செவ்வாய், ஏப்ரல் 27, 2010

விழி தீண்டல் .....


விழி தீண்டல் .....

குடையை மீறி உனை தொடும் மழையை பொறுக்கின்றாய்
ஆடையை மீறி உனை தழுவும் தென்றலை பொறுக்கின்றாய்
சன்னல் திரை மீறி உனை எட்டும் நிலவை பொறுக்கின்றாய்
என் விழி தீண்டலை மட்டும் ஏனடி வெறுக்கின்றாய்


அன்பே என் தோற்றம் மிக மிக அழகானது உன் விழி தூரிகை பட்டதால்

தூண்டிலில் மீன்கள் மாட்டும் இது அதிசயமல்ல உன் விழி மீன்களில் தூண்டிலாய் நான் மாட்டினேன் இதுவே அதிசயம்

உன் விழி பார்வை செல்லும் இடமெல்லாம் நான் இருக்க பார்க்கிறேன்
மானின் வேகத்தையும் மிஞ்சும் உன் பார்வை வேகத்தின் முன் தோற்கிறேன்


உன் பார்வைக்கு பொருள் எந்த அகராதியிலும் கிடைக்கவில்லை
கிடைத்தது என்னவோ
உன் வெட்க புன்னகையில் தான்

ஆர்.வி .சரவணன்


சனி, ஏப்ரல் 24, 2010

சும்மா ஜாலிக்கு.............3



சும்மா ஜாலிக்கு ...................3


நான் சில திரைப்படங்களின் பெயர்களை வைத்து உரையாடல் ஒன்றை எழுதியுள்ளேன்



படித்து பாருங்கள்

ஏய்

யாரை பார்த்து ஏய் னு சொல்றே நான் யார் தெரியுமா

எவனாயிருந்தா எனக்கென்ன

திமிரு
தானே உனக்கு

உனக்கு தான் வாய் கொழுப்பு

என்னப்பா ஏட்டிக்கு போட்டியாவே பேசறே யாருப்பா நீ

உன்னை போல் ஒருவன்

எங்கிருந்து வரே

அண்ணா நகர் முதல் தெரு லேருந்து

எப்படி வந்தே

கிழக்கே போகும் ரயில் லே

எதுக்கு வந்திருக்கே

நாட்டாமையை பார்க்க


பார்த்து



அவர் கிட்டே வேலைக்காரன் ஆக இருக்க வந்திருக்கேன்

இருந்து

பெரிய இடத்து பெண் யாராவது இருந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி மிக பெரிய பணக்காரன் ஆக போறேன்

கேட்டவருக்கு அதிர்ச்சி

இருக்காதா பின்னே


ஏன்னா அவர் தாங்க நாட்டாமை

புதன், ஏப்ரல் 21, 2010

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவு

எனக்கு பிடித்த பத்து படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த
சைவ கொத்து பரோட்டா அவர்களுக்கு நன்றி

எனக்கு பிடித்த படங்களில் பத்து படங்களை
இங்கே தொகுத்திருக்கிறேன்











புது வசந்தம்
டைரக்டர் விக்ரமன் இயக்கிய முதல் படமான இது ஆணும் பெண்ணும் நண்பர்களாக தொடர்ந்து பழக முடியும் என்பதை அருமையை சொன்ன இந்த படம் எனக்கு பிடித்த படம்ராஜ்குமார் இசையும் படத்திற்கு ஒரு பிளஸ்
பாயிண்ட்

ரமணா
இந்த படத்தின் திரைக்கதை என்னை பிரமிக்க வைத்தது vijaykandh இந்த படத்தில் வசனம் அதிகமில்லாமல் அமைதியாக கலக்கியிருந்தார் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது

எதிர்நீச்சல்
நாகேஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு காலனியில் நடைபெறும் இந்த கதை எல்லோருக்கும் வேலை பார்த்து விட்டு படித்து முன்னுக்கு வரும் ஒரு ஆணின் கதை அடுத்தாத்து அம்புஜத்தை ,வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் பாடல்கள் இந்த படத்தில் மிக பிரபலம் k. பாலச்சந்தர் இயக்கிய படங்களில் எனக்கு பிடித்த ஒன்று

குடியிருந்த கோயில்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் இரு வேடங்களில் நடித்து வெளி வந்தஇந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் துள்ளுவதோ இளமை ,ஆடலுடன் பாடலை கேட்டு மனதை மயக்கும் பாடல்கள்

கர்ணன்
நடிகர் திலகம் சிவாஜி கர்ணனாக நடித்து வெளி வந்த இந்த புராண காலத்து
படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் கிருஷ்ணனாக நடித்திருந்த ராம ராவ் வெகு பொருத்தம் சிவாஜி அவர்கள் கர்ணனாகவே இந்த படத்தில் வாழ்ந்திருந்தார்
பாடல்களின் வெற்றியை சொல்லவும் வேண்டுமா

பதினாறு வயதினிலே
பாரதிராஜா இயக்கிய முதல் படம் ரஜினி ,கமல் ,ஸ்ரீதேவி அந்தந்த கேரக்டராகவே மாறியிருந்த இந்த படம் இயல்பான கிராமத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது இளையராஜா வின் பாடல்களும் படத்திற்கு ஒரு பலம்

தளபதி
ரஜினி, மம்முட்டி,ஷோபனா நடித்த இந்த படம் இயக்கியது மணி ரத்னம் மகாபாரத கதபதிரங்களை கொண்டு நவீன யுகத்தில் இப்படி ஒரு படம் செய்ய முடியுமா என்று என்னை வியக்க வைக்கும் இந்த படம் நான் எப்போது பார்த்தாலும் இளையராஜா வின் இசையில் பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மயக்க வைக்கும்

அந்த ஏழு நாட்கள்

இந்த படத்தின் திரைக்கதை என்னை வியக்க வைத்த ஒன்று பாக்யராஜ் அவர்களின் பாலக்காட்டு மாதவன் நடிப்பும் படத்தின் வசனங்களும் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் கிளைமாக்ஸ் என்னை மிகவும் கவர்ந்தது

ஆண் பாவம்
இந்த படம் ஆரம்பித்திலிருந்து கடைசி வரை காமெடி தான்
பாண்டியராஜன் இயக்கிய இந்த படத்தில் அவரும் நடித்திருந்தார்
இளையராஜா இசையில் காதல் கசக்குதையா , குயிலே குயிலே பாடல்களும் வெகு பிரபலம் இந்த படம் முறை பார்த்தாலும் அலுக்காது

பசங்க

சமீபமாய் வந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது முழுக்க முழுக்க சிறுவர் சிறுமியரை கொண்டு பள்ளி வாழ்க்கையை மையமாய் வைத்து அதில் காதலர்களையும் சேர்த்து பண்ண முடியமா என்று என்னை வியக்க வைத்த அறிமுக இயக்குனர் பாண்டி ராஜ் இந்த படம் எனக்கு சலிக்காத படம்


தொடர் பதிவுக்கு அழைத்த அனைவருக்கும் நன்றி






























வியாழன், ஏப்ரல் 15, 2010

நம்மை சுற்றி நாமே தான்




அனைவருக்கும்


எனது இனிய


தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நம்மை சுற்றி நாமே தான்

நம்மை சுற்றி உள்ளவர்களிடம்

அன்பை நிறைய விதைப்போம்

அன்பையே அறுவடை செய்வோம்

ஆர்.வி.சரவணன்

புதன், ஏப்ரல் 14, 2010

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே



சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே


*மன்னா காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீது என்ன தண்டனை கொடுக்கலாம்


அவர்கள் காலம் முழுதும் அவதியுறும் அளவுக்கு என்ன தண்டனை உண்டோ அதை கொடும்


*புற முதுகிட்டு ஓடியும் நீங்கள் எதிரி நாட்டு படையிடம் மாட்டி கொண்டு விட்டீர்களா எப்படி


நான் புற முதுகிட்டு ஓடியது எதிரி நாட்டு எல்லைக்குள்ளேயே அல்லவா

*மந்திரி என் உத்தரவின்றி எப்படி போர் முரசு ஒலிக்கிறது


மன்னிக்க வேண்டும் மன்னா என் செல்போன் ரிங்க்டோன் ஆக போர் முரசு கொட்டும் ஒலியை தான் வைத்துள்ளேன்

*மன்னா என் பாட்டுக்கு என்ன பரிசு


பாடிய உன் வாய்க்கு இனி பாடாதிருக்க பூட்டு தான் பரிசு
உன் பாட்டை கேட்டதற்கு நீ தான் எங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும்

* மன்னா போருக்கு வந்த எதிரி நாட்டு மன்னன் போர் செய்யாமலே உங்களை வெற்றி வீரன் என்று வாழ்த்தி விட்டு செல்கிறானே எப்படி


நான் இந்த மகாராணி யோடு வாழ்வதே வெற்றி பெற்றதற்கு சமம் என்று வாழ்த்தி விட்டு செல்கிறான்


*என்ன மந்திரி நான் போருக்கு கிளம்பும் நேரத்தில் என்னை வாழ்த்தி வழியனுப்ப மகாராணி வரவில்லையே


மகாராணி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் உங்களை வாழ்த்தி SMSஅனுப்பியுள்ளார்கள் நீங்கள் பார்க்கவில்லையா


இந்த கார்டூன் வரைந்தது ஐந்தாவது படிக்கும்


என் மகன் S ஹர்ஷவர்தன்

r.v.saravanan




திங்கள், ஏப்ரல் 12, 2010

அ.....லட்சியமாய்


.....லட்சியமாய்

என்னவள் வரும் வழியினிலே

இரவின் அமைதியிலே

நிலவின் ஒளியினிலே

தென்றலது தழுவலிலே

அழகு மரங்கள் அசைவினிலே

மலர்களின் மணம் வீசையிலே

காதல் மனம் கவிதையிலே

பாடிய பாட்டின் போதையிலே

எனை ஆட்கொண்ட உறக்கத்திலே

கனவில் வந்த சொர்க்கத்திலே

உனை காண்பதே என் லட்சியமாய்

ஆனால் உன் பார்வையோ

அங்கும் அலட்சியமாய் .........

r.v.saravanan

வெள்ளி, ஏப்ரல் 09, 2010

வறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்







வறுமைக்கும் வறுமை வருமோ காலமே பதில் சொல்

இவ் வையகத்தில் வறுமை என்பது இல்லாது போகட்டும்

வறுமை என்ற சொல்லே செல்லாது போகட்டும்


செழுமை எங்கும் நிறைந்திருக்கட்டும்

இந்த வறுமைக்கும் வறுமை வரும் காலம் எப்போது ?


அதற்காக வித்திட நினைப்போமா இப்போது ..........


r.v.saravanan




















வெள்ளி, ஏப்ரல் 02, 2010

உனை காக்க என் உயிர்






பருவச் சோலையில் பூக்கள் ஏராளம் மலரினும் மெல்லிய பெண்ணே உன் அழகு தாராளம்




தென்றலின் தொடுகையில் குயில்கள் இசை பாடுகையில் பிரம்மன் எனும் கதிரவன் கரம் படுகையில்



மலர்ந்தவளே



உன்னை சூறையாட தேன் அருந்த ஆடவர் கூட்டம் ஒன்று வண்டுகளாய் உனை முற்றுகையிட்டது


சுற்றி சுற்றி வந்து நாள் பார்த்தது



அதிலே நானும் ஒருவன்



உனை அடைய எண்ணமில்லை காக்க எண்ணமுண்டு



உன் அருகில் ஆயுதமாய் இருந்திட்ட முள் பட்டு எனை வருத்திட்டேன்



என் உயிரை மாய்த்தேன் தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்



ஆடவர் என் நிலை கண்டனர் உனை விட்டு அகன்றனர்



நீ நினைத்திருப்பாய்



உனை அடைய வந்தவன் நான் என்று


நீ நினைப்பாயா


உனை காக்க என் உயிர் போக்கியதை அறிவாயா

r.v.saravanan

எந்திரனே வருக புது சகாப்தம் தருக

எந்திரனே வருக புது சகாப்தம் தருக


நாம் மிகவும் எதிர்பார்க்கும் எந்திரன் திரைபடத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது வலை தளத்தில் குறிப்பிட்டுள்ளார்




ஒலி வடிவம் கேட்க செவி காத்திருக்கிறது

ஒளி வடிவம் காண விழி காத்திருக்கிறது


ஒவ்வொரு துறையின் உச்சம் தொட்ட சாதனையாளர்கள் இணைந்துபணியாற்றும் இப்படம் இந்திய திரை வரலாற்றில் உச்சம் தொட உளமார வாழ்த்துகிறேன்





எந்திரன் ஸ்டில்ஸ் பார்த்த போது எனக்கு தோன்றிய கமெண்ட்ஸ் இங்கு தந்திருக்கிறேன்








எந்திரனே வருக திரை உலகில் ஒரு சகாப்தத்தை தருக









கெட்டது ஒடுக்க தன்னாலே வருவேன்

நல்லது நடக்க என்னையே தருவேன்









நல்லவனுக்குதோள்கொடுப்பேன் கெட்டவனுக்கு வாள்எடுப்பேன்










நான்

எந்திரன் டா

பௌர்ணமியாய்

என்றும் ஒளிரும்

சந்திரன் டா
















அன்பை பொழிவதில் நான் ஒரு வருணன் உனை வசீகரிப்பதில் நான் ஒரு இந்திரன்


தேர்ந்த சிற்பியின் செதுக்கலில்ஒரு கலை பொக்கிஷம் உருவெடுக்கிறது



r.v.saravanan

வியாழன், ஏப்ரல் 01, 2010






சும்மா ஜாலிக்கு......................2



அனைவரும் இதை ஜாலியாக (நன்றாக கவனிக்கவும் கேலியாக அல்ல ) எடுத்து கொள்ள வேண்டுகிறேன்


* சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்
நீ இப்ப ஹீட் ஆகலேன்னா நான் உன்னை ஹீட் ஆக்கிடறேன் எதுக்கு சொல்றேன்னா எனக்கு சுளுக்கு விழுந்துடுச்சி எடுத்து விடணும்



* கார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கா
இதென்ன கேள்வி யாரு ஆசைபட்டோனோ அவன் வச்சிருப்பான்


* பத்த வச்சிட்டியே பரட்டை


இதை சொல்லி சொல்லி ஊருக்குளே என்னை பத்த வச்சிடாதே நீ



* நாட்டாமை தீர்ப்பை மாத்து
நான் தீர்ப்பை மாத்தறது இருக்கட்டும் ஒரு வாரமா நீ போட்டிருக்கிற சட்டையை கொஞ்சம் மாத்து



* தமிழ்லே எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு


பிடிச்ச வார்த்தை என்னன்னு சொல்லுங்க அதை சொல்றோம் இனிமே



* என் பேரை சொன்னியாடா


உங்க பேரை சொன்னதுக்கு அப்புறம் தான் தர்ம அடி :ஜாஸ்தி
விழுந்துச்சு



* எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்
இப்படி இருக்கிற நீ எப்படி அப்படி ஆனே


படம் என்வழி
-----------------------