திங்கள், ஜூலை 26, 2010

மழையில் நனைந்த படி


மழையில் நனைந்த படி


சாலையில் நான் நடக்கையில்

மழை ஆரம்பிக்கையில்


குடையுடன் வந்த என்னவள்


எனை அழைத்து கொண்டாள்


இப்போது


ஒரே குடையின் கீழ் இருவரும்


இணைந்த படிமழையில் நனைந்த படி


என் மனம்


கவிதைக்கு முயன்ற படி


அதற்குள்


வீடு வந்து விட்டது


முதல் வேலையாக

என் குடையை எடுத்து


பரணில் வைத்து விட்டு


காத்திருக்கிறேன்


நான்


அடுத்த மழைக்கு

ஆர்.வி.சரவணன்

9 கருத்துகள்:

 1. அடுத்த‌ ம‌ழைக்கு ந‌ம்ம‌ இடிஅமீனை தான் கேட்க‌ வேண்டும்...ஹி..ஹி.. க‌விதை ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்..

  பதிலளிநீக்கு
 2. மழைக்காக காத்திருக்காதீர்கள் .....

  பதிலளிநீக்கு
 3. பக்கத்தில் கவிதையை வைத்துக்கொண்டு
  வேறொரு கவிதைக்கு முயற்சிக்கக் கூடாது.

  பதிலளிநீக்கு
 4. மறுபடியும் மழை வந்தாதா...கவிதை வந்ததா ... மறக்காம சொல்லுங்க... நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 5. ஆஹா சரியா சொன்னீங்க ஸ்டீபன்

  அதானே நீங்கள் சொல்வது சரிதான் மது

  நன்றி பத்மா

  நன்றி வானதி

  உங்கள் வருகைக்கு நன்றி தங்கமணி

  மழையும் வந்தது எனக்கொரு கவிதையும் தந்தது
  நன்றி nizhumudheen

  பதிலளிநீக்கு
 6. @@@Madumitha சொன்னது…

  பக்கத்தில் கவிதையை வைத்துக்கொண்டு
  வேறொரு கவிதைக்கு முயற்சிக்கக் கூடாது. //

  ரிப்பீட்டேஏஏஏஏஏஏஏஏய்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்