இசை நாம் ஒரு அடர்ந்த மூங்கில் காட்டுக்குள் இருப்பதாய் தோன்றும் ஒரு பிரமை அடடடா ......... இந்த பாடலும் கூட ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் பிரிந்து வாழும் கணவன் மனைவி இணைந்து வாழ ஆசைபடும் போது வார்த்தைகளையும் சந்தர்ப்பங்களையும் தேடும் போது தாஜ்மஹால் பின்னணியில் வரும் இந்த பாடல் காட்சியில் அவர்கள் இணைய உதவி செய்வதாய் அமையும் இந்த பாடல் பிரிந்திருக்கும் தம்பதிகளுக்கு ஒரு தேவாமிர்தம் என்று சொல்லலாம்.

இளையராஜா என்ற இந்த இசை சக்கரவர்த்தியின் இசை ஜாலங்கள் தான்
நம் மனதை எப்படியெல்லாம் வசீகரித்திருக்கின்றன .


வீடியோ லிங்க் முகவரி

http://www.youtube.com/watch?v=25T3nmhlMQM

இந்த பாடலின் படம் மௌனராகம்

நாயகன் நாயகி மோகன் ரேவதி

இந்த பாடல் எழுதியது வாலி

பாடல் பாடியவர்கள் S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி

இயக்கம் மணிரத்னம்

படம் வெளியான ஆண்டு 1986


ஆர்.வி.சரவணன்

வியாழன், செப்டம்பர் 23, 2010

ஆயிரம் ஆண்டு அதிசயம்

ஆயிரம் ஆண்டு அதிசயம்ஆயிரமாவது ஆண்டை

கொண்டாடும்

தரணிபோற்ற

உயர்ந்து நிற்கும்

தமிழரின் பெருமையே

மாமன்னன் ராஜராஜ சோழன்

திருப்பணியில்

உருவான

அற்புதமே

உன்னை

பெருமையுடன் வணங்குகின்றோம்

********************************************************************
தஞ்சை பெரிய கோயில் சில குறிப்புகள்

06-01-2010 ஆனந்த விகடன் இதழிலிருந்து

1004 ம் வருடம் துவங்கி 1010 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது

யுனெஸ்கோ உலக மரபு சின்னமாய் இதனை அங்கீகரித்தது

கோயில் உருவாக்கத்திற்கு நிதி யை கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அனைவர் பெயரையும் என் பெயருக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல்வெட்டில் பொரிக்க ஆணையிட்டார் ராஜராஜன்

கோயிலின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் பீடம் 3அடி உயரமும் அடி55 சுற்றளவும் கொண்டது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த பீடத்தை செய்வதற்கு குறைந்த பட்சம் 500 டன் எடையுள்ள பாறை மலையில் இருந்து வெட்டி நகர்த்தி கொண்டு வந்திருக்க வேண்டும்

நன்றி ஆனந்த விகடன்

ஆர்.வி.சரவணன்

சனி, செப்டம்பர் 18, 2010

சில நொடி சிநேகம்


சில நொடி சிநேகம்

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்த சரண் கூட்டத்தின் இடையே மிதந்து சென்று அரியலூர் பேருந்து நிலையம் செல்லஆட்டோ பிடித்தான்.
நான்கைந்து பேருடன் ஆட்டோவில் அமர கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி
இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்தான் .

ஆட்டோ கிளம்பியவுடன் அருகில் அமர்ந்திருந்தவர்
" தஞ்சாவூர் செல்ல வேண்டும் பஸ் நிறைய இருக்குமா "என்று கேட்டார்.

சரண் "நிறைய இருக்குங்க "என்றான்.

உடனே "தஞ்சாவூர் போய் டிபன் சாப்பிட ஹோட்டல்
திறந்திருக்குமா" என்றும் கேட்டார்.

"திறந்திருக்கும் "என்றான்.

ஆட்டோ பஸ் ஸ்டான்ட் வந்தவுடன் சரண் இறங்கினான் கூடவே அவரும் இறங்கினார் .

"தஞ்சாவூர் போகும் பஸ் எங்கே நிற்கும்" என்று கேட்டார்.

சரண் "நானும் தஞ்சாவூர் தான் போறேன் வாங்க" என்று அழைத்து கொண்டு பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.

அங்கே புறப்பட இருந்த இரண்டு பேருந்துகளும் கூட்டத்தால் நிரம்பி வழியவே சரண்" இதுலே ஏற முடியாது. அடுத்த பேருந்து உடனே வரும் அதுலே போகலாம்" என்றான்.

அவரும் சரி என்றவர் அடுத்த பேருந்துக்கு இருக்கும் கூட்டம் பார்த்து
" நாம வாசலுக்கு போயிடலாம் பஸ் உள்ளே வரும் போது உடனே ஏறிடலாம்" என்றார்.
அவர் சொல்வது சரியென படவே சரண் "சரி வாங்க" என்று அவருடன் சென்றான்.
அங்கு போய் காத்திருக்கையில்அவர்தான்சென்னையிலிருந்து
திருமணத்திற்க்காக வந்திருப்பதாகதெரிவித்தார்.

சரண்" நானும் தான் "என்று சொன்னான்.
அவர் "ஒரு டீ சாப்பிடலாம் வரீங்களா" என்றார்.

அவனுக்கும் சாப்பிடலாம் போலிருந்தாலும்நம்மால் அவருக்கு ஏன் செலவு என்று கருதி வேண்டாம் என்று மறுத்தான்.

"நீங்க போய் சாப்பிட்டு வாங்க" என்றான்.அவர் சென்றார்.

அப்பொழுது தஞ்சாவூர் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில ஒரு பேருந்து நிற்பது
தெரிய வர சரண் உடனே சென்று நின்ற கண்டக்டரிடம் கேட்டான்.
அவர் ஆமாம் திருச்சி போக வேண்டியது தஞ்சாவூர் போக போகுது ஏறிக்கங்க என்றார்
அவன் உடனே சென்று ஏறி இடம் பிடித்து அமர்ந்து, கூட வந்தவருக்கும் ஒரு இடம் போட்டு வைத்து கொண்டு பேருந்தின் ஜன்னல் வழியே அங்குமிங்கும் அவர் வருகிறாரா என்று பார்த்துகொண்டு அவருக்காக காத்திருந்தான்.

டீ சாப்பிட்டு விட்டு வந்த அவர் கூட வந்தவனை காணுமே என்று தேடியவர் கண்ணில் ஒரு தஞ்சாவூர் செல்லும் பேருந்து வர வேகமாய் சென்று பேருந்தில் ஏறி அமர்ந்து அவனுக்கும் சேர்த்து இடம் போட்டு வைத்து கொண்டு அவனுக்காக காத்திருந்தார்.

ஆர்.வி.சரவணன்


செவ்வாய், செப்டம்பர் 14, 2010

மாலை சூடும் வேளை ....மனம் கவர்ந்த பாடல்கள் 2

மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை .........

இந்த பாடல் இடம் பெற்ற படம் நான் மகான் அல்ல
இந்த படத்தில் இடம் பெற்ற மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை .........

இந்த பாடல் ஆரம்பத்தில் ஜானகி ஆ.....ஆ....ஆ..... என்று ராகம் இசைக்க தொடர்ந்து வரும் இசை நம்மை கொண்டு செல்லும் இடம் ஒரு பகல் நேரத்து மதிய வேளையில் ஒரு கிராமிய ஆற்றங்கரையோரம்அந்த பாடல் முடிந்த பின்னும் அதே இடத்தில் இருந்து வர மனம் மறுக்கும்

இந்த பாடலில் உன்னிப்பாய் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த பாடல் ஆரம்பிக்கும் போது டு...டு...ட்டு...டு... என்று உடுக்கை ஒலி போல் கேட்க ஆரம்பிக்கும் அது பல்லவி முடிந்து அதை தொடர்ந்து வரும் இசையிலும் சரணத்திற்கு பின் வரும் பல்லவியிலும் இது வரும் பல்லவி வரும் இடத்தில் மட்டும் இந்த உடுக்கை ஒலி வரும் எத்தனையோ முறை நான் இந்த பாடலை கேட்டிருந்தாலும் சமீபத்தில் இந்த பாடலை கேட்ட போது இந்த ஒலியை கவனித்தேன் நீங்களும் கவனியுங்கள் பாடல் முடிந்த பின்னும் இந்த ஒலி நம்முள் கேட்டுகொண்டே இருக்கும்

இந்த பாடலில் வரும் வரிகளில் கோடையில் நான் ஓடை தானே வாடையில் நான் போர்வை தானே .......... எனக்கு பிடித்த வரிகள்

எப்பொழுது கேட்டாலும் நம்மை அமைதியின் சிகரத்திற்கு அழைத்து செல்லும் இந்த ராக தேவன் இளையராஜா வின் இசை வார்ப்பை என்னவென்று சொல்ல ....

நாயகன் நாயகி சூப்பர் ஸ்டார் ரஜினி ராதா

இந்த பாடல் எழுதியது வைரமுத்து

பாடல் பாடியவர்கள் S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி
தயாரிப்பு கவிதாலயா (கே.பாலச்சந்தர்)

இயக்கம் S.P.முத்துராமன் படம் வெளியான ஆண்டு 1984

ஆர்.வி.சரவணன்

சனி, செப்டம்பர் 11, 2010

ஒரு சுவாரஸ்யம்


அனைத்து
வலை பதிவுலக
நண்பர்களுக்கும்
விநாயகர் சதுர்த்தி
நல்
வாழ்த்துக்கள்என் நண்பர் T.N. ஸ்ரீதர் அனுப்பிய மின்னஞ்சல் சுவாரஸ்யம் ஒன்று

உலகின் அரசன் நீ


மிகவும் அபாயகரமானவன் நீமற்றவரையும் உலகத்தையும் ஆள்பவன் நீ


பிறரை நேசிப்பவன் நீ


வீட்டுக்கு சென்றால் மனைவிக்கும் மனைவியோ நீ


ஆர்.வி. சரவணன்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கு ரம்ஜான் தின நல் வாழ்த்துக்கள்


செவ்வாய், செப்டம்பர் 07, 2010

சூப்பர் ஸ்டார் ஆர்ட்

சூப்பர் ஸ்டார் ஆர்ட்
என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த சில ஓவியங்களை எனது தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன் அதற்க்கு முன்பு (சென்ற வருடம்) அவன் ஆனந்த விகடன் அட்டைபடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி யை பென்சில் ஓவியமாக வரைந்திருந்தான்.

நான் அதை என் வழி தளத்திற்கு அனுப்பினேன் என்வழி வினோ பாராட்டி அதை தளத்தில் வெளியிட்டார். பதிவுலக நண்பர்களும் ரஜினி ரசிகர்களும் உற்சாகத்துடன் பாராட்டினர். அதை என் தளத்தில் வெளியிடலாம் என்று அந்த ஓவியத்தையும் ஆனந்தவிகடன் அட்டைப்படத்தையும் இதோ வெளியிட்டுள்ளேன்

என்வழியில் வெளியான இந்த இடுகையை சென்று பார்க்க, கமெண்ட் படிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த முகவரியில் சென்று படிக்கவும்http://www.envazhi.com/?p=13499S. ஹர்ஷவர்தன்
இதை வெளியிட்டு ஊக்கபடுத்திய என்வழி வினோ அவர்களுக்கும்
பாராட்டிய அனைத்து இதயங்களுக்கும் எனது நன்றிஆர்.வி.சரவணன்

சனி, செப்டம்பர் 04, 2010

இன்க்ரீமென்ட்

இன்க்ரீமென்ட்

"சார் சார் கொஞ்சம் பார்த்து போடுங்க சார் விலைவாசி ஏறிடுச்சி"

"நோ நோ இதுக்கு மேல கண்டிப்பாக முடியாது "

கெஞ்சுவது கிளார்க் சேகர்
மிஞ்சுவது ஜெனரல் மேனேஜர் பரத்

அன்று அலுவலகத்தில் இன்க்ரீமென்ட் பேசி கொண்டிருந்தார்கள் . எல்லா ஊழியர்களும் எப்படியாவது நாம் நினைக்கும் இன்க்ரீமென்ட் வாங்கி விட வேண்டுமென்று மிகுந்த ஆர்வமாய் இருந்தனர் . மேனேஜர் முதலாளி சொல்லியிருப்பது போல் இழுத்து பிடித்து இன்க்ரீமென்ட் போடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

சேகரும் விடாபிடியாய் 500 இன்னும் கூட வாங்கி விட வேண்டும் என்று போராடினான். முடியாமல் ஏமாற்றமாய் வெளி வந்தான்.

மேனேஜர் M.D அறைக்குள் நுழைந்தார். சொன்னதை நிறைவேற்றிய திருப்தியுடன் .

"சார் நீங்க சொன்னது போல் பேசி முடிச்சிட்டேன் எல்லாருக்கும். சேகர் தான் கொஞ்சம் முரண்டு பிடிச்சார் "என்றார்.

"சில பேருக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாதுன்னு தான் சொல்வாங்க நீங்க அதை கண்டுக்காதீங்க" என்று மேனேஜர் கொடுத்த பேப்பர் வாங்கி பார்த்தவர்
"குட் குட் சரியான மேனேஜர் தான் எனக்கு வந்துள்ளீர்கள்" என்று பாராட்டினார்

இப்போது பரத்திற்கு இன்க்ரீமென்ட் எழுதி கொடுத்தார்.
அதை பார்த்த மேனேஜர் அதிர்ச்சியாய், " சார் இதை நான் எதிர்பார்க்கலே
எனக்கு ஒரு 2000 ஆவது கூட போட்டு கொடுங்க ப்ளீஸ் "என்றார்.

"நீங்களும் அவங்களை போல் கேட்காதீங்க பரத்"

சார் சார் கொஞ்சம் பார்த்து போடுங்க சார் விலைவாசி ஏறிடுச்சி

நோ நோ இதுக்கு மேல கண்டிப்பாக முடியாது
இப்போது

கெஞ்சுவது மேனேஜர்
மிஞ்சுவது M.D

ஆர்.வி.சரவணன்

புதன், செப்டம்பர் 01, 2010

அன்பே......


அன்பே......


அன்பே நீ எனை கடந்து சென்ற பின்னும்
உன் நினைவுகள் மட்டும் எனை சுற்றி சுற்றி பின்னும்

---------------
அன்பே நீ மண்ணில் பதித்து சென்ற காலடி சுவடு கூட எனை கவிதைக்கு தூண்டுகிறது

---------------
அன்பே
உன் காதல் பார்வை எனை அள்ளி
உன் அருகில் வைக்கிறது
உன் வெட்கமோ எனை தள்ளி
எதிரில் வைக்கிறது

------------------

அன்பே
உன் வார்த்தைகளுக்கு நான் செவி கொடுக்கவில்லை
உண்மை தான்
ஆனால் உன் உதடுகளின் அசைவுக்கு
என் உயிரையே
அல்லவா கொடுத்து விட்டேன்

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்