திங்கள், ஆகஸ்ட் 02, 2010

முரண்பாடுகள் 2


முரண்பாடுகள் 2


சுவை மிக்க இளநீர் தரும் தென்னை மரத்தடியில்
செல்வது சாக்கடை நீர் தான்


காதலிக்கும் போது மணிகணக்கில் திட்டினாலும் இனித்தது
கை பிடித்த பின் வினாடிகனக்கில் முறைத்தாலே கசக்கிறதே


மலையாய் குவிந்திருக்கும் குப்பையின் ஊடே ஒரு பலகை எட்டி பார்க்க அதில் இருந்தது குப்பை போடாதீர் என்ற வாசகம்


எச்சில் துப்பக் கூடாது என்ற போர்டு எழுதி கொண்டிருப்பவன் அவ்வப்போது பக்கத்திலேயே துப்பிக் கொண்டான்


தண்ணீர் லாரியிலிருந்து ததும்பி வழியும் குடிநீரின் ஊடே தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வரிகள்
கோயிலில் சர்க்கரை பொங்கல் வாங்க முண்டியடிக்கும் மனித கூட்டத்தின் அருகில் சிதறி கிடக்கும் பொங்கலை நோக்கி வரிசை மாறாமல் படையெடுக்கும் எறும்புக் கூட்டம்


ஆர்.வி.சரவணன்

11 கருத்துகள்:

 1. //எச்சில் துப்பக் கூடாது என்ற போர்டு எழுதி கொண்டிருப்பவன் அவ்வப்போது பக்கத்திலேயே துப்பிக் கொண்டான் //

  Kalakkal... nalla irukku

  பதிலளிநீக்கு
 2. //மலையாய் குவிந்திருக்கும் குப்பையின் ஊடே ஒரு பலகை எட்டி பார்க்க அதில் இருந்தது குப்பை போடாதீர் என்ற வாசகம் //

  செமை ....

  //கோயிலில் சர்க்கரை பொங்கல் வாங்க முண்டியடிக்கும் மனித கூட்டத்தின் அருகில் சிதறி கிடக்கும் பொங்கலை நோக்கி வரிசை மாறாமல் படையெடுக்கும் எறும்புக் கூட்டம் //

  நச்..

  நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 3. ஹ்ம்ம்.. அனைத்தும் சூப்பர்..

  //தண்ணீர் லாரியிலிருந்து ததும்பி வழியும் குடிநீரின் ஊடே தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வரிகள் //

  இந்த வாசகம்.. இன்னும் அருமை..

  பதிலளிநீக்கு
 4. முர‌ண்பாடுக‌ள் அனைத்தும் சிந்திக்க‌ வைக்கிற‌து ச‌ர‌வ‌ண‌ன்.. லாஸ்ட் ஒன் சூப்ப‌ர்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி தேவதர்ஷன்

  நன்றி வானதி

  நன்றி ஸ்டீபன்

  நன்றி ஆனந்தி

  நன்றி குமார்

  பதிலளிநீக்கு
 6. எப்படியோ அனைத்து முரண்பாடுகளையும்
  இந்த இடுகையில் ஒற்றுமையாய்
  இணைத்துவிட்டீர்கள்.
  ந்ன்று!

  பதிலளிநீக்கு
 7. வருகை தந்தவர்கள்
  01000
  serviced apartments Sydney

  -அட, அந்த ஆயிரத்தில் ஒருவன்
  நான்தானா!!!

  பதிலளிநீக்கு
 8. எந்தத் 'திரட்டி'களிலும் இணைக்கவில்லையா?
  ஓட்டளிப்பு பட்டை எதுவும் சேர்க்கவில்லையா?

  (உங்கள் நட்பின் முகவரியில் எனது முகவரியும்.
  மிக்க நன்றி!)

  பதிலளிநீக்கு
 9. எல்லாமே சும்மா நச்சுன்னு இருக்கு. அதிலும் ரெண்டாவது A + +

  பதிலளிநீக்கு
 10. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்