சனி, பிப்ரவரி 26, 2011

நான் என்ன சொல்றேன்னா ...



நான் என்ன சொல்றேன்னா (பல் சுவை பதிவு )


பார்த்தது

யுத்தம் செய் பார்த்தேன் காதல் காமெடி என்று எதுவும் இல்லாமல் ஒரு த்ரில்லர் படம் சேரன் அழுத்தமாய் அலட்டல் எதுவும் இல்லாமல் நன்றாக செய்திருக்கிறார் ஒரு குடும்பம் பழி வாங்கும் வித்தியாசமான கதை களன் கொண்ட இந்த படம் பற்றி மிஷ்கின் சார் படம் நல்லா பண்ணியிருக்கீங்க என்று சத்தம் செய் ய தோன்றுகிறது
படித்தது

ஒரு கிரிக்கெட் குழுவை கோடிகணக்கில் பணம் கொடுத்து விலைக்கு வாங்க கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் . அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கை கூட நாட்டு நல பணிகளுக்கு செலவு செய்ய செல்வந்தர்கள் இல்லை
(நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் படித்தது)



கேட்டது (தொடர்ந்து கேட்பது)

மலேசியா வாசுதேவன் திரை இசை யில் தன் குரலால் நமை வசீகரித்தவர் இப்போது இல்லை என்றாலும் அவர் குரலால் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் .அவர் பாடிய பூங்காற்று திரும்புமா நான் அடிக்கடி மனம் கஷ்டப்படும் நேரங்களில் கேட்கும் பாடல். இப்பொழுதும் கேட்கிறேன். மலேசியாவாசுதேவன் எனும் இந்த பூங்காற்று திரும்புமா ?

ஆதங்கம்

பஸ் டே என்ற பெயரில் மாணவர்களின் சந்தோச கொண்டாட்டத்தில் மற்றவருக்கு திண்டாட்டம் தான் ஏற்படுகிறது . இதை அவர்கள் கொஞ்சம் யோசிக்கலாமே .அவர்கள் சந்தோஷம் மற்றவர்களும் பார்த்து பெருமிதப்படுவதாக இருக்க வேண்டும் என்பது
அந்த மாணவ பருவத்தை கடந்தவர்களின் (எனது )ஆதங்கம்
வருத்தம்

தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுடப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் பிழைப்பில் மண் போடுவது என்று சொல்வார்கள் இங்கே மீனவர் உயிருக்கே உலை வைக்கப்படுகிறது. மீனவர் பிழைப்புக்காக கடலில் செல்லும் போது அவர் தம் குடும்பம் நல்ல படி திரும்ப வர வேண்டும் என்று காத்திருப்பது போய், இன்று உலகில் இருக்கும் அனைத்து தமிழர் களும் மீனவர்கள் கடலுக்குள் சென்று வரும் வரை கலக்கத்துடன் காத்திருக்கிறோம்

மகிழ்ச்சி
எனது நூறாவது பதிவு ஆனந்த விகடனின் யூத் புல் விகடன் தளத்தில் குட் ப்ளாக்ஸ் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது விகடனின் நீண்ட நாள் வாசகனாகிய எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறது
உங்களுடன் அந்த மகிழ்வை பகிர்வதில் எனக்கு போனஸ் மகிழ்ச்சி தான்
நன்றி யூத் புல் விகடன்

final punch

தூரத்தில் உள்ளதை எதிர்பார்த்து
அருகில் உள்ளதை அலட்சியம் செய்யாதே

உழைப்பே ஓய்வுக்கு திறவு கோல்
சுறுசுறுப்பே செல்வத்திற்கு திறவு கோல்

ஆர்.வி.சரவணன்

வியாழன், பிப்ரவரி 24, 2011

சாலையோரம்

சாலையோரம்


ரோடு இவ்வளவு கிளீனா இருந்தா நாங்க எப்படி இறை தேடறது
யாருக்காவது அக்கறை இருக்கா
இப்படி பள்ளம் இருந்தா நாங்க எப்படி பறக்கறது
அழகான கார்லே ஏறலாம் னு நினைச்சா


இவங்க கார் மேலேயே ஏறிட்டாங்கலே



நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் எனை கவர்ந்த படங்கள் இவை

ஆர்.வி.சரவணன்



புதன், பிப்ரவரி 23, 2011

சில்லறை பிரச்னை


சில்லறை பிரச்னை

ஏதோ ஒரு சின்ன பிரச்னை பத்தி சொல்ல போறேன்னு தானே நினைக்கீறீங்க
அதான் இல்லை நிஜமாவே சில்லறை பற்றிய பிரச்னை தான்

இந்த என் அனுபவத்தை படிங்க

சென்ற வாரம் நான் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தஞ்சாவூர் சென்றேன் காலை ஏழு மணி பேருந்து நிலையத்தில் இறங்கியவன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று நான் வழக்கமாய் செல்லும் ஹோட்டல் சென்றேன் காப்பி சாப்பிட்டு விட்டு பாக்கெட்டில் கை விட்டால் சில்லறை இல்லை நூறு ரூபாய் நோட்டாக தான் இருந்தது ஆகா சில்லறை இல்லன்னு கடுப்படிக்க போறாங்க என்று கொஞ்சம் தயக்கத்துடன் நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன்

கல்லாவில் இருந்தவர் சில்லறையா கொடுங்க காலை நேரம் சில்லறையில்லே என்றார் நான் பரிதாபமாய் என்கிட்டே நிஜமாவே இல்லைங்க என்றேன் அவர் ஏங்க ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டு கேட்டா கொடுக்கலாம் ஒரு காப்பி சாப்பிட்டுட்டு கேட்டீங்கன்னா எப்படிங்க என்ற அவர் சலிப்புடன் சொன்னதும் எனக்கு கடுப்பாகி விட்டது ஏங்க டிபன் சாப்பிட வேண்டி இருந்தா தான் சாப்பிட முடியும் சில்லறைக்காக சாப்பிட முடியுமா என்றவுடன் அவர்சில்லறை இல்லைங்க சில்லறை கொடுங்க என்று உறுதியாக சொல்ல

நான் கோபமாய் நூறு ரூபாய் வச்சிக்குங்க சில்லறை மாத்தி கொடுத்திட்டு வாங்கிக்கிறேன் என்று வீராப்பாக சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.
காலை நேரம் என்பதால் கடைகள் அவ்வளவாக திறக்கவில்லை சரி என்ன செய்வது என்று ஒரு மாத இதழ் அன்றைய நியூஸ் பேப்பர் வாங்கி கொண்டு சில்லறை கொண்டு போய் கொடுத்திட்டு நூறை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

அதோடு முடியலே பிரச்னை திருமணம் சென்றுவிட்டு திரும்பும் போது பத்து ரூபாய் நோட்டு ஒன்றை பேருந்தில் நான் டிக்கெட் வாங்குவதற்காக கொடுக்க கண்டக்டர் மூணு ரூபாய் சில்லறையா கொடுங்க என்றார் சில்லறை இல்லை என்றவுடன் இறங்கிடுங்க என்றார் நான் என்னங்க எல்லாரும் சில்லறை கேட்டால் நான் எங்க போறது என்று வேகத்துடன் கேட்க, அவரும் அதே டயலாக் ரீபிட் செய்து சொல்லி என்னை இறக்கி விட்டு விட்டார். வெறுத்து பொய் விட்டேன் அடுத்து வந்த பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு டிக்கெட் கேட்க அவர் சில்லறை என்று கேட்டு நான் இல்லை என்று சொன்னவுடன் அவர் பாவப்பட்டு சில்லறை கொடுத்தார்.

இப்படியாக எனக்கு அந்த ஒரே நாளில் சில்லறை பிரச்னை பெரும் பிரச்சினையானது

இதிலே கிளைமாக்ஸ் என்ன தெரியுமா

அதே நாளில் நான் மாலை பேருந்து ஏறிய போது 3.50 டிக்கெட் க்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன் கண்டக்டர் 50 பைசா இருந்தா கொடுங்க என்றார் நான் நிறைய சில்லறை வைத்திருந்தேன் அதை எல்லாம் எடுத்து 50 பைசா தேடி எடுத்து நீட்ட அவர் சில்லறை தான் வச்சிருக்கீங்களே சில்லரையாவே கொடுத்துடுங்க என்று கேட்டார் நான் அஸ்கு புஸ்கு என்று (மனதிற்குள் தாங்க சொல்லி கொண்டு) இந்த சில்லறை இல்லன்னு தான் காலையிலே என்னை பேருந்தை விட்டே இறக்கி விட்டுட்டாங்க சார் என்றேன் .அவர் என்னை ஒரு பார்வை பார்த்த வாறே சென்று விட்டார்

அதனாலே இப்ப நான் வெளியில் கிளம்புறப்ப சில்லரையோட தான் கிளம்புறது



ஆர்.வி.சரவணன்

சனி, பிப்ரவரி 19, 2011

உன் கொலுசொலி .....




உன் கொலுசொலி .....

அன்பே உன் வீட்டு வாசலிலும் சன்னலிலும்
பால்கனியிலும் மொட்டை மாடியிலும்
உனை தேடி சலித்த என்னை சமாதானப்படுத்தியது
உன் கொலுசொலி

உன் காற் சதங்கையிடம் கொஞ்சம் சொல்லி வை எனை
எப்போதும் கிறக்கத்தில் வைத்திருப்பதை
வாடிக்கையாய் கொண்டிருக்கிறது


ஆயிரம் இரைச்சல்கள் அன்றாடம் எனை புயலாய் சூழ்ந்தாலும்
உன் கொலுசொலி மட்டும் அவற்றுக்கிடையே
புகுந்து புறப்பட்டு எனை தென்றலாய் வந்தடைகிறது

உன் கொலுசுக்கு மட்டும் ஏனிந்த பாரபட்சம்
நான் கைகளில் வாங்கி வரும் போது எழுப்பாத
இன்ப அதிர்வுகளை எல்லாம் உன் பாதங்களில்
நீ அணிந்தவுடன் மட்டும் ஏற்படுத்துகிறதே


ஆர்.வி.சரவணன்

திங்கள், பிப்ரவரி 14, 2011

காதலர் தினம்



காதலர் தினம்


காதலர் தினத்திற்காக ஒரு அசத்தலான கவிதை ஒன்றை எழுதி மனைவிக்கு கொடுக்கலாமே என்று யோசனை வர பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு அமரும் வேளையில்

என் பெண் அப்பா என் ஸ்கூல் டிரஸ் அயர்ன் பண்ணி கொடுங்கப்பா

என்று கையை பிடித்து இழுக்க நான் பெண்ணை சமாதானம் செய்து விட்டு அமர்ந்து எப்படி கவிதையை தொடங்கலாம் என்று யோசிக்கையில்

என் பையன் வந்து அப்பா மச...மச... னு உட்காரதிங்க என்று சொல்ல நான் முறைத்தேன். அவன், அம்மா இப்படி தான் உங்களை சொல்ல போறாங்க என்றான்.
என் நேரம்டா என்று சொல்லி விட்டு நான் எழுத ஆரம்பித்தேன்

என்னவளே என்னுள் உள்ளவளே உன் செவ்இதழ் மலர்ந்து ஒரு இனிமையான சொல் சொல்வாயா.............. என்று எழுதும் போது

என் மனைவி வந்து என்ன கிறுக்கறீங்க என்று சொன்னாள். உனக்கு காதலர் தினத்தில் கொடுப்பதற்கு என் அன்பை சொல்ல கவிதை எழுதி கொண்டிருகின்றேன் என்று சொன்னேன் சமயலறையில் பத்து பாத்திரங்கள் கிடக்கு அதை கொஞ்சம் கிளீன் பண்ணி கொடுங்க அது தான் நீங்க எனக்கு கொடுக்கிற அன்பு கவிதை மண்ணாங்கட்டி எல்லாம் வேண்டாம் என்று சொல்ல

நான் கழுதைக்கு தெரியுமா கவிதை வாசனை சீ கற்பூர வாசனை என்று முணுமுணுத்தேன் என்னையா கழுதைன்னு சொல்றீங்க என்று அவள் எகிற

நான் வாய் தவறி வந்துட்டுது என்று சமாதானம் பேச அவள் எப்படி சொல்லலாம் என்று கோபப்பட நானும் டென்ஷன் ஆகி கோபப்பட

இருவரும் சர்ச்சையில் இறங்க அந்த நேரம் மின் விசிறியை
எங்கள் பையன்,பெண் ஆன் செய்ய நான் கவிதை எழுதிய பேப்பர் பறந்து சென்று விழுந்த இடம் குப்பை தொட்டி

பின் குறிப்பு
இது என் அனுபவமல்ல இயந்திர வாழ்க்கையில் அன்பு என்ற அவசியம் அனாவசியமாகி விட்டது என்பதை யோசித்ததின் விளைவு இந்த சிறுகதை
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

நூறாவது பதிவு


நூறாவது பதிவு


வணக்கம் நண்பர்களே
சென்ற வருடம் மார்ச் மாதம் வலைத்தளம் ஒன்று ஆரம்பிக்கலாமே என்று குடந்தையூர் தளம் நான் ஆரம்பித்த போது கண்டிப்பாக நினைக்கவில்லை ஒரு வருடத்திற்குள் நூறை எட்டுவேன் என்று.

மேலும் நான் குடந்தையூர் தளம் ஆரம்பித்த போது எனக்கு வலையுலகில் தெரிந்த நண்பர்கள் என்வழி வினோ, கிரி ப்ளாக் கிரி,எப்பூடி ஜீவதர்ஷன் என்ற இவர்கள் மூவர் மட்டுமே நான் இடுகைகளை வெளியிட ஆரம்பித்த போது கமெண்ட்ஸ் அவ்வளவாக வராது (எப்படி வரும் நான் ஆரம்பித்தது யாருக்கு தெரியும் )

ஆளில்லாத கடையில் யாருக்குடா டீ
ஆத்தறே என்று விவேக் சொல்வது போல் நாம் பாட்டுக்கு எழுதுகிறோமே யாரும் படிக்கவில்லையே என்று நினைத்தேன் .

பின் நான் இடுகைகளை எழுதி கொண்டே ஒவ்வொரு நண்பர்களின் தளமாக சென்று படித்து கமெண்ட் போட்டு கூடவே நண்பராய் அறிமுகமாகி கொண்டிருந்தேன் .அவர்களும் என்னை பற்றி தெரிந்து கொண்டு என் தளத்திற்கு வருகை தந்து என் இடுகைகளை படித்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தினர் இதனால் எனக்கு, புதிய சிந்தனைகளுடன் மேலும் மேலும் புதிய இடுகைகளை எழுத முடிந்தது இதோ இன்று நூறை தொட்டிருக்கிறேன் .

இந்த நூறு இடுகைகளில் எவை சிறப்பானது என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் . இந்த நூறை நான் எட்டியிருப்பது உங்களின் ஊக்கத்தால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை

மேலும் வலைத்தளம் என்ற வானில் நானும் ஒரு சிறு நட்சத்திரமாக மின்ன ஆசைப்பட்டேன் அப்படி நான் மின்னியிருந்தாலும் அதன் ஒளி நீங்கள் கொடுத்து கொண்டிருப்பது தான் என்பதிலும் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை

இன்று எனக்கு வினோ ,கிரி, எப்பூடி, சங்கவி, சைவ கொத்து பரோட்டா, ஜெய்லானி, நிஜாமுதீன் , அகமதுஇர்ஷாத்,நாடோடி,குமார்,பாலா,அரசன்,வானதி, பிரியா, ஆனந்தி, சுசி, ஈரோடு கதிர், க.பாலாசி, மதுமிதா, பவி,பத்மா, ஆரூரன், வெறும்பய ஜெயந்த், மங்குனி அமைச்சர், மாணவன், கலையன்பன், அனைவரும் என் நண்பர்கள் எனும் போது எனக்கு பெருமையாக உள்ளது மேலும் பல நண்பர்களும் இருக்கிறார்கள் (விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உங்கள் அனைவருக்கும் நன்றி

மேலும் வலைச்சரம் தளத்தில் என் இடுகைகளை பற்றியும் என் தளத்தை பற்றியும் குறிப்பிட்டு எழுதிய வலை தள நண்பர்களுக்கும் சீனா அய்யா அவர்களுக்கும்என் நன்றி

மேலும் எனது தளத்தையும் என் இடுகைகளையும் வெளியிட்டு
பிரபலமாக்கிய இன்டலி ,தமிழ்மணம் தளங்களுக்
கும் என் நன்றி

நூறாவது பதிவுக்காக என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த விநாயகர் ஓவியம் இதோ



நான் மென் மேலும் வளர்வது உங்கள் ஆதரவில் தான் நன்றி நண்பர்களே



படத்தில் இருப்பது நான் தான்
ஈரோடு சங்கமம் விழாவில் எடுக்கப்பட்டது
நன்றி ஈரோடு கதிர்

நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
அன்புடன்
ஆர்.வி.சரவணன்

புதன், பிப்ரவரி 02, 2011

பல் சுவை பதிவு

பல் சுவை பதிவு




பார்த்தது

ஆடுகளம் படம் பார்த்தேன் (என்ன இவ்வளவு லேட்டா சொல்றே அப்படிங்கறீங்களா என்ன செய்வது கொஞ்சம் பிஸி படம் உடனே போக முடியலே ) வெற்றி மாறனின் பொல்லாதவன் படம் பார்த்து விட்டு ஆடுகளம் படத்தின் மேல் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருந்தேன் வெற்றி மாறன் பெயருக்கேற்றார் போல் வெற்றி களம் கண்டிருக்கிறார் படத்தில் தனுஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார் இல்லை இல்லை கருப்பு வாகவே மாறியிருக்கிறார் மற்றும் ஜி வி பிரகாஷ் இசையில் யாத்தே பாடல் விசிலடிக்க தோன்றியது வாழ்த்துக்கள் தனுஷ் ,வெற்றிமாறன்




படித்தது

பொன்னியின் செல்வனின் ரசிகன் நான் எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத கல்கி அவர்களின் இந்த கலை பொக்கிஷம் இப்போது நண்பர் வினோ அவர்களின் என்வழி தளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கிறது இது வரை படிக்காதவர்கள் படிக்கவும் படித்தவர்கள் மீண்டும் அந்த வரலாற்றில் பயணிக்கவும் ஒரு வாய்ப்பு

http://www.envazhi.com/?p=23423

கேட்டது

நீடாமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நான் நின்று கொண்டிருந்த போது பால்காரர் ஒருவர் டூ வீலரில் வந்தார் ரோடின் நடுவில் நின்று கொண்டிருந்த ஒருவரை பார்த்து அவர் சொன்னது


"தம்பி ரோடு உன்னுடையதாக இருக்கலாம் ஆனா வர்ற வண்டிங்க உன்னுடையதில்லை அதனாலே உன் நல்லதுக்கு சொல்றேன் ஓரமா நில்லுப்பா "


ஒரு வார்த்தைசொன்னாலும் சரியா தான் சொன்னாரு என்று நினைத்து கொண்டேன்


மகிழ்ந்தது (நெகிழ்ந்தது னும் சொல்லலாம்)

சென்ற வாரம் என் உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு A நெகடிவ் குரூப் ரத்தம் மூன்று பாட்டில் தேவைப்பட்டது

உறவினர்கள் நண்பர்கள் மூலமாகமுயன்றதில் மூவர் வந்திருந்து

ரத்த தானம் செய்தனர் அதில் ஒருவர் பெண்

ஒருவர் நேரமாகி விட்டபடியால் ஆட்டோ பிடித்து வந்து ரத்த தானம் அளித்தார்

அவர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தோம்

இது சாதாரண ஒன்று எதற்கு நன்றி எல்லாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றனர்

FINAL PUNCH


சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு
அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு


நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக் கொள்
உயர்ந்தவன் வாழ்க்கையை குறிகோளாக எடுத்துக் கொள்

காலெண்டரில் ( நாட் காட்டியில்) நான் ரசித்த சில வரிகள் இவை


ஆர்.வி.சரவணன்