சனி, ஆகஸ்ட் 28, 2010

இப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்


இப்படி ஒருவர் இப்படியும் ஒருவர்


சமீபத்தில் நான் எனது மனைவி மகன் மகள் உடன் வேளச்சேரியில் உள்ள உறவினர் வீடு செல்வதற்காக அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் சென்றோம்.
அங்கே பேருந்து நிலையத்தில் வேளச்சேரி செல்ல இரண்டு பேருந்து நின்று கொண்டிருந்தது எது முதலில் செல்லும் என்று தெரியாததால் அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் கேட்டேன். அவர் தெரியலைங்க நானும் தெரியாமல் தான் நிற்கிறேன் என்றார். நாங்கள் சரி என்று கூட்டம் குறைவாக இருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தோம்

சில நிமிடங்களில் அடுத்த பேருந்து கிளம்ப ஆயத்தமானது இறங்கி சென்று ஏறி விடலாமா என்று யோசித்து எழுந்தோம் அப்போது நான் விசாரித்த அந்த நபர் ஓடி வந்து அந்த பேருந்து கிண்டி வரைக்கும் தான் செல்கிறதாம் நீங்கள் இறங்காதீர்கள் என்று சொல்லி விட்டு கிளம்பிய பேருந்தில் சென்று ஏறி கொண்டார். அந்த நபரை (மன்னிக்கவும்) மனிதரை நினைக்கும் போது சந்தோசம் அடைந்தேன்.
உலகில் இப்படி ஒருவர்


உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அன்று மாலையே வேளச்சேரி பேருந்து நிலையம் வந்தோம். அம்பத்தூர் எஸ்டேட் செல்ல வேண்டிய பேருந்து வர வர கூட்டம் உடனே திபு திபு வென்று ஏறி அமர்ந்தது. எங்களால் ஏற முடியாமல் இரண்டு பேருந்தை விட்டு விட்டோம். மூன்றாம் பேருந்து வரும் போதே நான் மட்டும் சென்று ஏறி பெண்கள் இருக்கையில் என் மனைவிக்கும் மகளுக்கும் கைக்குட்டை போட்டு இடம் பிடித்து எனக்கும் மகனுக்கும் ஆண்கள் பக்கம் இடம் போட்டேன் .

கூட்டத்தில் ஏற முடியாமல் எல்லோரும் ஏறியவுடன் தான் என் குடும்பத்தினர் ஏறினர். அதற்குள் பெண்கள் பக்கத்தில் நான் போட்டு வைத்த இடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்து விட்டார்.

"என்னங்க நான் சீட் போட்டு வச்சிருக்கேன்" என்றேன்
" எல்லோரும் இது போல் சீட் போட்டா நாங்க எப்படி அமர்வது" என்றார்.
" நான் நீங்கள் முன்னாடியே வந்து சீட் போட வேண்டியது தானே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஏறி சீட் போட்டேன் தெரியுமா" என்றேன்.
" எல்லாரும் கஷ்டப்பட்டு தான் ஏறி வரோம் "என்று கூறிய படி கைக்குட்டை யை எடுத்து என்னிடம் கொடுத்துவிட்டார்.

நான்" நீங்க உட்காரதுக்கு நான் சீட் போட்டு வைக்கணுமா" என்று கோபப்பட்டேன்.
"இன்னொரு சீட் இருக்கு உட்கார சொல்லுங்க" என்றார்.
"அப்படினா ஏன் கைக்குட்டை யை எடுத்து கொடுத்தீங்க" என்று நான் அவரிடம் கேட்டதற்கு அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை .

பின் என் மனைவி ,மகன், மகள், மூவரும் ஆண்கள் பக்கம் நான் போட்ட இருக்கையில் அமர்ந்து வந்தனர். நான் நின்று கொண்டே பயணித்தேன் பயண நேரம் ஒரு மணி நேரம்.

அந்த பெண்மணி எனக்கு முடியலைங்க நான் உட்கார்ந்துக்கிறேன் என்று சொல்லியிருந்தால் நான் சரி என்று ஒப்பு கொண்டிருப்பேன் ஆனால் அவர்கள் இப்படி நடந்து கொண்டது என்னை வருத்தமடைய வைத்தது

உலகில் இப்படியும் ஒருவர்

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

புதன், ஆகஸ்ட் 25, 2010

படித்ததில் பிடித்தது



படித்ததில் பிடித்தது


எனது நண்பர் அனுப்பிய ஒரு SMS மெசேஜ்

மலரே
உன் மீது
இருக்கும்
நீர் துளிகள்
பனித்துளிகள்
என்று
நினைத்து விடாதே
நீ
வாடாமல்
இருப்பதற்காக
நான்
சிந்திய
கண்ணீர் துளிகள்
தான்
அவை

இப்படிக்கு மேகம்

எனக்கு நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் எனை கவர்ந்த சில வரிகள்

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.


வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.



ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன

இது என்ன தேசமோ

ஆர்.வி.சரவணன்


சனி, ஆகஸ்ட் 21, 2010

பதிவுலகில் நான் எப்படிபட்டவன்



பதிவுலகில் நான் எப்படிபட்டவன்

என்னை அருமை நண்பர் எப்பூடி தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி இதோ பதிவுலகில் நான் எப்படிபட்டவன் என்ற தொடர் பதிவு

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஆர்.வி. சரவணன்
(கோயில்லே ஆயிரம் பேருக்கு சாப்பாடு எல்லாம் போட்டு வச்ச பெயரல்ல இது )


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆம் அது தான் என் உண்மையான பெயர்

(ஆம் )

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....



(இது ஒன்னும் சரித்திர நிகழ்வு கிடையாது )

செய்திகள் படிப்பதற்காக ஒவ்வொரு தளமாக நான் சென்று படிக்க படிக்க எனக்கு வலைபதிவு உலகம் சுவாரஸ்யமானது .பின் என்வழி வலைத்தளத்தில் நான் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டேன் எனது கவிதை, கட்டுரை, என் பையன் வரைந்த ரஜினி படம் என்று என் வழியில் வெளி வந்தது. கிரி , எப்பூடி தளங்களும் எனக்கு பரிச்சயமாகின .நாமும் ஒரு வலை தளம் தொடங்கி பார்ப்போம் என்று எனது குடந்தையூர் தளத்தை தொடங்கினேன்.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒன்னுமே செய்யலை. பதிவுலக நண்பர்களின் தளங்களுக்கு சென்று பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டேன். அதன் மூலம் என் தளம் ஏதோ கொஞ்சம் பிரபலமானது

(சன் டிவி முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுக்க நினைச்சாலும் அதெல்லாம் முடியுமா )


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?



ஆம். ஆனால் தொடர்ச்சியாக எல்லாம் இல்லை . சொந்த விசயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறேன் என்னை பொறுத்தவரை கஷ்டங்களை பகிர்வதன் மூலம் துக்கம் பாதியாக குறைகிறது. சந்தோசங்களை பகிர்வதன் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகிறது.

(பார்த்து வாழ்க்கை வரலாறு எதுனா எழுதிட போறே)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிப்பதற்கு எல்லாம் எழுதவில்லை. இதில் எழுதுவதின் மூலம் எனக்கு மன நிறைவு கிடைக்கிறது. மற்ற பதிவர்களின் பதிவுகள் படிப்பதும் சுவாரஸ்யமாக உள்ளது. நல்ல ஒரு பொழுதுபோக்கு தான்

(பதிவுகள் மூலம் வருமானம் வந்தால் வேணாம்னா சொல்லிட போறே )

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


குடந்தையூர் என்ற ஒரே ஒரு வலை பதிவு மட்டுமே

(ஒரு வேலையை ஒழுங்காக செய்தால் போதும் இன்னொன்னு னா பூமி தாங்குமா )

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்

இல்லை யார் மேலும் நான் பொறாமை பட்டது இல்லை கோபப்பட்டதும் இல்லை மற்ற பதிவர்கள் போல் சிறப்பாக எழுத வேண்டும் என்று பொறுமையுடன் மட்டுமே இருக்கிறேன்

( பொறாமையா அப்படினு ஒரு வார்த்தை இருக்கான்னு கேட்பே போலிருக்கு)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

நான் வலை பதிவு உலகில் நட்சத்திரமாய் மின்ன ஆசைபடுவதாக குறிப்பிட்டிருந்தேன். என்வழி வினோ நட்சத்திரமாக என்ன சூரியனாகவே பிரகாசிக்கலாம் நீங்கள் என்று வாழ்த்தினார். நண்பர்கள் கிரி ,எப்பூடி நல்ல இடுகைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்று ஆரம்பத்திலேயே கண்டிப்புடன வாழ்த்தி உர்சாகபடுதினர் மற்ற பதிவுலக நண்பர்களும் தொடர்ந்து என்னை ஊக்கபடுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் கண்டிப்பாக என்னால் ஐம்பது பதிவுகள் எழுதியிருக்க முடியாது.

(உலகமே ஊக்கப்படுத்தினால் தான் வாழ முடியும்னு சொல்வே போலிருக்கு )

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியன் நான்

திரை உலகம் சென்று டைரக்டர் ஆக வேண்டும் என்பது என் விருப்பம் முடியவில்லை. ஒரு ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்பதும் என் விருப்பம்
முடியவில்லை. பதிவுலகின் மூலம் எனது விருப்பம் நிறைவேறியது போல் ஒரு மன நிறைவு கிடைத்திருக்கிறது . என் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்த கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் எழுதுகிறேன்

(வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம்)

என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல பல

ஆர்.வி. சரவணன்

புதன், ஆகஸ்ட் 18, 2010

கோயில் நகரம் கும்பகோணம்



கோயில் நகரம் கும்பகோணம்

இந்த இடுகையில் கும்பகோணம் பற்றிய தல வரலாறு கொஞ்சம் சொல்லலாம் என்றிருக்கிறேன் . உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் .இருந்தாலும் குடந்தையூர் என்று தளம் வைத்து கொண்டு அதை பற்றி சொல்லாவிட்டால் எப்படி அதனால் தான். ஹி ....ஹி.... இதனுடன் நான் 2004 மகாமகத்தின் போது எடுத்த சில படங்களையும் அதனுடன் சில ஆலயங்களையும் தந்துள்ளேன் .

ஒரு முறை ஊழிப் பெரு வெள்ளத்தால் உலகம் அழியும் நிலை வந்த போது தேவர்கள் சிவனிடம் சென்று வேண்ட, சிவன் ஒரு கும்பத்தில் அமுதத்தை நிரப்பி பூஜை செய்யும் படி ஆணையிட்டார். அதன் படியே கும்பத்திற்கு பூஜைகள் நடைபெற ஊழி பெருவெள்ளம் வந்து கும்பத்தை அடித்து சென்றது. அதை ஒரு குன்றின் மேல் கொண்டு சேர்த்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். பூமிக்கு வந்த சிவபெருமான் கும்பத்தை அம்பெய்து உடைத்தார். கும்பம் உடைந்து அமுதம் பூமியில் பரவியது. அமுதம் வழிந்த இடம் தான் மகாமக குளம். கும்பம் வந்து சேர்ந்த இடம் குடமூக்கு என்று பெயராயிற்று.( கும்பம் என்பது குடம் கோணம் என்பது மூக்கு ) காலப்போக்கில் குடந்தை என்று வழங்கப்பட்டு கும்பகோணம் என்று பெயராயிற்று.




உச்சி பிள்ளையார் கோவில்
ராமசாமி கோயில்

ராமசாமி கோயில் உற்சவர்

சாரங்க பாணி கோயில்
சாரங்க பாணி கோயில் உள்ளே கோபுரம் ஒன்று


மகாமக குளத்தில் இருபது கிணறுகள் உள்ளன குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் போது மாசி மாதத்து பௌர்ணமியும் மக நட்சத்திரமும் கூடும் நாள் மகாமக நாள் .







இந்த படங்களில் இருக்கும் பக்தர்களில் நானும் ஒருவன்

ஹி ....ஹி....

ஆர்.வி.சரவணன்

சனி, ஆகஸ்ட் 14, 2010

நமது இந்தியா



நமது இந்தியா



31 மாநிலங்கள்

எண்ணற்ற

மொழிகள்

சாதிகள்

மதங்கள்

29 முக்கிய பண்டிகைகள்

கொண்ட

ஒரு

தேசம்

நம்

இந்தியா

நாம் இந்தியர் என்பதில் என்றும் பெருமை அடைவோம்


அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்


படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

இருமன அழைப்பிதழ் 3


இருமன அழைப்பிதழ் 3


சரண் ஆகிய என் மனதுக்குள் இனித்தது எது நான் உமாவை இன்று திருமணம் செய்ய போகிறோம் என்பதை நினைத்த போது என்னடா இவன் குழப்பறான் என்று நினைப்பீங்களே பொறுமை

நான் உமாவின் முறை பையன் அதாவது மாமா பையன் துரத்து சொந்தம் நெருங்கிய சொந்தமாகி விட தான் பிரயத்தன பட்டு கொண்டிருக்கிறேன் .உமாவின் மேல் காதல் கீதல் என்றெல்லாம் கதை விட நான் தயாரில்லை ஏனெனில் நான் ஒரு பிரக்டிகல் மனிதன் எனக்கு உமாவை பிடித்திருக்கிறது. அவளது அழகு படிப்பு புத்திசாலித்தனம் பணம் இவையல்லாம் சேர்ந்து என்னை கட்டி போட்டிருக்கிறது இப்படிப்பட்ட பெண் மனைவியானால் என் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனவே அவள் மேல் ஆசை கொண்டேன்.
என் ஆசை தெரிந்து என் பெற்றோர் உமாவின் அப்பாவிடம் சம்பந்தம் பேசினார்கள் ஆனால் அவர் மறுத்து விட்டார். மாப்பிள்ளை வெளி நாட்டில் இருக்க வேண்டுமாம் . சாதாரண வேளையில் இருக்கும் நான் வெளிநாட்டை வரைபடத்தில் தான் பார்க்க முடியும் நான் எங்கே வெளிநாடு செல்வது


சரி உமாவின் மனதில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்தேன் . என் பார்வை, சிரிப்பு, தோற்றம், பேச்சு எதையும் அவள் லட்சியம் செய்யவில்லை என் கனவில் மட்டுமே என்னை லட்சியம் செய்தாள். நொந்து போன நேரத்தில் கார்த்திக்கும் உமாவும் பழகியது வேறு எனக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது. கார்த்திக்கிடம் அவர்கள் உறவை பற்றி உரசி பார்த்தேன். உண்மையான நண்பர்களாம். சொல்லி பெருமைபட்டான். அவனை விட நான் பெருமைப்பட்டேன்.

கார்த்திக் வேலைக்காக சென்னை செல்ல என் சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. உமாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவள் கிண்டலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வேறு வேலை இருந்தால் பார். என்று சொல்லி விட்டாள். அவளை தவிர வேறு வேலை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

ஆனால் உமாவுக்கு கல்யாண வேளை வந்தது. திருமணம் நிச்சயமானது. ஹீரோவாகலாம் என்று ஆசைபட்ட நான் வில்லனாக வேண்டியதாகி விட்டது. திருமணத்தை எப்பதியாவது நிறுத்தும் எண்ணத்துடன் இதோ கல்யாணத்திற்கு வந்திருக்கிறேன். நான் மாப்பிள்ளை குடும்பத்தில் நான் ஏவியிருக்கும் ஏவுகணை எப்போது தன் வேலையை ஆரம்பிக்கும் என்று ஆவலோடு காத்து கொண்டிருந்தேன்.

யாரோ ஒருவர் ஓடி வந்து உமாவின் அப்பாவை அழைத்து கொண்டு மாப்பிளையின் ரூம் செல்ல சில வினாடிகளில் உமாவின் அப்பா கோபமாய் வெளி வந்தார். கூடவே மாப்பிளையின் குடும்பம்.

"என்னங்க என்னாச்சு "

"என்னாச்சா எவனோ ராஸ்கல் நாம் பொண்ணுக்கு போட்டிருக்கும் நகையெல்லாம் போலி நாம் சரியிலாத குடும்பம் என்று மொட்டை கடிதாசி எழுதியிருக்கான். அதை படிச்சிட்டு இவங்களும் உண்மையானு கேட்கறாங்க" "சந்தேகம் என்று வரும் போது தெளிவுபடுதிக்கிறது நல்லது தானே" "இதுலேயே தெரியுதே எங்க மேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு மனுஷனுக்கு நம்பிக்கை அவசியம் சார்"

" அதுக்காக நாங்க ஏமாற முடியாது.

"நாங்க யாரையும் ஏமாத்தலை எங்க குடும்பம் கெளரவமானது "

"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் வருது "

ஆகா என்னோட ஏவுகணை இலக்கை தொட்டுருச்சி

உமாவின் அண்ணன் "உங்க பையனை பத்தி கூட தான் எங்களுக்கு அரசல் புரசலா நியூஸ் வந்துச்சி நாங்க எதுனா கேட்டோமா நல்ல குடும்பங்கள் ஒன்னு சேரும் போது இப்படி எதுனா நியூஸ் வரது சகஜம் தான். இதை போய் பெரிய விசயமா சொல்றீங்க"

" பொய்யெல்லாம் சொல்லாதே என் பையன் சொக்க தங்கம் "

"அதே தான் நாங்களும் சொல்றோம் எங்க நகையும் சொக்க தங்கம் தான். வேணும்னா எங்க நகையை நாங்க செக் பண்ணி நீருபிக்க முடியும் உங்க பையன் நல்லவன் ன்னு எப்படி நீருபிக்க போறீங்க" என்றதும்

மாப்பிள்ளையின் அப்பா கோபா வேசமாய் இந்த கல்யாணம் நடக்காது வாங்க நாம போகலாம் என்று கிளம்ப ஆரம்பிக்க மாப்பிள்ளை உமாவின் அண்ணனிடம் பாய முற்பட இவன் ஓட கார்த்திக் தடுத்தான்.

எனது அப்பா அம்மா இருவரும் சமாதான முயற்சியில் இறங்க அவர்கள் செயல் நியாயமாயினும் எனக்கு அது கஷ்டமாச்சே என்று அவர்கள் மேல் எரிச்சல் பட்டேன்.

உமாவின் அப்பா "போகட்டும் விடுங்க "என்று சலிப்புடன் சொல்ல நான் களிப்புடன் சந்தோசத்தின் உச்சிக்கு சென்றேன்.

பொண்ணு மேடை வரைக்கும் வந்தாச்சு என்ன பண்ண போறீங்க ஒருவர் சொன்னார்.

இத சொல்றதுக்குன்னே யாராவது ஒருத்தர் கல்யாணத்திற்கு வருவாங்களோ "உங்க சொந்தத்திலேயே தான் பையன் இருக்கானே அவனை முடிச்சிடுங்களேன் "இப்படி ஒருவர் சொன்னார்.
ஆகா அவர் வாய்க்கு சர்க்கரை மூட்டையை தான் கவிழ்க்கணும் அவர் வாழ்க
நான் நினைத்தது நிறைவேறுகிறது
இப்போது உமாவின் அண்ணன் "அப்பா நம்ம கார்த்திக்கையே உமாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் உமாவின் மனசறிஞ்சு நடந்துக்குவான் உமாவையும் நல்ல படியா வச்சு காப்பாத்துவான்"
என்றவுடன் உமாவின் அப்பா யோசனையாய் தன் மனைவியை பார்த்தார்.
" ஆமாங்க கைல வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச மாதிரி நாம ஏன் கஷ்டபடனும் உமாவுக்கு கார்த்திக் தான் சரியானா ஜோடி இதை நாம முன்னாடியே பண்ணிருக்கணும் "
என்று சொல்லவும்
ஏவுகணை எனக்குள் பேரிடியாய் இறங்கியது.
உமாவின் அப்பா என்ன சொல்கிறாய் என்று உமாவை பார்க்க, அவள் கார்த்திக்கை பார்த்து நாணத்துடன் தலை குனிய கார்த்திக் உற்சாகத்துடன் தன் பெற்றோரை பார்க்க அவர்களும் தலையசைக்க உமாவின் அண்ணன் கார்த்திக் கை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றான்.
மேளம் முழங்கியது
என் கண்கள் கலங்கியது
கார்த்திக் உமாவின் கழுத்தில் தாலியை கட்டினான்.
நான் மண்டப வாசலை நோக்கி நடையை கட்டினேன்.

முற்றும்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

இரு மன அழைப்பிதழ் 2



இருமன அழைப்பிதழ் 2



ஹீரோ கார்த்திக் கண்ணோட்டத்தில்
கார்த்திக் வந்து கொண்டிருந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிருக்க அவன் மட்டும் விழித்துகொண்டிருந்தான். அந்த இரவின் அமைதி அவனுக்குள் இல்லை . காரணம் உமாவின் கல்யாண விஷயம் கேள்விபட்டதிலிருந்து அவன் மனம் அமைதியின்றி தவித்தது. எந்த இரவும் அவனால் தூங்க முடியவில்லை . உமாவின் மேலுள்ள காதலை உள்ளுக்குள் வைத்து அல்லாடுவது பச்சை மிளகாயை கண்ணில் வைத்து கொண்டது போல் இருந்தது.


இந்த வேலை கிடைத்தது கூட உமாவின் முயற்சியால் தான் . அவள் தான் ஹிந்து பார்த்து அப்ளை போட சொன்னாள். போட்டான் வேலை கிடைத்தது. நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தான். அவளை விட்டு பிரிந்து வந்தது கஷ்டமாக இருந்தது.



தினம் அவளை பார்த்த போது தோன்றாத காதல் அவளை பார்க்காத இந்த ஆறு மாதங்களில் மனதில் ஒரு மூலையில் துளிர் விட்டது. நட்பா காதலா என்று அவன் மனதுக்குள் நடந்த பட்டிமன்றத்தில் காதல் அதிக மதிப்பெண் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது . முதல் சம்பளம் வாங்கி கொண்டு அவளுக்கு பிடித்தவற்றையும் வாங்கி கொண்டு ஊருக்கு வந்தான். வீட்டில் உங்களை பார்க்க வேண்டும் போலிருந்தது என்று பொய் சொன்னான். அவளிடம் உன்னை பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று மெய் சொன்னான்.




காதலை மட்டும் சொல்லவில்லை காதலை உள்ளுர பதுக்கினான். தான் எழுதும் கவிதைகளில் அவளை மையமாக கொண்டே எழுதினான். அதை அவளிடம் படிக்க கொடுத்தான்.உமா படித்து விட்டு நல்லாருக்கே யாரந்த அதிர்ஷ்டசாலி என்று மட்டுமே சொன்னாள். இப்படிப்பட்ட நிலையில் எப்படி காதலை சொல்வது அதோடு அவர்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அவள் அண்ணன் எல்லோரும் அவனை தங்கள் வீட்டு பிள்ளையை போல் தலையில் துக்கி வைத்து கொண்டாடுவது வேறு அவனை தயங்கி பின்னடைய வைத்தது.


இந்த நிலையில் உமாவுக்கு கல்யாணம் என்று அவள் அண்ணன் சொன்ன போது உமா என்ன சொன்னாள் என்று கேட்டான். அவள் சம்மதம் இல்லாமல் எப்படி முடிவு செய்வோம் என்று அவள் அண்ணன் சொன்னான். அவளே சம்மதம் சொல்லி விட்டால் எனும் போது என்ன செய்வது நம் காதலுக்கு கொடுப்பினை இல்லை அவளை மனைவியை அடைய அதிர்ஷ்டமில்லை என்று முடிவுக்கு வந்து வெறுத்து போய் தன் போனை சுவிட்ச் ஆப் செய்து அலுவலகத்தில் வேறு ஒருவர் செல்ல வேண்டிய பஞ்சாப் வேலையை தான் செல்வதாக கூறி சென்று விட்டான். உமாவின் அண்ணன் நீ வரலை என்றால் என் முகத்தில் முழிக்காதே என்று திட்டவும் இதோ புறப்பட்டு கல்யாணத்திற்காக வந்து கொண்டிருக்கிறான் .



கார்த்திக் பேருந்தை விட்டு இறங்கிய போது எதிரே உமாவின் அண்ணன் வண்டியுடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் "ஏண்டா கல்யாண வேலையை விட்டுட்டு எனக்காக வந்திருக்கே நான் வர மாட்டேனா "என்றான்.



"இதுவும் ஒரு வேலை தான் உட்கார்" என்று சொல்லி வண்டியை கிளப்பினான்.



கல்யாண மண்டபம் வந்ததும் உமாவின் அப்பாவை சென்று பார்த்தான் .அவர் வாடா செல்லம் என்று தன் உறவினர்களிடம் எங்க வீட்டு பிள்ளை மாதிரி என்று அறிமுகபடுத்தினார். உமாவின் அம்மா கை பிடித்து அழைத்து போய் உமாவுக்கும் மாப்பிளைக்கும் வாங்கிய நகை புடவை பைக் என்று ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் காட்டினாள். உமா வை போய் பார் என்றும் அனுப்பி வைத்தாள்.


கார்த்திக் தயக்கத்துடன் உமாவின் அறைக்குள் நுழைந்தான். அங்கே உமா ஜன்னலை பார்த்தவாறு இருந்தவள் இவனை திரும்பினாள்.




"என்ன இன்னும் தூங்கலே நீ" என்றான் கார்த்திக்




"கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலருந்து நான் தூங்கலே ஆனா உனக்கு நல்லா தூக்கம் வந்திருக்குமே " இது உமா



"அப்படில்லாம் இல்லை "



"பொய் சொல்லாதே உனக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு. ரெண்டு பெரும் எந்த விசயத்தையும் மறைக்க கூடாது அப்படின்னு . சோ பொய் சொல்லாம சொல்லு . ஒரு நாள் நான் உனக்கு போன் பண்ணலேன்னா கலங்கி போற நீ ஏன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு ஊருக்கு போனே சொல்லுப்பா "


"உமா நான் உன் கிட்டே மறைச்சது ஒன்னே ஒன்னு தான் அது நான் உன்னை காதலிக்கிறது எப்படி உன்கிட்டே சொல்றது நீ தப்பா நினைச்சுட்டா என்னபன்றதுனு தான் உன்கிட்டே சொல்லாமல் மறைச்சேன் .உனக்கு கல்யாணம் னு நியூஸ் வந்தவுடன் சரி நீ என்னை நண்பனாக மட்டும் தான் ஏற்று கொண்டிருக்கிறாய் என்று முடிவெடுத்து வெறுத்து போய் உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன் ."


என்று கார்த்திக் சொன்னவுடன் உமா ,"லூசு லூசு" என்று சொல்லவும் அவள் வேகத்தை பார்த்து சற்றே மிரண்டான்.



"இதை எப்ப வந்து சொல்றே நீ இந்த வார்த்தை உன் கிட்டே இருந்து வராதா என்று காத்துக்கிட்டிருக்கேன்



என்று உமா சந்தோசமாய் சொல்லவும் கார்த்திக்கின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை


"இப்ப என்ன செய்வது "


"ஒன்னு நாம யாருக்கும் தெரியாம கிளம்பிடனும் இல்லனா அப்பா அம்மா அண்ணன் கிட்டே பேசி கல்யாணத்தை நிறுத்தனும் "




"எப்படி உமா என்னை பத்தி என்ன நினைப்பாங்க "



"அதை பார்த்தோம்னா நாம பிரிய வேண்டியது தான் உன்னை விட்டுட்டு வேற மாப்பிள்ளை கல்யாணம் செஞ்சுக்க முடியாது .சொல் என்ன செய்யலாம் "


"கொஞ்சம் பொறு நான் யோசிக்கிறேன்"



என்று சொல்லும் போது உள்ளே நுழைந்தான் உமாவின் முறை பையன் சரண் கண்களாலேயே அவளிடம் எப்படியும் உன்னை கை பிடிசுடுவேன் டோன்ட் வொர்ரி என்று ஜாடை காட்டி விட்டு ஹாலுக்கு வந்தான். உமாவின் காதலுக்கு சந்தோசபடுவதை விட கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்பதில் நேரத்தை செலவிட்டான். மணி பார்த்தான் . நள்ளிரவு ஒன்று. கல்யாண மேடையில் உமாவின் பெயருக்கு பக்கத்தில் மாப்பிள்ளையின் பெயர் இருப்பதை பார்த்த போது அவன் மனது வலித்தது.




தொடரும்



அடுத்து இந்த கதையை முடிக்க வருவது உமாவின் முறை பையன் சரண்

ஆர்.வி.சரவணன்