புதன், ஏப்ரல் 14, 2010

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே



சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே


*மன்னா காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீது என்ன தண்டனை கொடுக்கலாம்


அவர்கள் காலம் முழுதும் அவதியுறும் அளவுக்கு என்ன தண்டனை உண்டோ அதை கொடும்


*புற முதுகிட்டு ஓடியும் நீங்கள் எதிரி நாட்டு படையிடம் மாட்டி கொண்டு விட்டீர்களா எப்படி


நான் புற முதுகிட்டு ஓடியது எதிரி நாட்டு எல்லைக்குள்ளேயே அல்லவா

*மந்திரி என் உத்தரவின்றி எப்படி போர் முரசு ஒலிக்கிறது


மன்னிக்க வேண்டும் மன்னா என் செல்போன் ரிங்க்டோன் ஆக போர் முரசு கொட்டும் ஒலியை தான் வைத்துள்ளேன்

*மன்னா என் பாட்டுக்கு என்ன பரிசு


பாடிய உன் வாய்க்கு இனி பாடாதிருக்க பூட்டு தான் பரிசு
உன் பாட்டை கேட்டதற்கு நீ தான் எங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும்

* மன்னா போருக்கு வந்த எதிரி நாட்டு மன்னன் போர் செய்யாமலே உங்களை வெற்றி வீரன் என்று வாழ்த்தி விட்டு செல்கிறானே எப்படி


நான் இந்த மகாராணி யோடு வாழ்வதே வெற்றி பெற்றதற்கு சமம் என்று வாழ்த்தி விட்டு செல்கிறான்


*என்ன மந்திரி நான் போருக்கு கிளம்பும் நேரத்தில் என்னை வாழ்த்தி வழியனுப்ப மகாராணி வரவில்லையே


மகாராணி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் உங்களை வாழ்த்தி SMSஅனுப்பியுள்ளார்கள் நீங்கள் பார்க்கவில்லையா


இந்த கார்டூன் வரைந்தது ஐந்தாவது படிக்கும்


என் மகன் S ஹர்ஷவர்தன்

r.v.saravanan




5 கருத்துகள்:

  1. ஹர்ஷவர்தன்க்கும், உங்களுக்கும்
    பாராட்டுக்கள், நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நகைச்சுவைகள் சிலது நன்றாக இருக்கின்றன.
    அரசர் நகைச்சுவைகளாய் தொகுத்துள்ளீர்கள்.
    மேலும் தொடர்க...
    தங்கள் மகன் எஸ்.ஹர்ஷவர்தன் வரைந்த படம்
    நன்றாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் மகன் வரைந்தது ரொம்ப அருமை/ வாழ்த்துக்கள். ரொம்ப சுட்டி போல.
    நகைச்சுவையும் அருமை

    பதிலளிநீக்கு
  4. unga piyanunukku kandippa training kodunga...periya aalaa varuvaan
    nallaa varainjirukkaan......!

    appuram antha maanavi pooranamaaka gunamadaiyavillai.aanaal,gunamadainthaal.

    vaazhththukal.

    பதிலளிநீக்கு
  5. படம் அருமை. நகைச்சுவை அதைவிட அருமை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்