வெள்ளி, ஏப்ரல் 02, 2010

உனை காக்க என் உயிர்


பருவச் சோலையில் பூக்கள் ஏராளம் மலரினும் மெல்லிய பெண்ணே உன் அழகு தாராளம்
தென்றலின் தொடுகையில் குயில்கள் இசை பாடுகையில் பிரம்மன் எனும் கதிரவன் கரம் படுகையில்மலர்ந்தவளேஉன்னை சூறையாட தேன் அருந்த ஆடவர் கூட்டம் ஒன்று வண்டுகளாய் உனை முற்றுகையிட்டது


சுற்றி சுற்றி வந்து நாள் பார்த்ததுஅதிலே நானும் ஒருவன்உனை அடைய எண்ணமில்லை காக்க எண்ணமுண்டுஉன் அருகில் ஆயுதமாய் இருந்திட்ட முள் பட்டு எனை வருத்திட்டேன்என் உயிரை மாய்த்தேன் தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்ஆடவர் என் நிலை கண்டனர் உனை விட்டு அகன்றனர்நீ நினைத்திருப்பாய்உனை அடைய வந்தவன் நான் என்று


நீ நினைப்பாயா


உனை காக்க என் உயிர் போக்கியதை அறிவாயா

r.v.saravanan

3 கருத்துகள்:

 1. அற்புதம்!!!! நண்பரே,
  வாழ்த்துக்கள்.

  பின்னூட்டப்புயலே, நிறைய
  பின்னூட்டம் எனக்கு போட்டு இருக்கிறீர்கள்,
  மிக்க மகிழ்ச்சி, இதோ போய் அனைத்துக்கும்
  பதில் எழுதுகிறேன், நன்றி.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்