வியாழன், ஜூன் 10, 2010

மன்னா என்னாநான் திருச்செந்தூர் சென்றிருந்த போது செல் போனில் கிளிக்கிய படம்
கூடவே மன்னர் ஜோக் (கடி)திருக்கிறேன் சிரிப்பு வந்தால் சிரிக்கலாம்

மன்னா என்னா......

*மன்னா எதிரி நாட்டு மன்னனிடமிருந்து நம் நாட்டை நீங்கள் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது

ஆம் அமைச்சரே படைக்கு தலைமையேற்று மகாராணி போர் புரியும் நேரம் வந்து விட்டது

*நேற்று மன்னனுக்கு சாமரம் விசிய பெண் அந்தபுரம் சென்று விட்டார்

அங்கு மகாராணிக்கு சாமரம் வீசுகிறாரா

இல்லை மன்னர் அவருக்கு சாமரம் வீசுகிறார்

*மன்னா உங்கள் அந்தபுரத்திற்குள் ஒருவன் நுழைந்து விட்டான் அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்

மகாராணியை அவன் பார்த்ததே பெரிய தண்டனை தான் அவனை விடுதலை செய்து விடுங்கள்

*மன்னனே எனக்கு கப்பம் காட்டுகிறாயா இல்லியா

கப்பம் எல்லாம் கட்ட முடியாது வேண்டுமானால் உன் பெண்ணை கட்டுகிறேன்

*அமைச்சரே நடன பெண்ணை அரசவைக்கு வந்து ஆட சொல்லுங்கள்

மன்னா அவர் இன்று விடுமுறையில் இருக்கிறார் அவர் ஏற்கனவே ஆடிய CD இருக்கிறது அதை வேண்டுமானால் போடட்டுமா

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

 1. படமும் சிரிப்புகளும் சூப்பர்.

  சிரிப்புக்கு நடுவே இடைவெளி இடுங்கள் . இல்லாவிட்டால் குழம்பும்..

  பதிலளிநீக்கு
 2. //அமைச்சரே நடன பெண்ணை அரசவைக்கு வந்து ஆட சொல்லுங்கள்

  மன்னா அவர் இன்று விடுமுறையில் இருக்கிறார் அவர் ஏற்கனவே ஆடிய CD இருக்கிறது அதை வேண்டுமானால் போடட்டுமா //

  டைமிங் ஜோக் ந‌ல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
 3. //மகாராணியை அவன் பார்த்ததே பெரிய தண்டனை தான் அவனை விடுதலை செய்து விடுங்கள்//

  ஹா..ஹா....

  //ஆடிய CD இருக்கிறது அதை வேண்டுமானால் போடட்டுமா//

  அடடா.. அரசவையிலும் லேட்டஸ்ட் டெக்னாலஜி...

  ரைட்டு... கலக்கலுங்க சரவணன்...

  பதிலளிநீக்கு
 4. //*மன்னனே எனக்கு கப்பம் காட்டுகிறாயா இல்லியா

  கப்பம் எல்லாம் கட்ட முடியாது வேண்டுமானால் உன் பெண்ணை கட்டுகிறேன் //

  இதை வடிவேலு போல மன்னன் சொல்வதாய் நினைத்தால் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 5. ////மகாராணியை அவன் பார்த்ததே பெரிய தண்டனை தான் அவனை விடுதலை செய்து விடுங்கள்//

  பாவம் அந்த மன்னன் சரவணன்.

  //ஆடிய CD இருக்கிறது அதை வேண்டுமானால் போடட்டுமா//

  ஒளிஞ்சிருந்து எடுத்ததா சரவணா..?

  3-ம்,5-ம் கொஞ்சம் நோயை விரட்டியது நண்பா.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஜெய்லானி

  நன்றி நாடோடி

  நன்றி பாலாசி
  இதை வடிவேலு போல மன்னன் சொல்வதாய் நினைத்தால் நன்றாக இருக்கும்.


  நன்றி ஜீவதர்ஷன் நீங்கள் சொல்வது சரி தான்

  ஒளிஞ்சிருந்து எடுத்ததா சரவணா

  இல்லை சத்ரியன் நடன பெண் அரசவையில் ஏற்கனவே ஆடி பரிசு பெற்றதை அவரது அனுமதியுடன் எடுத்த cd தான்

  ஹா .....ஹா .....

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்