செவ்வாய், ஜூன் 28, 2011

கஷ்டப்பட இஷ்டப்படு






கஷ்டப்பட இஷ்டப்படு


வான் வழியே நானும் தலைப்பில் என் அனுபவத்தை உங்களிடம் சென்ற இடுகையில் சொன்னேன் அல்லவா. ஒரு விஷயம் சொல்லாமல் விட்டு விட்டேன்


அதாவது நான் அலுவலக வேலையாக சென்றேன் என்று சொன்னேன் அல்லவா எனது துறை சம்பந்தப்பட்ட வேலை அது என்பதால் நான் சென்றேன் எனது துறை பற்றி நான் அடிக்கடி சலிப்பாகவும் கோபமாகவும் இப்படி சொல்வதுண்டு ஏற்கனவே அலுவலகத்தில் இருக்கும் வேலை போதாதா இந்த துறையை வேறு நான் பார்க்க வேண்டுமா இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே இது தேவையா . இதனால் எனக்கு என்ன பயன் இந்த துறைக்காக எனக்கு தனியாக சம்பளம் தருகிறார்களா என்று சக ஊழியர்களிடமும் ஏன் எம் .டி யிடமே நான் கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் தான் இந்த வேலை முடிக்க வேண்டும் என்ற அளவுக்கு எனக்கு இந்த துறை நான் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது எனும் போது கஷ்டப்பட்டால் வெற்றி நிச்சயம் என்ற வரிகள் உண்மை என்பதை தான் எனது இந்த பயணம் தெளிவு படுத்தியிருக்கிறது

ஒரு நிமிஷம்


நான் எனது தாத்தா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன் அதுக்கு என்ன இப்ப அப்படிங்கறீங்களா விஷயம் இருக்கு என் அம்மாவுடன் பிறந்தவர்கள் தாய் மாமா நான்கு ,பேர் சித்தி ஒருவர் இவர்கள் தான் என்னையும் என் தம்பியையும் வளர்த்தார்கள் நான்கு மாமன்களில் ஒருவர் மும்பையில் பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறார் அவர் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் நான் என் வாழ்க்கையில் முன்னேற, எடுத்து கொண்ட ரோல் மாடல்களில் அவரும் ஒருவர் அவர் சிறு வயதில் என்னை தோள் மீது வைத்து பாட்டு பாடி தூங்க வைப்பார் என்று எங்கள் வீட்டில் எல்லோரும் சொல்ல கேட்டிருக்கிறேன் எனக்கும் நினைவிருக்கிறது அவர் நன்றாக பாடுவார் அவர் பாடுவதை பார்த்து தான் நானும் பாட பழகினேன் (எதோ கொஞ்சம் ஓரளவு பாடுவேன் என்று வைத்து கொள்ளுங்கள் ) அவர், எனது மன்னிக்கவும் நமது குடந்தையூர் தளம் பார்த்து படித்து விட்டு அனுப்பிய கருத்துரையை உங்களோடு பகிர்கிறேன்


ஒரு சிறு வயது குழந்தை பள்ளியில் ப்ரைஸ் வாங்கி கொண்டு வந்ததை, தாய் உச்சி முகர்ந்து எப்படி பாரட்டுவாரோ அந்த பாராட்டில் குழந்தை எப்படி மகிழுமோ அதே மகிழ்ச்சியில் இந்த கருத்துரையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்




படம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் குளம்

ஆர்.வி.சரவணன்
















திங்கள், ஜூன் 27, 2011

வான் வழியே நானும்....


வான் வழியே நானும்

நான் இது வரை விமானத்தில் சென்றதில்லை என் உறவினர்கள் செல்லும் போதும் வரும் போதும் ஏர்போர்ட் சென்று வந்திருக்கிறேன் முதல் முறையாய் நானும் விமானத்தில் சென்று வந்தேன்


என் அலுவலகத்தில் என் துறை சம்பந்தப்பட்ட வேலை ஒன்றை முடிக்க வேண்டி வர நான் இந்தோர் (மத்யப்ரதேசம் ) செல்லுமாறு பணிக்கப்பட்டேன் ஒரே நாள் தான் வேலை.


ஞாயிறு இரவு கிளம்பி மும்பை சென்று அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து நான் இந்தோர் சென்று வேலை முடித்து விட்டு அன்று இரவே மும்பை திரும்பி மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து சென்னை வந்து இறங்கி நேராக அலுவலகம் வந்து விட்டேன்
என்ன ரெண்டு நாள் தூக்கம் போச்சு


அந்த அனுபவங்களை செய்தி துளிகளாய் தருகிறேன்


எட்டு பத்து விமானத்திற்கு நான் ஏர்போர்ட் சென்று நுழைந்தது எழு முப்பது மணிக்கு நான் ஏறிய ஆட்டோ செய்த மக்கர் மற்றும் ஆட்டோகாரர் சென்ற வழியினாலும் நேரமாகி விட்டது .ஆட்டோ பாஸ்ட் ஆக பறந்ததோ இல்லியோ பதட்டத்தில் என் மனசு அதை விட வேகமாக பறந்தது


முதல் முறை விமானத்தின் உள்ளே கால் வைக்கும் போது கடவுளை வேண்டி கொண்டு உள் நுழைந்தேன் (முதல் முதலாய் செல்கிறோம் வேலை இனிதாய் அமைய வேண்டும் என்று தான் )


எனது டிராவல் பேகை எனது சீட்டின் கால்களுக்கு அருகாமையில் வைத்து கொண்டு அமர்ந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் மேலே வைக்கலாம் என்று சொன்ன பின்பு தான் , சீட்டுக்கு மேல் அதற்கென்று தனி இடம் இருப்பது எனக்கு தெரிய வந்தது


நான்கு விமான பயணத்திலும் ஒரு முறை மட்டுமே ஜன்னலோர சீட் கிடைத்தது அதுவும் இரவில் செல்லும் போது மட்டும்


விமானம் மேலே உயரும் போது பயமாயிருக்குமோ என்று நினைத்தேன்
அவ்வளவாக பயம் ஏற்படவில்லை


இரவில் விமானம் மேலே உயரும் போது வெளிச்ச பூக்களில் மின்னிய சென்னையையும் மும்பையையும் பார்த்து பிரமிப்பானேன்.


விமானத்தில் ஒரு முறை கூல் ட்ரிங்க்ஸ் வாங்கி சாப்பிட்டேன் இன்னொரு முறை டீ வாங்கி சாப்பிட்டேன் டீ பதட்டத்தில் என் கை பட்டு சிதறி என் மேலும் விழுந்து பக்கத்தில் இருப்பவர் மேலும் விழுந்து அவரது முகச்சுளிப்பை அவஸ்தையுடன் ,அசடு வலிந்து கொண்டே பெற்று சீட் எனது பான்ட் எல்லாம் துடைத்து ஒரு வழியாய் மிச்சமிருக்கும் டீயை குடித்து முடித்தேன் (டீ சிதறியவுடன் ஏர் ஹோஸ்டஸ் உடனே வேகமாய் சென்று டிஸ்யு பேப்பர் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து கொடுத்தார்)

விமானத்தில் செல்வதற்காகவே தனியாக ஒரு ஆயிரம் ரூபாய்க்கு என் சொந்த செலவில் பர்சேஸ் செய்து கொண்டேன்

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் விமான பயணம் பற்றி ஒரு லெக்சர் கொடுத்தேன்

நான் சென்று வந்த வேலை வெற்றிகரமாய் முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி


இந்த விமானப்பயணம் அடுத்து எப்போது செல்வோம் என்ற ஆசையை
என் மனதில் விதைத்து விட்டது என்னவோ உண்மை .

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூன் 23, 2011

பல் சுவை பகிர்வு


பல் சுவை பகிர்வு

பார்த்தது

எனக்கு கொஞ்சம் மனது டல் ஆக இருந்தால் திரை அரங்கில் சென்று படம் பார்க்க விருப்பபடுவேன் நேற்று சினிமாவுக்கு போகலாம் என்று ஒரு ஆசை வர உடனே கிளம்பினேன் மவுண்ட் ரோடில் ஒரு திரைஅரங்கில் சிவாஜி நடித்த மன்னவன் வந்தானடி படம் ஓடி கொண்டிருந்தது. பழைய படங்கள் தியேட்டர் சென்று பார்த்து வருஷ கணக்கில் இருக்கும் சரி இந்த படம் பார்ப்போமே என்று ஆசை வர சென்றேன் சிவாஜி, மஞ்சுளா ,நாகேஷ், நம்பியார் நடித்த படம் மாதவன் இயக்கம் இந்த படத்தில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் காதல் ராஜ்ஜியம் எனது அந்த காவல் ராஜ்ஜியம் உனது .... எனக்கு பிடித்த பாடல் அது. இந்த படம் போய் பார்த்து விட்டு வந்ததும் என் அலுவலக நண்பர்கள் பழைய படம் டிவி யிலேயே பார்க்கலாம் தியேட்டர் சென்று பார்கிறீர்களே என்று ஒரே சிரிப்பு மழை. எனக்கு படங்கள் தியேட்டரில் பார்க்க பிடிக்கும். பழைய படம் அதுவும் சிவாஜி படம் பார்க்கலாமே என்று தான் போனேன் என்று சொன்னேன்

இனிமே பழைய படம் போனால் நண்பர்களிடம் சொல்ல கூடாது என்றிருக்கிறேன் ஆனா உங்க கிட்டே பகிர்ந்துக்கிறேன் (பதிவை நிரப்ப விஷயம் வேண்டாமா )

படித்தது (படித்து கொண்டிருப்பது )

வந்தார்கள் வென்றார்கள் என்ற, கார்டூனிஸ்ட் மதன் அவர்கள் எழுதிய
சரித்திர நூல் இது .டில்லியை அரசாட்சி செய்த மன்னர்களை பற்றிய சில நூற்றாண்டுகள் பின்னோக்கி நம்மை அழைத்து செல்லும் இந்த சரித்திர நூலை இப்போது படித்து கொண்டிருக்கிறேன் படிக்க படிக்க பிரமிப்பையும் சுவாரஸ்யத்தையும் அந்த காலத்திற்கே சென்று வந்ததை போன்ற அனுபவத்தையும் தருகிறது. இப்போது பாபரின் வாழ்க்கை பற்றிய அத்தியாயம் படித்து கொண்டிருக்கிறேன்

வந்தார்கள் வென்றார்கள் மனதில் நின்றார்கள்

மனதில் பதிந்தது

சமீபத்தில் நான் ரயிலில் வரும்போது எதிரில் அமர்ந்திருந்த இரு பெண் பயணிகள் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு கொண்டு வந்தார்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அந்த பிளாஸ்டிக் பைகளை ரயிலுக்குள்ளும் எரியவில்லை ஜன்னலுக்குள்ளும் எறியவில்லை மாறாக அந்த பைகளை கசக்கி தங்கள் கை பையிலேயே திணித்து கொண்டார் ஒருவர். மற்றவர் வெளியில் எரிந்து விடலாம் என்று சொன்னதற்கு வேண்டாம் குப்பை தொட்டி பார்த்து போட்டுக்கலாம் என்று தெரிவித்தார் ரயிலுக்கு உள்ளே மட்டுமில்லாமல் ரயிலுக்கு வெளியே கூட குப்பையை போடாத அவரது செயல் என்னை கவர்ந்தது

குப்பை தொட்டி பார்த்து குப்பையை போட்டுக்கலாம் என்று நினைத்து சேர்த்து அதுவே ஒரு குப்பையா ஆகாமே இருந்தா சரி

நான் என்னை சொன்னேன்

மகிழ்ந்தது

சக பதிவர் அரசன் அவர்கள் கரை சேரா அலை என்ற பெயரில் ப்ளாக் எழுதி வருகிறார் அவர் சென்னையில் தான் இருக்கிறார் என்றவுடன் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசினேன் சமயம் கிடைக்கும் போது போனில் பேசி கொண்டோம் அவரை நேரில் சந்திக்கலாம் என்று நான் கிளம்பினால் அவர் அலுவலக வேலையாய் வெளியில் சென்றிருப்பார் அவர் என்னை சந்திக்க கிளம்பினால் நான் வெளியூர் சென்றிருப்பேன் இப்படியே தொடர ஒரு நாள் அவர் விடாபிடியாக எப்படியும் பார்க்க வருகிறேன் என்று சொல்லி காலையிலேயே அவர் அலுவலகம் செல்லும் முன்பு என்னை சந்திக்க என் அலுவலகம் வந்திருந்தார். சந்திப்பது தள்ளிபோய் கொண்டிருக்கிறது என்பதால் அதிரடியாக பார்க்க வந்ததாய் தெரிவித்தார். அவர் என்னை காண நேரில் வந்திருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது அவருக்கு எனது வாழ்த்துக்கள்

கரை சேரா அலை
கண்டு வாருங்கள் இந்த வலை

லிங்க் இதோ



final punch

எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான்

மிக சிறந்த மனிதன் கடவுளின் மாபெரும் படைப்பு

நாட்காட்டியில் படிச்சது


படம் ராமேஸ்வரம் சென்ற போது எடுத்தது

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஜூன் 21, 2011

ஒரு ரீவைண்ட்




ஒரு ரீவைண்ட்


கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது நல்ல விஷயம் தானே இதோ நான் வலைத்தளம் ஆரம்பித்து நான் கடந்த 124 இடுகைகளை திரும்பி பார்க்கலாம் என்றிருக்கிறேன் எனக்கு பிடித்த எல்லோரையும் கவர்ந்த இடுகைகளை இதோ உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்


சிறுகதை

நான் திரைப்படம் எடுக்கலாம் என்று ரெடி செய்த கதையின் கிளைமாக்ஸ் மட்டும் எடுத்து ஒரு சிறு கதை உருவாக்கினேன் அது தான் இரு மன அழைப்பிதழ் இந்த சிறுகதை மூன்று பகுதிகளாக


வரதட்சனை யை எதிர்க்கும் மணமகனின் உறுதியை மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல சிறுகதையில்




கவிதை

கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்களின் பெயர்களை கொண்டு ஒரு கவிதை நீ கண்டும் காணாது சென்றாலும் ....


அதே போல் கல்வியை பற்றி நான் எழுதிய கவிதை கற்கை நன்றே கற்கை நன்றே




ஓவியம்

என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த ஓவியங்களும் அதற்க்கு நான் கொடுத்த வரிகளும்

என் கவிதை அரும்புகளும்


குறையொன்றுமில்லை





அனுபவம்

எனது கல்லுரி நாட்களில் நான் நடத்திய நாடகம் பற்றிய ஒரு அனுபவ பதிவு


நான் உப்புமா செய்ய மல்லு கட்டிய
என் சமையலறையில் அனுபவ பதிவு


பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்ற தொடர் பதிவு





ஏற்கனவே படித்திருப்பவர்கள் பொறுத்தருளுங்கள்

இந்த இடுகைகளை படிக்காதவர்கள் படித்து தங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்

படம் செல் போனில் நான் எடுத்தது

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, ஜூன் 17, 2011

டென்சன் கள் பல விதம்


டென்சன் கள் பல விதம்

நான் நடைமுறை வாழ்க்கையில் டென்சன் ஆகும் தருணங்கள் சிலவற்றை டென்சனுடன் சாரி ஜாலியாய் இங்கே தந்திருக்கிறேன்

டென்சன் 1

ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர் நாம நடந்து வரப்ப பாத்தா காலியா தான் இருக்கும் ஆனா நான் கிட்டே நெருங்கி வரதுக்குள்ளே எங்கிருந்து தான் வருவாங்களோ தெரியாது நாலஞ்சு பேர் திடீர்னு வந்து நின்னுடுவாங்க அப்ப வரும் பாருங்க டென்சன்

டென்சன் 2

ரயில்லே ஜன்னலோர சீட் லே உட்காரலாம் னு ஆசைப்பட்டு ஏறுவேன் காலியாதான் இருக்கும் ஆனா பாருங்க கிட்டே போனவுடனே பார்த்தா சீட் லே சின்ன கர்சிப் அங்கே இருந்து நம்மளை டென்சன் ஆக்கும்

டென்சன் 3

பேருந்தில் ஏறி அமர்ந்து நிம்மதியா தூங்கிட்டு போகலாம்னு நினைச்சா அது நம்ம கையிலே இல்லை பக்கத்துலே உட்கார்ற ஆளை பொறுத்தது அது ஒன்னு அவர் தூங்கி நம் மேல் விழுகிறவர் ஆக இருக்கலாம் அல்லது சரக்கு அடிச்சிட்டு வந்து பேசிகிட்டே இருக்கிறவராகவும் இருக்கலாம் .அப்படி இருந்திட்டா நம்ம நிலைமை டென்சன் தான்

டென்சன் 4

நாம முதலாளி கிட்டே இன்க்ரிமென்ட் க்கு போராடி பேசி இவ்வளவு தான் தருவார் னு முடிவாகி சரி என்று ஒத்து கொண்டு வந்த பின்னாடி மற்ற ஊழியர்கள் பேசி அதற்கும் மேலேயும் அதிகமா இன்க்ரிமென்ட் வாங்கினா வரும் பாருங்க ஒரு டென்சன்

டென்சன் 5

ஹோட்டல் லே சாப்பிட்டு கை அலம்ப போவோம் அங்கே ஒருத்தர் தன் உடலையே, அதாவது ( கை , முகம் ) அலம்பிட்டிருப்பார் . இது வரைக்கும் அவர் வீட்டிலே முகமே அலம்பியிருக்க மாட்டோரோனு நினைக்கும் படி அவர் அலம்பி நம்ம கையை காய வைப்பார் பாருங்க அப்ப கிளம்பும் பாருங்க ஒரு டென்சன்

டென்சன் கள் தொடரும்

அது சரி நான் மட்டும் என் டென்சன் பற்றி சொல்லிகிட்டு இருக்கேன் நீங்க இதுக்கெல்லாம் டென்சன் ஆகறீங்கலானு கேட்கவே இல்லை பாருங்க நானு
சரி நீங்க எதுக்கெல்லாம் டென்சன் ஆவீங்க னு சொல்லுங்களேன்


ஆர்.வி.சரவணன்

**********************************ஒரு நிமிஷம் *******************************
ஈரோடு மாவட்ட கலெக்டர் திரு .ஆனந்தகுமார் அவர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்த தன் மகள் கோபிகாவை அரசு தொடக்கபள்ளியில் சேர்த்ததோடு மற்ற குழந்தைகள் சாப்பிடும் சத்துணவை தன் குழந்தைக்கும் வழங்குமாறு கேட்டு கொண்டுள்ளார்
இதன் மூலம் ஒரு முன்னுதாரணத்தை விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆனந்தகுமார் அவர்களுக்கும் அவர் மனைவி ஸ்ரீ வித்யா அவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்
************************************************************************************

செவ்வாய், ஜூன் 14, 2011

திருவண்ணாமலை


திருவண்ணாமலை



நான் திருவண்ணாமலை

(ஐந்து வருடங்களுக்கு முன்பு )

சென்றிருந்த போது எடுத்த படங்கள் சில




திருவண்ணாமலை

முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்த சன்னதி



கோயிலின் ஒரு கோபுரம்

நந்தி மண்டபம்


நுழைவாயிலின் கோபுரம் உள்ளே

ஓம் நமசிவாய

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூன் 09, 2011

சூப்பர் ஸ்டாருக்காக



சூப்பர் ஸ்டாருக்காக





சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பூரண நலம் பெற்று வர வேண்டி, சென்னை அருள் மிகு காளிகாம்பாள் திருகோயிலில் என்வழி வாசகர்கள் சார்பில் பூஜை மற்றும் பிரார்த்தனைக்கு வினோ அழைத்திருந்தார் ஆர்வமுடன் கலந்து கொண்டேன் அந்த அனுபவத்தை பல்சுவை பகிர்வாய் இங்கு தருகிறேன்


பார்த்தது

இணைய தள நண்பர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களை பார்க்கும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்தது. வந்திருந்தவர்கள் அனைவரும் பல் வேறு ஊர்களில் இருப்பவர்கள். ஒவ்வொரு துறைகளில் வேலையில் இருப்பவர்கள் இவர்கள் அனைவரும் ரஜினிக்காக ரஜினி ரசிகன் என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு வந்திருந்து பிரார்த்தனையில் பங்கேற்றது பார்க்க சந்தோசமாய் இருந்தது


61 நெய் தீபங்கள் ரஜினி நலம் பெற வேண்டி ஏற்றப்பட்டது. கலந்து கொண்ட நாங்கள் தீபங்கள் ஏற்றியதுடன் மட்டுமில்லாமல் பொதுமக்களையும் ஏற்ற வைத்தது ஒரு சிறப்பு என்றால் பொதுமக்களும் விரும்பி வந்து நெய் தீபங்கள் ஏற்றியது இன்னுமொரு சிறப்பு

படித்தது

சிதம்பரம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் சிவாஜி படத்தின் போது அவர்கள் வெளியிட்டிருந்த சிறப்பு மலரை அனைவருக்கும் அளித்தனர் சிறப்பாக அச்சிடபட்டிருந்த அந்த மலரில் இருந்த வாசகங்களில் ஒன்று இதோ

ஆயிரம் மின்னல் நீல வானில்

நீ அபூர்வ மின்னல் திரை வானில்



கேட்டது


கோயிலில் அம்பாளுக்காக நாங்கள் மாலை வாங்கும் போது பூ விற்கும் பெண்மணி என்னிடம் கேட்டார் என்ன போட்டோ எல்லாம் எடுக்கறீங்க என்ன விசஷம் என்றார் நான் ரஜினிக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்று சொன்னேன் அவர் உடனே உற்சாகமாகி அப்படியா நான் கூட ரஜினி ரசிகை தான் அவர் குணமாகனும்னு நல்லா வேண்டிக்குங்க நானும் வேண்டிக்குறேன் என்றார் கேட்ட எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது


மகிழ்ந்தது

அருள் மிகு காளிகாம்பாள் அன்னையை வழிபட்டோம் திருப்தியுடன் பூஜை மற்றும் அன்னதானம் முடித்து விட்டு பிரசாதத்தையும் வெட்டி வேரால் செய்யப்பட்ட ஸ்பெஷல் மாலையையும் ரஜினி வீட்டில் கொடுப்பதற்காக நாங்கள் சென்றோம் நான் போயஸ் கார்டன் செல்வது இது தான் முதல் முறை ரஜினி வீட்டை பார்ப்பதும் இப்போது தான்



நெகிழ்ந்தது

ரஜினி வீட்டில் அவரது உதவியாளரிடம் நாங்கள் பிரசாதத்தை கொடுத்தோம். இன்முகத்துடன் பெற்று கொண்டார் கூடவே, தலைவர் உடல் நலம் பெற்று குணமாகி வருகிறார் இந்த அளவுக்கு அவர் உடல் நலம் தேறி வருவது ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனையும் அன்புமே காரணம் என்றும் தெரிவித்தார் இதில் நான் நெகிழ்ந்தது என்னவென்றால் எங்களை உள்ளே அனுமதித்து நாங்கள் செல் போனில் போட்டோ எடுத்து கொள்ள வும் அனுமதி தந்தது எங்களை நெகிழ வைத்தது

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்காக இதோ
அடுத்த பிரார்த்தனை தொடர்கிறது

ஜூன் 12-ம் தேதி உலகம் முழுக்க தலைவருக்காக பிரார்த்தனை… பரங்கிப்பேட்டை பாபாஜி கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜூன் 12 அன்று ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு சிதம்பரம் அருகே பரங்கிபேட்டையில் உள்ள மகாவதார் பாபாஜி கோயிலில் சர்வமத பிரார்த்தனை நடைபெற உள்ளது


தலைவர் ரஜினிக்காக உலகளாவிய சர்வமத பிரார்த்தனைஎன்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ரஜினிக்காக இயங்கும்என்வழிஇணைய தள நண்பர்கள், ரஜினிபேன்ஸ்.காம் மற்றும் ரஜினிலைவ்.காம் ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.ஆனாலும் பிரார்த்தனையை நடத்தப்போவது முழுக்க முழுக்க ரசிகர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


இப் பிரார்த்தனை சிறப்புற அமையவும் ரஜினி அவர்கள் நலம் பெற்று வரவும் எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரியட்டும்

ரஜினிக்காக உலகளாவிய இந்த சர்வமத பிரார்த்தனை
குறித்த மேலும் தகவல்களுக்கு என்வழி யின் இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்


http://www.envazhi.com/?p=26047



ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூன் 02, 2011

இந்த மான் உந்தன் சொந்த மான் ....

இந்த மான் உந்தன் சொந்த மான் ....

மனம் கவர்ந்த பாடல்கள்

நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலிலும் கேட்கும் போது இரட்டிப்பு போனஸ் கிடைத்த மகிழ்ச்சி தான் எனக்கு ஏற்படும் . அப்படி ஒரு பாடலை தான் இப்போது நான் சொல்ல போகிறேன்

கரகாட்டக்காரன் படத்தில் வரும் இந்த மான் உந்தன் சொந்த மான்
பாடல் தான் அது

அந்த பாடல் ஆரம்பிக்கும் போது வரும் இசை உச்சி வெயில் நேரத்தில் ஒரு நதியின் குளிர்ந்த நீரில் நீராடுவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும் போது அந்த குளிர்ந்த நீர் நம் உடலில் தழுவும் போது என்ன உணர்வு கிடைக்கும் யோசித்து பாருங்கள் அந்த உணர்வு தான் எப்போதுமே எனக்கு இப்பாடலின் ஆரம்ப இசை கேட்கும் போது தோன்றும் .

தொடர்ந்து கேட்கும் போது நதி நீரில் நீந்தும் உணர்வுகளும், பாடல் முடியும் போது திருப்தியுடன் கரை ஏறும் உணர்வும் ஏற்படும்

சின்ன குயில் சித்ராவுடன் இணைந்து இசை அரசர் பாடும் இந்த பாடலில் அன்னமே என்று ராகம் இழுக்கும் போது கூடவே நம் மனதையும் அல்லவா சேர்த்து இழுப்பார்

அதே போல் பக்கம் வந்து தான் என்று பாடும் போதும் சந்திக்க வேண்டும் தேவியே என்று பாடும் போதும் வேல் விழி போடும் தூண்டிலே என்று பாடும் போதும் அந்த வரிகளுக்கான குரல் இனிமை என்னை மிகவும் கவரும்

படம் வெளியான நாள் முதல் இன்று வரை ஏன் எப்போதுமே என்னை கவர்ந்த பாடல் இது என்று உறுதியிட்டு சொல்வேன்

படம் கரகாட்டக்காரன்

பாடல் கங்கை அமரன்

படம் வெளியான ஆண்டு 1989




இன்று நம் இசை அரசர் இளையராஜா அவர்களுக்கு பிறந்த நாள்

ராக தேவனே உன் இசை,

தூக்கம் வாராத இரவுகளில் என்னை
தாலாட்டுகிறது


துக்கமான நேரங்களில் என் மனதை
மயிலிறகாய் வருடுகிறது


உற்சாகமான நேரங்களில் சந்தோச சிகரத்திற்கு
என்னை கை பிடித்து அழைத்து செல்கிறது


தோல்விகளில் துவளும் போது தட்டிஎழுப்பி
அமர வைக்கிறது


வாழ்க்கையில் நான் வெற்றிகளை தொடும் போது
கை தட்டி ஆர்ப்பரிக்கிறது


இசை தேவனே உன் இசை இவ்வையகம் உள்ள வரை வையகத்தை ஆளட்டும்


ஆர்.வி.சரவணன்