புதன், மே 05, 2010

நடு இரவில்.........

நடு இரவில் ................நடு இரவு திறந்திருந்த ஜன்னல் வழியாய் அந்த வீட்டினுள் நுழைந்தன அந்த உருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்.இரவின் நிசப்தத்தில் அவர்களால் எந்த சப்தமும் எழவில்லை. எழுந்தது வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் எழுந்தவர் தூக்கக் கலக்கத்தில் தண்ணீர் குடித்து விட்டு இவர்களை கவனிக்காமல் திரும்பி வந்து படுத்து கொண்டார்.இதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தாங்கள் வந்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தன அந்த உருவங்கள் ஓசை எழுப்பாமல் மேசை மேலிருந்த அந்த பொருளை நெருங்கின.பொருளை பார்த்தவுடன் குதூகலமாய் வந்த காரியம் வெற்றி என்று ஆசையில் சுறுசுறுப்பாக அதை சிரமப்பட்டு எடுத்து கொண்டு வந்த வழியே சென்றன.அந்த வீட்டிலிருந்தவர்கள் தூங்கி கொண்டிருந்தார்கள் இது தெரியாமல்ஆனால் படிக்கிற நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.அந்த பொருள் சர்க்கரை.


எடுத்து சென்ற அந்த உருவங்கள் எறும்புகள் .


எறும்புகள்ஆர்.வி .சரவணன்

1 கருத்து:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்