செவ்வாய், பிப்ரவரி 08, 2011

நூறாவது பதிவு


நூறாவது பதிவு


வணக்கம் நண்பர்களே
சென்ற வருடம் மார்ச் மாதம் வலைத்தளம் ஒன்று ஆரம்பிக்கலாமே என்று குடந்தையூர் தளம் நான் ஆரம்பித்த போது கண்டிப்பாக நினைக்கவில்லை ஒரு வருடத்திற்குள் நூறை எட்டுவேன் என்று.

மேலும் நான் குடந்தையூர் தளம் ஆரம்பித்த போது எனக்கு வலையுலகில் தெரிந்த நண்பர்கள் என்வழி வினோ, கிரி ப்ளாக் கிரி,எப்பூடி ஜீவதர்ஷன் என்ற இவர்கள் மூவர் மட்டுமே நான் இடுகைகளை வெளியிட ஆரம்பித்த போது கமெண்ட்ஸ் அவ்வளவாக வராது (எப்படி வரும் நான் ஆரம்பித்தது யாருக்கு தெரியும் )

ஆளில்லாத கடையில் யாருக்குடா டீ
ஆத்தறே என்று விவேக் சொல்வது போல் நாம் பாட்டுக்கு எழுதுகிறோமே யாரும் படிக்கவில்லையே என்று நினைத்தேன் .

பின் நான் இடுகைகளை எழுதி கொண்டே ஒவ்வொரு நண்பர்களின் தளமாக சென்று படித்து கமெண்ட் போட்டு கூடவே நண்பராய் அறிமுகமாகி கொண்டிருந்தேன் .அவர்களும் என்னை பற்றி தெரிந்து கொண்டு என் தளத்திற்கு வருகை தந்து என் இடுகைகளை படித்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்தினர் இதனால் எனக்கு, புதிய சிந்தனைகளுடன் மேலும் மேலும் புதிய இடுகைகளை எழுத முடிந்தது இதோ இன்று நூறை தொட்டிருக்கிறேன் .

இந்த நூறு இடுகைகளில் எவை சிறப்பானது என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் . இந்த நூறை நான் எட்டியிருப்பது உங்களின் ஊக்கத்தால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இல்லை

மேலும் வலைத்தளம் என்ற வானில் நானும் ஒரு சிறு நட்சத்திரமாக மின்ன ஆசைப்பட்டேன் அப்படி நான் மின்னியிருந்தாலும் அதன் ஒளி நீங்கள் கொடுத்து கொண்டிருப்பது தான் என்பதிலும் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை

இன்று எனக்கு வினோ ,கிரி, எப்பூடி, சங்கவி, சைவ கொத்து பரோட்டா, ஜெய்லானி, நிஜாமுதீன் , அகமதுஇர்ஷாத்,நாடோடி,குமார்,பாலா,அரசன்,வானதி, பிரியா, ஆனந்தி, சுசி, ஈரோடு கதிர், க.பாலாசி, மதுமிதா, பவி,பத்மா, ஆரூரன், வெறும்பய ஜெயந்த், மங்குனி அமைச்சர், மாணவன், கலையன்பன், அனைவரும் என் நண்பர்கள் எனும் போது எனக்கு பெருமையாக உள்ளது மேலும் பல நண்பர்களும் இருக்கிறார்கள் (விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உங்கள் அனைவருக்கும் நன்றி

மேலும் வலைச்சரம் தளத்தில் என் இடுகைகளை பற்றியும் என் தளத்தை பற்றியும் குறிப்பிட்டு எழுதிய வலை தள நண்பர்களுக்கும் சீனா அய்யா அவர்களுக்கும்என் நன்றி

மேலும் எனது தளத்தையும் என் இடுகைகளையும் வெளியிட்டு
பிரபலமாக்கிய இன்டலி ,தமிழ்மணம் தளங்களுக்
கும் என் நன்றி

நூறாவது பதிவுக்காக என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த விநாயகர் ஓவியம் இதோநான் மென் மேலும் வளர்வது உங்கள் ஆதரவில் தான் நன்றி நண்பர்களேபடத்தில் இருப்பது நான் தான்
ஈரோடு சங்கமம் விழாவில் எடுக்கப்பட்டது
நன்றி ஈரோடு கதிர்

நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
அன்புடன்
ஆர்.வி.சரவணன்

29 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் சரவணன்

  கொஞ்சம் கொஞ்சமாக வந்து 100 ஐ தொட்டு விட்டீர்கள் :-) தொடர்ந்து எழுதுங்கள் அளவுடன்.

  ஹர்ஷா படம் சூப்பர் :-)

  பதிலளிநீக்கு
 2. 100க்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்க... உங்க மகனின் ஓவியம் சூப்பர்...

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள்.

  100க்கு வாழ்த்துக்கள்.
  உங்க மகனின் ஓவியம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 4. வாங்க நிஜாமுதீன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. வாங்க கிரி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 6. வாங்க கலா நேசன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 7. வாங்க கந்தசாமி சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 8. வாங்க சங்கவி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 9. ஓவியம் அழகோ அழகு. 100 க்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. 100-க்கு வந்துட்டீங்க!!!!
  எப்புடி கலக்கறீங்க?!!!
  அப்புறம் 200... 300... 400... 500...
  ஓவியர் (?!) ஹர்ஷவர்தன்
  வரைந்த
  படம் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் .................வாழ்த்துக்கள்
  இன்னும் பல பதிவுகளை நீங்கள் இட வேண்டும் .
  எப்போதும் உங்கள் நண்பர்களாக நானும் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி .
  மகன் வரைந்த படம் அழகாக இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 12. தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் தோழமையே ...
  உங்களின் பதிவுகள் என் போன்றவர்களுக்கு நிறைய ஊக்கத்தை வழங்கும் ...

  பதிலளிநீக்கு
 13. உங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 14. விநாயகர் ஓவியம் அழகா இருக்குங்க ...
  தங்களின் மகனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவியுங்கள் ...
  நன்றி

  பதிலளிநீக்கு
 15. வாங்க குமார் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 16. வாங்க வானதி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 17. வாங்க பவி உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 18. வாங்க கலையன்பன் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 19. வாங்க அரசன் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 20. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் நண்பரே,என்னையும் ஞாபகம் வைத்து எழுதியதற்கு மிக்க நன்றி, தொடர்ந்து வெற்றிகள் பல சுவைக்க வாழ்த்துக்கள். உங்கள் பையனின் புகைப்படம் சூப்பரா இருக்கு, அவருக்கும் வாழ்த்துக்களை சொல்லிவிடுங்க.

  பதிலளிநீக்கு
 21. வாவ் உங்க மகன் நிஜமாகவே ரொம்ப ரொம்ப அழகா வரைச்சிருக்கார். அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.

  பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.....
  உங்களை பார்த்ததில் சந்தோஷமும், நூறுக்கு வாழ்த்துக்களும்(ரொம்ப தாமதமா வந்திருக்கேன்:))

  பதிலளிநீக்கு
 22. டியர் சரவணன்,
  I just can't beleive these lines...
  ஆளில்லாத கடையில் யாருக்குடா டீ
  ஆத்தறே என்று விவேக் சொல்வது போல் நாம் பாட்டுக்கு எழுதுகிறோமே யாரும் படிக்கவில்லையே என்று நினைத்தேன்
  because, See my profile.. ha ha..

  கூடிய விரைவில் உங்கள் மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு கருத்துரைக்கிறேன்....

  -செல்வன்
  http://thankathirselvan.blogspot.com/

  பதிலளிநீக்கு
 23. By the way,
  Congrats for crossing 100, and birthday wishes..
  விநாயகர் படம் அழகு.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்