செவ்வாய், செப்டம்பர் 22, 2015

தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015
தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு திருவிழா - 2015ஒரு குடும்பம் என்றிருந்தால் உறவுகள்  எல்லோரும் ஒவ்வொரு ஊரில் வசித்து கொண்டிருப்பார்கள்.  அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது என்னவோ தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை நாட்களும் இல்லத்தில் நடைபெறும் மற்ற விழாக்களும் தான் . அப்படி சந்திக்கும் நாளன்று இல்லம் கோலாகலமாக தான் இருக்கும். பள்ளி வாழ்க்கையில் வருடத்தின் இறுதியில் வரும் டீ பார்ட்டி நிகழ்வு  கூட மாணவ மாணவியருக்கு  வருடத்தின் முக்கிய நாளாக அமைந்து விடும். வேலை விசயமாக பிரிந்திருந்த நண்பர்கள் எல்லாம் ஜாலியாக டூர்  கிளம்பும் போது புதியதாக சிறகுகள் முளைத்து கொண்டது போல் ஒரு எண்ணம் தோன்றும். அப்படி ஒரு நிகழ்வு தான்   இந்த வலைபதிவர் திருவிழாவும் என்பதே எனது  கருத்து .எந்த ஒரு நிகழ்வையும் நான் சாதாரணமாக அணுகியதில்லை.  அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முயற்சிப்பேன். இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இரு வலைபதிவர் திருவிழாக்களில் நான் கலந்து கொண்டு எழுதிய அனுபவ  பதிவை (படிக்காதவர்கள் ) படித்தால்  என் அணுகுமுறை  தெரிந்து கொள்ள  வாய்ப்பிருக்கிறது 

பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி

பதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை

முதல் இரண்டு வருடம் சென்னையிலும் மூன்றாம் வருடம் மதுரையிலும் நடைபெற்ற நம் வலைபதிவர் திருவிழா இதோ இந்த வருடம் புதுக்கோட்டையில் மையம் கொண்டிருக்கிறது .கவிஞர் . திரு  முத்து நிலவன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இவ் விழா குறித்த தகவல்களை இங்கே பார்ப்போம்.

11-10-2015 ஞாயிறு  அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
நடைபெற உள்ள  வலைபதிவர் திருவிழா 2015 ன்  தகவல்களை அறிந்து கொள்ள என்றே ஒரு புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த தளத்தின் முகவரி

http://bloggersmeet2015.blogspot.in/

அடுத்து இந்த விழாவில் பங்கு கொள்ளும் நண்பர்கள் தங்களை 
பற்றிய விபரங்களை  இந்த  இணைப்பில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில்   நிரப்பி அனுப்ப  வேண்டும்.


http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

விழாவில் நூல் வெளியீடு மற்றும் குறும்படங்கள் வெளியீடு 
தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள
வேண்டிய மின்னஞ்சல்  முகவரி 

bloggersmeet2015@gmail.com

விழாவுக்கு நிதி அவசியமான ஒன்று. எனவே இவ் விழாவுக்காக வலைபதிவர்கள்  நன்கொடை வழங்க, பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு எண் உள்ளிட்ட தகவல்கள், மற்றும் நன்கொடை அளித்தவர்கள் பற்றி இந்த இணைப்பில் அறிந்து கொள்ளலாம் 

http://bloggersmeet2015.blogspot.com/2015/08/welcome.html


விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஒரு  புதிய முயற்சியாக வலைபதிவர் கையேடு 2015 வழங்கப்படவுள்ளது. எண்ணற்ற வலைத் தளங்களும் அதன் பதிவர்களும் அவர்களின் சிறப்புகளும் பற்றி  அறிந்து கொள்ள உதவும் இந்த கையேட்டில் பதிவரின்  பெயர் தளத்தின் முகவரி அவரை  பற்றிய குறிப்புகள் மற்றும் அவரது படைப்புகள் பற்றிய விளக்கத்துடன்  மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும்.

விழாவின் இன்னும் ஒரு சிறப்பம்சமாக, வலைபதிவர் திருவிழா 2015 மற்றும் புதுகோட்டை தமிழ் இணைய கல்வி கழகம் இணைந்து நடத்தும் மின் தமிழ் இலக்கிய போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப் போட்டியில் கலந்து  
கொள்ள விரும்பும் நண்பர்கள் போட்டி தொடர்பான தகவல்களை 
இந்த இணைப்பில் சென்று அறிந்து கொள்ளலாம்.
  
http://bloggersmeet2015.blogspot.com/2015/09/50000.html

 வலைபதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற  வேண்டி முயற்சிகளை முன்னெடுத்து உழைத்து கொண்டிருக்கும் விழா குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.


முதல்  வலைபதிவர் திருவிழாவில் நான் கலந்து கொள்ள காரணமானவர் கரைசேரா அலை அரசன். இதில் நான் கலந்து கொள்ளும் நாள் வரை எனக்கு அரசன் மட்டுமே அறிமுகம். அதற்கு பின் எனக்கு எவ்வளவு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதை இப்போது எண்ணுகையில் ஒரு கணம் வியப்பு மேலிடுகிறது. முதல் திருவிழாவில் கலந்து கொண்ட அதே ஆர்வம்  அதே உற்சாகம்  இம்மியளவும் குறையாமலே இதோ இந்த வருட வலைபதிவர் திருவிழாவில் கலந்து கொள்ள ஆயத்தமாகி கொண்டிருக்கிறேன்.

இணைய தளங்களில் நேசம் பாராட்டிய நெஞ்சங்களை  நேரில் கண்டு நட்பை வளர்க்கும் திருவிழா இது. நம் எழுத்துக்கள் நமக்கு உருவாக்கி தந்த இந்த அறிய நட்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் 
வாருங்கள் வலைபதிவ நண்பர்களே 


ஆர்.வி.சரவணன்