செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

இரு மன அழைப்பிதழ் 2



இருமன அழைப்பிதழ் 2



ஹீரோ கார்த்திக் கண்ணோட்டத்தில்
கார்த்திக் வந்து கொண்டிருந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிருக்க அவன் மட்டும் விழித்துகொண்டிருந்தான். அந்த இரவின் அமைதி அவனுக்குள் இல்லை . காரணம் உமாவின் கல்யாண விஷயம் கேள்விபட்டதிலிருந்து அவன் மனம் அமைதியின்றி தவித்தது. எந்த இரவும் அவனால் தூங்க முடியவில்லை . உமாவின் மேலுள்ள காதலை உள்ளுக்குள் வைத்து அல்லாடுவது பச்சை மிளகாயை கண்ணில் வைத்து கொண்டது போல் இருந்தது.


இந்த வேலை கிடைத்தது கூட உமாவின் முயற்சியால் தான் . அவள் தான் ஹிந்து பார்த்து அப்ளை போட சொன்னாள். போட்டான் வேலை கிடைத்தது. நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தான். அவளை விட்டு பிரிந்து வந்தது கஷ்டமாக இருந்தது.



தினம் அவளை பார்த்த போது தோன்றாத காதல் அவளை பார்க்காத இந்த ஆறு மாதங்களில் மனதில் ஒரு மூலையில் துளிர் விட்டது. நட்பா காதலா என்று அவன் மனதுக்குள் நடந்த பட்டிமன்றத்தில் காதல் அதிக மதிப்பெண் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது . முதல் சம்பளம் வாங்கி கொண்டு அவளுக்கு பிடித்தவற்றையும் வாங்கி கொண்டு ஊருக்கு வந்தான். வீட்டில் உங்களை பார்க்க வேண்டும் போலிருந்தது என்று பொய் சொன்னான். அவளிடம் உன்னை பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று மெய் சொன்னான்.




காதலை மட்டும் சொல்லவில்லை காதலை உள்ளுர பதுக்கினான். தான் எழுதும் கவிதைகளில் அவளை மையமாக கொண்டே எழுதினான். அதை அவளிடம் படிக்க கொடுத்தான்.உமா படித்து விட்டு நல்லாருக்கே யாரந்த அதிர்ஷ்டசாலி என்று மட்டுமே சொன்னாள். இப்படிப்பட்ட நிலையில் எப்படி காதலை சொல்வது அதோடு அவர்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அவள் அண்ணன் எல்லோரும் அவனை தங்கள் வீட்டு பிள்ளையை போல் தலையில் துக்கி வைத்து கொண்டாடுவது வேறு அவனை தயங்கி பின்னடைய வைத்தது.


இந்த நிலையில் உமாவுக்கு கல்யாணம் என்று அவள் அண்ணன் சொன்ன போது உமா என்ன சொன்னாள் என்று கேட்டான். அவள் சம்மதம் இல்லாமல் எப்படி முடிவு செய்வோம் என்று அவள் அண்ணன் சொன்னான். அவளே சம்மதம் சொல்லி விட்டால் எனும் போது என்ன செய்வது நம் காதலுக்கு கொடுப்பினை இல்லை அவளை மனைவியை அடைய அதிர்ஷ்டமில்லை என்று முடிவுக்கு வந்து வெறுத்து போய் தன் போனை சுவிட்ச் ஆப் செய்து அலுவலகத்தில் வேறு ஒருவர் செல்ல வேண்டிய பஞ்சாப் வேலையை தான் செல்வதாக கூறி சென்று விட்டான். உமாவின் அண்ணன் நீ வரலை என்றால் என் முகத்தில் முழிக்காதே என்று திட்டவும் இதோ புறப்பட்டு கல்யாணத்திற்காக வந்து கொண்டிருக்கிறான் .



கார்த்திக் பேருந்தை விட்டு இறங்கிய போது எதிரே உமாவின் அண்ணன் வண்டியுடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் "ஏண்டா கல்யாண வேலையை விட்டுட்டு எனக்காக வந்திருக்கே நான் வர மாட்டேனா "என்றான்.



"இதுவும் ஒரு வேலை தான் உட்கார்" என்று சொல்லி வண்டியை கிளப்பினான்.



கல்யாண மண்டபம் வந்ததும் உமாவின் அப்பாவை சென்று பார்த்தான் .அவர் வாடா செல்லம் என்று தன் உறவினர்களிடம் எங்க வீட்டு பிள்ளை மாதிரி என்று அறிமுகபடுத்தினார். உமாவின் அம்மா கை பிடித்து அழைத்து போய் உமாவுக்கும் மாப்பிளைக்கும் வாங்கிய நகை புடவை பைக் என்று ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் காட்டினாள். உமா வை போய் பார் என்றும் அனுப்பி வைத்தாள்.


கார்த்திக் தயக்கத்துடன் உமாவின் அறைக்குள் நுழைந்தான். அங்கே உமா ஜன்னலை பார்த்தவாறு இருந்தவள் இவனை திரும்பினாள்.




"என்ன இன்னும் தூங்கலே நீ" என்றான் கார்த்திக்




"கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலருந்து நான் தூங்கலே ஆனா உனக்கு நல்லா தூக்கம் வந்திருக்குமே " இது உமா



"அப்படில்லாம் இல்லை "



"பொய் சொல்லாதே உனக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு. ரெண்டு பெரும் எந்த விசயத்தையும் மறைக்க கூடாது அப்படின்னு . சோ பொய் சொல்லாம சொல்லு . ஒரு நாள் நான் உனக்கு போன் பண்ணலேன்னா கலங்கி போற நீ ஏன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு ஊருக்கு போனே சொல்லுப்பா "


"உமா நான் உன் கிட்டே மறைச்சது ஒன்னே ஒன்னு தான் அது நான் உன்னை காதலிக்கிறது எப்படி உன்கிட்டே சொல்றது நீ தப்பா நினைச்சுட்டா என்னபன்றதுனு தான் உன்கிட்டே சொல்லாமல் மறைச்சேன் .உனக்கு கல்யாணம் னு நியூஸ் வந்தவுடன் சரி நீ என்னை நண்பனாக மட்டும் தான் ஏற்று கொண்டிருக்கிறாய் என்று முடிவெடுத்து வெறுத்து போய் உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன் ."


என்று கார்த்திக் சொன்னவுடன் உமா ,"லூசு லூசு" என்று சொல்லவும் அவள் வேகத்தை பார்த்து சற்றே மிரண்டான்.



"இதை எப்ப வந்து சொல்றே நீ இந்த வார்த்தை உன் கிட்டே இருந்து வராதா என்று காத்துக்கிட்டிருக்கேன்



என்று உமா சந்தோசமாய் சொல்லவும் கார்த்திக்கின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை


"இப்ப என்ன செய்வது "


"ஒன்னு நாம யாருக்கும் தெரியாம கிளம்பிடனும் இல்லனா அப்பா அம்மா அண்ணன் கிட்டே பேசி கல்யாணத்தை நிறுத்தனும் "




"எப்படி உமா என்னை பத்தி என்ன நினைப்பாங்க "



"அதை பார்த்தோம்னா நாம பிரிய வேண்டியது தான் உன்னை விட்டுட்டு வேற மாப்பிள்ளை கல்யாணம் செஞ்சுக்க முடியாது .சொல் என்ன செய்யலாம் "


"கொஞ்சம் பொறு நான் யோசிக்கிறேன்"



என்று சொல்லும் போது உள்ளே நுழைந்தான் உமாவின் முறை பையன் சரண் கண்களாலேயே அவளிடம் எப்படியும் உன்னை கை பிடிசுடுவேன் டோன்ட் வொர்ரி என்று ஜாடை காட்டி விட்டு ஹாலுக்கு வந்தான். உமாவின் காதலுக்கு சந்தோசபடுவதை விட கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்பதில் நேரத்தை செலவிட்டான். மணி பார்த்தான் . நள்ளிரவு ஒன்று. கல்யாண மேடையில் உமாவின் பெயருக்கு பக்கத்தில் மாப்பிள்ளையின் பெயர் இருப்பதை பார்த்த போது அவன் மனது வலித்தது.




தொடரும்



அடுத்து இந்த கதையை முடிக்க வருவது உமாவின் முறை பையன் சரண்

ஆர்.வி.சரவணன்

சனி, ஆகஸ்ட் 07, 2010

இருமன அழைப்பிதழ்

கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு சிறு(தொடர்)கதை . கதையில் வரும் மூன்று கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் கதையை நகர்த்தும் ஒரு சிறு முயற்சி (ஏற்கனவே எல்லோரும் செய்தது தான் ) மூன்று பதிவுகளாக தொடர்ந்து தர இருக்கிறேன் படித்து விட்டு சொல்லுங்கள்



இரு மன அழைப்பிதழ்

முதலில் ஹீரோயின் உமா

மாப்பிள்ளை வந்தாச்சு என்று கல்யாண பெண் உமாவிடம் வந்து சொன்னாள் அவள் தோழி. சொன்னவுடன் அங்கிருந்த அனைவரையும் ஆவல் பற்றிக் கொள்ள சிலர்ஜன்னலுக்கும் சிலர் வாசலுக்கும் சென்றனர். அவர்களிடம் இருந்த உற்சாகம் உமாவிடம் இல்லை மாறாக சோகத்தில் இருந்தாள் அவள்.மனதின் வேதனையை முகத்திற்கு கொண்டு வராமல் இருக்க கஷ்டப்பட்டாள். வெற்றுச் சிரிப்புடன் "அப்படியா "என்றாள். வீட்டில் கல்யாணம் பேச ஆரம்பித்த நாள் முதல் மனதுக்குள் புயலடித்து கொண்டிருந்தது.

காரணம் கார்த்திக் அண்ணனின் நண்பனாக வீட்டுக்குள் நுழைந்து அவள் மனத்திலும் நுழைந்தவன். ஒரு நாள் அண்ணனுடன் வெளியில் சென்ற போது அவனை சந்தித்தாள். அவள் அண்ணன் ஒரு கடைக்குள் செல்ல அவர்கள் மட்டும் தனியாக. ஏதாவது பேசியாக வேண்டும் என்பதால் பேசினாள். படிப்பு, வீடு, பிடித்தது, பிடிக்காதது என்று பேச்சு வளர்ந்தது. முதலில் சந்திக்கும் போதெல்லாம் பேசினார்கள். பின் பேசுவதற்காக சந்திப்பை உண்டாக்கி கொண்டார்கள்.
வேலை தேடி கொண்டிருந்த கார்த்திக்கிற்கு அவளோடு பேசுவதே வேலை என்றாகி போனது. ஒரு நாள் அவன் வரவில்லைஎன்றாலும் ஏன் வரவில்லை என்று உமாவின் அப்பா அம்மா கேட்கும் அளவுக்கு வீட்டில் சுதந்திரமாய் வளைய வந்தான். தன் விசயங்களில் அவனின் அக்கறை அவளை நெகிழ வைத்தது. அதே போல் அவனது விசயங்களிலும் தன்னை யோசனை கேட்பது அவளை மகிழ வைத்தது.
இருவரும் தங்கள் திருமண விசயத்தில் கூட எனக்கு மாப்பிள்ளை நீ தான் பார்க்க வேண்டும் உனக்கு பெண் நான் தான் பார்பேன் என்று பேசி வைத்து கொண்டார்கள் இதை பார்த்த உமாவின் தோழிகள் "நீங்கள் காதலுக்கு மாறிடுவீங்க "என்று சொன்னார்கள் . அவர்கள் சொன்னது தான் நடந்தது. எப்படியும் எனக்கு ஒரு மாப்பிள்ளை வருவார். அதற்க்கு கார்த்திக்கே மாப்பிள்ளையானால் என்ன என்று உமாவுக்கு தோன்றியது. கூடவே காதலும் தோன்றியது.

கார்த்திக்கிற்கு வெளியூரில் வேலை கிடைக்க திருச்சி விட்டு சென்னை சென்றான். அவனுக்கு உமா எழுதிய கடிதங்களில் காதல் இருந்தது. ஆனால் அவன் அவளுக்கு எழுதிய கடிதங்களில் காதலின் எந்த அடையாளமும் கிடைக்கவில்லை.

கிடைத்தது அவளுக்கு நல்ல வரன் மட்டுமே. நல்ல படிப்பு வசதியான மாப்பிள்ளை என்று உமாவின் அப்பா அம்மா பிடித்து கொள்ள என்ன சொல்லி தட்டி கழிப்பது என்று தெரியாமல் இதோ கல்யாணத்திற்கு முதல் நாளான இன்று வரை கலங்கி கொண்டிருக்கிறாள் .

" என்ன தூங்காமல் விழித்து கொண்டிருக்கிறாய்" என்று கேட்டு கொண்டு அம்மா நுழையவும் கூடவே அண்ணன் "மாப்பிளையின் நினைப்பிலே இருப்பா "என்று சொல்லி சிரிக்க "இதற்கு நான் வெட்கபடனுமா என்று சொல்லி தலை குனிந்தவள் இன்னும் ஏண்டா கார்த்திக் வரலே என்ற அம்மாவின் கேள்விக்கு தலை நிமிர்ந்தாள்.
"காலையிலே வரான்மா"
" ஏண்டா நம்ம வீட்டு பிள்ளை மாதிரி பழகினவன் சீக்கிரம் வர வேண்டியது தானே"
" லீவ் கிடைக்கலையாம்"
நீயும் எனக்கு கிடைக்க மாட்டாய் போலிருக்கு என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள் . கல்யாணம் முடிவானவுடன் உடனே மெயில் அனுப்பினாள் .போனில் பேச முயற்சி செய்தாள் .போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது .
அலுவலகத்தில் விசாரித்தாள். பஞ்சாப் மாநிலத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் அலுவலக வேலையாய் சென்றிருப்பதாகவும் காண்டக்ட் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்கள் .
அவன் மனத்திலும் தன் மேல் காதல் இருப்பது உறுதியாக தெரிந்தால் உடனே திருமணத்தை நிறுத்த அவள் தயார் . ஆனால் அவன் மனதில் இருப்பது என்ன என்று தெரியாமலே இதோ கலயாணத்திற்கு முதல் நாள் இன்று வரை முழித்து கொண்டிருக்கிறாள் .
இனி தொடர்வது ஹீரோ கார்த்திக் ...

தொடரும்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஆகஸ்ட் 05, 2010


காதல் கடிகள் 1

ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு போனியே ட்ராப் பண்ணிட்டியா



அதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு காதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா



******



நேத்து
நம்ம ரெண்டு பேரையும் எங்கப்பா பார்த்துட்டார்

அப்புறம் என்ன சொன்னார்

உன்னோட இந்த காதலாவது வெற்றி பெறட்டும் னு வாழ்த்தினார்




******



ஆனாலும்
உங்களுக்கு கொஞ்சம் கூட ரசனையே இல்லே


ஆமா உன் அழகான தங்கச்சியை விட்டுட்டு உன்னை போய் காதலிக்கிறேனே இதிலேயே நீ தெரிஞ்சிக்க வேண்டாமா




******


எந்த காரணத்திற்காகவும் நான் உங்களை விட்டு கொடுக்க மாட்டேன்


அதே தான் என் மனைவியும் எந்த காரணத்திற்காகவும் என் சம்பளத்தை விட்டு கொடுக்க மாட்டா

படம் : நன்றி google

ஆர்.வி. சரவணன்

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

முரண்பாடுகள் 2


முரண்பாடுகள் 2


சுவை மிக்க இளநீர் தரும் தென்னை மரத்தடியில்
செல்வது சாக்கடை நீர் தான்


காதலிக்கும் போது மணிகணக்கில் திட்டினாலும் இனித்தது
கை பிடித்த பின் வினாடிகனக்கில் முறைத்தாலே கசக்கிறதே


மலையாய் குவிந்திருக்கும் குப்பையின் ஊடே ஒரு பலகை எட்டி பார்க்க அதில் இருந்தது குப்பை போடாதீர் என்ற வாசகம்


எச்சில் துப்பக் கூடாது என்ற போர்டு எழுதி கொண்டிருப்பவன் அவ்வப்போது பக்கத்திலேயே துப்பிக் கொண்டான்


தண்ணீர் லாரியிலிருந்து ததும்பி வழியும் குடிநீரின் ஊடே தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வரிகள்




கோயிலில் சர்க்கரை பொங்கல் வாங்க முண்டியடிக்கும் மனித கூட்டத்தின் அருகில் சிதறி கிடக்கும் பொங்கலை நோக்கி வரிசை மாறாமல் படையெடுக்கும் எறும்புக் கூட்டம்


ஆர்.வி.சரவணன்

புதன், ஜூலை 28, 2010

ஜோக் கடிக்கிறாங்க 2


ஜோக் கடிக்கிறாங்க 2



நான் முதல் முதலில் கவிதை (அப்படின்னு நானா தான் சொல்லிக்கிறேன் ) கிறுக்க ஆரம்பித்தது எப்போது தெரியுமா +2 படிக்கும் போது (நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ) என் நண்பன் கவிதை எழுதுவதை பார்த்து நானும் கிறுக்கறேன் பார் என்று கிறுக்கியது இதோ



பாடினேன் ஒரு பாட்டு



மாணவர் மத்தியில் கிடைத்தது பல ஓட்டு



இதற்கு விழுந்தது பல கை தட்டு



ஆசிரியர் வந்தார் ஹாலில் நடை போட்டு



இது என் கண்ணில் பட்டு



வாய்க்கு போட்டேன் ஒரு பூட்டு



என் மீது பொறாமை கொண்ட மாணவனால்



எனக்கு வந்தது வேட்டு




இதை படிச்சவுடனே எதையாவது எடுத்து உடைக்கணும் னு தோணுதா




அப்ப இதை உடைங்க சீ இதை படிங்க



யானைக்குள்ளே எறும்பு இருக்க முடியும் ஆனா எறும்பின் உள்ளே யானை இருக்க முடியுமா



முடியாதுனு சொல்வீங்களே



அதான் கிடையாது



எறும்பின் மனசுக்குள்ளே யானை இருக்கும் ல



இப்பவும் உடைக்கணும்னு தோணுதா



என்னோட இந்த டவுட்டுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்



கரும்பு சாருக்குள் விழுந்த எறும்பு உற்சாகமாய் நீச்சலடிக்குதா இல்லே வெளியில் வர தத்தளிக்குதா



இப்படி யோசிக்கும் போது கூடவே



அப்படியே பாவப்பட்டு எறும்பை எடுத்து வெளியில் விட்டாலும் அது நம் கைக்கு முத்தம் கொடுக்குமா இல்ல கடிக்குமா



னு டவுட் வருதே



இப்ப உடைக்கிறது பத்தி யோசிக்காமே பதிலை பத்தி யோசிப்பீங்கலே



ஹி....ஹி....



ஆர்.வி.சரவணன்

திங்கள், ஜூலை 26, 2010

மழையில் நனைந்த படி


மழையில் நனைந்த படி


சாலையில் நான் நடக்கையில்

மழை ஆரம்பிக்கையில்


குடையுடன் வந்த என்னவள்


எனை அழைத்து கொண்டாள்


இப்போது


ஒரே குடையின் கீழ் இருவரும்


இணைந்த படி



மழையில் நனைந்த படி


என் மனம்


கவிதைக்கு முயன்ற படி


அதற்குள்


வீடு வந்து விட்டது


முதல் வேலையாக

என் குடையை எடுத்து


பரணில் வைத்து விட்டு


காத்திருக்கிறேன்


நான்


அடுத்த மழைக்கு

ஆர்.வி.சரவணன்





வெள்ளி, ஜூலை 23, 2010

என் சமையலறையில் 2



என் சமையலறையில் 2

நேற்று வீட்டில் என் மனைவி தோசைக்கு வெங்காய சட்னி ரெடி செய்திருந்தார் சாப்பிட சுவையாக இருந்தது நல்லாருக்குதே எப்படி இது செய்வது என்று கேட்டேன் சாதரணமா எல்லாரும் பண்றது தான் கொஞ்சம் வித்தியாசமா செய்திருக்கேன் என்றார்.

சரி இது பற்றி எனக்கு சொல்லு ஒரு இடுகையிடுகிறேன் என்றேன் அவர் சொல்லியதை தான் இங்கு தந்திருக்கிறேன்

வெங்காய சட்னி
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம் 4
காய்ந்த மிளகாய் 6
தக்காளி பெரியது 1
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
இஞ்சி சிறு துண்டு
பூண்டு பற்கள் 6
தேங்காய் துருவல் கால் கப்
பெருங்காயம் சிறிதளவு



வெங்காயம், தக்காளி ,மிளகாய் ,பூண்டு, இஞ்சி ,பெருங்காயம் போன்றவற்றை வாணலியில் போட்டு சிறிது எண்ணை விட்டு இலேசாக வதக்கி (பச்சை வாசம் போக இலேசாக வதக்கி ) எடுத்து கொண்டு தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை,தேவையான உப்பு சேர்த்து அரைத்து கடுகு தாளித்து கருவபிலை போட்டு விட்டால் வெங்காய சட்னி ரெடி

செய்து சாப்பிட்டு பார்த்து நன்றாக இருந்தால் சொல்லுங்கள் நன்றாக இல்லையென்றாலும் சொல்லுங்கள் .
ஆர்.வி .சரவணன்

புதன், ஜூலை 21, 2010

கல்லுரி காலங்களில்



கல்லுரி காலங்களில்


எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நான் நிறைய எழுதுவேன் படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )


அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள் அவர்கள் தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள் அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை என்னிடம் கொடுத்தார்கள் நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன் 13 காட்சிகளில் நாடகம் சாதரணமாக இருந்தது . நான் "என்னப்பா இப்படி எழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்" என்றனர். நான் சரி வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "போஸ்டர் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.


சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற தலைப்பிலேயே நாடகத்தை உருவாக்கினேன் எப்ப தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு படிக்கிறேன் என்று சொல்லி விட்டு 40 காட்சிகளில் நாடகத்தை எழுதி கொடுத்தேன். ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று எனவே இயக்கம் என்று உன் பெயரை போடுகிறோம் என்றனர் சரி என்றேன் போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் போட்டு கொண்டு தான் வருவேன் என்று ஒரே அடம் பிடித்தான். சரி என்று விட்டு விட்டேன்


ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி ஏகப்பட்ட கை தட்டல் கிடைத்தது (எனக்கல்ல நாடகத்திற்கு) ஒரு ஜனரஞ்சகமான நாடகம் இதற்கே இவ்வளவு கை தட்டலா எனும் போது எனக்கு மிகுந்த உற்சாகம் .


நாடகம் முடிவில் எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லவில்லை "சாரி லிஸ்டில் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் "அதனாலென்ன பரவாயில்லை "என்றேன் (வேற வழி ) மேடையை விட்டு இறங்கும் போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எனை பார்த்து "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் பொதுவாக நடக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லாருக்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது " என்றார். கேட்கவா வேண்டும் நான் வானத்தில் பறந்தேன் அதே சந்தோசத்தோடு வீடு வந்தேன்.


வீட்டில் ஏக ரகளை படிப்பை விட்டுட்டு எப்படி நாடகம் போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ நீ உருப்படாமல் தான் போக போறே என்று சொல்லி விட மனசு ரொம்பவே கஷ்டமாகி போனது.


வீட்டில் நான் கண்டிப்பாக சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானமே போட்டு விட்டதால் நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறேன் .என் குடும்பத்திற்கு இப்பொழுது சந்தோஷம்.


ஆனால் எனக்கு, எனது திறமைகளை கண்டு வெளிஉலகம் பாராட்டி உற்சாகபடுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது

(அப்பாடா திரையுலகமும் ரசிகர்களும் என் கிட்டேருந்து தப்பிச்சிட்டாங்க )

ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஜூலை 18, 2010

நம்ம ஊரு





நம்ம ஊரு
நான் சென்னையில் இருந்தாலும் பெங்களூர், டில்லி போன்ற ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எனது ஊரான கும்பகோணம் சென்றாலே, ஒரு சின்ன குழந்தையின் குதுகலம் தான் எப்போதுமே .தாயின் மடியில் சென்று அமர்ந்த சந்தோஷம் தான் எனக்கு (எங்களுக்கும் தான் என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்குது )



சமீபத்தில் என் ஊருக்கு என் அம்மாவின் குலதெய்வமான காத்தாயம்மன்கோவிலுக்கு சென்றிருந்தோம் இந்த கோவில் உள்ள ஊரின் பெயர் கபிஸ்தலம். இது கும்பகோணம் டு தஞ்சாவூர் செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.
அந்த இடத்தின் இயற்கையை கண்டு வியந்து நான் எடுத்த சில காட்சிகள்







தென்னை மரங்களடர்ந்த அழகான அமைதியான இடம்



கோவிலுக்கு வரும் சாலை




கோவிலை சுற்றி உள்ள வயல் வெளி



வைக்கோல்போர் (அப்படிதான் சொல்வார்கள் ) அருகே என் மகனும் , என் உறவினர் மகனும்

பச்சை பசேல் என்ற வயல்வெளி எங்கும்


கோவில் நுழைவாயில்


ஆர்.வி.சரவணன்
























சனி, ஜூலை 17, 2010

ஜோக் கடிக்கிறாங்க


ஜோக் கடிக்கிறாங்க

என் நண்பர் TN ஸ்ரீதர் மின்னஞ்சலில் SMS ஜோக்ஸ் அனுப்பியிருந்தார். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு

நைட்லே கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம் அதுவே மார்னிங் லே கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா

என்ன தான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் எல்லாம் வைக்க முடியாது சங்கு ஊதி விட்டு தான் கிளம்பனும்

காதல் என்பது கரண்ட் போன நேரத்திலே வர கொசு மாதிரி தூங்கவும் முடியாது துரத்தவும் முடியாது

அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம் ஒரு பெண்ணை காதலிச்சால் நீங்க அடிமை அதே பெண்ணை நீங்க கல்யாணம் பண்ணா நீங்க கொத்தடிமை

இந்த ஜோக்ஸ் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய ஒரு கடி இதோ

நம்ம மேலே எறும்பு ஏறினா அது கடிக்கும் எறும்பு மேலே நாம ஏறினா அது துடிக்கும்

ஹி ....ஹி.....

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூலை 15, 2010

சின்னஞ் சிறு உள்ளங்களே


சின்னஞ் சிறு உள்ளங்களே

ஜூலை 16 ,2004 கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்தது. அந்த சின்ன சிறு உள்ளங்களுக்காக உலகமே கலங்கியது. என்னை இது மிகவும் பாதித்தது . என் அன்றாட வாழ்வில் நெருப்பு எப்பொழுது எனை தீண்டினாலும் எனக்கு அந்த சிறுவர் சிறுமியரின் ஞாபகம் வரும் என் கண்கள் கலங்கும்

இதோ அந்த பிஞ்சு உள்ளங்களுக்காக நான் எழுதியதை இந்த நினைவு நாளில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்


சீவி சிங்காரித்து வகுப்பறைக்கு சென்ற சின்ன சிட்டுகளே கருகி போய் வந்த மொட்டுக்களே

அறிவை தரும் கல்விச்சாலை உங்களுக்கு மட்டும் ஏன் யாகசாலையாய்

இரக்கமில்லா அக்னி உங்களை அரவணைத்தது எமது விழிகளை கண்ணீரில் நனைத்தது

ஈரமில்லா நெஞ்சமுள்ள வருணனும் மழையாய் உங்களை காக்கவில்லை பெற்றோரிடம் உங்களை மீட்டுத் தரவில்லை

உங்களை பொசுக்கிய தீ அணைந்து போனது இங்கு பெற்ற வயிறோடு பெறாத வயிறுகளும் தீ பற்றி கொண்டது

இறைவன் உங்களை தன்னருகே சேர்த்து கொண்டான் நாங்கள் துன்பத்தை வார்த்துக் கொண்டோம்

இப்போது இறைவனின் மடியில் நீங்கள் எப்போதும் உங்களின் நினைவில் நாங்கள்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைக்.................................காட்சி


தொலைக்.................................காட்சி

டிவி பார்க்கும் போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்


*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை


*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ


*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி நிகழ்ச்சி பார்க்கும் நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்


*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூலை 08, 2010

மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல




மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல



எனக்கென்று பார்த்த பெண்ணே காயத்ரி




நான் நலமில்லை நீயேனும் நலமா




நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லது மட்டுமே சொல்லி வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.




ஆர்.வி.சரவணன்

சனி, ஜூலை 03, 2010

குறையொன்றுமில்லை






குறையொன்றுமில்லை


ஓம் நமோ நாராயணா


குறையொன்றுமில்லை மறை முர்த்தி கண்ணா ...........
என்று உனை பாடும் போது என் கண் முன்னே உன் படைப்புகளான வாய்பேசாதோர், காது கேளாதோர் ,கை கால் ஊனமுற்றோர், மன நிலை தவறியவர்கள்
இவ் வையகத்தில் அவதியுறும் நிலையில், நான் பாட தயக்கம் வருகிறது.



இறைவா இனி நீ
இவ்வுலகில் படைக்கும் அனைத்து உயிரினையும் குறை ஒன்றுமில்லாமல் படைப்பாயாக
ஒவ்வொரு மணித்துளியும் உனை நான் இவ்விதம் முழுமையாய் பாடி இன்புற பேரருள் புரிவாயாக


பெருமாள் ஓவியம் வரைந்தது என் மகன் ஹர்ஷவர்தன். நானும் என் மனைவியும் நகை மாலை வரைந்து கொடுத்து முழுமை செய்தோம்


ஆர்.வி.சரவணன்

வெள்ளி, ஜூலை 02, 2010

மனம் கவர்ந்த பாடல்கள்1








மனம் கவர்ந்த பாடல்கள் 1

பாடல்கள் கேட்பது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த நேரத்திலும் பாடல்கள் கேட்க ஆசைபடுவேன் . எவ்வளவு டென்ஷன் ஆக இருந்தாலும் பாடல்கள் கேட்டால் ரிலாக்ஸ் ஆகி விடுவேன் அதிலும் இளையராஜா பாடல்கள் என்றால் மிகவும் இஷ்டம் இதோ இளையராஜா அவர்களின் இசையில் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று

அதிகாலை சுக வேளை உன் ஓலை வந்தது ........



இந்த பாடல் இடம் பெற்ற படம் நட்பு. இந்த பாடல் இடம் பெரும் காட்சி என்னவென்றால் கார்த்திக், ஸ்ரீ பாரதி இருவரும் தங்கள் காதலுக்கு தூதுவனாக செந்திலை பயன்படுத்துவார்கள். செந்திலுக்கு உபகாரமாக 10 பைசா கொடுப்பார்கள் 10 பைசாக்கள் குவிந்து போய் செந்தில் சந்தோசமாக சிரிப்பார். அப்பொழுது இந்த பாடல் ஆரம்பமாகும்.



பாடல் ஆரம்பிக்கும் போதே நம் இசை அரசர் இளையராஜா பைசாக்கள் மோதுவது போல் ஓசையை ஆரம்பித்து பின் தன் இசை வெள்ளத்தை ஆரம்பித்திருப்பார். கூடவே பைசாக்கள் மோதும் ஒலி தொடர்ந்து ...டின் டின் டின் டின்.........என்று பாடல் முழுவதும் வரும். பைசாக்கள் மோதும் அந்த ஒலி பாடலின் இசையின் ஊடே கலந்து,அதனுடன் ஜேசுதாஸ் ஜானகி குரல்களின் வசீகரமும் இணைந்து நம் எண்ண அலைகளில் தரும் இன்ப அதிர்வை என்னவென்பது அந்த இசை வெள்ளத்தில் நம் மனது படகில் செல்வது போல் தோன்றும்.

இந்த படத்தை பற்றி ஒரு குறிப்பு

இந்த படத்தின் கதையை வைரமுத்து அவர்கள் வானம் தொட்டு விடும் தூரம் தான் என்ற பெயரில் குமுதம் வார இதழில் தொடர்கதையாக எழுதினார். அந்த கதை நட்பு என்ற பெயரில் திரைப்படமானது.அமீர்ஜான் இந்த படத்தை இயக்கியிருந்தார் கதை,வசனம், பாடல்கள் வைரமுத்து. இந்த படத்தின் நாயகன் கார்த்திக் ஸ்ரீ பாரதி என்ற புதுமுகம் இந்த படத்தில் நாயகியாக அறிமுகம் தயாரிப்பு P.S.V.PICTURES இந்த படத்தில் வரும் ஆறு பாடல்களில் இந்த பாடல் ஹிட். இந்த படம் 1986 இல் வெளியானது.


தொடர்வேன்

ஆர்.வி.சரவணன்







புதன், ஜூன் 23, 2010

சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே



சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே




*என்னது உங்கள் வீட்டு பெட்ரூம் ஆபீஸ் ரூம் போல் உள்ளதே


அதுவா ஆபீஸ் ரூம் போல் இருந்தால் தான் என் கணவருக்கு தூக்கமே வருதாம் அதான்








*என்ன இருந்தாலும் உங்க ஆபீஸ் லே இப்படியா போர்டு மாட்டி வைப்பீங்க


எதை சொல்றீங்க


தூங்கும் போது எல்லோரும் தூங்காமல் ஒவ்வொருவராக தூங்கவும் னு எழுதி வச்சிருக்கீங்க லே அதை சொன்னேன்








*தூக்கத்திலே நடக்கிற வியதியாலே பெரிய தொல்லையா இருக்கு


என்னாச்சு


தூங்கிகிட்டு இருக்கிறப்ப நான் பாட்டுக்கு பக்கத்து ஆபீஸ் போய் தூங்க ஆரம்பிச்சுடுறேன்







*அன்னிக்கு முதலாளி வரப்ப ஆபீஸ் லே நாங்க எல்லோரும் தூங்கிக்கிட்டுருந்தோம்


அப்புறம் என்னாச்சு


எல்லோரையும் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு அவர் தூங்கிட்டாரு








*ஆபீஸ் லே தினம் தூங்குற எல்லாரும் இன்னிக்கு தூங்காம வேலை பார்க்கிறாங்கலே எப்படி


இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்திருக்கு அதான்


ஆர் . வி .சரவணன்

வெள்ளி, ஜூன் 18, 2010

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......


பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......


சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச படம் பாட்ஷா (எங்களுக்கும் தான் அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )



அந்த படத்தில் என்னை கவர்ந்த விசயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு (இவ்வளவு தாமதமானு கேட்காதீங்க) பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பதுஒரு இனிமையான அனுபவம் தானே



எனக்கு பிடிச்சது தான் உங்களுக்கும் பிடிச்சிருந்துதா னு நீங்க சொல்லுங்களேன்



இந்த படத்தின் திரைக்கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த படத்தில் ரஜினியின் நடிப்பில் என்னை வெகுவாக கவர்ந்த காட்சிகள் சிலவற்றை சொல்கிறேன்



இந்த படத்திலேயே ரொம்ப முக்கியமான காட்சி இன்டர்வெல் க்கு முன்னாடி வர்ற பைட் சீன் தான் அந்த சீனுக்கு முன்னாடி ஒரு சீன் வரும்



அதாவது ரஜினி சார் தம்பிக்கு பதிலா ரஜினி யை கட்டி வச்சி ஆனந்தராஜ் அடிச்சதுக்கு அப்புறம் ரஜினி கிட்டே அவர் தம்பி கேட்பார்



"இப்படி அடிச்சிருக்காங்க உங்களுக்கு கோபமே வரலியா உங்களுக்கு கோபமே வராதா "



அதற்கு ரஜினி தம்பியை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க அர்த்தம்u பொதிந்த சிரிப்பு இப்பவும் என் கண்ணிலேயே நிக்குது அவர் சிரிப்பு



அடுத்தது அந்த இன்டர்வெல் பைட் அப்ப ரஜினி தன தம்பி தங்கையை பார்த்து " உள்ளே போ" னு அதட்டலா மிரட்டலா சொல்வார் பாருங்க பார்க்கிற நமக்கு அப்படியே உடம்பு அதிரும்



இன்னொரு முக்கியமான காட்சி காலேஜ் சீன் இந்த சீனை ரசிக்காதவங்க இருக்க முடியாது



"எனக்கு இன்னொரு பேர் இருக்கு " னு ரஜினி சொன்னவுடனே சேது விநாயகம் சீட்டை விட்டு எழுந்து பயத்தோடு நிக்க ரஜினி இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி மெதுவா நடந்துகிட்டே பேசுவார். டயலாக் எதுவுமே இல்லாமல் ஆக்சன் லே ரஜினி சும்மா பின்னி பெடலடுதிருப்பார்

அடுத்த காட்சி நக்மா கல்யாண சீன் ரஜினி வர வர தேவனுக்கு பாட்ஷா வே எதிரில் வருவது போல் தோன்றும்.



இதிலே முக்கியமானது என்னன்னா நக்மா வின் கையை பிடிக்கு முன் ரஜினி தேவன் பக்கம் திரும்பி ஒரு லுக் விடும் போது தேவன் எடுத்துக்கோ எடுத்துக்கோ என்று அர்ப்பணிப்பது போல் செய்வாரே சும்மா கும்முன்னு இருக்கும் அந்த காட்சி கூடவே தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான் என்று பாடல் தொடங்குவது அந்த காட்சிக்கு சிகரம் வைத்து போல் இருக்கும் .



அதே போல் ரகுவரன் தான் தொத்து போயிட்டோம் னு தெரிஞ்சவுடன் போனில் "பாட்ஷா "என்று கத்த அதற்கு ரஜினி இங்கு "யா யா யா" என்று ஸ்டைல் ஆக சொல்வார் பாருங்கள் அரங்கமே அதிரும் நம் மனசே அதிர்வது போல் இருக்கும் .



ரஜினியின் ஆட்டோ வை சேதப்படுத்தும் போது பொறுமையாய் நின்றிருப்பார் ,அது பொறுமையின் ஆரம்பம் என்றால் அந்த சேதமடைந்த ஆட்டோ அருகில் நின்று தன் அம்மாவை ஒரு கணம் பார்ப்பார் பாருங்கள் அது பொறுமையின் மையம் .நக்மா சாரி சொல்லும் போது உங்க ஆளுங்க வெயிட் பண்றாங்க பாருங்க நீங்க போங்க என்று சொல்லும் இடம் பொறுமையின் உச்சம் எனலாம்



பாடல்களில் எல்லாமே கேட்கவும் பார்க்கவும் அலுக்காதவை என்றாலும் நக்மா எல்லோரிலும் ரஜினியை பார்க்கும் அழகு பாடல் ஒரு நல்ல கான்செப்ட் இந்த கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது



எனக்கு இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரே ஒரு ஆசை தோன்றும். அது என்னனா இப்படி ஒரு அருமையான படத்தின் கிளைமாக்ஸ் ஒரு பில்டிங் லே நடக்கிற மாதிரி வரும் .



அதுவே ஒரு பெரிய கப்பல் அல்லது ஏர்போர்ட் அல்லது கார் பாக்டரி இந்த இடங்கள் லே நடக்கிறது போல் அமைச்சிருந்தா இன்னும் பிரம்மாண்டம் இருந்திருக்குமே என்று தான் .


அதே போல் "நான் ஒரு தடவை சொன்னா நுறு தடவை சொன்ன மாதிரி" வசனம் சூப்பர்

இருந்தாலும் " ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான் ஆனா கை விட்டுடுவான் நல்லவங்களை என்னிக்கும் கை விட மாட்டான்" என்று ரஜினி சொல்லும் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கஷ்டம் வரும் நேரங்களில் இதை சொல்லி தான் நான் மனசை சமாதானம் செய்து கொள்வேன் .



இப்படி முழுவதுமே ரசிக்க தக்க எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இந்த படம் இந்த கால கட்டத்தில் எடுக்கபட்டிருந்தால் எவ்வளவு பிரம்மாண்டமாய் வந்திருக்கும் எவ்வளவு சாதனை படைத்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்



நல்லாருக்கும் தானே



ஆர்.வி.சரவணன்

சனி, ஜூன் 12, 2010

மேக திரை விலக்கி......




மேக திரை விலக்கி......


மேக திரை விலக்கி நிலவும் சன்னல் திரை விலக்கி நீயும் பார்ப்பது எனக்கு ஒன்று தான்

ரோஜாவில் பனி துளியும் உன் இதழ்களில் நீர் துளியும் ஒன்று தான்

பட்டாம் பூச்சியின் படபடப்பும் உன் இமைகளின் படபடப்பும் ஒன்று தான்

பொன் நகையின் மினுமினுப்பும் உன் புன்னகையின் மினுமினுப்பும் ஒன்று தான்

ஆப்பிள் சிவப்பும் உன் வெட்க சிவப்பும் ஒன்று தான்

தென்றலின் தொடுதலும் உன் விரல்கள் என் மீது படுதலும் ஒன்று தான்

அன்பே

உன்னால் இன்று என் கவிதைகள் உயிர் பெற்றதும் நன்று தான்

ஆர்.வி.சரவணன்

வியாழன், ஜூன் 10, 2010

மன்னா என்னா



நான் திருச்செந்தூர் சென்றிருந்த போது செல் போனில் கிளிக்கிய படம்
கூடவே மன்னர் ஜோக் (கடி)திருக்கிறேன் சிரிப்பு வந்தால் சிரிக்கலாம்

மன்னா என்னா......

*மன்னா எதிரி நாட்டு மன்னனிடமிருந்து நம் நாட்டை நீங்கள் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது

ஆம் அமைச்சரே படைக்கு தலைமையேற்று மகாராணி போர் புரியும் நேரம் வந்து விட்டது

*நேற்று மன்னனுக்கு சாமரம் விசிய பெண் அந்தபுரம் சென்று விட்டார்

அங்கு மகாராணிக்கு சாமரம் வீசுகிறாரா

இல்லை மன்னர் அவருக்கு சாமரம் வீசுகிறார்

*மன்னா உங்கள் அந்தபுரத்திற்குள் ஒருவன் நுழைந்து விட்டான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்

மகாராணியை அவன் பார்த்ததே பெரிய தண்டனை தான் அவனை விடுதலை செய்து விடுங்கள்

*மன்னனே எனக்கு கப்பம் காட்டுகிறாயா இல்லியா

கப்பம் எல்லாம் கட்ட முடியாது வேண்டுமானால் உன் பெண்ணை கட்டுகிறேன்

*அமைச்சரே நடன பெண்ணை அரசவைக்கு வந்து ஆட சொல்லுங்கள்

மன்னா அவர் இன்று விடுமுறையில் இருக்கிறார் அவர் ஏற்கனவே ஆடிய CD இருக்கிறது அதை வேண்டுமானால் போடட்டுமா

ஆர்.வி.சரவணன்

சனி, ஜூன் 05, 2010

கோடையும் குளுமையும்

கோடையும் குளுமையும்

கோடையின் வெப்பம் இன்னும் நம்மை வாட்டியெடுக்கிறது இந்த நிலையில்
சில குளிர்ச்சியான படங்களை என் கமெண்ட்ஸ் களுடன் தந்திருக்கிறேன்
பாருங்கள் உங்கள் கருத்தை சொல்லுங்கள்




பல் துலக்க அடம் பிடிக்கும் சிறார்கள் மனதில் இது இடம் பிடிக்குமோ




மலரின் மேல் ஜில் ஒன்று அதன் மேல் ஒரு சுடரொன்று


கோடையின் கடுமையை நீக்குமா இந்த சிறு குளுமை


உருளும் உலகம் இங்கு உருகும் உலகமாக

படங்கள் மின்னஞ்சலில் தந்தவர் நண்பர் TN .ஸ்ரீதர்

ஆர்.வி.சரவணன்














வியாழன், ஜூன் 03, 2010

இசைக்கு பிறந்த நாள்



இசைக்கு பிறந்த நாள்


இசைஞானி இளையராஜாவுக்கு 67 வது பிறந்த நாள் இசையை மிக ரசிக்கும் அல்ல அல்ல சுவாசிக்கும் எனக்கு இளையராஜா வின் இசை ஒரு வரப்ரசாதம்


ராக தேவனே உன் இசை,
தூக்கம் வாராத இரவுகளில் என்னை தாலாட்டுகிறது


துக்கமான நேரங்களில் என் மனதை மயிலிறகாய் வருடுகிறது


உற்சாகமான நேரங்களில் சந்தோச சிகரத்திற்கு என்னை கை பிடித்து அழைத்து செல்கிறது


தோல்விகளில் துவளும் போது தட்டிஎழுப்பி அமர வைக்கிறது


வாழ்க்கையில் நான் வெற்றிகளை தொடும் போது கை தட்டி ஆர்ப்பரிக்கிறது


இசை தேவனே உன் இசை இவ்வையகம் உள்ள வரை, வையகத்தை ஆளட்டும்



ஆர்.வி.சரவணன்