வெள்ளி, மே 09, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-2



ஆதிவாசி மேக்கப் 

கேமராவுக்கு முன்னும் பின்னும்-2

நாங்கள் மாத்தூர் சென்று இறங்கிய போது அந்த காலை வேளையிலும் எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள்.மாணவர்கள் இந்த குறும்படத்தின் எடிட்டர் மற்றும் பள்ளியில் பணிபுரிபவர், (போலிஸ் அதிகாரியாக நடித்தார்) மேக்கப் மேன் என்று எல்லோரும்  7 மணிக்கு வந்து விட்டிருந்தார்கள்
துளசிதரன் தங்கியிருக்கும் வீடு தான் ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாறியிருந்தது எல்லோருக்கும் என்னை எழுத்தாளர் (?) என்று சார் அறிமுகபடுத்தினார் நான் கூச்சமாக நெளிந்தேன்.

பின் மேக்கப் தொடங்கியது துளசிதரனின் சகலை (அவரது மனைவியின் தங்கை கணவர் ) ஆதிவாசி யாக நடிக்கிறார். அவருக்கு மேக்கப் போட்டார்கள் நான்  சிறு வயதில் நாடகங்கள் நடக்கும் போது கவனித்திருந்தாலும் சினிமாவுக்கு மேக்கப் போடுவதை பார்ப்பது இது தான் முதல் முறை
அவரை ஆதிவாசி யாக மாற்றிய போது மேக்கப் (மேன்) திறனை எண்ணி வியந்தேன் அடுத்து துளசிதரன் அவர்களின் மனைவியும் ஆதிவாசி பெண்ணாக நடிப்பதால் அவர் மற்றும் மாணவர்கள் என்று மேக்கப் 
வேலை தொடர்ந்தது. 


கீதா ரங்கன் மேடம் இந்த படத்தில் அசிஸ்டன்ட் டைரெக்டர் 
படப்பிடிப்பு நடந்த இரு நாளும் கையில் ஸ்க்ரிப்டை வைத்த  படி எங்கும் நகராமல் துளசிதரன் கூடவே  இருந்தது ஆச்சரியம். ஏனெனில் நான் கூட வெயிலின் கொடுமை மற்றும் நண்பர்கள் வருகையால் கொஞ்சம் அங்கே இங்கே நகர்ந்தேன். அவரோ  ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கு பெற்றார்.
என்னை "நடிக்க ரெடி யாகிட்டீங்களா" என்று கேட்டார் .நான் சொன்னேன் 
அந்த டென்சன் நாளைக்கு பார்த்துக்கலாம். இன்னிக்கு வேணாம் இப்ப ஒரு அசிஸ்டன்ட் டைரெக்டர் போல் கவனிக்கிறேன் என்றேன் 

சாப்பாடு டிபன் எல்லாம் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். டிபன் வந்திருந்தது. சாப்பிட்டோம் 
ரோஸ் கலரில் கூல் ட்ரிங்க்ஸ் போல் ஒன்று பாத்திரத்தில்  வைக்கபட்டிருந்தது.ஓகே வெயிலுக்கு இதமாக சாப்பிடலாம் என்றவாறு நான் நெருங்கி ஒரு டம்ளர் எடுத்து கொண்டேன் சூடாக இருந்தது. நான் திடுக்கிட்டு விசாரித்தேன். கீதா மேடம் 
சொன்னார் தண்ணீர் தான் அது என்றும் வெட்டிவேர் போட்டு கொதிக்க வைக்கபட்டிருக்கிறது என்று சொன்னார் . குடித்தேன் நன்றக தான் 
இருந்தது ஏற்கனவே கேரளா சென்றிருந்த போது சாப்பிட்டு இருந்தாலும் இங்கே இதமான சூட்டில் சாப்பிட நன்றாக இருந்தது 

மேக்கப் மேன் எல்லாரையும் நிற்க வைத்து பூஜை போட்டார்.

கேமரா ஆங்கில் பார்க்கப்பட்டது.முதல் காட்சி போலீஸ் அதிகாரி 
செல் போனில் தகவல் கேட்டு ஜீப்பை எடு என்று சொல்லி வேகமாக ஏற வேண்டும். மற்ற போலீஸ் காரர்கள் நான்கு பேர் வந்து ஏறி கொள்ளள ஜீப் கிளம்ப வேண்டும்.  இது தான் காட்சி. எடுக்கபோகும் இந்த காட்சியை பற்றி சொன்னார் துளசிதரன்.  கீதா மேடம் கையில் வைத்திருந்த ஸ்கிரிப்ட் டில் என்ன எழுதியிருக்கிறார் என்றும் பார்த்து கொண்டேன் . இதற்கு ஷாட் எப்படி வைக்கிறார் என்று அறிய விரும்பினேன்.இருந்தும் அவரை நான் தொந்தரவு செய்யவில்லை அவர் ஷாட் வைப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கூடவே நான் அவரது எண்ணத்தை என் மன திரையில் காட்சியாக ஓட்டி பார்த்தேன். புரிந்தது. போலீஸ் காரருக்கு ஒரு ஆள் குறையுது என்று டாட்டா சுமோ டிரைவர் க்கு மேக்கப் போட்டு போலீஸ் டிரஸ் போட்டு ஜீப்பை ஓட்ட வைத்தார்கள் (நடிக்க வந்தது விபத்து னு சொல்வாங்களே அது  இது  தானா)




ஷூட்டிங் நடந்த இடம் 

காரில்  மற்ற போலீஸ் காரர்கள் வந்து ஏறியது யதார்த்தமாக இல்லை என்று எனக்கு தோன்றியது. அதாவது சேர்ந்து நின்றிருந்தாலும் அவசரத்தில் வந்து ஏறும் போது இஷ்டபடி கலைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வந்து ஏறினால் சிறப்பாக இருக்கும் என்று நான் யோசித்து கொண்டிருக்க,
துளசிதரனே ஒன் மோர் என்று சொல்லி விட்டார்.

 அந்த காட்சி  எடுக்கப்பட்ட பின்  கார் கிளம்பி ரோட்டுக்கு வருவது ஒரு 

ஷாட் எடுக்கப்பட்டது.  அந்த வீட்டுக்கு எதிரில் இருந்த மேட்டில் (அதை சிறு மலையில் ஏறுவது போல் இருக்கும் )  ஷூட்டிங் ஷிப்ட் ஆகியது அங்கே 
தான் ஆதிவாசி குடியிருப்பு இருப்பது போன்ற காட்சிகள் படமானது.  
 வெயிலின் கடுமையும் ஏற ஆரம்பித்தது. 

போலீஸ் ஜீப்பை பார்த்து விட்டு ரவுடி கும்பல் அதிர்ந்து பின்னோக்கி ஓட வேண்டும் அந்த காட்சி ஒரே ஷாட்டில் ஓகே ஆனது வந்தவர்கள் அதிர்ந்து போய் பார்த்து விட்டு திரும்பி ஓடுவது இயல்பாக இருந்தது. அந்த காட்சி காருக்குள் இருக்கும் போலிசின் கண்ணோட்டத்தின் படியும் எடுக்கப்பட்டது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போதே நான் அந்தந்த காட்சிகளை நான் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்திருந்தேன். 


ரவுடிகள் ஆதிவாசி வீட்டுக்கு வந்து அவர்கள் பெண்களை இழுத்து செல்ல வருவதாகவும் அதை பெற்றோர் தடுப்பது போன்றும் காட்சி.
(துளசிதரன் 
மகனும் மகளும் கூட நடித்தனர் ) துளசிதரன் மனைவி,கையில் அரிவாளை வைத்து கொண்டு பல்லை கடித்து கொண்டு வில்லனை  மிரட்ட வேண்டும் அவருக்கு ரிகர்சல் பார்க்கும் போது சிரிப்புவந்தாலும், ஷாட்டின் போது சீரியசாக பண்ணினார்.

பெங்களூரிலிருந்து வந்திருந்த பிஜூவை அவர் கோபத்துடன் தள்ள முயற்சிக்க வேண்டும்.  இவர்களின் இந்த போராட்டத்தில்  மேடம் கீழே விழ வேண்டும். அவர் சரியாக தான் விழுந்தார். இருந்தும் அவர் விழுந்ததில் சுவரில் இருந்த செங்கல் சிமெண்ட் பூச்சு அவரது தலையை பதம் பார்த்து விட்டது .ரத்தம் வழிய ஆரம்பித்தது.எல்லோரும் அதிர்ந்து போய் அருகே ஓடினோம் அவரை எழுப்பி விட்டோம்.  அவர் தன் கைகளால் அடிபட்டிருந்த முன் நெற்றியை பிடித்திருந்த போதும் ரத்தம் நிற்கவில்லை. உடனே கார் கொண்டு வர சொல்லி ஏறி அமர்ந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் மருத்துவமனை நோக்கி சார் மற்றும் கீதா கிளம்பினர் துளசிதரன்  
உள்ளுக்குள் பதட்டம் இருந்திருந்தாலும் அதை வெளி காட்டாமல் தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு கிளம்பும் போது கூட அவர் மனைவி ஷூட்டிங் 
தொடர்ந்து நடக்கட்டும் என்று தனக்கு நேர்ந்த விபத்தை சாதாரணமாக 
எடுத்து கொண்டார் .இதை கணவரின் லட்சியத்தில் உறுதுணையாக 
இருக்கும் மனைவியின் அக்கறையாக பார்க்கிறேன்.அவர்கள் சென்று 
வரும் வரை நாங்கள் எல்லோரும்கவலையில் அமர்ந்திருந்தோம். தையல் போடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்தார்கள். டாக்டர் ஒன்றும் பிரச்னையில்லை என்று சொன்னதாக சொல்லிய பின் தான் எல்லாருக்கும் நிம்மதி வந்தது .

 லஞ்ச்  ப்ரேக் விடப்பட்டது . வலைபதிவர் திரு.ராயசெல்லப்பா வருகிறார் என்றும் அவரை அழைக்க போக வேண்டும் என்றும் சொல்லவே நானே சென்று அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன்.  இருந்தும் 
எனது உதவிக்காக ஒரு மாணவனையும் சார் கூடவே அனுப்பி வைத்தார் ஆட்டோவில் சென்று ஸ்டேஷன் னில் காத்திருந்த செல்லப்பா சரை அழைத்து கொண்டு ஹோட்டல் சென்று அவர் ரெடி யானவுடன் அழைத்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்  வந்தேன். துளசிதரன் மனைவி ரெஸ்ட் எடுத்து கொள்ளவில்லை.  உற்சாகத்துடன் ஷூட்டிங்கில் வளைய வந்தார் 





திரு.ராய செல்லப்பா வுடன் குறும் படத்தில் நடிப்பவர்கள் 

மதிய சாப்பாடு முடிந்த பின்ர ரவுடிகளை போலீஸ் மாணவர்கள் மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. கதாநாயகன் கார்த்திக் தன் அம்மாவுக்கு வீட்டு வேளைகளில் உதவியாக இருப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது .இங்கே அந்த பையனுக்கு அம்மாவாக நடித்த பெண்ணை பற்றி கண்டிப்பாக நான் சொல்ல வேண்டும். 




பரோட்டா கார்த்திக்கிற்கு தாயாக நடிக்கும் பெண்ணிடம் காட்சி 
பற்றி விளக்குகிறார் துளசிதரன் 


அந்த பெண்ணுக்கு வயது 20 க்கு மேல் தான் இருக்கும் இருந்தும் கொஞ்சம் வயதான தாயாக நடிக்க வந்திருந்தார் .மேலும் அந்த பெண்ணுக்கு படிக்க ஆர்வம் என்பதால் 10 வது படிப்பை ப்ரைவேட்டாக படித்து வருவதாக சொன்னார்கள் அடுத்து கேட்ட தவகல் என்னை இன்னும் ஆச்சரியபடுத்தியது. ஆம் அந்த பெண் வீடுகளில் வீட்டு வேலை செய்வது  விறகு உடைப்பது போன்ற வேலைகள் செய்து தன் அக்கா  அம்மாவை காப்பாற்றுவதாக சொன்ன போது எனக்கு பரிதாபம் வரவில்லை. அந்த பெண்ணின் மேல் ஒரு தனி மரியாதையே வந்தது. 




பரோட்டா கடை வாசல் 

 அந்த பெண் பரோட்டா கடை வாசலில் இருந்து கார்த்திக்கை ஸ்கூல் க்கு வழியனுப்பி வைப்பார். அப்போது அவர் டாட்டா காட்ட வேண்டும் .இது ஒரு ஷாட். அதை பார்த்த போது எனக்கு ஷூட்டிங் ஷாட் என்பது போல் தோன்றவில்லை மாறாக ஒரு தாயுள்ளம் கொண்ட பெண்ணாகவே  தோன்றினார்.(படிக்க வேண்டிய காலத்தில் வீட்டில் என்னை படிக்க வைத்தும் சரியாக படிக்காமல் இருந்தது அப்போது என் ஞாபகத்துக்கு வரவே தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது ) அந்த பெண்ணுக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை  இருப்பதாக கீதா மேடம் சொன்னார்கள். அந்த பெண் தான் கொண்ட லட்சியத்தில் வெற்றி பெற 
ஒரு சகோதரனாய் உளமார வாழ்த்துகிறேன் 



அன்றைய ஷூட்டிங் முடிந்து நாங்கள் ஹோட்டல் கிளம்பினோம். துளசிதரன் நண்பர் தான்  எங்களை ட்ராப் செய்ய வருவதாக ஏற்பாடானது .பின் துளசிதரன் அவர்களே எங்களை ட்ராப் செய்ய வந்தார் மேடம் நார்மலாகி விட்டார் என்றாலும் நீங்கள் அவருடனும் குடும்பத்துடனும் இருங்கள் என்று சொன்ன போதும் அவர் பரவாயில்லை உங்களை ஹோட்டல் ல கொண்டு விட்டுட்டு வந்துடறேன் என்று கார் ஓட்டி வந்தார். 
மறு நாள் ஷூட்டிங்கை நான் ஒரு உதவி இயக்குனராக ஆர்வத்துடனும் நடிகராக பயத்துடனும் எதிர் கொள்ள 
ஆரம்பித்திருந்தேன். 

தொடரும் 


நாளைய பதிவில் இரண்டாம் நாள் ஷூட்டிங், மற்றும் நான் நடிகரான வேடிக்கை நிகழ்வு,  நண்பர் திண்டுக்கல் தனபாலன் மற்றும் கோவை ஆவி வருகை 
பற்றிய தகவல்களுடன் வருகிறேன் 

ஆர்.வி.சரவணன் 


15 கருத்துகள்:

  1. படத்தினையே பார்த்த ஓர் உணர்வு நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படபிடிப்பினை பார்த்த உணர்வு என்றும் சொல்லலாம் நன்றி ஜெயக்குமார் சார்

      நீக்கு
  2. //கவை ஆவி // புதுசா இருக்காரே, யார் சார் இவரு எனக்கு போட்டியா.. ஹஹஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் கோவை ஆவி என்பது தான் எழுத்து பிழையால் அப்படி வந்து விட்டது மாற்றி விட்டேன் நன்றி

      நீக்கு
  3. முதல் நாள் மிஸ் பண்ணிய காட்சிகளை கண் முன் ஓட விட்டுவிட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  4. அந்தப் பெண் வெற்றி பெறுவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது முயற்சி உடையார் தோற்று போவதில்லை

      நீக்கு
  5. சீன் பை சீனா சொல்லிட்டீங்கன்னா நாளைக்கு படம் பாக்கிற எங்களுக்கு எப்படி சுவாரஸ்யமா இருக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையே சரவணன் நான் சீனை சூட்டிங்கில் எப்படி எடுக்கிறார்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன் காட்சிகள் படமாக்கப்படும் போது எனக்கு தோன்றிய உணர்வுகளை தான் சொல்லியிருக்கிறேன் துளசிதர் அவர்களிடம் கேட்டு அனுமதி பெற்று தான் சொல்லியிருக்கிறேன்.கண்டிப்பாக உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் நன்றி

      நீக்கு
  6. சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. ஷூட்டிங் வர்ணனை அருமை.படம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. முதல் நாள் நிகழ்வுகளை கண் கவரும் வண்ணம் தொகுத்தளித்தமைக்கு பாராட்டுக்கள் சரவணன்
    சார்!

    பதிலளிநீக்கு
  9. மிகவும் அருமையாக ஷூட்டிங்கில் நடந்த ஒவ்வொரு நிகழ்வையும், கூர் ந்து கவனித்து எழுதிஉள்ளீர்க்ள். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  10. //தொடரும்

    நாளைய பதிவில் இரண்டாம் நாள் ஷூட்டிங்,//

    இந்த 'நாளைய பதிவு' என்றைக்கு வரும்?
    நாளை வருமா?

    பதிலளிநீக்கு
  11. அடுத்த பகுதிக்கும் இப்போதே செல்கிறேன்....

    ஷூட்டிங் பார்க்கும் ஆவல் எனக்குள்ளும்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்