வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக


2011 புத்தாண்டே வருக





வரும் புத்தாண்டு நம்மை வளம் பெற செய்யட்டும்

நம்மில்வேற்றுமையை வேரறுக்கட்டும்

நம்மில் ஒற்றுமையை நிலை பெற செய்யட்டும்

நம் உள்ளங்களில் என்றும் இனிமையை வழங்கட்டும்

நம் முயற்சிகள் அனைத்தும் வெற்றி எனும் இலக்கை எட்டட்டும்

நம் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்

இப் புத்தாண்டு அனைவருக்கும் இனிதாய் மலர எனது வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்

புதன், டிசம்பர் 29, 2010

பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு

பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு

நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் பத்தாண்டுகளில் வெளிவந்த பாடல்களில் பிடித்தபத்து பாடல்கள் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி

பத்துஆண்டுகளில் வெளி வந்த பாடல்களில் பத்து என்பது கொஞ்சம் அல்ல அல்ல நிறையவே கஷ்டமான விசயமாக இருந்தது

இருந்தாலும் பத்து பாடல்கள்செலக்ட் செய்து விட்டேன்

நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் பத்து பாடல்கள்

இதோ உங்கள் முன்





உன் குத்தமா என் குத்தமா ....

படம் அழகி

பாடல் பழனி பாரதி

இசையமைத்து பாடியது இளையராஜா

வருடம் 2001




என்ன நினைச்சே நீ என்ன நினைச்சே ....

இசை தேவா

பாடியது உன்னி கிருஷ்ணன் அனுராதா ஸ்ரீராம்

படம் சொக்க தங்கம்

வருடம் 2003




டிங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்....

படம் ஜீ

பாடியது மது பாலகிருஷ்ணன் மதுஸ்ரீ

பாடல் பா .விஜய்

இசை வித்யாசாகர்

வருடம் 2005


பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ....

படம் ஆனந்தம்

பாடியது உன்னிகிருஷ்ணன் ஹரிணி

இசை எஸ் . . ராஜ்குமார்

வருடம் 2001


ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் ....

படம் ஐயா

பாடியது கே கே சாதனா சர்கம்

இசை பரத்வாஜ்

வருடம் 2005

உன்னை கண்டேனே முதல் முறை....

படம் பாரிஜாதம்

பாடியது ஹரிசரண் ஸ்ருதி

இசை தரன்

வருடம் 2005

நெஞ்சே நெஞ்சே ....

படம் அயன்

பாடியது ஹரிஷ் ராகவேந்திரா மகதி

பாடல் வைரமுத்து

இசை ஹாரிஸ் ஜெயராஜ்

வருடம் 2009



கண்கள் இரண்டால் ....

படம் சுப்ரமணியபுரம்

பாடியது பெல்லி ராஜ் தீபா மரியம்

இசை ஜேம்ஸ் வசந்தன்

வருடம் 2008






துளி துளி துளி மழையாய் வந்தாளே....

படம் பையா

பாடியது ஹரிசரண் தன்விஷா

பாடல் நா.முத்துக்குமார்

இசை யுவன் சங்கர் ராஜா

வருடம் 2010



அரிமா அரிமா ....

படம் எந்திரன்

பாடியது ஹரிஹரன் சாதனா சர்கம்

பாடல் வைரமுத்து

இசை ஏ .ஆர்.ரகுமான்

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி ஜீவதர்ஷன்

ஆர்.வி.சரவணன்

திங்கள், டிசம்பர் 27, 2010

சங்கமம் 2010


சங்கமம் 2010

ஈரோட்டில் நடைபெற்ற சங்கமம் விழாவில் கலந்து கொள்ள நான் மிகுந்த ஆர்வமுடன் சென்றிருந்தேன்.

ஈரோடு வழியே மற்ற ஊர்களுக்கு சென்றிருந்தாலும் ஈரோட்டில் நான் சென்று தங்குவது இது தான் முதல் முறை

தங்குமிடம் , போக்குவரது உணவு உபசரிப்பு என்று அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் ஈரோடு தமிழ் வலை பதிவாளர்கள் குழுமத்தினர்


உதாரணம் ஈரோடு சென்று நான் இறங்கும் போது புது ஊர் என்பதால் எனக்கு தயக்கம் இருந்தது ஆனால் நண்பர் பாலாசி ,ஜாபர் ஆகியோருக்கு போன் செய்தவுடன் ஹோட்டல் பெயர் சொல்லி எனக்கான ரூம் கொடுத்து என் தயக்கத்தை முற்றிலுமாக தகர்த்து ஊருக்கு நான் புதுசு என்ற எண்ணத்தையே ஒரு மணி நேரத்திற்குள் மாற்றி விட்டனர் .

ஈரோடு கதிர் ஹோட்டல் அறைக்கு வந்திருந்து நட்புடன் விசாரித்தார்



ஈரோடு கதிர் ,பாலாசி, சங்கவி, பிரபாகர், ஜாக்கி சேகர், கார்த்திகை பாண்டியன், பரிசல்காரன், வலைச்சரம் சீனா ,வால்பையன், இன்னும் ஏனையோரை நேரில் சந்தித்தது ஒரு புதுமையான இனிமையான அனுபவமாகவே இருந்தது

நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த தலைப்புகள் அனைத்தும் பயனுள்ளவை என்றால் அதற்க்கு உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள் சுவை பட உரையாற்றி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் துணை புரிந்தனர்.

பதிவர்களின் கலந்துரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது

எழுத்துலகம் மேல் தீராத தாகம் கொண்ட என்னை இந்த விழா ஈரோட்டுக்கு
எனை ஈர்த்தது பல புதிய நட்புகளை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறது
எழுத்துலகின் மேல் நான் கொண்டிருக்கும் ஆர்வத்தை இன்னும் பல படிகளுக்கு உயர்த்தியிருக்கிறது

என்னை பதிவுலகில் மென் மேலும் வலுப்படுத்த இது உதவும்

இந்த இனிய நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, டிசம்பர் 24, 2010

நான் என்ன சொல்றேன்னா 2




நான் என்ன சொல்றேன்னா 2


பார்த்த படம்

உயிரே உனக்காக
டிவி இல் மோகன் நதியா நடித்த உயிரே உனக்காக பார்த்தேன் ஏற்கனவே பார்த்திருந்தாலும் நதியா மற்றும் பாடல்களுக்காக வே இந்த படம் பார்த்தேன்
காதல் கலந்த இயல்பான ஒரு குடும்ப கதை (எப்பொழுது போட்டாலும் சில
காட்சிகளாவது பார்ப்பதுண்டு)

படித்த புத்தகம்

கலைமகள் தீபாவளி மலர் படித்தேன் சினிமா அரசியல் இசை எழுத்துலகம் என்று அனைத்து துறையிலும் சாதனை படைத்த பெண்களின் அணி வகுப்பில் தொகுக்கப்பட்டுள்ள தீபாவளி மலர் (படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு)

பதிவுலக சந்திப்பு

பதிவுலக நண்பர் திரு பாலாசி அவர்கள் சங்கமம் 2010 க்கு கலந்து கொள்ள வருமாறு அழைப்பு அனுப்பியிருக்கின்றார் .அவருக்கும் ஈரோடு வலை பதிவாளர்கள் குழுமத்திற்கும் என் நன்றி


சங்கமம் 2010 விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

இரவு பயணம்

இரவு நேர பயணத்தில் பேருந்தில் ஏறி வசதியான இருக்கையில் அமர்ந்து கொண்டு நாம் அப்பாடா என்று மூச்சு விட முடியாது காரணம் பக்கத்துக்கு இருக்கைக்கு வரும் பயணி யை நினைத்து கொஞ்சம் டென்ஷன் உண்டாகும்

ஒரு முறை இப்படி தான் ஜன்னலோர சீட்டில் நிம்மதியாய் அமர்ந்து விட்டேன் பக்கத்தில் அமர்ந்தவர் தூங்கி தூங்கி என் மேல் சாய்ந்து கொடுத்தார் பாருங்கள் டார்ச்சர்.
நான் எழுப்பி விட்டால் சாரி என்பார் ஆனால் மீண்டும் ஐந்து நிமிடத்தில் சாய தொடங்கி விடுவார் அந்த இரவில் நொந்து இடியாப்பம் ஆகி விட்டேன் (நம்மளை டார்ச்சர் பண்றதுக்குன்னே கிளம்பி வர்றாங்களோ )

அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்


படம் : எங்கள் மாமா வீட்டில் இருக்கும் நெல்லிக்காய் மரம்



ஆர்.வி.சரவணன்



புதன், டிசம்பர் 22, 2010

நான் என்ன சொல்றேன்னா .....

நான் என்ன சொல்றேன்னா .....




பார்த்த படம்

சென்ற வாரம் தான் மைனா படம் பார்த்தேன் சென்ற வாரம் தான் பார்க்க முடிந்தது என் மனதை நெகிழ வைத்த படம் உங்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது பிரபு சாலமன் சார் வாழ்த்துக்கள்

(படம் வந்து ஒரு மாசம் ஆகிடுச்சு இப்ப சொல்லறியே என்று நீங்கள் முறைப்பது தெரியுது

படித்த செய்தி

சமையல் எரி வாயு ரூ 100 உயருகிறது இது செய்தி

(அதற்கும் முன்னே நான் உயர்கிறேன் பார் என்று
உயர்ந்து விட்டதே வெங்காயம் விலை )


படித்த புத்தகம்

எனக்கு பிடித்த சுஜாதா அவர்கள் எழுதிய திரைக்கதை எழுதுவது
எப்படி என்ற புத்தகம் வாங்கி (காசு கொடுத்து தாங்க ) படித்தேன்
புதிதாக சினிமா இயக்க போகின்றவர்களுக்கு வழி காட்டும் நல்லதொரு நூல் இது

(அது சரி நீ எதுக்கு இப்ப படிக்கிறே அப்படிங்கறீங்களா நான் எழுதிய சில கதைகளுக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கலாம்னு தான்)


சுவையான சம்பவம்

நான் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து நீடாமங்கலம் செல்ல அம்மாபேட்டையில் பஸ் பிடித்தேன் கண்டக்டரிடம் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பில் பஸ் நிற்குமா என்று கேட்டேன் கண்டக்டர் கேட்டு இறங்கிடுங்க என்றார் நான் நீங்க தானே கண்டக்டர் யாரை கேட்டு இறங்க சொல்றீங்க டிரைவரை கேட்டு இறங்க சொல்றீங்களா என்றேன் அவர் மீண்டும் கேட்டு இறங்கிக்காங்க சார் என்றார் நான் புரியாமல் முழித்து பின் அவர் சொன்னது கேட்டு சிரித்து விட்டேன்

அவர் சொன்னது என்னவென்றால் ரயில்வே கேட் அருகே வண்டி
நிற்கும் அங்கே இறங்கிடுங்க என்பது தான்

(பஸ்சில் எல்லோரும் சிரித்து விட்டனர் )

படம் நான் எடுத்தது தான்
இடம் நாகப்பட்டினம் கடற்கரை

அவ்வப்போது உங்கள் விருப்பத்தை பொறுத்து
இது போல் செய்திகளை பகிர்ந்துக்கிறேன்

ஆர்.வி.சரவணன்



சனி, டிசம்பர் 18, 2010

பெற்றோர்


பெற்றோர்

இன்னிக்கு சாயந்தரம் அப்பா அம்மா வராங்களாம் என்று சொல்லிய படி
வந்த கணவன் ராஜா வை பார்த்த கீதா

"உங்க அப்பா அம்மாவுக்கு வேற வேலையே இல்லையா " என்று சீறினாள்
அவள் சீற்றத்தை பார்த்த ராஜா

"என்ன சொல்றே நீ" என்றான்

"பின்னே என்ன நீங்க மட்டும் தான் பிள்ளையா உங்க அண்ணன் ரெண்டு பேரு இருக்காங்க தம்பி ஒருத்தர் இருக்கார் ஆனா எப்ப பாரு இங்கேயே தான் வர்றாங்க"

"ஏன் இப்படி பேசறே"

"வேற எப்படி பேசறதாம் அவங்களுக்கு வடிச்சு கொட்டறது தான் என்னோட ஒரே வேலையா"

"உன் கிட்டே மனுஷன் பேச முடியுமா"

"உங்க குடும்பத்தை பற்றி பேச ஆரம்பிச்சால்

உடனே உங்க கிட்டே இருந்து வர்ற டயலாக் இதானே "

அவளது பேச்சுக்கு ராஜா பதில் எதுவும் சொல்லாமல் பைக்கை ஸ்டார்ட்
செய்து கிளம்பினான் அலுவலகத்திற்கு

மாலை வீட்டு வாசலில் வந்து இறங்கியவர்களை
பார்த்ததும் கீதாவுக்கு திக்கென்றது

"என்னம்மா நல்லாருக்கியா "

என்ற படி நுழைந்தவர்கள் அவளது அப்பா அம்மா

கூடவே உள் நுழைந்த கணவனை ஏறிட்டு
பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் உடனே நிமிர்ந்து

"வர்றது எங்க அப்பா அம்மா தான் னு சொல்லியிருக்கலாம் லே நீங்க" என்றாள்

"உங்க அப்பா அம்மா எங்க அப்பா அம்மா னு பிரிச்சு பேசறது என்னோட வழக்கமில்லையே எனக்கு நம்ம ரெண்டு பேர் அப்பா அம்மாவும் ஒன்று தான் "

என்றான் ராஜா மிக அமைதியாய்

ஆர்.வி.சரவணன்

வியாழன், டிசம்பர் 16, 2010

கடி யை கொஞ்சம் படி


கடி யை கொஞ்சம் படி

ரொம்ப நாளாச்சு ஒரு ஜாலியான இடுகை எழுதி என்ன எழுதலாம் என்று உட்கார்ந்து யோசிப்பாங்களோ என்ற டைப்பில் யோசித்த போது

நான் கல்லூரி காலத்தில் எழுதி வைத்த ஒரு கதையில் ஊரில் நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க என்று வருத்தப்படும் அம்மாவிடம் கதாநாயகன் எதுகை மோனையில் அதாங்க டி .ராஜேந்தர் பாணியில் கலகலப்பாக பேசுவதாக எழுதியிருந்தேன்

அதை இப்போது படித்த போது சிரிப்பு வந்துருச்சு சிரிப்பு

இதோ இடுகையாகவும் வந்துருச்சு

அம்மா

ஊரார் சொல்லும் பழி

நமக்கு காட்டாது ஒரு வழி

அவங்க வெட்டுவாங்க நமக்கு அவதுறு ங்கிற குழி

அதுக்காக உன் மனசிலே ஏன் கிலி

அது என்றும் தீராத வலி

அவங்க சொல்றதை உன் மனசிலேருந்து அழி

அவங்க பேச்சுக்கு நாம் ஏன் ஆகணும் பலி

அவங்களுக்கு காலம் தரும் கூலி

நம் குடும்பம் சந்தோசமாக வாழ தேடுவோம் ஒரு வழி

ஆகவே மன அமைதியை குடும்பத்திற்கு அளி

இதை படிச்சவுடன் உங்களுக்கு வருவது சிரிப்பா இல்லை வெறுப்பா என்பதை எதுகை மோனை யில் கருத்துரையிடுங்கள் பார்ப்போம்

சிறந்த கருத்துரைக்கு நான் தரும் பரிசு

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் அல்ல

வேறென்ன இதே போல் இன்னொரு இடுகை தான் ஹா ஹா ஹா ஹா

ஆர்.வி.சரவணன்

திங்கள், டிசம்பர் 13, 2010

கண்மணி நீ வர காத்திருந்தேன் ....



கண்மணி நீ வர காத்திருந்தேன் ....

மனம் கவர்ந்த பாடல்கள்

நான் கும்பகோணம் சென்ற போது ஒரு கடை தெருவுக்கு சென்றேன் அங்கே ஒருமியூசிக் ஷாப் இருக்கிறது

என் கல்லூரி காலங்களில் நான் மாலை வேளைகளில் அந்த மியூசிக் கடையில்வாசலில் நின்ற படி எனக்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்பும் போது

நின்று கேட்டுவிட்டு நகர்ந்த காலங்களை நினைத்து கொண்டேன்

பாடல் கேட்பதற்காக இப்படியெல்லாம் நின்றிருக்கிரோமே என்பதை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

இப்போது செல்போனில் பாடல்களை பதிவு செய்து

பாக்கெட்டில் வைத்துகொண்டு இருக்கும் இந்த காலத்தில் கூட

இசையின் மீதுள்ள ஆர்வம் குறையவில்லை

சரி நம் இசை அரசர் இளையராஜா அவர்களின்

இசையில் என் மனம்கவர்ந்த அடுத்த பாடலுக்கு வருவோம்



தென்றலே என்னை தோடு படத்தில் வரும்

கண்மணி நீ வர காத்திருந்தேன்.... பாடல்

இந்த பாடலை எங்கு எப்போது கேட்டாலும் எனக்கு அந்த மியூசிக் ஷாப் தான் நினைவுக்கு வரும்

இரவில் சாப்பிட்டு விட்டு பால்கனி யில்ஒரு ஸ்மால் வாக் சென்று கொண்டிருக்கும் போது இந்த பாடலை ஒரு முறையேனும் கேட்டு பாருங்கள் இளையராஜா, நம்மை ஒரு ரம்யமான காதலர் உலகுக்கு அழைத்து சென்று விடுவது போல் இருக்கும் மீண்டு வர மனம் மறுக்கும்

எப்படிப்பட்ட டென்ஷன் ஆக இருந்தாலும் இந்த பாடல் கேட்ட பிறகு ஒரு அமைதியான மன நிலைக்கு நம்மை கொண்டு வந்து விடுவார் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா

நான் மிக விரும்பும் ரொமாண்டிக் பாடல் இது

இதோ அந்த பாடல்



இந்த படத்தின்

நாயகன் நாயகி மோகன் ஜெயஸ்ரீ

பாடியவர்கள் ஜேசுதாஸ் உமா ரமணன்

படம் வெளியான ஆண்டு 1985

இயக்குனர் ஸ்ரீதர்

ஆர்.வி.சரவணன்


வெள்ளி, டிசம்பர் 10, 2010

எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்

எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் சூப்பர் டென்

நம் நண்பர் எப்பூடி ரஜினி படங்கள் பற்றிய தொடர் பதிவுக்குஅழைத்திருந்
தார். அவருக்கு என் நன்றி

ரஜினி படங்கள் எனும் போது அவர் நடித்த
கதாபாத்திரங்களில் இருந்து பத்து படங்கள் செலக்ட்
செய்வது கஷ்டமான விஷயம் இருந்தாலும் எனது பார்வையில்
எனது ரசனையில் செலக்ட் செய்துகொடுத்திருக்கிறேன்


அவர் நடித்த கதாபாத்திரங்கள்
நிறைய இருந்தாலும்தனித்து தெரியும் பல கதாபாத்திரங்களில்
எனை கவர்ந்தவை இதோ உங்கள்முன்னே



ஸ்ரீ ராகவேந்திரர்

ஒரு ஆக்சன் ஹீரோ ஒரு படத்தில் எல்லோரும்
ஏற்று கொள்ளும் வகையில்அமைதியான ஒரு ஆன்மீக மகானை
கண் முன்கொண்டு வந்து நிறுத்த முடியுமாஎனும்போது அந்த படத்தில்
ஒரு மகானாக வாழ்ந்திருந்தார். என்றே சொல்லலாம்
என்னை மிகவும் கவர்ந்த ரஜினியின் கேரக்டர் இது



கிளைமாக்ஸ் காட்சியில் அவர் பீடத்தில் அமரும்போது
அங்கே அவர் ரஜினியாகதெரியவில்லை ராகவேந்திரராகவே தெரிந்தார்.





தம்பிக்கு எந்த ஊரு

ரஜினி இந்த படத்தில் ஆச்சனுடன் சேர்ந்து காதல் குறும்புடன் காமெடி யில்கலக்கியிருந்தார் இந்த படத்தில் அவருக்கு காமெடி ஈசியாக வந்திருந்தது இந்தபடம் எப்போதுபோட்டாலும் உடனே பார்க்க அமர்ந்து விடுவேன்

அவர் படிக்கும் போது பாம்பு வந்து விட அவர் அதை கண்டு நடுங்குவாரே
முகத்தில் அஷ்ட கோணலாக அந்த சீன் எனை கவர்ந்தது




தளபதி

இந்த படம் ரஜினிக்கு ஒரு மாஸ் என்றே சொல்லலாம் சோபனாவை காதலோடு பார்ப்பதிலும் அதே சோபனா தம்பியின் மனைவி என்றவுடன் கண்ணியத்துடன் நலம் விசாரிப்பதிலும் இவர் தான் தன் தாய் என்று தெரிந்தவுடன் மறைவில் இருந்து தாய்ப்பாசத்தில் ஏக்கத்துடன் பார்ப்பதிலும் நண்பனுக்கு என்றால் எதுவும் செய்ய தயாராய் இருப்பதிலும் ரஜினி யின் நடிப்பு மிளிர்கிறது

கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் நடக்கும் பேச்சு வார்த்தையின் போது கோபத்துடன் எழுந்து கை வைடா பார்க்கலாம் என்று சீரும் காட்சி



தில்லு முள்ளு

இந்த படம் ரஜினியின் நடித்த காமெடி படங்களில் எனக்கு பிடித்த ஒன்று
சந்திரன் வேடத்தில் வரும் ரஜினியின் நடிப்பு பிடித்திருந்தாலும்
இந்திரனாகவரும் கேரக்டர் என்னை சபாஷ் போட வைத்த
ஒன்று அவர் செய்யும் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்


ராகங்கள் பதினாறு பாடலில் அவரது ஸ்டைல் நடிப்பு
நடை அனைத்தும் எனக்கு
பிடிக்கும்

தர்மத்தின் தலைவன்

இந்த படத்தில் வரும் ப்ரொபசர் கேரக்டர் ஆக்சன்
ரஜினியிடம் நாம் அந்த நாளில்எதிர்பார்க்காத ஒன்று
கண்ணியமான பேராசிரியர் வேடத்தில் அஹிம்சையை
போதிப்பவராக அவர் நடித்திருந்தது என்னை மிகவும் கவர்ந்தது


வேட்டி இல்லாமல் மறந்து போய் வெளியில் சென்று விட்டு
அவர் வீடு வந்து விகே ராமசாமியிடம் வேட்டி வாங்கி கொண்டு விட்டு
சுமதி பார்த்துச்சா என்றுஅப்பாவியாய் கேட்க அதற்க்கு அவர் ஊரே பார்த்துடுச்சு
சுமதி பார்த்தா என்னபார்க்காட்டி என்ன என்று சொல்வார்
வேட்டியை கட்டி கொண்டு எங்கே எனைதுரத்தி வந்த நாய் என்று
வெளியில் செல்வார் இந்த சீன் ரொம்ப ரசித்தேன்




பாட்ஷா
இந்த படத்தை பற்றி நான் ஏற்கனவே என் தளத்தில் இடுகையாகதந்திருக்கிறேன் நம்நண்பர்களும் அவர்களுக்கு பிடித்த படங்கள் லிஸ்டில் இதை தந்திருக்கிறார்கள் நானும் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது
ஒருதாதா வாகஇருந்திருந்தாலும் அதையெல்லாம் உள்ளுக்குள் அடக்கிவிட்டுசாதாரண ஒருஆட்டோ டிரைவராக மென்மையாக வலம் வருவது என்னைகவர்ந்த ஒன்று

தன் தங்கைக்காக மெடிக்கல் காலேஜ் இல் சீட் வாங்க வந்து
அங்கேஎனக்குஇன்னொரு பெயர் இருக்கு என்று அமைதியாககர்ஜிக்கும் அந்த காட்சிஎன்மனதை விட்டு நீங்கா ஒன்று



மன்னன்

மனைவி கோடிஸ்வரியாக இருந்தாலும் தான் வேலை பார்க்கும்
கம்பெனியில்முதலாளியாக இருந்தாலும் தன சம்பாத்தியத்தில்
வாழ்வது தான் சிறப்புகௌரவம் என்று வாழும் இந்த கேரக்டர்
என்னை மிகவும் கவர்ந்தது இதில் ரஜினிவெகு பொருத்தியிருந்தார்
என்றே சொல்லலாம்
கவுன்டமணி யுடன் இனைந்து தியட்டரில் அவர்செய்யும் காமெடி எனக்கு பிடித்த காமெடிகளில் ஒன்று


பண்டரிபாய் விஜயசாந்தியை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் நான்வாக்கு கொடுத்து விட்டேன் என்று சொல்லும் போது ரஜினி அம்மாவை பார்த்து மறுப்பேதும் சொல்லாமல் உள்ளுக்குள் வேதனையை மறைத்த படி தலையாட்டுவார் இன்றும் என் கண்ணில் நிற்கும் காட்சி



நான் சிகப்பு மனிதன்

ஒரு காலேஜ் பேராசிரியர் வேடத்தில் அமைதியான ஆனால்
அநீதி கண்டுபொங்குகிற கேரக்டர் ஒரு ஆக்சன் ஹீரோவா இப்படி
என்றுநினைக்கும்வண்ணம் படத்தின் முதல் பாதியில் கலக்கியிருப்பார்
இந்த கேரக்டர்எனக்குரொம்ப பிடிக்கும்



பாக்யராஜ் ரஜினியிடம் பேசி விட்டு சென்றவுடன் ஒருவர் பேனா கேட்கஅவருக்குபேனா எடுத்து கொடுத்து கொண்டே சென்று கொண்டிருக்கும் பாக்யராஜை ஒருபார்வை பார்ப்பார் பாருங்கள் சூப்பரா இருக்கும்


சந்திரமுகி

ஒரு டாக்டராக மட்டும் இல்லாமல் கிளைமாக்ஸ் இல்
வேட்டையனாகவிஸ்வரூபம் எடுப்பாரே சான்சே இல்லை
அவரை தவிர வேறு யாராலும் செய்யமுடியாத கேரக்டர் இது
இந்த வேட்டையன் கேரக்டர் இன்னும் ஒரு பத்துநிமிடமாவது
இருந்திருக்கலாமே என்று என்னை ஏங்க வைத்த கேரக்டர்


சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து ஆடி கொண்டிருக்கும்
ஜோதிகாவை பார்த்துகொண்டே தன் தலை முடியை கோதுவார்
கூடவே ஜோதிகாவை பார்த்து முத்தம்ஒன்றும் கொடுப்பார்
இந்த சீன் எனக்கு பிடித்தது


அண்ணாமலை

இந்த படம் ஆரம்பத்தில் ரஜினி ஒரு அப்பாவியாய் பால்காரனாய்
இருந்து பின்நண்பனிடம் ஏமாந்து விஸ்வரூபம் எடுப்பார்.
சங்க தேர்தலில் செலக்ட் ஆகிசரத்பாபு இருக்கையில் வந்து அமர்ந்து
ஸ்டைலாக புகை விடுவார் அதே போல்படி ஏறும் போது சரத்பாபு
கீழே இறங்க இவர் மேலே ஏற அப்போது சரத்பாபு வைபார்த்து
மலை டா அண்ணாமலை டா என்பார் இந்த காட்சியும் எனை கவர்ந்தஒன்று

தேசம் கடந்தும் கடல் கடந்தும்
மொழி கடந்தும்
எண்ணிலடங்கா இதயங்களை
ஆளும் ரஜினி
அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆர்.வி.சரவணன்