வியாழன், மார்ச் 26, 2015

திருமண ஒத்திகை-13





முன் கதை சுருக்கம் 
வருண் சஞ்சனா இருவரும், தங்கள் வீட்டினரால் சம்பந்தம் பேசி திருமணம் நிச்ச்சயிக்கபட்டவர்கள். கல்யாண வேலைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க இவர்கள் காதலிக்க தொடங்கியிருந்தார்கள். சஞ்சனாவின் அக்கா புருஷன் உருவில் பிரச்னையும் அவர்களை  துரத்த ஆரம்பித்திருந்தது.  முந்தைய அத்தியாயம்  திருமண ஒத்திகை-12


 திருமண ஒத்திகை-13

சந்தோசத்தின் சாரலில் நனையவிருக்கிறோம்     
துன்பத்தின் குடையை பிரித்து விடாதே  


வருண்  வெளி நாட்டிலிருந்து வந்திருந்த தன் நண்பனுடன் பேசி கொண்டிருந்த போது தான்  அவன் சொன்ன தகவல் அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் : ஷ்யாம் 

© The  story is copyrighted to kudanthaiyur and may not be reproduced 
on other websites.

ஞாயிறு, மார்ச் 22, 2015

வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா




வலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமான் என்ற புண்ணிய ஸ்தலம். இங்குள்ள  சீதளா தேவி மகாமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறும்  பாடை காட்டி திருவிழா புகழ் பெற்ற ஒன்றாகும்.

இத் திருக்கோவில் கும்பகோணம் டு  மன்னார்குடி சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. முன் மண்டபம், அதனை அடுத்து மகாமண்டபம், அடுத்து அர்த்த மண்டபம், அடுத்து கருவறை என கொண்டுள்ள கோவில் அமைப்பில் கோவிலை சுற்றி வெளிபிரகாரம் உள்ளது. கருவறையில் அருள் மிகு ஸ்ரீ சீதளாதேவி மகா மாரியம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள். வலது மேற் கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும், வலது கீழ் கரத்தில் கத்தியும்,இடது கீழ்கரத்தில் கபாலமும் கொண்டு இரு தோள்களின் மீதும் நாகங்கள் கொண்டு அமர்ந்து அருளாட்சி தருகின்றாள். 

இந்த ஆலயத்தின் புகழ் பெற்ற பாடை காவடி திருவிழா மாசி மாத கடைசி வெள்ளிகிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. பங்குனி முதல் ஞாயிறு முதல் திருவிழா கொண்டாட்டங்கள் துவங்கி அன்று முதல் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் திரு வீதியுலா வருகிறாள். பங்குனி இரண்டாம் ஞாயிறு ஆன இன்று  (22-03-2015) பாடை காவடி திருவிழா நடைபெற்றது. 

அழகு காவடி, பால் குடம் , கரகம் போன்றவற்றுடன் நோயுற்றவர்கள் தங்கள் நோய் தீர வேண்டி கொண்டு வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடையில்இருந்து கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி  வந்து ஆலயத்தை வலம் வந்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.  இன்று அம்மன் திருவீதி உலாவும் செடில் சுற்றுதலும் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற   மகாமாரியம்மன் பாடை காவடி திருவிழா படங்கள் உங்கள் பார்வைக்கு 


கோவில் நுழைவாயிலில் பக்தர்கள் வெள்ளம் 



செடில் சுற்றுதல் 



ஆலயத்தை சுற்றி வரும் பாடை காவடி 





பால் குடம் 


செடில் தயார் நிலையில் 


ஆலயம் முன்னே உள்ள சூலத்தில் பூஜை 


தெருவில் தொடர்ந்து வரும் பாடை காவடி 


இரவில் மின் விளக்கொளியில் ஆலயம் 



தெருவெங்கும் பக்தர்கள் 


மாரியம்மன் திருவீதி உலா 


மஞ்சள் மாமாரிமுன்னே சொல்லுவோர் மனகுறையைப்
பஞ்சு போல் பறக்கடிப்பாள் பாடை கட்டி மாரியம்மன் 

அம்மனை வேண்டுவோம் அருள் பெறுவோம் 

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, மார்ச் 01, 2015

நண்பரின் கேமரா கண்கள்





நண்பரின் கேமரா கண்கள் 

நண்பர் நௌஷாத் அலி கும்பகோணம் நெடிவ்ஸ் முக நூல் குழுமம் மூலமாக எனக்கு அறிமுகமானவர்.  இவர் கும்பகோணத்தில் தனியாக போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். அவ்வபோது இவர் கும்பகோணம் நகரத்தை வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து முகநூலில் பதிவிடுவார். 
பிறந்த மண்ணை நேசிக்கும் எனக்கு கும்பகோணத்தின் எழிலை படம் பிடித்து அழகு சேர்க்கும் நண்பரின் படங்கள் பார்த்த போது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
சமீபத்தில் நடைபெற்ற கும்பகோணம்  ஊர்  பொங்கல்  நிகழ்வில் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  ஹலோ என்ற நலம் விசாரிப்புகளுடன் அவர்  நகர்ந்து விடாமல் பல நாள் நெருக்கமான நண்பர் சந்தித்து கொண்டால் எப்படி பேசுவார்களோ அவ்வாறே என்னுடன் பேசினார். அவர்  படங்கள் பற்றி  நான் குறிப்பிட எனது பதிவுகள்  பற்றி அவர் குறிப்பிட இப்படியே நகர்ந்தது . 
அவரது முகநூல்  https://www.facebook.com/noushad.ali.3114?fref=nf 

அவர் எடுத்த  படங்களில்  சில  பார்வைக்கு
    
திரு. நௌஷாத் அலி 

பசுமை போர்த்திய பூமியுடன்  சூரிய வெளிச்சத்தை 
மறைத்த படி விளையாடும் மேகங்கள் 




வெற்றி விளைச்சல் பரிசளித்த  புன்னகை
தொடரட்டும்  



தேர் இழுத்து செல்ல தயாராகும் (பொம்மை ) குதிரைகள் 


 கோபுர தரிசனம் காணும் ஆவலுடன்  சூரியன் 


பசுமையின் ஊடே வெளிச்சபாதை  அமைக்கும் சூரியன் 


காய்கறிவண்டியை  நிழல் தொடர்கிறதா தள்ளுகிறதா 


மண் வாசனை  கிளம்பும்  தருணம் 


 மேய்ச்சல் மைதானத்தில் ஒற்றை ஆலமரம் 


கும்பகோணம் தார் சாலை தான் ஊட்டி அல்ல 




பசுமையின் சூழலில்  ஐராவதேஸ்வரர்  கோவில் 


குடந்தையின் சிறப்பு மிக்க மகாமக குளம் 
                             
                             பேருந்து நிலையம் மழை பொழிந்த ஒரு பொழுதில் 

 நண்பர் நௌஷாத் அலியை சந்தித்த  அந்த நிகழ்வில்  என்னையும் ஒரு படம் எடுங்களேன் என்று  ஆர்வம் பொங்க  நான் கேட்டு கொண்டதிற்கிணங்க 
அவர் கிளிக்கியது  இங்கே 



வாழ்த்துக்கள் நண்பரே 

ஆர்.வி.சரவணன்