டாம் அண்ட் ஜெர்ரி படம் வரைந்ததும் அவன் தான்
பூனையின் நண்பன் எலி
ஒரு வீட்டில் பூனை உறங்கி கொண்டிருந்தது.
திடீரென்று சமையலறையில் தட....புட....என்ற சத்தம் கேட்டவுடன் பூனை எழுந்து சமையல் அறைக்குள் சென்றது
பூனை அங்கிருந்த எலியை பார்த்து : வாப்பா என்ன காலையிலேயே அடி வாங்குவதற்கு வந்து விட்டாயா
எலி :பூனையே உன்னால் என்னை பிடிக்க முடியாது (என்ற படியே வேகமாக ஓடியது)
பூனை : அதையும் பார்க்கலாம் என்று கூறிய படி எலியை பிடித்தது
வீட்டு கதவை எவரோ டக்....டக்....டக்....டக்.... என தட்டினர்
எலி : (தன் மனதில் நினைத்து கொண்டது ) அப்பாடா எப்படியோ தப்பித்தேன்
பூனை : உமக்கு நல்ல காலம் இங்கிருந்து சென்று விடு
எலி வேகமாக ஓடி வலைக்குள் சென்றது
எலி வேகமாக ஓடியதை பார்த்து கொண்டே பூனை வேகமாக கதவை திறந்தது
வீட்டுகாரர்கள் வந்து விட்டார்கள் என்று கூறியபடி மியாவ் மியாவ் என்று கத்தியது
வீட்டுகாரர்கள் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கிருந்த பொருள்கள்
கீழே விழுந்து கிடந்தன. வீட்டுகாரர்கள் அப் பூனையை திட்டினர். "வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டாயே இவ் வீட்டை விட்டு வெளியே செல்" என்று கூறினர்.
இதை கேட்ட எலி பூனையை பார்த்து நான் ஒரு யோசனை கூறுகிறேன் கேள் என்றது
பூனை : நான் இனி உன் பேச்சை கேட்க மாட்டேன்
எலி : என்னை மன்னித்து விடு நான் செய்த தவறு உனக்கு வந்து விட்டது ஆகவே ஒரு யோசனை சொல்கிறேன் கேள்
பூனை : சரி கூறு
எலி கூறிய யோசனை
எலி : என்னை பிடிக்கத்தான் உன்னை வைத்திருக்கிறார்கள். தற்பொழுது உனக்கும் இவ் வீட்டில் இடம் வேண்டும் எனக்கும் இடம் வேண்டும். ஆகவே நீ என்னை பிடித்து காட்டுவது போல் நடி. வீட்டுக்காரர்களிடம் நீ , "சமையல் அறையில் பொருள்கள் கீழே விழுந்து கிடப்பதற்கு காரணம் இந்த எலி தான்" என்று கூறு என்று சொல்லியது
எலி கூறிய யோசனை படி பூனையும் நடந்தது
எலியை பிடித்து காட்டுவது போல் நடித்த பூனைக்கு வீட்டுகாரர்கள் தின் பண்டங்களை கொடுத்து பாராட்டினர்
பூனை யாருக்கும் தெரியாமல் அத் தின்பண்டங்களில் பாதியை எலிக்கு கொடுத்தது பூனையும் எலியும் நண்பர்களாகின.
இப்ப பூனை, என் பிரெண்டை போல யாரு மச்சான் என்று தானே பாடும்
ஆகவே தான் இந்த தலைப்பில் கொடுத்திருக்கிறேன்
ஆர்.வி.சரவணன்