வியாழன், டிசம்பர் 27, 2012

இளமை எழுதும் கவிதை நீ-17

இளமை  எழுதும் கவிதை நீ-17





நீ எனக்கிடும் உணவில் அன்பை சேர்க்கிறாயா 
விதைக்கிறாயா அறியும் கணக்கியலில் நான் 



பொழுது புலரும் முன்பே கோவிலில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாய் ஆரம்பித்திருந்தன.சிம்பிளா பண்ணிடலாம் என்று தான் ராஜேஷ்குமார் சொல்லி இருந்தார் . சிம்பிளாக ஆரம்பித்த  கல்யாண ஏற்பாடுகள்  தான் பெரிய அளவில் வந்து நின்றிருந்தது. சொந்தகாரர்கள் அனைவருக்கும் நண்பர்களில் முக்கியமான  சிலருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தனர்.கட்சிகாரர்கள்  பத்திரிகைகளுக்கு அழைப்பில்லை. காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம் என்பதால் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில்  மிகுந்த பரபரப்பு இருந்தது. வீடியோ கிராபர் லைட் செட்டிங்கில் பிஸியாக இருந்தார்   

வரவேற்க வாசலில்  ராஜேஷ்குமார்  சிவகுமார் இருவரும்  நின்றிருந்தனர் 

 
தொடரும்

ஆர்.வி.சரவணன் 

The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஞாயிறு, டிசம்பர் 16, 2012

இளமை எழுதும் கவிதை நீ-16


இளமை எழுதும் கவிதை நீ-16




என் மனது ஆசை எனும் அலைகளால் சூழ்ந்திருக்க 
நீ மட்டும் ஆழ் கடல் அமைதியில் 



கீதாவுக்கு, தனக்கு கல்யாணம் நடக்கிறது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாய்  இருந்தது. அதுவும் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போதே திருமணம் என்பது கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது 

 சிறு வயது முதல் கார்த்திக் உனக்கு தான் என்று பெற்றோர் முதல் உறவினர் வரை அனைவரும் பால பாடம் போல் அவள் மனதில் பதித்து விட்டனர். அவளது அத்தைக்கு பெண் குழந்தை யின்  மேல் ஆவல் இருந்தும் அவருக்கு பிறந்த இருவருமே பையன்கள் என்பதால், தன் தம்பிக்கு பிறந்த கீதாவை தன்
பெண் போல் பாசத்துடன் கவனித்து கொண்டார்.வீட்டில் மாப்பிள்ளை
 இருக்க  எதற்கு வேறு இடத்தில கொடுப்பது என்பதாலும் அவளை பிரிய வேண்டியிருக்குமே என்பதாலும்  தன் சின்ன பையனுக்கு கீதாவை மணம் முடித்து விட வேண்டும் என்றும் சொன்னார்.  அவர் பேச்சுக்கு அங்கே மறுப்பேது. சோ கார்த்திக் கீதா திருமணம் சிறு வயதிலேயே நிச்சயிக்க பட்ட ஒன்றாயிற்று.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

புதன், டிசம்பர் 12, 2012

நான் ரசிக்கும் ரஜினி....

நான் ரசிக்கும் ரஜினி....




ஒரு பத்திரிகை நிருபரின் கேள்விகளுக்கு ரஜினி ரசிகனான 
நான் சொன்ன பதில்கள் இவை 



நீங்கள்  பார்த்த முதல் ரஜினி படம் ?

நான் சிகப்பு மனிதன்

ஈர்த்த படம் ?

மாப்பிள்ளை

பரவசப்படுத்திய படம் ?

ஸ்ரீ ராகவேந்திரர் 

முழு ரசிகனாக ஆனது ?

அண்ணாமலை

ரஜினியின் நடிப்பில் கவர்ந்தது ?

அவரது ஸ்டைல் நகைச்சுவை மற்றும் அதிரடி 

நிஜத்தில் ரஜினியிடம்  கவர்ந்தது ?

அவரது எளிமை, தன்னடக்கம்,விளம்பரமில்லாமல் செய்யும் உதவிகள் 

பார்க்க சலிக்காத   படங்கள் ?

 தில்லு முள்ளு, மாப்பிள்ளை, பாட்சா , சந்திரமுகி, எந்திரன்

தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற வித்தியாசமான அனுபவம் ?

எந்திரன் படம் காலை ஏழு மணி காட்சி  குடும்பத்துடன் சென்று பார்த்தது 

பிடித்த பஞ்ச் டயலாக்  ?

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

ரொம்ப பிடிச்ச காட்சி ?

பாட்சா படத்தில் தன் தங்கை யுவராணியை மெடிக்கல் காலேஜில் சேர்க்க ரஜினி பேசும் காட்சி ?


பிடித்த சண்டை காட்சி ?

தளபதி படத்தில் வரும் காட்சிகள் 

பிடித்த காமெடி காட்சி ?

மன்னன் படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் காட்சி


அவரிடம் நீங்கள் கற்று கொண்டு கடைப்பிடிப்பது ?

நம்மால் யாருக்கும் எந்த நஷ்டமும் கஷ்டமும் வர கூடாது என்ற கொள்கை

அவரிடம் பெற்ற ஏமாற்றம் ?

அவர் 1996 ஆம் வருடம்  அரசியலுக்கு வராதது

ஆசை ?

அவருடன் சில வார்த்தைகளாவது  பேசி ஒரு போட்டோ  
எடுத்து கொள்ள வேண்டும்

அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளில்  எந்த பட ஜோடி பிடிக்கும் ?

அப்போது, மாப்பிள்ளை ரஜினி அமலா ,

இப்போது, எந்திரன் ரஜினி ஐஸ்வர்யா ராய் 

நீங்க அவருக்காக எழுதிய பஞ்ச் டயலாக் ?

கெட்டது ஒடுக்க தன்னாலே வருவேன்
நல்லது நடக்க என்னையே தருவேன்

அவர் போட்ட கெட்டப் களில் உங்களுக்கு பிடித்தது ?

வேட்டையன் 

நீங்கள் பெருமைபடுவது ?

ரஜினியுடன்  செல் போனில் பேசுவது போன்று நான் எழுதிய பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் பாராட்டியது, "ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....":


அவரை ரசிப்பதால் உங்களுக்கு வந்த கஷ்டம் ?

என்னை சுற்றியுள்ளவர்களின் மற்றும் அவரை பிடிக்காதவர்களின் கேள்வி கணைகள் மற்றும் கேலி

அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?

நீங்கள் விரும்புவதை நான் எப்படி கேலியோ விமர்சனமோ செய்ததில்லையோ நீங்களும் செய்ய வேண்டாம் என்பதே

பிடித்த காதல் பாடல் ?

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

அடிக்கடி ஹம் செய்வது ?

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் 

அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்  ?

எப்போதும், சமுதாய பணிகளை  முன்னின்று செய்து   ஒரு முன்னுதாரண

மனிதராக  ஆக வேண்டும்


இப்போது, பாட்சா படம் போல் நச்சென்று ஒரு சூப்பர் ஹிட் படம் நடிக்க  வேண்டும்

நீஙகள் என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் ?

எப்போதும், மாற்று திறனாளிகளுக்கு வாழும் வரை  நான் உதவ வேண்டும் 

இப்போது, சிவாஜி 3 D படம் பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறேன்



FINAL PUNCH 

ஒரு பத்திரிகை நிருபர் ரஜினி ரசிகனான என்னிடம் ரஜினி பற்றி கேட்டால் 
என் பதில் எப்படி இருக்கும் என்று கற்பனையாக யோசித்ததின் விளைவு 
இந்த பதிவு (பதில்கள் நிஜம்) 

ச்சும்மா அதிருதில்லே



ஆர் .வி.சரவணன் 


வெள்ளி, டிசம்பர் 07, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 






படம் நல்லாருக்கு அதுவும் படம் முழுக்க சிரிப்பு என்று கேள்விப்பட்டவுடன் உடனே எனக்கு படம் பார்த்து விடணும் என்ற வேகம் வர அந்த வேகத்திலேயே உடனே  நேற்று தியேட்டர் சென்று படமும்  பார்த்து
விட்டேன் (அந்த வேகத்திலேயே பதிவும் போட்டுட்டேன் )


கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது தலையில் அடி பட்டு விடுகிறது.ஷார்ட் டைம் மெமரி லாஸ் வந்து விடுகிறது. அதனால்  கடந்த ஒரு வருடத்தின் நினைவுகள் மறந்து விடுகிறது அதில் முக்கியமானது அவரின் காதலியும், அவருடனான திருமணமும் 

அவரது மூன்று நண்பர்களும் வீட்டுக்கு தெரியாமலும் ஏன் காதலிக்கே தெரியாமலும் இந்த விசயத்தை மறைத்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள் 
எப்படி முடியும் என்பது தானே உங்கள் கேள்வி? முடியும் என்று  அதை இயக்குனர் பாலாஜி தரணிதரன் முழுக்க முழுக்க காமெடி யில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் .

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்னாச்சு என்ற வசனத்தை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் சொல்லும் போது தியேட்டரே சிரிப்பில் அள்ளுகிறது (சில நேரங்களில் என்ன திரும்ப திரும்ப பேசறே நீ என்று  நமக்குள் எரிச்சல் எட்டிபார்க்கும் தருணங்களில் ஒரு காமெடி வந்து அதை சரி செய்து விடுகிறது) ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் வசனங்கள் மாறும் முக பாவங்கள் என்று  விஜய் சேதுபதி நன்றாக செய்திருக்கிறார் 

அடுத்து அவரது நண்பர்களாக வரும்  மூன்று பேரும்  படத்திற்கு முதுகெலும்பு என்றே சொல்லலாம். பக்ஸ் என்ற பெயரில் வருபவர் அதட்டலும் மிரட்டலும் என்றால் இரண்டாமவர் கண்களாலேயே பயத்தை வித விதமாய் காட்டி பம்முகிறார். சரஸ் ஹீரோவை நான் சொன்னா கேட்பியா மாட்டியா என்று கண்களில்  கெஞ்சலும் குரலில் கண்டிப்புமாய் அவரை அடக்கி ஆளுகிறார் 
மூவரும் கன கச்சிதம் 




ரசிக்க வைக்கும் காட்சிகள் படம் முழுக்கவே இருக்கிறது உதாரணத்திற்கு சில காட்சிகள் 

சலூன் கடை காட்சி ,

ரிசப்சன் மேடையில் மணப்பெண்ணை பார்த்து விட்டு, ப்பா என்று சொல்லி முகத்தை திருப்பி  கொண்டு என்னடா பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்று சொல்லும் காட்சிகள் 

டேய் நீ சொன்னா பில்டிங் மேலேருந்து குதிக்கிறது மட்டுமில்லே முன் பின் தெரியாத பெண்ணுக்கும் தாலி கட்டுவேண்டா என்று கண்களில் நீர் திரள விஜய் சேதுபதி சொல்லும் காட்சி 

கசின் பிரதருடன் சண்டையிட்டது மறந்து போய் என்ன அண்ணே இளைச்சுட்டீங்க என்று பார்க்கும் போதெல்லாம் இவர் கட்டி கொள்ள அவர் நெகிழும் காட்சி 

நண்பன் சரஸ், என் காதலி வந்திருக்கா பேசணும் கொஞ்சம் மேடைக்கு வாங்கடா என்று அழைக்க நண்பர்கள் நீ போ நீ போ என்று ஜகா வாங்குவது


எளிமையான வசனங்கள் தான் இருந்தும் காட்சியின் சூழல் காரணமாய்  அவை சிறப்பாய் அமைந்து நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறது. உதாரணம் இவன் காதலியை மறந்துட்டான் என் காதலியை ஞாபகம் வச்சிருக்கான்டா  என்று சரஸ் சொல்லும் இடம் 

படத்தின் குறைகள் என்றால்,
 ஒரு டயாலாக் பேச ஒவ்வொரு கேரக்டரும் அதிக நேரம் எடுத்து கொள்வது, பேசிய வசனங்கள் திரும்ப வருவது , ஹீரோ என்னாச்சு என்ற வசனத்தை ஒவ்வொரு சூழ்நிலையில் பேசுவது ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அதை கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆரம்ப பகுதியில் மெதுவாக நகரும்  காட்சிகள் (பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்ன படம் ஷார்ட் பிலிம் பார்க்கிற மாதிரி இருக்கே என்றார்)


ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் (உண்மை நாயகன்) கிரிக்கெட் ஆடும் காட்சியில் விளையாடியிருக்கிறார் 

ஹீரோயின் படத்தின் நிறைவு பகுதியில் தான் வருகிறார். மருந்துக்கு 

கூட அவரது ஒரு போட்டோ அது வரை காட்டப்படவில்லை . இயக்குனர் தைரியத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் படத்தில் அந்த நண்பர்கள் மூவர் கேரக்டராக நாம் ஒன்றி போய் விடுகிறோம் விளைவு அவர்கள் சிரித்தால்  நாமும் சிரிக்கிறோம் அவர்கள் பயந்தால் நாமும் பயப்படுகிறோம் உண்மை கதையை நம் கதை போல் ரசிக்க வைத்த விதத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் அடுத்த படம் என்ன பண்ண போறீங்க என்ற எதிர்பார்ப்பை தந்திருக்கிறார் 

FINAL PUNCH 

இது உண்மை கதை என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் அந்த கேரக்டர்களின் நிஜ மனிதர்களையும் அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும்  காட்டும் போது நமக்குள் ஒரு நெகிழ்ச்சி வருகிறது 

நன்பேண்டா என்று சொல்ல தோன்றுகிறது 

ஆர்.வி.சரவணன் 





செவ்வாய், டிசம்பர் 04, 2012

இளமை எழுதும் கவிதை நீ-15


இளமை எழுதும் கவிதை நீ-15





நம்மால்  நேர்ந்த நம் காயங்களுக்கு 
அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் 

நோட்டீஸ் போர்டை படித்து விட்டு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் திரும்பிய மாணவ மாணவிகள், இதற்கு சிவா வின் ரியாக்சன் என்னவாக இருக்கும்   என்று அங்குமிங்கும் திரும்பி பார்த்தனர்.அவன் அங்கே எங்குமே தென் படாது போகவே இதை பற்றி சாதகமாய் சிலரும் பாதகமாய் சிலரும் பேசி கொண்டே கலைந்து  சென்றனர்.  

பேராசிரியர்கள் சிலர் "நம்ம சிவாவோட அப்பாவை  என்னவோ நினைச்சேன்  மனுஷன்  என்னமா  புரட்டி எடுக்கிறார் பார் " என்றனர். கூடவே "பையனையே இந்த பாடு படுத்தறாரே  நாமல்லாம் எம் மாத்திரம்" என்றும் பேசி கொண்டனர் 

உமா, அருள் ,கார்த்திக் ,பாலு நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு  அதிர்ச்சியை பரிமாறி கொண்டவர்கள் சிவாவை தேடி செல்ல ஆரம்பித்தனர் 

பாலு "டேய் கார்த்திக் உங்க அப்பா ஆனாலும் ரொம்ப மோசம்டா சிவாவை இப்படி ஒதுக்கறது நியாயமே இல்லை "என்றான் 

கார்த்திக் சரியென்று  தலையாட்டினான் 

உமாவும் அருளும் சிந்தனை யுடனே ஒவ்வொரு வகுப்பறை யாக பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தனர்.  ஒரு கட்டடம் முடிந்து  அடுத்த கட்டடத்தின் திருப்பத்தில் திரும்பும் போது தான் கவனித்தார்கள். அங்கிருந்த தண்ணீர் நீறுற்றின் சுற்று சுவரில்  இருந்த அலங்கார கம்பியில் தன் கைகளை வைத்த படி  அந்த நீறுற்றை பார்த்தவாறே  நின்றிருந்தான் சிவா 


தொடரும்

ஆர்.வி.சரவணன் 


The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.