ஞாயிறு, ஜூன் 30, 2013

சோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம்
சோழர் கால அற்புதம் ஐராவதேஸ்வரம் 
(அருள் மிகு ஐராவதேஸ்வரர் கோவில்)


கும்பகோணத்திற்கு மிக அருகில் தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ளது தாராசுரம் என்ற ஊர்.இங்கே வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்கள் நிறைந்த அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோவில் உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்த போது எடுத்த படங்களும்,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களும் உங்களுக்காக
கோவிலின் வெளி தோற்றம் 


கோவிலின் நுழைவாயில் 
கொடிமரம் 


 கருவறை  கோபுரம் 


யானை சிற்பத்துடன் கூடிய படிக்கட்டுகள் 


  

கோவில் விமானம் 


கோவிலை சுற்றி  பசுமையை  நிழலை அள்ளி தந்திருக்கும் மரங்கள் 


இந்த கோவிலை இரண்டாம்  ராஜராஜன் கட்டினார்
(ஆயிரம் வருடங்களுக்கு முன்)

தாரன் என்பவன் வழிபட்டதால்  தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து  யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து வழிபட்டு  பேறு பெற அருளிய இறைவன்  ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது

இங்கு உள்ள நந்தி பலிபீடம்  இதற்கு அமைந்திருக்கும்  படிக்கட்டுகளை   தட்டினால் ஒலி எழும்பும் விதத்தில் இசை கற்கள் போன்று அமைந்திருக்கிறது

ராமாயண மகாபாரத நிகழ்சிகள் சிவன் பார்வதி கைலாய காட்சி
முருகன் வள்ளி தெய்வானையோடு  காட்சி, முனிவர்கள் தவம் புரியும் காட்சிகள் மண்டப தூண்களில் செதுக்கபட்டிருப்பது  பார்க்கும் போது செதுக்கிய சிற்பிகளை பாராட்ட வார்த்தைகள் ஏது

இங்குள்ள   மண்டபம் குதிரைகள்  பூட்டிய சக்கரங்கள் கொண்ட ஒரு தேர் போன்ற அமைப்பை கொண்டதாகும்


தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம்  கோவில்களின் விமானங்கள் போன்றே இதன் விமானமும் அமைக்கபட்டிருக்கிறது


இக் கோவிலின் மூலவர் ஐராவதேஸ்வரர்


 அம்பாள் வேத நாயகி  (தனி சன்னதி.கோவிலுக்கு  வடக்கில் அமைந்திருக்கிறது )

மண்டபத்தில் உள்ள பதினாறு கல் தூண்களில், காணப்படும்  சிற்பங்களின்   கலை நயம் வியக்க வைக்கும் 

நர்த்தன விநாயகர்,அர்த்த நாரீஸ்வரர், அகத்தியர், சரப மூர்த்தி, நரசிங்கமூர்த்தி ,தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி,விஷ்ணு துர்க்கை
சிற்பங்கள் அழகுற காட்சியளிக்கின்றன

இந்த அரிய வரலாற்று பொக்கிஷம், சோழர் காலத்தின் புகழை 
இன்றளவும் உலகுக்கு உணர்த்துகிறது


ஆர்.வி. சரவணன்


செவ்வாய், ஜூன் 25, 2013

ஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச்

ஜாலி கமெண்ட்ஸ் with பஞ்ச் 


நம் தமிழ் திரைப்படங்களின் புகழ் பெற்றவசனங்களை வைத்து 
ஜாலியாக (கேலியாக அல்லசிலகமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன். 


 ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா 

இருக்கட்டுமே கூடவே பெண் சிசுவுக்காக கள்ளி செடியும் அல்லவா 
வளர்த்தா

------

என் காதலி உங்கள் மனைவியாகலாம்
உங்கள் மனைவி என் காதலியாக முடியாது


இப்படிசொல்லி தப்பித்து அடுத்த பிகர் க்கு லெட்டர் போட்ற
வேண்டியது தான் 


------

ரெண்டு பழத்துல ஒன்னு இந்தாஇருக்கு
இன்னொன்னு எங்கே


பழனிக்கு போயிருக்கு
அநேகமா இந்நேரம் அது பஞ்சாமிர்தம் ஆகியிருக்கும்


-----

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே 

அப்படினா புரிஞ்சிக்கிற மாதிரி கேரக்டர் பண்ணுங்க 

------

என்னை பார்த்து சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு

மெட்ராஸ்  வந்துருக்கிற நேரத்தில கண்ணை பார்க்க சொல்றியே நியாயமாரேரேரே 

------

சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்

நீங்க ஹீட் ஆகிடுங்க எதுக்கு சொல்றேன்னா 
எனக்கு விழுந்த சுளுக்கை எடுத்தாகனும் 

------

கார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா

இதென்ன கேள்வி யாரு ஆசைபட்டோனோ அவன் வச்சிருப்பான்

------

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்
இப்படி இருக்கிற நீங்க  எப்படி அப்படி ஆகினீங்க ஆர்.வி.சரவணன் 

படம் : நண்பரின் முக நூலில் இருந்து 


திங்கள், ஜூன் 10, 2013

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு....


செவ்வந்தி பூக்களில் செய்த வீடு....

(மனம் கவர்ந்த பாடல்கள்) 

படம். மெல்லப் பேசுங்கள் 

வெளியான வருடம் 1983  
இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )
நாயகன்: வசந்த் (ராஜாதிராஜா படத்தில் ராதாரவி கூட வருவார் 
சீரியல்களில் நடித்திருக்கிறார் 
நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)

பாடல் : எம்.ஜி.வல்லபன் இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற  ஒரு சுகமான 
காதல்  பாடல் கேட்பதற்கு  வெகு இனிமையானது 
இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. கேட்கும் நமக்கு பரவசத்தை அளிக்கும் 
‘கூவின பூங்குயில், கூவின கோழி…
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..
யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’
உமா ரமணன் குரலில் ஆரம்பிக்கும் வரிகளுக்கு பின்  ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பிக்க கூடவே  தொடர்வது   தீபன் சக்ரவர்த்தியின்  இனிய குரல். இந்த குரல்களே ஒரு இனிமை என்றால் அந்த இனிமைக்கே  மகுடம் வைத்தார் போன்றது  இந்த பாடலுக்கு இளையராஜா தந்திருக்கும் இசை 
கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை

இது என்வழி வலை தளத்தில் 2010 இல் நான் எழுதியது 

நன்றி வினோ என்வழி 


ஆர்.வி.சரவணன் புதன், ஜூன் 05, 2013

ஏட்டிக்கு போட்டிஏட்டிக்கு போட்டிசில திரைப்படங்களின் பெயர்களை வைத்து நான் உரையாடிய (எழுதிய )
ஒரு பதிவு 

"ஏய்" 
"யாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா"

"எவனாயிருந்தா எனக்கென்ன""திமிரு தானே உனக்கு"

"உனக்கு தான் வாய் கொழுப்பு"


"என்னப்பா ஏட்டிக்கு போட்டி யாவே பேசறே. யாருப்பா நீ""உன்னை போல் ஒருவன்"

"எங்கிருந்து வரே"

"அண்ணா நகர் முதல் தெரு லேருந்து"

"எப்படி வந்தே"

"கிழக்கே போகும் ரயில் லே"

"எதுக்கு வந்திருக்கே"

"நாட்டாமையை பார்க்க"
"பார்த்து"

"அவர் கிட்டே வேலைக்காரன் ஆக வேலைக்கு சேர போறேன்"

"சேர்ந்து" 

"பெரிய இடத்து பெண் யாராவது இருந்தா பார்த்து லவ் பண்ணி 
கல்யாணம் பண்ணி பணக்காரன் ஆக போறேன்"


கேட்டவருக்கு அதிர்ச்சி


இருக்காதா பின்னே ஏன்னா அவர் தாங்க நாட்டாமைஆர்.வி.சரவணன் 

தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய பதிவு