செவ்வாய், ஜனவரி 25, 2011

ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்

குடியரசு தினம் அன்று பள்ளிக்கு சென்று வந்த ஹரிஷ் , ஜனனி இருவரும் வீட்டுக்கு வந்தவுடன் தன் தந்தை தாயிடம் பள்ளியில் கொடி ஏற்றியது முதல் மிட்டாய் கொடுத்தது வரை அனைத்தையும் சொல்லி மகிழ்ந்தார்கள்


அவர்கள் இருவருக்கும் ஒரு ஐடியா தோன்றியது தாங்களும் அது போல் கொடி ஏற்றுகிறோம் என்று சொல்லி தங்கள் வீட்டு தோட்டத்தில் கம்பம் நட்டு தன் தந்தை தாயிடம் அடம் பிடித்து தேசிய கொடி வாங்கி வர செய்து தனது தோழர் தோழியர்களுடன் சேர்ந்து கொடி ஏற்றி வணக்கம் தெரிவித்தார்கள் .


அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தார்கள் . மாலையில் கொடியை இறக்கி வீட்டில் உள்ள தங்களது புக் செல்பில் மரியாதையுடன் வைத்து கொண்டார்கள் .

தினமும் காலையில் நாம் இது போல் கொடி ஏற்றலாம் "என்றனர் தன் தோழர் தோழிகளிடம்.

மறு நாள் அதே போல் ஹரிஷ் ஜனனி இருவரும் தங்கள் நண்பர்களுடன் தேசிய கொடி ஏற்ற தயாராக, அவர்களின் தந்தையும் தாயும் அதை பார்த்து விட்டு

"டெய்லி எல்லாம் ஏற்ற கூடாது அதற்கென்று சம்பிரதாயங்கள் இருக்கு அதை ஒழுங்காக கடைபிடிக்கணும் நீங்க சின்ன பசங்க உங்களுக்கு தெரியாது சுதந்திர தினம், குடியரசு தினம் அன்னிக்கு மட்டும் நாம் கொடி ஏற்றினால் போதும் தினமும் ஏற்ற வேண்டாம் "என்றனர்

அதற்க்கு அவர்கள் முடியாது என்று மறுத்து " அப்பா அம்மா நீங்களெல்லாம் தீபாவளி பொங்கல் பண்டிகை அன்னிக்கு மட்டுமா சாமி கும்புடுறீங்க எல்லா நாளும் விளக்கேற்றி சாமி கும்பிடறீங்க இல்லியா ",
"அதே போல் தான் நாங்கள் நம் பாரத மாதாவுக்காக நம் நாட்டிற்க்காக தினமும் தேசிய கொடியேற்றி வணங்க போகிறோம்"
என்றவர்களை ஆச்சரியத்துடன் பார்த்த ஹரிஷ் ஜனனியின் தாய் தந்தை இருவரும் பெருமிதத்துடன் எழுந்து நின்று தங்கள் செல்வங்களை அன்பாய் அணைத்து அவர்கள் ஏற்றிய தேசிய கொடியை பார்த்து ஜெய் ஹிந்த் என்று உரக்க சொல்லி வணங்கினர்

அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

சனி, ஜனவரி 22, 2011

சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்


சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்

நான் ஏற்கனவே சில நொடி சிநேகம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அந்த சிறுகதையின் பாலோ அப் தான் இந்த இடுகை எனவே இந்த இடுகையை படிக்கும் முன் அந்த சிறுகதையை படித்துவிடுங்கள்


http://kudanthaiyur.blogspot.com/2010/09/blog-post_18.html


அதாவது அந்த சிறுகதையில் வரும் சரவ் நான் தான்


செப்டம்பர் மாதம் ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ள நான் தஞ்சாவூர் செல்லும் போது நடந்தது இது. நான் அந்த நண்பருக்காக இடம் போட்டு விட்டு உட்கார்ந்து அவருக்காக காத்திருந்த போது பேருந்து கிளம்பி விட்டது நம்மளை பத்தி அவர் என்ன நினைச்சுக்க போறாரோ என்ற கவலையுடன் தஞ்சாவூர் வந்து இறங்கிய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது நான் இறங்கிய சில நொடிகளில் அடுத்து வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர்களில் அவரும் ஒருவர் என்னை பார்த்தவர் சார் உங்களுக்காக நான் இந்த பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன் என்றார் அவர் .


நானும் அவருக்காக பேருந்தில் காத்திருந்தது பற்றி சொன்னேன் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து கொண்டோம்


பின் அவரை ஹோட்டல் வரை கொண்டு விட்டு பின் நான் திருப்தியுடன் கிளம்பினேன்


இந்த நிகழ்வை தான் ஒரு சிறுகதையாக்கினேன் சில நொடி சிநேகம் என்ற பெயரில். இந்த இனிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

படம் நான் எடுத்தது
இடம் நாகப்பட்டினம் கடற்கரை
ஆர்.வி.சரவணன்

திங்கள், ஜனவரி 17, 2011

மகிழ்ச்சி பொங்கட்டும்


மகிழ்ச்சி பொங்கட்டும்


தித்திக்கும் பொங்கல் திருநாளில்
எத்திக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
அனைவரின் வாழ்வும் சிறக்கட்டும்

உழவர்களின் உள்ளங்களில் இன்பம் பெருகட்டும்
அவர் தம் இல்லங்களில் செழுமை என்றென்றும் நிறைந்திருக்கட்டும்

அனைத்து வலை பதிவு நண்பர்களுக்கும்
என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
படம் நன்றி கூகிள்
ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஜனவரி 09, 2011

சென்னை புத்தக காட்சி


சென்னை புத்தக காட்சி

நான் ஒரு புத்தக பிரியன் நான் மட்டுமல்ல என் வீட்டில் அனைவருமே
புத்தக பிரியர்கள் அம்மா, மனைவி,சித்தி ,மாமா, அத்தை , தம்பி, தங்கை என்று வீட்டில் எல்லோரும் புத்தகம் படிப்பவர்கள்

குமுதம் ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களாகட்டும் மாத இதழ்களாகட்டும்
வீட்டிக்கு பேப்பர்ஆள் கொண்டு வந்து போடும் போது அதை படிக்க வீட்டில்
சின்ன ரகளையேநடக்கும்

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் பதினான்கு வயதில் ஏற்பட்டது
அன்றிலிருந்துஇன்று வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது
நான் படிக்கும் வயதில் என்னை படிப்பு கெட்டுடும் எனவே படிக்க கூடாது
என்றுதடை விதித்தார்கள் நான் மீறி வீட்டுக்கு தெரியாமல் படித்து திட்டு வாங்குவேன்

வேலைக்கு சேர்ந்தவுடன் என் சம்பாத்தியத்தில் புத்தகங்கள் வாங்க
ஆரம்பித்தேன் நுலகத்தில் சேர்ந்து உறுப்பினரானேன்
வாரம் ஒரு முறையேனும்நுலகம் சென்று படிப்பேன்

ஏதேனும் சொந்தகாரர் வீட்டுக்கு
சென்றால் கூடஉடனே அங்கிருக்கும் புத்தகங்களை புரட்ட
ஆரம்பித்து விடுவேன் பண்டிகை நாட்களில் வார மாத இதழ்கள்
பெரும்பாலும் வாங்கி விடுவேன்

படிக்க ஆரம்பித்து விட்டால் உலகையே மறந்து விடுவேன்
வார இதழ்களில்பிடித்த பக்கங்களை எடுத்து சேர்த்து புத்தகமாக்கி
சேகரிக்கும் பழக்கமும் இருந்துவருகிறது

பொன்னியின் செல்வன், தியாகபூமி, சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு, தெய்வீகம், சமையல் , உடல்நலம், சுற்றுலா, என்று முடிந்தவரை சேர்த்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்

அப்படிப்பட்ட எனக்கு அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில
எனும் போது விடுவேனா

புத்தக கண்காட்சி பற்றி தான் சொல்கிறேன் வருடாவருடம் கண்காட்சி
சென்றுஎன் பொருளாதாரத்திற்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி விடுவேன்
தனியாகஒருமுறையும் மனைவி, மகன் ,மகள் என்று குடும்பத்துடன் அழைத்து கொண்டுஒரு முறையும் செல்வேன். எப்படியும் நான் குறைந்தது நான்கு மணி நேராமாவது அங்கே செலவிடுவேன்

இதோ இந்த வருடமும் புத்தக திருவிழா தொடங்கிவிட்டது
நேற்று அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன் டயமாகி விட்டதால் இரண்டு மணி நேரம் தான் இருக்க முடிந்தது இன்னும் ஒரு வாரம் இருக்கே மீண்டும் போகலாம் என்றிருக்கிறேன் நேற்று சுஜாதா அவர்களின் நாவல்கள் வாங்கினேன்

இது வரை வாங்கிய நூல்களில் சில

ராஜபேரிகை,கன்னிமாடம், யவன ராணி ,அலை ஓசை, ரத்தம் ஒரே நிறம்,மன்னன் மகள் , வந்தார்கள் வென்றார்கள் மற்றும் சுஜாதா பட்டுகோட்டை பிரபாகர், பாலகுமாரன் ,எழுதிய நாவல்கள்

என் நண்பர்கள் சிலர் ஏண்டா இப்படி புத்தகம் புத்தகம் என்று அலைகின்றாய் என்பார்கள் அவர்களுக்கு நான் சொன்னது

எனது பள்ளி கல்லுரி படிப்பில் நான் கற்றதை விட நான் படித்த புத்தகங்கள் தான் என் வாழ்க்கையை நான் சரியான முறையில் அமைத்து கொள்ளவும் நான் வாழ்க்கையில் முன்னுக்கு வரவும் உதவியது

நான் படித்த புத்தகங்கள் தான் ஒரு ஆசானாய் இருந்து என்னையும் பதிவுலகில் சில படைப்புகளை எழுத வைத்திருக்கிறது என்று சொன்னேன்

என்ன நான் சொன்னது சரிதானே

சென்னை புத்தக காட்சி எனும் இத் திருவிழா நமக்கான ஒரு விழா

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜனவரி 06, 2011

கண்ணில் ஏதோ மின்னல் ....

கண்ணில் ஏதோ மின்னல் ....

பள்ளி பருவத்தில் கும்பகோணத்தில் வீட்டுக்கு அருகாமையில் உள்ள தியேட்டரில் நண்பர்கள் நாங்கள் மாலை வேளையில் சேர்வோம் .

அங்கே இருக்கும் டிக்கெட் கவுன்ட்டர் சுவர் மேல் அமர்ந்து பேசுவோம் ஏன் அங்கே அமர்கிறோம் என்றால் படம் ஓடும்போது படத்தின் ஒலி வெளியில் நன்றாக கேட்கும் வசனங்களை கேட்டு மகிழ்வோம் கூடவே பாடல் வரும் போது அதை கேட்டு எங்களுக்கு உற்சாகம் தொற்றிகொள்ளும்

வசன காட்சிகளை விட பாடல் காட்சி வரும் நேரத்தில் தவறாமல் வந்து விடுவோம் அங்கு வந்து அமர்ந்து பாடலை கேட்டு விட்டு செல்வோம் அப்படி நான் கேட்ட பாடல்களில் ஒன்று இதோ

இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசையில் என் மனம் கவர்ந்த அடுத்த பாடல் இது

மனம் கவர்ந்த பாடல்கள்பூ விலங்கு படத்தில் இடம் பெற்ற

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு........


இந்த பாடல் படத்தில் இடம் பெறும் காட்சி என்னவென்றால் முரளியும்குயிலியும் (இருவரும் அறிமுகம்) வில்லன் ராதாரவியின் வீட்டில் பரணில் பதுங்கி இருப்பார்கள் ராதாரவி மனைவியுடன் உல்லாசமாய் இருப்பதை அவர்கள் காண நேர்ந்து இளமை தவிப்புடன் அவர்கள் இருக்கையில் வரும் பாடல் இது

குயிலி தன் கண்களை துணியால் கட்டி கொண்டிருக்க முரளியின் கைகள் கயிறால் கட்டப்பட்டிருக்கும் நிலையில் இருவரும் தூங்குவதாக பாடல் முடியும் அந்த காட்சி ஒரு கவிதை போல் இருக்கும்

இளையராஜா இந்த காதலர்களின் இளமை துள்ளலை தவிப்பை இந்த பாடலில் அள்ளி வழங்கியிருப்பார் அப்படியே நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருப்பார்


இந்த பாடலில் வரும் சில வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை வைரமுத்துவின் வைர வரிகளில் வரும் நெற்றி வேர்வை நனைச்சு போட்டு கொஞ்சம் அழியும் குங்குமத்து சிவப்பு வெட்கம் போல வழியும்......... எப்பொழுது கேட்டாலும் அந்த இளமை துடிப்பை உணர வைக்கும் இந்த பாடல்


பூ விலங்கு படத்தில் நான்கு பாடல்கள் அதில் இன்னொரு சூப்பர் ஹிட் பாடல் ஆத்தாடி பாவாடை காத்தாட .............

படம் பூ விலங்கு

நாயகன் நாயகி முரளி குயிலி

பாடல் வைரமுத்து

பாடல் பாடியவர்கள் K.J .ஜேசுதாஸ், S.ஜானகி


தயாரிப்பு கவிதாலயா


இயக்கம் அமீர்ஜான் (ரஜினியின் சிவா இயக்கம் இவர் தான் )


படம் வெளியான ஆண்டு 1984

பாடலின் வீடியோ லிங்க் முகவரி

http://www.google.co.in/url?sa=t&source=video&cd=6&ved=0CGEQtwIwBQ&url=http%3A%2F%2Fwww.in.com%2Fvideos%2Fwatchvideo-kannil-etho-5696940.html&ei=tSsGTfqcI4KzrAeNyOyQDw&usg=AFQjCNGHof7_BVyTL3-Q0sOM1DaReF9fLA&sig2=FvcVmANsYVYSy2V90ovXWw


ஆர்.வி.சரவணன்

புதன், ஜனவரி 05, 2011

இதெப்படி இருக்கு 2


இதெப்படி இருக்கு 2
குருவிக்காக ஒரு தொலை நோக்குப்பார்வை


தூக்கம் வந்தாலும் சுகமான கனவுகள் வருவதில்லை ஏன்


தூங்கி தூங்கி டயர்ட் ஆகி எப்படி எல்லாம் தூங்கறேன் பாருங்க


படித்து கொண்டே தூங்குவது எப்படின்னு ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிட்டிருக்கேன்

நான் முதல்லே வர்றது இருக்கட்டும்
நீங்க முதல்லே நூறு கிலோ சாக்லேட் வாங்கிட்டு வாங்க

ஆர்.வி.சரவணன்

திங்கள், ஜனவரி 03, 2011

குரு ஸ்தலம் ஆலங்குடி

குரு ஸ்தலம் ஆலங்குடி
புத்தாண்டு பிறந்துள்ளதால் கோவிலுக்கு செல்லலாம் என்று நேற்று குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன் நான் எடுத்த சில படங்களும் கோவில் பற்றிய சில முக்கிய தகவல்களும் இதோ


பேருந்தை விட்டு இறங்கியதும் வரவேற்கும் நுழைவாயில்


கோவிலின் இருபுறமும் கடைகள்

கோவிலின் நுழைவாயில்


கொடிமரம்


கொடிமரத்துடன் கூடிய கோபுரம்

குரு பரிகார ஸ்தலம் இது ஆலங்குடி என்ற பெயரில் வழங்க பெறுகிறது

இந்த கோயிலின் தெய்வங்கள் அருள் மிகு கலங்காமற் காத்த விநாயகர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ ஏலவார்குழலி அம்மை அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி

பாற்கடலை கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது

காவிரி தென் கரையில் 98 வது திருத்தலம் இது

இத்தலம்வந்து வழிபட்டவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ,அகத்தியர், விசுவாமித்ரர்,ஆதி சங்கரர், திருஞானசம்பந்தர்

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
ஆர்.வி.சரவணன்