புதன், ஏப்ரல் 21, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவு

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த
சைவ கொத்து பரோட்டா அவர்களுக்கு நன்றி

எனக்கு பிடித்த படங்களில் பத்து படங்களை
இங்கே தொகுத்திருக்கிறேன்புது வசந்தம்
டைரக்டர் விக்ரமன் இயக்கிய முதல் படமான இது ஆணும் பெண்ணும் நண்பர்களாக தொடர்ந்து பழக முடியும் என்பதை அருமையை சொன்ன இந்த படம் எனக்கு பிடித்த படம்ராஜ்குமார் இசையும் படத்திற்கு ஒரு பிளஸ்
பாயிண்ட்

ரமணா
இந்த படத்தின் திரைக்கதை என்னை பிரமிக்க வைத்தது vijaykandh இந்த படத்தில் வசனம் அதிகமில்லாமல் அமைதியாக கலக்கியிருந்தார் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது

எதிர்நீச்சல்
நாகேஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு காலனியில் நடைபெறும் இந்த கதை எல்லோருக்கும் வேலை பார்த்து விட்டு படித்து முன்னுக்கு வரும் ஒரு ஆணின் கதை அடுத்தாத்து அம்புஜத்தை ,வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் பாடல்கள் இந்த படத்தில் மிக பிரபலம் k. பாலச்சந்தர் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த ஒன்று

குடியிருந்த கோயில்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து வெளி வந்தஇந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் துள்ளுவதோ இளமை ,ஆடலுடன் பாடலை கேட்டு மனதை மயக்கும் பாடல்கள்

கர்ணன்
நடிகர் திலகம் சிவாஜி கர்ணனாக நடித்து வெளி வந்த இந்த புராண காலத்து
படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் கிருஷ்ணனாக நடித்திருந்த ராம ராவ் வெகு பொருத்தம் சிவாஜி அவர்கள் கர்ணனாகவே இந்த படத்தில் வாழ்ந்திருந்தார்
பாடல்களின் வெற்றியை சொல்லவும் வேண்டுமா

பதினாறு வயதினிலே
பாரதிராஜா இயக்கிய முதல் படம் ரஜினி ,கமல் ,ஸ்ரீதேவி அந்தந்த கேரக்டராகவே மாறியிருந்த இந்த படம் இயல்பான கிராமத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது இளையராஜா வின் பாடல்களும் படத்திற்கு ஒரு பலம்

தளபதி
ரஜினி, மம்முட்டி,ஷோபனா நடித்த இந்த படம் இயக்கியது மணி ரத்னம் மகாபாரத கதபதிரங்களை கொண்டு நவீன யுகத்தில் இப்படி ஒரு படம் செய்ய முடியுமா என்று என்னை வியக்க வைக்கும் இந்த படம் நான் எப்போது பார்த்தாலும் இளையராஜா வின் இசையில் பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மயக்க வைக்கும்

அந்த ஏழு நாட்கள்

இந்த படத்தின் திரைக்கதை என்னை வியக்க வைத்த ஒன்று பாக்யராஜ் அவர்களின் பாலக்காட்டு மாதவன் நடிப்பும் படத்தின் வசனங்களும் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது

ஆண் பாவம்
இந்த படம் ஆரம்பித்திலிருந்து கடைசி வரை காமெடி தான்
பாண்டியராஜன் இயக்கிய இந்த படத்தில் அவரும் நடித்திருந்தார்
இளையராஜா இசையில் காதல் கசக்குதையா , குயிலே குயிலே பாடல்களும் வெகு பிரபலம் இந்த படம் முறை பார்த்தாலும் அலுக்காது

பசங்க

சமீபமாய் வந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது முழுக்க முழுக்க சிறுவர் சிறுமியரை கொண்டு பள்ளி வாழ்க்கையை மையமாய் வைத்து அதில் காதலர்களையும் சேர்த்து பண்ண முடியமா என்று என்னை வியக்க வைத்த அறிமுக இயக்குனர் பாண்டி ராஜ் இந்த படம் எனக்கு சலிக்காத படம்


தொடர் பதிவுக்கு அழைத்த அனைவருக்கும் நன்றி


8 கருத்துகள்:

 1. நல்ல தேர்வு, இதில் கர்ணன் மட்டும்
  நான் இன்னும் பார்க்கவில்லை.  word verification - ஐ எடுத்து விடுங்கள், நன்றி.

  பதிலளிநீக்கு
 2. புது வசந்தம் படம் வந்து ரிலிஸ் ஆன முதல் நாளே பாத்தேன். தியேட்டரில் எண்ணி 18 பேர்தான் இருந்தாங்க. படம் நல்லாருக்குன்னு வீட்ல சொன்னதும் எல்லாரும் போனாங்க. ஒரு வாரம் கழிச்சிதான் ஹவுஸ் ஃபுல் போர்டு போட்டாங்க படம் 100 நாள் ஓடிச்சி. சூப்பர் படம்

  மற்ற படங்களும் ஓகே!!

  பதிலளிநீக்கு
 3. அந்த ஏழு நாட்கள், எதிர்நீச்சல், தளபதி இவையெல்லாம் நானும் மிகவும் ரசித்த படங்கள்... ரமணா, பசங்க கூட பிடித்த படங்கள்தான்... மற்ற படங்களை நான் பார்த்ததில்லை...
  இந்த பதிவின் என்னுடைய பதிப்பை படிக்க கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2010/04/10.html

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு தேர்வு!
  இதில் எனக்கு பிடித்தது தளபதி, ஏனோ பிடிக்காமல் போனது ரமணா!

  பதிலளிநீக்கு
 5. பத்து படங்களும் தேர்வும் அருமை,

  புதுவசந்தம், ரொம்ப நல்ல இருக்கும், எதிர் நீச்சல் ஆண்பாவம் மற்ற்ற தேர்வுகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 6. நல்ல ரசனை சரவணன். இதில் உள்ள அனைத்துப் படங்களுமே எனக்கும் பிடித்ததுதான்.

  வினோ

  பதிலளிநீக்கு
 7. இதில் உள்ள படங்கள் அனைத்தும் எனக்கு பிடித்தது தான் :-) ஓகே னு சொல்ற படமென்றால் புதுவசந்தம் சொல்லலாம். மற்றபடி அனைத்து படங்களும் ரொம்ப படிக்கும்.. எதிர்நீச்சல் எல்லாம் குறிப்பிட்டு இருக்கீங்க! :-) நாகேஷ் நடித்த படத்தில் இதுவும் சர்வர் சுந்தரமும் அவருக்கு அதிக பெருமை சேர்த்த படங்கள்

  பதிலளிநீக்கு
 8. எனக்கு பிடித்த பத்துபடங்கள் தொடர் பதிவுக்கு கருதுரையிட்ட அனைவருக்கும்
  என் நன்றி இந்த படங்களை பற்றி இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் என்று இருந்தேன் நேரமின்மையால் விளக்கமாக எழுத முடியவில்லை saivakothuparotta
  vino
  giri
  jialani
  prabhakaran
  jaleela
  priya
  உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது
  என் நன்றி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்