உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

தோள் கொடுப்போம் வாரீர்


தோள் கொடுப்போம் வாரீர்

இருட்டு இருட்டுன்னு புலமபறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று இது எனக்கு மிகவும் பிடித்த வரிகள்


72 வயதான அன்னா ஹஸாரே என்ற சமூகஆர்வலர் ஊழலுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்த கோரியும் உண்ணாவிரதம் துவங்கி இருக்கிறார் அவரது இந்த போராட்டம் மக்களின் ஆதரவுடன் மிகுந்த வலுப்பெற்று வருகிறது



ஊழல் என்ற இருட்டு சாம்ராஜ்யத்தை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற தீபத்தை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றியிருக்கும் இவரது இந்த முயற்சி வெற்றி பெற நாம் அனைவரும் உறுதியுடன் ஒருமித்த குரல் கொடுப்போம் வாரீர்


அவரது போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்


ஊழலுக்கு எதிராய் ஓர் போர் தொடுப்போம்



உச்சநீதிமன்றம் ,தேர்தல் ஆணையம் போன்று ஜன் லோக்பால் என்ற இந்த அமைப்பு சுதந்திரமான அமைப்பு. அரசாங்கத்தின் ,எந்த ஒரு அதிகாரியின் குறிக்கீடும் இதற்கு இருக்காது என்பது குறுப்பிடத்தக்கது


எனது நண்பர் கிரி அவர்களின் தளத்தில் இது பற்றிய தெளிவான இடுகை வந்துள்ளது


http://www.giriblog.com/2011/04/anna-hazaare-against-corruption.html


படியுங்கள் நண்பர்களே


ஆர்.வி.சரவணன்

சனி, ஆகஸ்ட் 14, 2010

நமது இந்தியா



நமது இந்தியா



31 மாநிலங்கள்

எண்ணற்ற

மொழிகள்

சாதிகள்

மதங்கள்

29 முக்கிய பண்டிகைகள்

கொண்ட

ஒரு

தேசம்

நம்

இந்தியா

நாம் இந்தியர் என்பதில் என்றும் பெருமை அடைவோம்


அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்


படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைக்.................................காட்சி


தொலைக்.................................காட்சி

டிவி பார்க்கும் போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்


*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை


*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ


*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி நிகழ்ச்சி பார்க்கும் நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்


*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஏப்ரல் 15, 2010

நம்மை சுற்றி நாமே தான்




அனைவருக்கும்


எனது இனிய


தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நம்மை சுற்றி நாமே தான்

நம்மை சுற்றி உள்ளவர்களிடம்

அன்பை நிறைய விதைப்போம்

அன்பையே அறுவடை செய்வோம்

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

வறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்







வறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்

இவ் வையகத்தில் வறுமை என்பது இல்லாது போகட்டும்

வறுமை என்ற சொல்லே செல்லாது போகட்டும்


செழுமை எங்கும் நிறைந்திருக்கட்டும்

இந்த வறுமைக்கும் வறுமை வரும் காலம் எப்போது ?


அதற்காக வித்திட நினைப்போமா இப்போது ..........


r.v.saravanan