செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

இரு மன அழைப்பிதழ் 2இருமன அழைப்பிதழ் 2ஹீரோ கார்த்திக் கண்ணோட்டத்தில்
கார்த்திக் வந்து கொண்டிருந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிருக்க அவன் மட்டும் விழித்துகொண்டிருந்தான். அந்த இரவின் அமைதி அவனுக்குள் இல்லை . காரணம் உமாவின் கல்யாண விஷயம் கேள்விபட்டதிலிருந்து அவன் மனம் அமைதியின்றி தவித்தது. எந்த இரவும் அவனால் தூங்க முடியவில்லை . உமாவின் மேலுள்ள காதலை உள்ளுக்குள் வைத்து அல்லாடுவது பச்சை மிளகாயை கண்ணில் வைத்து கொண்டது போல் இருந்தது.


இந்த வேலை கிடைத்தது கூட உமாவின் முயற்சியால் தான் . அவள் தான் ஹிந்து பார்த்து அப்ளை போட சொன்னாள். போட்டான் வேலை கிடைத்தது. நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்தான். அவளை விட்டு பிரிந்து வந்தது கஷ்டமாக இருந்தது.தினம் அவளை பார்த்த போது தோன்றாத காதல் அவளை பார்க்காத இந்த ஆறு மாதங்களில் மனதில் ஒரு மூலையில் துளிர் விட்டது. நட்பா காதலா என்று அவன் மனதுக்குள் நடந்த பட்டிமன்றத்தில் காதல் அதிக மதிப்பெண் எடுத்து சுலபமாக வெற்றி பெற்றது . முதல் சம்பளம் வாங்கி கொண்டு அவளுக்கு பிடித்தவற்றையும் வாங்கி கொண்டு ஊருக்கு வந்தான். வீட்டில் உங்களை பார்க்க வேண்டும் போலிருந்தது என்று பொய் சொன்னான். அவளிடம் உன்னை பார்க்க வேண்டும் போலிருக்கிறது என்று மெய் சொன்னான்.
காதலை மட்டும் சொல்லவில்லை காதலை உள்ளுர பதுக்கினான். தான் எழுதும் கவிதைகளில் அவளை மையமாக கொண்டே எழுதினான். அதை அவளிடம் படிக்க கொடுத்தான்.உமா படித்து விட்டு நல்லாருக்கே யாரந்த அதிர்ஷ்டசாலி என்று மட்டுமே சொன்னாள். இப்படிப்பட்ட நிலையில் எப்படி காதலை சொல்வது அதோடு அவர்கள் குடும்பத்தில் அம்மா அப்பா அவள் அண்ணன் எல்லோரும் அவனை தங்கள் வீட்டு பிள்ளையை போல் தலையில் துக்கி வைத்து கொண்டாடுவது வேறு அவனை தயங்கி பின்னடைய வைத்தது.


இந்த நிலையில் உமாவுக்கு கல்யாணம் என்று அவள் அண்ணன் சொன்ன போது உமா என்ன சொன்னாள் என்று கேட்டான். அவள் சம்மதம் இல்லாமல் எப்படி முடிவு செய்வோம் என்று அவள் அண்ணன் சொன்னான். அவளே சம்மதம் சொல்லி விட்டால் எனும் போது என்ன செய்வது நம் காதலுக்கு கொடுப்பினை இல்லை அவளை மனைவியை அடைய அதிர்ஷ்டமில்லை என்று முடிவுக்கு வந்து வெறுத்து போய் தன் போனை சுவிட்ச் ஆப் செய்து அலுவலகத்தில் வேறு ஒருவர் செல்ல வேண்டிய பஞ்சாப் வேலையை தான் செல்வதாக கூறி சென்று விட்டான். உமாவின் அண்ணன் நீ வரலை என்றால் என் முகத்தில் முழிக்காதே என்று திட்டவும் இதோ புறப்பட்டு கல்யாணத்திற்காக வந்து கொண்டிருக்கிறான் .கார்த்திக் பேருந்தை விட்டு இறங்கிய போது எதிரே உமாவின் அண்ணன் வண்டியுடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் "ஏண்டா கல்யாண வேலையை விட்டுட்டு எனக்காக வந்திருக்கே நான் வர மாட்டேனா "என்றான்."இதுவும் ஒரு வேலை தான் உட்கார்" என்று சொல்லி வண்டியை கிளப்பினான்.கல்யாண மண்டபம் வந்ததும் உமாவின் அப்பாவை சென்று பார்த்தான் .அவர் வாடா செல்லம் என்று தன் உறவினர்களிடம் எங்க வீட்டு பிள்ளை மாதிரி என்று அறிமுகபடுத்தினார். உமாவின் அம்மா கை பிடித்து அழைத்து போய் உமாவுக்கும் மாப்பிளைக்கும் வாங்கிய நகை புடவை பைக் என்று ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் காட்டினாள். உமா வை போய் பார் என்றும் அனுப்பி வைத்தாள்.


கார்த்திக் தயக்கத்துடன் உமாவின் அறைக்குள் நுழைந்தான். அங்கே உமா ஜன்னலை பார்த்தவாறு இருந்தவள் இவனை திரும்பினாள்.
"என்ன இன்னும் தூங்கலே நீ" என்றான் கார்த்திக்
"கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலருந்து நான் தூங்கலே ஆனா உனக்கு நல்லா தூக்கம் வந்திருக்குமே " இது உமா"அப்படில்லாம் இல்லை ""பொய் சொல்லாதே உனக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு. ரெண்டு பெரும் எந்த விசயத்தையும் மறைக்க கூடாது அப்படின்னு . சோ பொய் சொல்லாம சொல்லு . ஒரு நாள் நான் உனக்கு போன் பண்ணலேன்னா கலங்கி போற நீ ஏன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு ஊருக்கு போனே சொல்லுப்பா "


"உமா நான் உன் கிட்டே மறைச்சது ஒன்னே ஒன்னு தான் அது நான் உன்னை காதலிக்கிறது எப்படி உன்கிட்டே சொல்றது நீ தப்பா நினைச்சுட்டா என்னபன்றதுனு தான் உன்கிட்டே சொல்லாமல் மறைச்சேன் .உனக்கு கல்யாணம் னு நியூஸ் வந்தவுடன் சரி நீ என்னை நண்பனாக மட்டும் தான் ஏற்று கொண்டிருக்கிறாய் என்று முடிவெடுத்து வெறுத்து போய் உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன் ."


என்று கார்த்திக் சொன்னவுடன் உமா ,"லூசு லூசு" என்று சொல்லவும் அவள் வேகத்தை பார்த்து சற்றே மிரண்டான்."இதை எப்ப வந்து சொல்றே நீ இந்த வார்த்தை உன் கிட்டே இருந்து வராதா என்று காத்துக்கிட்டிருக்கேன்என்று உமா சந்தோசமாய் சொல்லவும் கார்த்திக்கின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை


"இப்ப என்ன செய்வது "


"ஒன்னு நாம யாருக்கும் தெரியாம கிளம்பிடனும் இல்லனா அப்பா அம்மா அண்ணன் கிட்டே பேசி கல்யாணத்தை நிறுத்தனும் "
"எப்படி உமா என்னை பத்தி என்ன நினைப்பாங்க ""அதை பார்த்தோம்னா நாம பிரிய வேண்டியது தான் உன்னை விட்டுட்டு வேற மாப்பிள்ளை கல்யாணம் செஞ்சுக்க முடியாது .சொல் என்ன செய்யலாம் "


"கொஞ்சம் பொறு நான் யோசிக்கிறேன்"என்று சொல்லும் போது உள்ளே நுழைந்தான் உமாவின் முறை பையன் சரண் கண்களாலேயே அவளிடம் எப்படியும் உன்னை கை பிடிசுடுவேன் டோன்ட் வொர்ரி என்று ஜாடை காட்டி விட்டு ஹாலுக்கு வந்தான். உமாவின் காதலுக்கு சந்தோசபடுவதை விட கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்பதில் நேரத்தை செலவிட்டான். மணி பார்த்தான் . நள்ளிரவு ஒன்று. கல்யாண மேடையில் உமாவின் பெயருக்கு பக்கத்தில் மாப்பிள்ளையின் பெயர் இருப்பதை பார்த்த போது அவன் மனது வலித்தது.
தொடரும்அடுத்து இந்த கதையை முடிக்க வருவது உமாவின் முறை பையன் சரண்

ஆர்.வி.சரவணன்

9 கருத்துகள்:

 1. //மூன்று பதிவுகளாக தொடர்ந்து தர இருக்கிறேன் படித்து விட்டு சொல்லுங்கள் //

  அப்படியா! அப்ப சரி,
  மூன்று பதிவுகளையும்
  படித்துவிட்டுச்
  சொல்றேனே! O.K.?

  பதிலளிநீக்கு
 2. //உமாவின் அண்ணன் நீ வரலை என்றால் என் முகத்தில் முழிக்காதே என்று திட்டவும் இதோ புறப்பட்டு கல்யாணத்திற்காக வந்து கொண்டிருக்கிறான் .//

  கார்த்திக்தான் செல்ஃபோனை சுவிட்ச்சை
  ஆஃப் செய்துவிட்டானே, எப்படி உ.அண்ணன்
  பேசினான்?

  பதிலளிநீக்கு
 3. க‌தை இப்ப‌தான் சூடுபிடிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிற‌து... சில‌ இட‌ங்க‌ளில் வார்த்தை விளையாட்டு ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.. தொட‌ருங்க‌ள்..

  பதிலளிநீக்கு
 4. சுவாரிசியம் அதிகரிக்கிறது , அடுத்த பதிவிற்கு காத்திருக்கின்றேன்

  பதிலளிநீக்கு
 5. உமாவின் அண்ணன் திட்டி மெயில் அனுப்ப அதை பார்த்து விட்டு கல்யாணத்திற்கு வந்து கொண்டிருக்கிறான் என்று வர வேண்டும்


  அவசரத்தில் வந்த பிழை குறிப்பிட்டதற்கு நன்றி நிஜாமுதீன்

  நன்றி ஸ்டீபன்
  நன்றி தேவதர்ஷன்

  பதிலளிநீக்கு
 6. //"லூசு லூசு "இதை எப்ப வந்து சொல்றே நீ இந்த வார்த்தை உன் கிட்டே இருந்து வராதா என்று காத்துக்கிட்டிருக்கேன் //

  சூப்பர்...

  பதிலளிநீக்கு
 7. க‌தை இப்ப‌தான் சூடுபிடிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிற‌து... சில‌ இட‌ங்க‌ளில் வார்த்தை விளையாட்டு ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன், தொட‌ருங்க‌ள்.

  பதிலளிநீக்கு
 8. ///உமா ,"லூசு லூசு" என்று சொல்லவும் அவள் வேகத்தை பார்த்து சற்றே மிரண்டான்.////

  ரொம்ப அழகா எழுதுறீங்க... அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்...!! :-)))

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்