நினைவில் நின்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவில் நின்றவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 20, 2010

ஒரு பாராட்டு கடிதம்


ஒரு பாராட்டு கடிதம்


இன்று கார்த்திகை திருநாள் .

நான் திருவண்ணாமலை சென்ற போது எடுத்த படம் இது

இந்த மலையானது 2668 மீட்டர் உயரம் கொண்டது 14 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. மலையை சுற்றிலும் எட்டு சிவலிங்கங்கள் உள்ளன .

**************


நான் படித்த கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தல் வந்தது . தேர்தலுக்கு நின்ற இருவருமே என் வகுப்பில் என்னுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் . அதில் ஒருவர் கல்லூரியில் நன்கு பிரபலமானவர். நண்பர்கள் நிறைய உண்டு அவருக்கு. இருந்தும் அவருக்கு வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை.

காரணம் கட்சி சார்புடன் அவர் நின்றது எனக்கு பிடிக்கவில்லை. (மாணவ சமுதாயத்தில் அரசியல் நுழைவதை நான் விரும்புவதில்லை ).

ஆகையால் மற்றவருக்கு வாக்கு செலுத்தலாம் என்று முடிவு செய்திருந்தேன். யாருக்கு வாக்கு செலுத்த முடிவு செய்திருந்தேனோ அவர் என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் வாக்கு சேகரித்த போது போது எனக்கு ஓட்டு போடுங்கள் அவருக்கு போட வேண்டாம் ஏனெனில் அவர் நமது சாதியை சேர்ந்தவரில்லை என்று கூறி வாக்கு கேட்டதும் கடுப்பாகி விட்டேன் .

சாதியை முன்னிறுத்தியதால் நான் அவருக்கு போடாமல் கட்சி சார்புடன் நின்ற நண்பருக்கே போட்டேன்அவரே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியை விட எனது கொள்கையின் படி நான் நடந்து கொண்டது எனக்கு மன நிறைவு கிடைத்தது (ஆண் சாதி பெண் சாதி தவிர வேறேது சாதி )

இந்த நிகழ்வை தெரிவித்து கடிதம் எழுதிநடிகர் இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழுக்கு அனுப்பினேன்.(அந்த சமயத்தில் தான் இது நம்ம ஆளு படம் வெளிவந்து ஓடி கொண்டிருந்தது ) என் கடிதத்தை பார்த்து எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள் பாக்யாவில் இருந்து .

இதை படித்து விட்டு ரொம்ப சந்தோசப்பட்டேன் .எனது முக்கிய கடிதங்களில் ஒன்றாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்

இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு




பாரதி சரவணன் னு பேர் போட்டிருக்கே அப்படின்னு குழப்பமாகாதீங்க
புனை பெயர் எல்லாரும் வச்சிருக்காங்களே நாமும் வச்சிக்கலாம் னு நினைச்சு நான் வைத்து கொண்ட பேர் அது ஹி....ஹி

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூலை 15, 2010

சின்னஞ் சிறு உள்ளங்களே


சின்னஞ் சிறு உள்ளங்களே

ஜூலை 16 ,2004 கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்தது. அந்த சின்ன சிறு உள்ளங்களுக்காக உலகமே கலங்கியது. என்னை இது மிகவும் பாதித்தது . என் அன்றாட வாழ்வில் நெருப்பு எப்பொழுது எனை தீண்டினாலும் எனக்கு அந்த சிறுவர் சிறுமியரின் ஞாபகம் வரும் என் கண்கள் கலங்கும்

இதோ அந்த பிஞ்சு உள்ளங்களுக்காக நான் எழுதியதை இந்த நினைவு நாளில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்


சீவி சிங்காரித்து வகுப்பறைக்கு சென்ற சின்ன சிட்டுகளே கருகி போய் வந்த மொட்டுக்களே

அறிவை தரும் கல்விச்சாலை உங்களுக்கு மட்டும் ஏன் யாகசாலையாய்

இரக்கமில்லா அக்னி உங்களை அரவணைத்தது எமது விழிகளை கண்ணீரில் நனைத்தது

ஈரமில்லா நெஞ்சமுள்ள வருணனும் மழையாய் உங்களை காக்கவில்லை பெற்றோரிடம் உங்களை மீட்டுத் தரவில்லை

உங்களை பொசுக்கிய தீ அணைந்து போனது இங்கு பெற்ற வயிறோடு பெறாத வயிறுகளும் தீ பற்றி கொண்டது

இறைவன் உங்களை தன்னருகே சேர்த்து கொண்டான் நாங்கள் துன்பத்தை வார்த்துக் கொண்டோம்

இப்போது இறைவனின் மடியில் நீங்கள் எப்போதும் உங்களின் நினைவில் நாங்கள்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மே 06, 2010

கடவுளின் குழந்தை?



கடவுளின் குழந்தை ?

எங்கள் குடும்ப நண்பர் தஞ்சாவூரில் இருக்கிறார். அவர் முஸ்லீம் அவருக்கு பேத்தி பிறந்தது . (மகளின் மகள்) பெயர் நபீலா நிஹார்.


இந்த பெயருக்கு அர்த்தம் என்னவென்று அந்த குழந்தையின் தாயிடம் கேட்டேன்


நபீலா நிஹார் என்றால் பனித்துளி என்று பொருள் என்று கூறினார்கள்.


பெயர் வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆம் குழந்தையிடமும் ஒரு வித்தியாசம் இருந்தது


அதன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள் அதற்காக அவர்கள் சென்னை வந்து பிரபல மருத்துவமனை யில் குழந்தைக்கு சிகிச்சை மேற் கொண்டார்கள்


மருத்துவமனையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கிராம் கணக்கில் மாத்திரை பொடி செய்து ஒரு வேளைக்கு இவ்வளவு என்று தருவார்கள் அதை நான் வாங்கி வந்து கொரியர் செய்வேன்ddd ஊருக்கு .


குழந்தைக்கு ஆபரேசன் செய்ய முடிவெடுத்தார்கள்.
எனது நண்பர்கள் மூன்று பேர் ரத்த தானம் அளித்தார்கள்.
முதல் நாள் மருத்துவமனை சென்றேன் ஒன்றும் வாங்கி கொண்டு வரவில்லைஎன்றேன். குழந்தையின் தாய் நீங்க வந்திருக்கிறதே போதும் எங்களுக்கு என்றார்கள். சந்தோசமாக . குழந்தை மெத்தையில் சந்தோசமாக விளையாடி கொண்டிருந்தது .

நான் இறைவனை வேண்டினேன் அந்த குழந்தை குணமாகவேண்டும் பூரண நலம் பெற வேண்டும் என்று

வெற்றிகரமாய் முடிந்தது ஆபரேசன் . குழந்தையின் தாய்க்கும் அவரது அம்மாவுக்கும் குடும்பத்திற்கும் மிக்க சந்தோசம்.
சில மாதங்கள் கழித்து ஒரு மழை காலத்தில் எனக்கு போன் வந்தது அவர்களிடமிருந்து

குழந்தை இறந்து விட்டது என்று
என் மனது பதை பதைத்தது

எப்படி என்றேன்

மாமியார் வீட்டுக்கு சென்றிருந்த போது மழையில் சுவர் இடிந்து விழுந்து தூங்கி கொண்டிருந்த குழந்தை இறந்து விட்டது என்றும் தாய் காயங்களுடன் தப்பித்தார் என்றும் சொன்னார்கள் . கடவுள் மேல் கோபம் வந்தது. மிகுந்த வருத்தப்பட்டேன்

அப்பொழுது என் மனம் எனக்கு சொன்ன சமாதானம் என்ன தெரியுமா .
அந்த குழந்தை கடவுளின் செல்ல குழந்தை என்பதால் தான் வளர்ப்பதற்கு தன்னோடு அழைத்து கொண்டார்.
ஆம் அது கடவுளின் குழந்தை என்று எனக்கு சமாதானம் சொன்னது.
இருந்தும், நான் சமாதானமாகவில்லை

என் மனசு சொன்னது சரிதானா என்று

நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆர்.வி .சரவணன்