வெள்ளி, ஜூலை 02, 2010

மனம் கவர்ந்த பாடல்கள்1
மனம் கவர்ந்த பாடல்கள் 1

பாடல்கள் கேட்பது என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த நேரத்திலும் பாடல்கள் கேட்க ஆசைபடுவேன் . எவ்வளவு டென்ஷன் ஆக இருந்தாலும் பாடல்கள் கேட்டால் ரிலாக்ஸ் ஆகி விடுவேன் அதிலும் இளையராஜா பாடல்கள் என்றால் மிகவும் இஷ்டம் இதோ இளையராஜா அவர்களின் இசையில் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று

அதிகாலை சுக வேளை உன் ஓலை வந்தது ........இந்த பாடல் இடம் பெற்ற படம் நட்பு. இந்த பாடல் இடம் பெரும் காட்சி என்னவென்றால் கார்த்திக், ஸ்ரீ பாரதி இருவரும் தங்கள் காதலுக்கு தூதுவனாக செந்திலை பயன்படுத்துவார்கள். செந்திலுக்கு உபகாரமாக 10 பைசா கொடுப்பார்கள் 10 பைசாக்கள் குவிந்து போய் செந்தில் சந்தோசமாக சிரிப்பார். அப்பொழுது இந்த பாடல் ஆரம்பமாகும்.பாடல் ஆரம்பிக்கும் போதே நம் இசை அரசர் இளையராஜா பைசாக்கள் மோதுவது போல் ஓசையை ஆரம்பித்து பின் தன் இசை வெள்ளத்தை ஆரம்பித்திருப்பார். கூடவே பைசாக்கள் மோதும் ஒலி தொடர்ந்து ...டின் டின் டின் டின்.........என்று பாடல் முழுவதும் வரும். பைசாக்கள் மோதும் அந்த ஒலி பாடலின் இசையின் ஊடே கலந்து,அதனுடன் ஜேசுதாஸ் ஜானகி குரல்களின் வசீகரமும் இணைந்து நம் எண்ண அலைகளில் தரும் இன்ப அதிர்வை என்னவென்பது அந்த இசை வெள்ளத்தில் நம் மனது படகில் செல்வது போல் தோன்றும்.

இந்த படத்தை பற்றி ஒரு குறிப்பு

இந்த படத்தின் கதையை வைரமுத்து அவர்கள் வானம் தொட்டு விடும் தூரம் தான் என்ற பெயரில் குமுதம் வார இதழில் தொடர்கதையாக எழுதினார். அந்த கதை நட்பு என்ற பெயரில் திரைப்படமானது.அமீர்ஜான் இந்த படத்தை இயக்கியிருந்தார் கதை,வசனம், பாடல்கள் வைரமுத்து. இந்த படத்தின் நாயகன் கார்த்திக் ஸ்ரீ பாரதி என்ற புதுமுகம் இந்த படத்தில் நாயகியாக அறிமுகம் தயாரிப்பு P.S.V.PICTURES இந்த படத்தில் வரும் ஆறு பாடல்களில் இந்த பாடல் ஹிட். இந்த படம் 1986 இல் வெளியானது.


தொடர்வேன்

ஆர்.வி.சரவணன்6 கருத்துகள்:

 1. ந‌ல்ல‌ ப‌ட‌ம் ம‌ற்றும் பாட‌ல்... இந்த‌ ப‌ட‌த்தில் ராதார‌வியும் ந‌டித்து இருப்பார்.. க‌ரெக்ட்டா?..

  பதிலளிநீக்கு
 2. அழகா இருக்கே இது ..
  காசு சத்தம் நா கேட்டதே இல்லை ..
  இப்போ பாட்டு தேடி போய் கேக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. இந்த படத்தை நான் பார்த்ததில்லை.... உங்களின் மூலம் தெரிந்துக்கொண்டேன். பாடலின் வீடியோ சேர்த்திருந்தால் நன்றாக‌ இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 4. எனக்குப் பிடித்த பாடல்: (அதே 'நட்பு')
  அடி மாடி வீட்டு மானே,
  உன்னக் கட்டிக்கிட்டேன் நானே,
  ஐயரு வைக்கல, அம்மி மிதிக்கல
  ஐயரு வைக்கல, அம்மி மிதிக்கல
  தாலியும் கட்டல, மேளமும் கொட்டல,
  கல்யாணம்தான் ஆகிப்போச்சி,
  இன்னைக்கி முதலிரவு என்ன ஆச்சு?
  கண்ணான கண்ணே,
  கல்யாணப் பொண்ணே,
  ஆளவச்சி அடிப்பான் என்மாமனே,
  எந்நாளும் துணையிருப்பான் செந்தோழன்,

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் ஸ்டீபன் ராதாரவி இந்த படத்தில் செகண்ட் ஹீரோ

  ப்ரியா இந்த படம் டிவி யில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பானது raj tv il

  நன்றி
  கேட்டுபாருங்கள் பத்மா

  நீங்க சொல்லும் பாடல் கோயிலுக்குள் கார்த்திக் ஹீரோயினை சமாதனபடுத்த பாடுவது நன்றி கலையன்பன்

  பதிலளிநீக்கு
 6. படம் பார்கல ஆனா பாட்டில் வரும் சத்தம் ... ஓக்கே தேடிப்பார்கிறேன்..!!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்