புதன், ஜனவரி 01, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )




இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா
(ஒரு பார்வை )


வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

புத்தக கண் காட்சியில் சுற்றி சுற்றி வந்து புத்தகங்களை ஆசையாய் வாங்கி குவிக்கும் எனக்கு, நான் எழுதிய புத்தகமும் இது போல் வெளி வரும் என்று நிச்சயமாக (நான்கு வருடங்களுக்குமுன் நான் குடந்தையூர் தளம் 
தொடங்கிய போது) எதிர்பார்க்கவில்லை.எப்படி நிகழ்ந்தது இது.


கல்லூரி காலத்தில் நான் மனதிற்குள் காட்சிகளாய் ஓட்டி பார்த்த கதையை எழுதி பார்க்க ஆசைப்பட்ட போது எழுதுங்கள் என்று நம்பிக்கை  தந்தார் கரை சேரா அலை அரசன்,( ஒரு அத்தியாயம் வெளியிட்டவுடன் அடுத்தது ஆரம்பித்து விட்டீர்களா என்று  கேட்பார்).எழுதி கொண்டே வந்து  கொஞ்சம் இடைவேளை விட்ட போது எப்ப சார் திரும்ப ஆரம்பிப்பீங்க உங்களின் பெரிய ப்ராஜெக்ட் இது நல்ல படியா முடிச்சுடுங்களேன் என்றார் .(நிஜாம்  பக்கம்) நிஜாமுதீன். தொடர்ந்து  எழுதி கொண்டே வருகையில் நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையை அதன் இயல்பான போக்கிலே சென்று முடியுங்கள் என்றார் ( கிரி ப்ளாக்) கிரி. 

மற்றும் திடங்கொண்டு போராடு சீனு ,மனசு குமார்,திண்டுக்கல் தனபாலன், தென்றல் சசிகலா, என்று இணைய நண்பர்கள் பலரும்,  அலுவலக நண்பர்களும்  (தேவராஜ் படங்கள் வரைந்தும் , மற்றொரு நண்பர்  
வைத்யா   அடுத்த அத்தியாயம் எப்படி வரும் என்று ஆர்வமுடன் கேட்டும்) எனை உற்சாகபடுத்த எழுதி முடித்தேன்.அடுத்து புத்தகமாக போடலாம் 
என்ற என் ஆர்வத்துக்கு நண்பர்களும் துணை நிற்க தொடங்கியது 
புத்தக வேலை

நான் புத்தகம் வெளியிடுவது பற்றி என் வீட்டில் பேசிய போது இதில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்று தான்'நினைத்திருந்தேன். ஆனால் என்னை விட என் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆர்வம் மிகுந்து இதில் முழு அக்கறை செலுத்தி எனை ஊக்கபடுத்தவே, இதோ புத்தகம் ரெடியாகி ஜனனி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது. 

 எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்கள் கதையை படித்து விட்டு தந்திருக்கும் மதிப்புரை இந்த புத்தகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அந்த மதிப்புரையிலிருந்து சில வரிகள் இங்கு

 "எளிமையான சுலபமான ஒரு கதைக் கருவை எடுத்திருந்தாலும் அதை நெளிவு சுளிவுகளுடன் நேர்த்தியான திருப்பங்களுடன் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்" 

கூடவே சங்கர் மற்றும் அரசன் மதிப்புரைகளுடன் சேர்ந்து வெளியாகும் 
இந்த நாவல் கல்லூரி வாழ்க்கையை பின்னணியாக கொண்டு  
நட்பின் வலிமையையும் உணர்த்தும் காதல் கதை 

இந்த நாவலின் கேரக்டர்கள் பற்றி கதையில் வரும் பயோடேட்டா பாலு கேரக்டர் சொல்வதை  இங்கே  தருகிறேன்

உமா : பெற்றோர் சொன்னால் பெட்ரோமாக்ஸ் வைத்து கூட 
படிக்கும்  மாணவ பேரவை  தலைவி 

சிவா : அன்பிற்காக அகிலத்தையே அற்பணிப்பவன் 

காதலி சொன்னால் காற்றுக்கும்  வேலி போடுவான் இவன் 

அருள் : நட்பிற்காக நஞ்சையும் குடிப்பவன் 


கார்த்திக் :  உடன் பிறந்தவனே உலகம் என்று சுற்றி வருபவன் 


கீதா : கணவனுக்காக கரெண்டிலும் கை வைப்பவள் 


பாலு : அட்டு பிகரையும் அசராமல் பார்ப்பவன் இருப்பினும் 

லட்டு பிகரே லட்சியமாய் கொண்டவன்  

புத்தகம் வெளியிடுவது என்றவுடன் எந்த வி.ஐ.பி யை அழைப்பது 
என்ற  என் தயக்கத்தை தகர்த்து உதவினார் என்னை இணையத்தில் 
எழுத வைத்த எஸ் .சங்கர் (என்வழி.காம்). திரைப்பட பாடலாசிரியர் முனைவர்  திரு நா .முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் இயக்குனர் திருமதி . சந்திரா தங்கராஜ் இருவரிடமும்  பேசி ஒப்புதல் 
வாங்கியதோடு  என்னையும் அழைத்து சென்று அறிமுகபடுத்தினார்




தொடர்கதை வரும் போது கருத்துரை தந்த நண்பர்கள்,படம் வரைந்து தந்த தோழிகள் மற்றும் நூலை வடிவமைத்த மின்னல் வரிகள் திரு.பால கணேஷ் (எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரிடம் அழைத்து சென்று என்னை  அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார் ) மற்றும் படங்கள் வரைந்து தந்த ஓவியர் திரு .தமிழ், மேலும் இந்த புத்தகத்தின் விற்பனைக்கு  களம் தந்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன், மற்றும் ஆனந்தராஜா விஜயராகவன் (கோவை ஆவி ) அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்து பார்க்கும் நேரமிது

இந்த இனிய விழாவை  தன் இனிமை குரலால் அழகுற  
தொகுத்து தர இசைந்திருக்கிறார் நண்பர் திரு.சுரேகா அவர்கள். 

விற்பனை உரிமை 

DISCOVARY BOOK PALACE PVT LTD
K.K.NAGAR WEST 
CHENNAI -600078

MAIL      : discoverybookpalace@gmail.com
ONLINE : www.discoverybookpalace.com
PHONE     044-65157525


நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் 



நாள் :05-01-2014
நேரம் : மாலை 5 மணி 
இடம் :  டிஸ்கவரி புக் பேலஸ் 


இறைவனின் இறை அருளுடன் நடைபெறும் இந்த இனிய நிகழ்வை 
மேலும் மெருகூட்ட போவது உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் 
தான்.

FINAL PUNCH 

 புத்தக  வேலை நடைபெற்று கொண்டிருக்கையில் என் மனசாட்சி கேட்ட கேள்வி கொஞ்சம் தடுமாற வைத்தது. புத்தகம் போடற அளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆகிட்டியா நீ என்பது தான் அது 

ஆசிரியர் வகுப்பறையில் இல்லாத போது மாணவனுக்கு போர்டில் எழுதி பார்க்க ஆசை வந்து எழுதுவதை தானும் ஆசிரியர் ஆகி விட்டேன் என்று எண்ணி கொள்வதாக  அர்த்தம் பண்ணி கொள்ள முடியுமோ 

நான்  ஒரு மாணவன் தான் இப்போதும். (எப்போதும்) 

ஆர்.வி.சரவணன் 


16 கருத்துகள்:

  1. புத்தாண்டின் முதல் செய்தியாக தங்கள்
    புத்தக வெளியீட்டு விழாச் செய்தியைப் படிக்க
    மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது
    விழா சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சியான புத்தாண்டு செய்தி ஒன்றைத் தந்து இருக்கிறீர்கள்! தங்களது நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துக்கள்!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. தங்களின் முயற்சி தொடரட்டும் நண்பரே.
    புத்தக வெளியீட்டு விழா சிறப்புடன் அரங்கேற வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிக்க மகிழ்ச்சி... பாராட்டுக்கள்... வரும் 2014 ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. விழா சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. தொடர்கதை தோன்றிய வி(த)த்தையும் நூல் வெளியீட்டிற்கான ஆரம்ப வேலைகள், வெளியீட்டு முன் முயற்சிகள், அதன் பின்னணியில் உங்களுக்கிருக்கும் எண்ணவோட்டங்கள் அனைத்தையும் பதிவில் வடித்திருந்தீர்கள்.
    சிறப்பான கதை உக்தியால்... இந்தக் கதையும் நீங்களும்
    மற்ற( பதி)வர்களால் நீங்கள் நிச்சயம் கவனிக்கப்படுகிறீர்கள்.
    எனவே வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வாழ்க வளமுடன்!..
    வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  8. எனது வலைப்பூவிலும் நூல் வெளியீடு சம்பந்தமாகவும் நூல் அறிமுகமாகவும் பதிவு வெளியிட்டுள்ளேன். வந்து பாருங்கள்:

    http://nizampakkam.blogspot.com/2014/01/keezhai-jokes121.html

    பதிலளிநீக்கு
  9. அண்ணே வாழ்த்துகள், நான் கவிதை புத்தகம் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  10. தங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எங்கள் வாழ்த்த்துக்கள்!! விழா இனிதே நடை பெற எங்கள் வாழ்த்துக்கள்!

    எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. எந்த கலைஞனுக்கும் முதல் படியில் காலடி வைக்கும் போது எழும் சந்தேகம் தான் இது. ஒவ்வோர் படியில் ஏறும் போதும் முன் செய்த தவறுகள் களைந்து பக்குவப்பட ஆரம்பிக்கிறோம். இதுபோல் பல படிகள் ஏறி பல உயரங்கள் எட்ட என் வாழ்த்துகள்!! என் முகநூலிலும் இதை பகிர்கிறேன்,,

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாஜனவரி 02, 2014 7:03 AM

    வணக்கம்
    ஐயா.

    தங்களின் முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள். அடுத்து உங்கள் அனுபவங்களை கட்டுரைகளாக கொண்டு வாங்க.

    பதிலளிநீக்கு
  15. Valthugal anna. Ungal padhipu vetri pera manamara valthugiren.Aduthu ungal kavithai thogupu velivara kathirukiren.

    பதிலளிநீக்கு
  16. ரமணி சார்
    தி.தமிழ் இளங்கோ
    கரந்தை ஜெயக்குமார்
    திண்டுக்கல் தனபாலன்
    நிஜாமுதீன்
    துரை .செல்வராஜ்
    வீடு சுரேஷ்குமார்
    கி .பாரதிதாசன்
    துளசிதரன்
    கோவை ஆவி
    சே.குமார்
    ரூபன்
    ஜோதிஜி
    தென்றல் பாலாஜி
    வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்