புதன், மார்ச் 31, 2010


என் நண்பர் T.N. ஸ்ரீதர் அவர்கள்
திருக்குறள் புதிய அதிகாரம் 134 (IT அதிகாரம்)என்ற பெயரில் ஒரு மெயில் அனுப்பியிருந்தார் அதை தான் உங்கள் பார்வைக்கு மேலே நான் தந்திருக்கிறேன்

திங்கள், மார்ச் 29, 2010

சும்மா..............ஜாலிக்கு


சினிமா ரசிகனான நான் நம் தமிழ் திரைப்படங்களின் புகழ் பெற்ற
வசனங்களை வைத்து ஜாலியாக (நன்றாக கவனிக்கவும் கேலியாக அல்ல) சில கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன்
இந்தவசனங்களை எழுதிய வசனகர்த்தா,நடித்த நடிகர்கள், அவர்கள் தம் ரசிகர்கள் (அதில் நானும் ஒரு ரசிகன் )
அனைவரும் இதை ஜாலியாக எடுத்து கொள்ளுங்கள்
* ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ...................
இருக்கட்டுமே கூடவே கள்ளி செடியும் அல்லவா வளர்த்தா
பெண் சிசுவுக்காக* என் காதலி உங்கள் மனைவியாகலாம்
உங்கள் மனைவி என் காதலியாக முடியாது

இப்படிசொல்லி தப்பித்து அடுத்த பிகர் க்கு காதல் விண்ணப்பம் போட்ற
வேண்டியது தான்* ரெண்டு பழத்துல ஒன்னு இந்தாஇருக்கு
இன்னொன்னு எங்கே
பழனிக்கு போயிருக்கு
அநேகமா இந்நேரம் அது பஞ்சாமிர்தம் ஆகியிருக்கும்* நான் முடிவெடுதேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
உங்க பேச்சை நீங்களே கேட்கலேன்னா நாங்க மட்டும் எப்படிங்க்னா கேட்க முடியும்
* உட்கார்ந்து யோசிப்பாங்களோ
இல்லேயோசிச்சிட்டு அப்புறம் தான் உட்காருவோம்


* என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன்கறிங்கலேமுதல்லே உங்க கேரக்டர் என்னன்னு சொல்லுங்க புரிஞ்சிக்க முடியுமா னு ட்ரை பண்றோம் அப்படியே புரிஞ்சாலும் ஒன்னும் ஆக போறதில்லே
* என்னை பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு
மெட்ராஸ் வந்துருக்கிற நேரமா பார்த்து கண்ணை பார்க்க சொல்றியே
* நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் னு யாருக்குமே தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்திலே கரெக்ட்டா வருவேன்
2011 நீங்க வர வேண்டிய நேரம் தான் அதனாலே கண்டிப்பா வந்துருங்க

next meet pannuvom ...........

வியாழன், மார்ச் 25, 2010


அன்பே


சிறுவயதில் விளையாடிய பொழுதுகளில்


நாம்எங்கு சென்றாலும் நிலா தொடர்வதை கண்டு அதிசயித்தோம்


நான் வாசலிலும் நீ பின் வாசலிலும் நின்று


நிலவை உற்று கவனித்தோம்


நிலா


அங்கும் இருந்தது இங்கும் இருந்தது


இரு பக்கமும் இருப்பதாக சொல்லி கொண்டதில்


இருவர் சொல்வதும் பொய்யென்று சண்டையிட்டு கொண்டோம்


இன்று அதை நினைக்கையில் நாம் சிரித்து கொள்கிறோம்


நாம் சிரிப்பது இருக்கட்டும்


அன்று


நிலா நம்மை பார்த்தல்லவா சிரித்திருக்கும்


r.v.saravanan

  ஈரம் படத்துக்கு கடவுள் தருவார் வெற்றி வரம்


  ஈரம் படத்தின் ஆடியோ விழா படங்களை என்வழி .காம் மில் பார்த்த நான் அதற்கு கமெண்ட்ஸ் முன்பே எழுதி வைத்திருந்தேன் .

  அதை இப்போது வெளியிட்டிருக்கிறேன் என்னடா இவ்வளவு தாமதமா பதிவு போட்டிருக்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம் .

  நம் தலைவர் ரஜினி அவர்களின் செய்திகள் நமக்கெல்லாம்எப்போதும் இனிப்பான விஷயம்

  படங்கள் என்வழி வினோ

  கமெண்ட்ஸ் நான் r.v.saravanan

  தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் 1. அரசியல்வாதி மாதிரி இருக்கேனா டோன்ட் வொர்ரி அப்படியே வந்தாலும் நான் எல்லோருக்கும் ஒரு முன் மாதிரியா தான் இருப்பேன்
 2. ஈரமில்லா இதயங்களை ஈரமாக்க இந்த தண்ணீர் போதாதே
 3. புகழ் மாலைக்கு நான் ஏங்குவதில்லை

 4. ருத்ராட்சம் இல்லாமல் நான் இருப்பதுமில்லை


 5. சிங்கத்தின் பக்கங்களில் இரண்டு சங்கங்கள்


 6. நான் நட்புக்காக உயிரை கொடுப்பவன்


 7. நீங்கள் நட்புக்காக உயிரை எடுப்பவர்

 8. ஈரம் படத்துக்கு கடவுள் தருவார் வெற்றி என்கிற வரம்

ஞாயிறு, மார்ச் 21, 2010

அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான் நான் புரிந்து கொண்டது அன்று தான்அவருக்கு முன்னால் எல்லோரும் ஒன்று தான்


நான் புரிந்து கொண்டது அன்று தான் (கடவுள் தரிசனம் )சில மாதங்களுக்கு முன் நானும் என் நண்பனும் திருப்பதி சென்றிருந்தோம்

அங்கே சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று உள் பிரகாரத்தை அணுகிய போது ஆந்திர மாநில அமைச்சர் தன் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வந்தவுடன் உடனே வரிசையை நிறுத்தி விட்டனர்

அப்போது நான் என் மனதிற்குள் பெருமாளே உன்னிடத்தில் நாங்கள் எல்லோரும் சமம் அப்படியிருக்கும் போது ஏன் இந்த பாரபட்சம் எங்களை போன்ற சாதாரண பக்தர்களுக்கு இது போன்ற தரிசனம் கிடைக்காதா என்று ஆதங்கப்பட்டேன்.

அப்பொழுது தீடிரென்று தடுப்பு நீக்கி ஒரு முப்பது பேர் இருப்போம். எங்களை மட்டும் அனுமதித்து மீண்டும் வரிசையை நிறுத்தி விட்டனர்.

எங்களை மட்டும் சாமியின் சந்நிதானத்தில் நிறுத்தி வைத்தனர் ஒரு 5 நிமிடங்கள் வரை நாங்கள் சந்நிதானத்திலேயே இருக்கும் படி நேரிட்டது(காரணம் அமைச்சர் உள் பிரகாரத்தை வலம் வருவதால்).

என் வாழ்நாளில் நெரிசல் இல்லாமல் 5 நிமிடங்கள் நின்று நான் சாமி கும்பிட்டது அன்று தான்.


நான் ஆதங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் நான் நினைத்ததை நிறைவேற்றி, எல்லோரும் எனக்கு ஒன்று தான் நீ நினைத்தது தான் தவறு என்று சொல்லி வெங்கடாஜலபதி என்னை பார்த்து சிரிப்பதாகவே எனக்கு பட்டது
மெய் சிலிர்த்தேன் பரவசமானேன்

என் உதடுகள் தானாகவே உச்சரித்ததுஓம் நமோ நாராயணா ........சனி, மார்ச் 20, 2010

கவிதை சோலை


வாசலில் கோலமிட்டும் வெள்ளி முளைத்தும் முதியோர் நடை பயின்றும் புலராத அதிகாலை பொழுது நீ சாலையில் இறங்கியதும் புலர்ந்தது அன்பே

கடவுள் தரிசனம்

ஓம்
ஸ்ரீ வீரனார் துணை
ஸ்ரீ விநாயகா துணைஎனக்கு தலை(க்கு ) கனம் ஏற்படும்போதெல்லாம் இறைவன் துன்பசுமையை என் மேல் ஏற்றுகிறார் சுமை தாளாது நான்

அவர் தம் பொற் பாதங்களில் சரணடைகிறேன் என்ன மாயம்

என் துன்பச்சுமை அகல்கிறது

கூடவே

என் தலைகனமும்


ஓம் நமோ நாராயணா


ஆர்.வி. சரவணன்