சனி, செப்டம்பர் 07, 2013

பதிவர் திருவிழா 2013 ஒரு பார்வை


பதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை 

இதை பத்தி எல்லாரும் தான் எழுதுவாங்களே நாம புதுசா என்னத்தை 
எழுதிட போறோம்னு நினைச்சேன். ஆனால் அரசன் கண்டிப்பா 
எழுதுங்க சார் என்றார்.  மேலும் முக நூலில் ஒரு வாரத்திற்கு எல்லாரும் 
இதை பத்தி எழுதுவாங்க என்ற பேச்சு வந்த போது  நண்பர் நாஞ்சில் மனோ (எனக்கு இது வரை அறிமுகமில்லை இருந்தும் நண்பருக்கு  
நண்பர்  எனக்கும் நண்பர் தானே )  சொன்னதை படிக்க நேர்ந்தது.உங்களுக்கு நண்பர்கள், நட்பு, அன்பு பற்றி தெரியலையோ, முகமறியா நண்பர்களை நேரில் பார்க்கும் பரவசம் இருதயத்தின் இன்பம் புரியலையொன்னு நினைக்கிறேன்.

பதிவர் சந்திப்பு பற்றி வரும் பதிவுகளை கிண்டல் செய்யவேணாம் பிளீஸ்... அவரவர் பதிவர் சந்திப்பின் அன்பினை சொல்ல விடுங்கள்.


 
என்று சொல்லியிருந்தார். சரி பதிவர் சந்திப்பை பற்றி படிக்க எல்லாரும் விருப்பமுடன் இருக்கிறார்கள் எனும் போது கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற  ஆர்வம் வந்து  எழுதிட்டேன். (வேலை பளு மற்றும் நெட் சென்டர் சென்று பதிவு எழுதுவதால்  பதிவு  கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு)

இந்த (அவசர கால)  இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு கஷ்டத்தை யேனும் அனுபவிச்சு வலம் வந்திட்டிருக்கோம்.அதையெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் முழுக்க வேறொரு உலகத்தில் சந்தோசமாய் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அது தாங்க இந்த பதிவர் சந்திப்பு. இதை இப்படியும் சொல்லலாம். பாலைவனத்தில் கடும் வெயிலில் அவதிப்பட நேர்கையில் எங்கேனும் நிழல் தரும் மரம் தென்பட்டால் விரைவாக 
சென்று நிழலில் இளைபாற தோணுமே. அந்த சூழ்நிலைக்கு ஒப்பானது 
இது.இவ் வரிகள் வார்த்தை அலங்காரத்திற்காக  சொல்லப்பட்டதல்ல.
நான் எப்போதுமே எந்த ஒரு சிறு நிகழ்வானாலும் அதை ஒரு தனி அழகியலுடன் தள்ளி நின்று ரசிப்பதுண்டு. அப்படி ரசித்ததை தான் 
இப்படி குறிப்பிடுகிறேன்


சனியன்று காலை  நண்பர் ராஜ பாட்டை ராஜா "சென்னை மண்ணில் நான்" என்று முக நூலில் ஸ்டேடஸ் போட ,அந்த அதிகாலை தூக்க கலக்கத்திலும் நான் பதிலுக்கு "வெல்கம் ராஜா" என்று போட்டேன். அடுத்து அவர் "எங்க இருக்கீங்க எப்ப வருவீங்க" என்று பதிலிட நான் "மாலை வருகிறேன்" என்று தெரிவித்தேன்.(அரசன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் சார் சனி மாலையே வந்து விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள்) 

மாலை ஹோட்டலுக்கு வந்த போது செல்வின்,பிரபாகரன், ராஜா,
தனபாலன் சார், நக்கீரன் சார் வெற்றிவேல் ,சதீஷ் செல்லதுரை, 
ஆரூர் முனா செந்தில்,ரூபக் ராம் என்று பதிவுலக தோழமைகளை சந்தித்தேன்


செந்திலிடம் நான் சரவணன் என்ற போது தெரியும் சார் என்று  
தோளில் அனைத்து வரவேற்றார். பின் ரூம் நம்பர் சொன்னதுடன்
மட்டுமில்லாமல் அந்த ரூமுக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றார்
அவரை பற்றி குறிப்பிட வேண்டுமானால், சென்ற வருடம் நான் எடுத்திருந்த அவரது போட்டோவை முகநூலில் வெளியிட்டிருந்தேன் பார்த்து விட்டு நானே பார்க்காத என் போட்டோ நன்றி சரவணன் என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தை தான் இப்போதைய திருவிழாவில் நண்பரிடம் கேமரா வாங்கி கொண்டு வந்து படம் எடுக்கும் ஆர்வத்தை எனக்கு தந்தது

பத்து மணிக்கு மேலாகி விடவே, தனபாலன் சார் திருப்பூரிலிருந்து 
ஜோதிஜி வந்து கொண்டிருப்பதாகவும் எப்படி அவரை அழைத்து வருவது  என்று கேட்க, நான் சென்று அழைத்து வருகிறேன் என்று 
சொல்லி விட்டு பேருந்து நிறுத்தம் சென்று அழைத்து வந்தேன். 
இப்போது தான் ஜோதிஜி அறிமுகம் என்பதால் என்னை பற்றி 
முழுதும் அவர் கேட்டறிந்தார்

காலையிலேயே எனக்கு காய்ச்சல் வந்து மாத்திரை எடுத்து கொண்டு 
தான் வந்திருந்தேன்.இருந்தும் இரவு எனக்கு மீண்டும்  காய்ச்சல் எட்டி 
பார்க்க  ஏதடா வம்பா போச்சு இது  நம்மை முடங்க வைத்து விடுமோ 
என்று கலவரமாகி உடனே பார்மசி சென்று மாத்திரை வாங்கி போட்டு கொண்டு அதை விரட்டி அடித்தேன்.

காலையில் நண்பர் சதீஷ் சங்கவி, சேலம் தேவா மற்றும் கோகுலத்தில் சூரியன் வெங்கட் (இவரது சுவாரஸ்யமான எழுத்துக்களை முக நூலில் 
படித்து ரசித்தேன் ) அழைத்து வந்து அறிமுகபடுத்தினார். அவர்களிடம் 
சில நிமிடங்கள் பேசி விட்டு ஜோதிஜி,தனபாலன்
,நான்  மூவரும் கிளம்பினோம்

நாங்கள் அரங்கத்திற்கு வரும் போது தலை கலைந்து  விட்டதால் அதை பார்க்கிங்கில் நின்று சரி செய்து கொண்டோம். யாராவது இதை போட்டோ எடுத்து கலாய்க்க போறாங்க சார் என்று சிரித்து கொண்டே நான் 
சொன்னேன்

உள்ளே நுழையும் போது கோவை நேரம் ஜீவா வரவேற்று நில்லுங்கள் 
என்று சொல்லி போட்டோ எடுத்தார் (சென்ற வருடம் வேட்டி சட்டையில் வந்திருந்தவர் இந்த வருடம் டீ சர்ட் பேன்ட்)

சென்ற வருடம் வருண பகவான் பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்.இந்த வருடமும் வருவார் என்று நான் நினைத்திருக்க மாறாக சூரியன் வந்து 
கலந்து கொண்டார். அவரது ஆர்வம் வியர்வை மழையில் எங்கள் 
எல்லாரையும் நனைய வைத்து விட்டது (ஒரு வேலை இந்த 
வருடம் நான் கலந்து கொள்கிறேன் என்று  இவர் சொல்லி 
விட்டதால் அவர்  வரவில்லை போலிருக்கிறது)

பால கணேஷ் சார், கண்ணா உன் புத்தகமும் வெளியாகி யிருக்க வேண்டியது. இந்த திருவிழாவில் இருந்தாலும் பரவாயில்லை. 
விரைவில் அசத்திடலாம்  என்று என்னை உற்சாகமூட்டினார்

புலவர் அய்யா,சென்னை பித்தன் அவர்களை அருகில் சென்று வணங்கி 
நலம் விசாரித்தேன்

சேட்டைக்காரன் அவர்களிடம் பேசும் போது சமீபத்தில் அவர் எழுதிய பதிவை குறிப்பிட்டு பேசினேன்.சென்ற வருடம் அவரை பற்றி நான் குறிப்பிடும் போது, "உட்கார்ந்து யோசிப்போம் ல என்பது  அவரது தளத்தில் இருக்கும் கேப்சன் வரிகள். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் அப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிச்சு எழுதுபவராக தெரியவில்லை " என்று எழுதியிருந்தேன்
அது இன்னும் உறுதியாகிறது

பெண் பதிவர் தென்றல் சசிகலா அவர்களிடம், உங்களது அடுத்த புத்தக வெளியீடு எப்போது என்று கேட்டதோடு, இன்னும் சிறப்பாய் புத்தகம் வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தேன்.

எனது ஊர் காரரும் பதிவுலக நண்பருமான வீடு திரும்பல் மோகன்குமார்  பார்த்ததும் அவரது புத்தகத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். நலம் விசாரித்ததோடு,உங்கள் பிளாக் ல வெற்றி கோடு பற்றி எழுதுங்க சரவணன் என்றார் (எழுதறேன் சார் )

இரவின் புன்னகை வெற்றிவேல் முகத்தில் அப்போதும் (பகலிலும்) 
புன்னகை இருந்தது. பேசும் போது அவர் கவிதைகளை படிப்பதை பற்றி 
கூறி  அவரது ஊர் பெயரை குறிப்பிட்டு சாலையகுறிச்சி எங்கே இருக்கிறது என்று கேட்டேன். (தூத்துக்குடி திருநெல்வேலி பக்கம் என்று நான் நினைத்து கொண்டிருக்க) அவர் அரியலூர் அருகில் எனும் போது ஆச்சரியமாய் 
இருந்தது. என் போட்டோ போடணும் சார் நீங்க என்று அன்பாக 
உத்தரவிட்டார். (போட்டோ வெளியிட்டு விட்டேன் வேல் வேல் 
மன்னிக்கவும் வெற்றி வேல் )

மதுமதி என்னிடம் பேசும் போது என்னை பற்றி
கேட்டறிந்தார். எல்லோருக்கும் அறிமுகபடுத்தறேன் வாங்க 
என்று கை பிடித்து அழைத்து சென்று அறிமுகபடுத்தினார் 

ஸ்கூல் பையன் எனக்கும் அவ்ருக்குமுள்ள சில ஒற்றுமைகளை 
பற்றி என்னிடம் ஆச்சரியமாய் விவரித்தார்

ஜாக்கி சேகர் போன வருடம் பார்த்தது அடுத்து இப்ப தான் 
பார்க்கிறோம்  இல்லையா என்று தொடர்ந்த சிநேகத்துடன் 
புன்னகைத்தார்

பதிவர் அறிமுகத்தில் தைரியமாக மேடை ஏறிய எனக்கு வார்த்தையே வரவில்லை (வெறும் காத்து தாங்க வந்தது)  என் பெயரும் தளத்தின் பெயரும் மட்டும் சொல்லி விட்டு இறங்கி விட்டேன் இன்னும் சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றினாலும் மேடை பயம் என்னை கீழே விரட்டியடித்து விட்டது.

பாமரன் அவர்களின் பேச்சில் அனல் தெரித்தது என்று சொல்வதை 
விட அதில் கிண்டல் தூவப்பட்டு, நகைச்சுவை என்ற கோட்டிங் கொடுக்கபட்டிருந்தது அவரது பேச்சில் மட்டும் விநாடி முள் நிமிட கணக்கில் கடந்ததோ என்று நினைக்க தோன்றியது (டயம் போனதே தெரியலை இதை தான் சுத்தி வளைச்சி சொல்றேன்)
நான்அவருடன் போட்டோ எடுத்து கொண்டு பேசிய போது
பத்திரிகைகள் நம்மை தேடி வரும் படி நம் எழுத்துக்கள் 
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
சிவகுமாரை பார்க்கணும் நான் வரட்டுமா  என்று அனுமதி
போல் கேட்டு  விட்டு அவர் அகன்றது அவர் மேல் இன்னும் 
மரியாதையை ஏற்படுத்தியதுஇறைவனடி சேர்ந்த பதிவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

சாப்பாட்டு இடைவேளை வந்தது நான் தட்டுடன் அருகே செல்ல
கேபிள் சங்கர் சார் வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று கேட்டார் நான் வெஜ் என்றேன். வரிகளை சேர்த்து பாஸ்டாக சொல்லியிருந்தால் என் தட்டில் 
நான் வெஜ் வைக்கபட்டிருந்திருக்கும்.


கேபிள் சங்கரிடம் அவர் துவங்கவிருக்கும் படத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன்
அவரை பற்றி குறிப்பிட வேண்டுமானால் சென்ற வருடம் அவரிடம் என்னை அறிமுகபடுத்தி கொண்ட போது அவர் நீங்கள் என்று கேள்விக்குறியாய் பார்க்கவே, நான் நீங்கள் இப்போது இருக்கும் உயரத்திற்கு வர ஆசைபடும் 
ஒரு சாமான்யன் என்று சொல்லவே  சிரித்த படியே கை குலுக்கி  என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னார்

காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் தன் அறிமுகத்தின் போது பலத்த கர கோஷத்துடன் பேசினார்.அதே போல் கூல் ட்ரிங்க்ஸ் கொடுப்பது தண்ணீர் தருவது என்று வேலைகளை அவரே விருப்பமுடன் செய்தார் நான் மேடம் என்று அழைக்க அவர் மேடம் சொல்லாதீங்க அக்கா அல்லது தங்கை னு சொல்லுங்க என்றார் சரிக்கா  என்று நான் சொல்ல, இங்க பாருங்க நான் இவருக்கு அக்காவாம் என்று எல்லோரிடமும் சொன்னார் (என்னை கலாய்ச்சிட்டாங்கலாமாம் )

அதே போல் நண்பர் சதீஷ் செல்லதுரை குடும்பத்துடன்
வந்திருந்தும், பதிவர் சந்திப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டது வியக்க வைத்தது

தமிழ் வாசி பிரகாஷிடம், அவரது தளத்தில் பதிவு பார்த்து தமிழ் சாப்ட் வேர் என் சிஸ்டத்திற்கு டவுன்லோட் செய்து கொண்டதை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்

மதியம் சாப்பாட்டுக்கு பின் கவிதை படிக்க மயிலன் தயார் ஆகி கொண்டிருந்தார். (பாராட்டையும் பெற்றார்) நான் பாரதிராஜா 
போல் பேசுவதற்காக மேடை ஏறினேன் பயந்து கொண்டே. தொகுப்பாளர் சுரேகாவிடம்  (இவரது குரலுக்கும் தொகுப்புரைக்கும்
 ரசிகன் நான்) மதுமதி தெரிவிக்க, நான் கொஞ்சம் டென்சன் குறையட்டும் அப்புறம் கூப்பிடுங்க என்றேன். அவர் இல்லே இப்ப பேசுங்க என்று என் பெயரை உடனே அறிவித்தார் ஆகா சிக்கிட்டோம் டா என்று மைக் அருகே வந்தேன். நல்ல வேளை அந்த டேபிள் என்னை தைரியபடுதியது என்று நினைக்கிறேன். கொஞ்சம் டென்சன் குறைந்து பாரதிராஜா குரலில் ஆரம்பித்தேன். போக போக பாரதிராஜா குரல் குறைந்து நம் குரல் வெளிபடுகிறதோ என்ற தயக்கம் தோன்றியது. வடிவேல் காமெடி காட்சி போல் நான் ஒழுங்கா தான் பேசறேனா என்று நான் கேட்பதற்கு அருகில் யாரும் இல்லை. பேசி முடித்து இறங்கினேன் என் திறமையை காட்ட வேண்டும் என்று மேடை ஏறியதை விட என் மேடை பயம் போக வேண்டும் என்பதற்காக தான் ஏறினேன்.( சுரேகா சார் உடனே என் பெயரை அறிவிச்சது பத்தி சொல்லணும் னா, நீச்சல் தெரியாத ஒருத்தன் கரையில நின்னுகிட்டு எப்படி இறங்கறது என்று பயத்தில் இருக்கும் போது தள்ளி விடுவார்களே அது போல் தான் இது. நன்றி சுரேகா சார்)

அடுத்து கண்மணி குணசேகரன் பேச வந்தார் அவரது தமிழ் பேச்சு 
கேட்க நன்றாக இருந்தது அதிகப்படியானது போலவும் இருந்தது 
(ஸ்வீட்டாஇருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமா சாப்பிட முடியாதே  
அதனால் இருக்கலாம் )

பின் நடந்த புத்தக வெளியீட்டில் தீஷ் சங்கவி, மோகன் குமார்,சேட்டைக்காரன், யாமிதாஷா,மற்றும் சுரேகா எழுதிய
புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் ஐந்து புத்தகங்கள் என்பதால் கொஞ்சம் நேரம் அதிகமானது என்றாலும் எழுத்தாளர்களின் பேச்சிலும் முகத்திலும் தெரிந்த சந்தோஷ திருப்தி முக்கியம் அல்லவா.
( நண்பர்கள் அனைவரும் வெற்றி எனும் கோட்டை தொட எனது வாழ்த்துக்களும் அடுத்த நூல் வெளியீட்டிற்கு 
இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்களும் )

 ரஞ்சனி நாராயணன் அவர்கள் என்னை பார்த்தவுடன் பதிவுகள் படிக்கிறேன் நல்லாருக்கு என்று சொன்னது மட்டுமில்லாமல் விழா முடிந்த அடுத்த 
நாள் முக நூலில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும்  செய்தி அனுப்பியிருந்தார் (எனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அம்மா ) 

 நண்பர் சீனு பற்றி சொல்வதென்றால் சென்ற பதிவர்திருவிழாவில் 
தான் அறிமுகம் அதற்கு பின் செல் போனிலும் பதிவுகளிலும் 
மட்டுமே பேசியிருக்கிறோம். அன்று நிறைய பேசலாம் என்றிருந்தோம் டயமில்லாததல் முடியவில்லை. இதை நான் சொல்லலீங்க சீனு என்னிடம் சொன்னது.(நான் கிளம்பும் நேரத்தில் கொஞ்ச நேரம் இருங்க சார் போகலாம் என்று அடங கொண்டு எனை நிறுத்தி 
வைத்தது அவரது அன்பு)


தளிர் சுரேஷ் அரங்கத்திற்குள் வர அவரை பார்த்தவுடன் நலம் விசாரித்ததோடு மட்டுமில்லாமல் அவர் பதிவுகள் படிப்பதை யும் 
செல் போன் மற்றும் அலுவலகத்தில் படிப்பதால் தமிழில் கமெண்ட் 
போட முடியவில்லை என்பதையும் தெளிவு படுத்தினேன் 


கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் ஆனந்தவிஜயராகவன் (கோவை ஆவி) இப்போது தான் அறிமுகம். என்னை கண்டதும் 
நீங்க தானா அது என்று ஆர்வமுடன் பேசினார் கூடவே அவர் 
எழுதி மெட்டமைத்த பாடலை பாடுவதற்கு என்னையும் சேர்த்து கொண்டார்.(அதாவது கோரசுக்கு ஒரு ஆள் குறையுது நீங்களும் 
வாங்க என்று) நானும் நான் எங்க எப்படி இருந்திருக்க வேண்டியவன் என்ற கவுன்டமணி டயலாக் மனதில் தோன்ற அவரிடம் சிக்கினேன். 
பின் அவரிடம் நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டோம். இருந்தும் மேடையில் ராகம் மறந்துட்டால் என்னாவது என்ற பயம் வந்தது
அந்த பயம் இவனுங்க சொதப்பிட்டால் என்னாவது என்று அவருக்கும் இருந்திருக்கும். இருந்தும் மேடையில் பாடி முடித்த பொது கிடைத்த 
கை தட்டல்கள் அந்த பாடலுக்குண்டான வெற்றி. this credit only goes to 
ஆவி நண்பா இன்னும் சில சரணங்களை சேர்த்து மியூசிக் ஆல்பம் 
மாதிரி போட்டுடுங்க பின்னிடலாம். (எனக்கும் சான்ஸ் உண்டு தானே)

மதுமதியின் குறும்படம் ஒரு வலி மிகுந்த வறுமையை இளமையை   கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்பதை அழுத்தமாக பதிவு செய்தது. இருந்தும் அந்த பெண்ணின் பள்ளியில் ஏற்படும் கஷ்டங்களை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்பது 
எனது தாழ்மையான கருத்து. இருந்தும் கண்டிப்பாக பார்க்கும்
ஒவ்வொருவரின் மனதில் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனபது 
திண்ணம். வாழ்த்துக்கள் மதுமதி சார்


லியோனி பட்டிமன்றத்தில் பேசும் பட்டிமன்ற பேச்சாளர் திரு .கவிஞர்.முத்துநிலவன் அவர்களை சந்தித்தது ஒரு இனிய அனுபவம். அவரது தளம் பற்றி நான் கேட்டு தெரிந்து கொண்டேன் எனது தளம் பற்றியும் தெரிந்து கொண்டார். அவர் மேடையில் பேசும் போது மதுமதி குறும்படம், பாதிப்பை ஏற்படுத்தியதை பற்றி சொல்லி ஒவ்வொருவரும் அவரவர் தளங்களில் நண்பர்கள் எடுக்கும் குறும்படங்களை பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அவரை நானும் டி.என்.முரளிதரன் அவர்களும் வழியனுப்பிய போது போட்டோ 
எடுத்து கொண்டோம்எழுத்தாளர் வா.மு.கோமு சிறுகதைகளை தொடர்ந்து ஆனந்த 
விகடனில் படிப்பதை அவருடன் பேசும் போது தெரிவித்தேன்


ரமணி சார் பற்றி சொல்வதென்றால் நான் மதுரை வந்திருந்த போது தங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மையால் முடியவில்லை என்று ஒரு முறை தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் சொல்லியிருந்தால் நானே உங்களை வந்து பார்த்திருப்பேனே என்றார். அந்த அளவுக்கு அவர் பதிவுலக தோழமை மேல் கொண்டிருக்கும் நட்பு வியக்க வைக்கிறது.கரந்தை ஜெயக்குமார் அவர்களை நான் பார்த்து விட்டு வந்தது பற்றி அவர் குறிப்பிட்டு சந்தோசப்பட்டார் 


நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்கள் எனக்கு அறிமுகமில்லை. இருந்தும் டில்லியிலிருந்து வந்து குடும்பத்துடன் அவர் கலந்து கொண்டது ஒரு சிறப்பான விஷயம் என்றால் அவருடன் அவரது மனைவி மற்றும் 
மகளும் கூட தளம் ஆரம்பித்து எழுதுவது இன்னும் ஒரு சிறப்பு 
பதிவுலகம் மேல் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு வியக்க 
வைக்கிறது வாழ்த்துக்கள் சார்


கே.ஆர.பி.செந்தில் சைதை அஜீஸ் இந்த விழாவில் தான் 
எனக்கு அறிமுகம் இன்னும் பலருடன் ஒரு ஹலோ மற்றும்
புன்னகையோடு கடந்து சென்றேன் (அறிமுகமில்லாததால்)இதில் ஒரு முக்கியமான் விஷயம் என்னவென்றால் நான் இதில் கலந்து கொண்டது இத்தனை நண்பர்கள் எனக்கு கிடைத்தது இவையெல்லாம் 
இனிய நண்பர் கரை சேரா அலை அரசனால் தான். மேலும் அவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் என்னிடம் மாத்திரை எடுத்து கொண்டீர்களா இப்போ எப்படி இருக்கு என்று அவ்வபோது கேட்டவாறே இருந்தார் 

(நன்றி அரசன்) 

குறைகள் ஏதேனும் இல்லியா என்றால் நேரமின்மையும் 
இடமும் மட்டுமே. எந்த ஒரு செயலையும் 100% யாராலும்
சரியாக முடித்து விட முடியாது. ஏதேனும் சில குறைகள் இருக்க 
தான் செய்யும். அவை இந்த விழாவுக்கான திருஷ்டி என்றே எடுத்து கொள்ள வேண்டும். மேலும் நான் மேலே குறிப்பிட்டதை போல் 
நிழல் தரும் மரத்தடியில் இளைப்பாறும் போது மர இலைகளின் 
ஊடே வெளிப்படும் வெயில் வந்து நம் மேல் தாக்கினால் அதற்காக
மரத்தை குற்றம் சொல்ல முடியுமோ 


இப்படி எல்லோருடனும் கலந்துரையாடி விட்டு விழா முடிந்து
கிளம்ப வேண்டிய தருணம் வந்த போது வாசலுக்கு கால்கள் முன்னெடுக்க மறுக்கின்றன.கல்லுரி நாட்களில் என்.எஸ்.எஸ் கேம்ப் முடித்து விட்டு கிளம்புகையில்,வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்று முடிந்த பின், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விட்டு கிளம்பும் தருணங்களில்,மனதில் ஒரு இனம்புரியா உணர்வு தோன்றுமே அதே உணர்வு தான் அப்போதும் தோன்றியது.

இந்த இனிய நிகழ்வை ஏற்படுத்தி தந்து உழைத்திட்டவிழா குழுவினருக்குகும் கலந்து கொண்டு சிறப்பித்த பதிவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் 
  
FINAL PUNCH 

சென்ற வருடத்தை விட இவ் வருடம் நான் அதிகளவில் எல்லோராலும் அறியபட்டிருக்கிறேன். (சென்ற வருடம் குறிப்பிட்டிருந்தேன் பல 
பேருக்கு என்னை அடையலாம் தெரியல. ஒரு வேலை ஆளில்லாத கடையில் டீ ஆத்திகிட்டு இருக்கோம் போலிருக்கு என்று) நீங்க 
தானா அது என்று ஆச்சரியத்துடன் கை கொடுத்தார்கள். என் எழுத்து எனக்கு கொடுத்திருக்கும் வெளிச்சம் இது. இன்னும் என்னை மேம்படுத்தி 
கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு (என் எழுத்துக்கும்) இருக்கிறது


ஆர்.வி.சரவணன் 

35 கருத்துகள்:

 1. ஆர்.வி.சரவணன் அவர்களே,

  பலரும் படம் போட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க, முழுசாக ஒரு தகவலும் கிடைக்கல,உங்கப்பதிவு அக்குறையை போக்கியது,நல்ல நியாபகசக்தி,வல்லாரைக்கீரை நிறைய சாப்பிடுவீங்களோ :-))

  பின்குறிப்பு:

  படம் போட்ட பதிவும் பார்த்தாச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களின் தளங்களில் தங்களின் கருத்துரைகள் படித்திருக்கிறேன்.தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   வல்லாரைக்கீரை நிறைய சாப்பிடுவீங்களோ :-))

   இது வரை சாப்பிட்டதில்லை

   நீக்கு
 2. பதிவர் சந்திப்பில் மீண்டும் ஒருமுறை இருப்பதைப்போல
  முழுமையான விரிவான அருமையான பகிர்வு
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பதிவர் சந்திப்பு விவரங்கள் அருமை. பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத குறையினை தங்களின் பதிவு போக்கிவிட்டது. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. //பால கணேஷ் சார்,என்னை உற்சாகமூட்டினார்//

  அவரோட ஸ்பெஷாலிட்டியே அதுதாங்க..

  பதிலளிநீக்கு
 5. //வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று கேட்டார் நான் வெஜ் என்றேன். //

  ஹஹஹா

  பதிலளிநீக்கு
 6. //அடங கொண்டு எனை நிறுத்தி
  வைத்தது அவரது அன்பு)//

  அவரு எப்பவுமே அப்படிதான் பாஸு. பாசக்காரப் பய..

  பதிலளிநீக்கு
 7. //அவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் என்னிடம் மாத்திரை எடுத்து கொண்டீர்களா இப்போ எப்படி இருக்கு என்று அவ்வபோது கேட்டவாறே இருந்தார் //

  அன்பின் அரசனாவும் இருப்பார் போலிருக்கு..

  பதிலளிநீக்கு
 8. //மேடையில் ராகம் மறந்துட்டால் என்னாவது என்ற பயம் வந்தது//

  குருகிய காலத்தில் பயற்சி எடுத்து கலக்கீட்டீங்க.. அடுத்த முறை முன்கூட்டியே நாமே ப்ராக்டீஸ் பண்ணிடுவோம்..

  பதிலளிநீக்கு
 9. முழுமையான விரிவான பகிர்வு மிகவும் அருமை... வாழ்த்துக்கள் சரவணன் சார்...

  பதிலளிநீக்கு
 10. தங்களது பார்வையில் பதிவர் திருவிழா பற்றி சொன்னது அருமை.. இடையிடையே பலருக்கும் நன்றிகள்..... நீங்க ரொம்ப நல்லவரு....

  பதிலளிநீக்கு
 11. ஒவ்வொரு பதிவர்களும் சந்திப்பு பற்றி எழுதும் பொது அவர்கள் தம் உண்மையான குணங்களை கண்டு கொள்ளலாம் மற்றும் உண்மை நிலவரங்களையும், அதன் உழைப்பாளர்களையும் தெரிந்து கொள்ளலாம், மற்றும் புதிய புதிய முகமறியா நண்பர்களை சந்திக்கும் பொது நாம் அடையும் சந்தோசம் நம்மை பத்து வருசத்துக்கு பின்னே கொண்டு சென்று உறசாகம் அடைய செய்து விடும் இல்லையா...?

  நன்றி நண்பரே....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்தோடு நான் உடன் படுகிறேன் நண்பரே, என் தளத்திற்கு தங்களின் முதல் வரவு நன்றி

   நீக்கு
 12. அன்பின் சரவணன் - பதிவர் சந்திப்பு பற்றிய பதிவு நன்று - நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருந்து பதிவாக இட்டமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. முழுமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 14. பதிவர் சந்திப்பு பற்றிய முழுமையான பதிவு...
  நிறைய பதிவர்களை சந்தித்து பேசியிருக்கிறீர்கள்..

  தயக்கம் காரணமாக நான் நிறைய பேரிடம் பேசவில்லை..
  உங்கள் பதிவை படித்தபின் பேசியிருக்கலாமோ என்று
  பீலிங்காக உள்ளது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் ஒரு காலத்தில் அப்படி தான் இருந்தது.தயக்கத்தை தூர விரட்டியதால் தான் எனக்கு இன்று இவ்வளவு நண்பர்கள் உங்களையும் சேர்த்து.தங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து படித்து வருகிறேன்

   நீக்கு
 15. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சரவணன் சார்
  விரிவாக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். மிமிக்க்ரி நன்றாகவே இருந்தது
  தொடர்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் மகிழ்ச்சியே முரளிதரன் சார் தங்கள் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 16. உங்களின் பதிவுகள் அவ்வளவாக படித்திராமல் இருந்தாலும் கோவை நண்பர்களுடன் நீங்களும் இருந்ததைப் பார்த்தேன்...நான் அடிக்கடி படிக்கும் பதிவர்களிடம் நானாகச் சென்று பேசினேன்... அடுத்த முறை மற்றவர்களிடம் பேச இந்த சந்திப்பு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்...உங்களுடனும்...நன்றி உங்கள் பதிவிற்கு....

  பதிலளிநீக்கு
 17. பதிவர் திருவிழாபற்றிய முறையான, முழுமையான பதிவு இது.
  எதையும் விட்டுவிடவில்லை என்று நினைக்கிறேன். முடிந்த-
  மட்டில் அனைத்து பதிவர் பெயரையும் குறிப்பிட்டுவிட்டீர்கள்.

  இன்னும் சில படங்களைப் போட்டிருக்கலாம்.

  படிக்கும்போதே உங்கள் மகிழ்ச்சி, எனக்கும் தொற்றிக் கொண்டு
  விட்டது. நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 18. நல்ல கவரேஜ் சார்.. இப்பவு சொல்றேன் அன்னிக்கு நாம பேச டைம் இல்ல, உங்கள நிறுத்தி உங்க கூட பேசனும்னும்னு தோணினது, எப்படியும் பேச முடியாது ஏண்டா அவர நிறுத்துறன்னு தோணினது.. விரைவில் சந்திப்போம் சார்.. காய்ச்சலிலும் உற்சாகமாக வளம் வந்தது சிறப்பு சார்..

  உண்மைய சொல்லனும்னா ஆவி பாஸ்க்கு கோரஸ் கொடுக்கற எடத்துல இருந்து தப்பிக்க தான் உங்கள நாங்க கோர்த்து விட்டோம்... ஆனா கூட நீங்க முழு ஈடுபாட்டோட கலந்து கிட்டது ரொம்ப சந்தோசமா இருந்தது.. YOU ARE SIMPLY SUPERB SIR :-)

  கேபிளிடம் நீங்கள் கூறிய வார்த்தைகள் நிச்சயம் பலிக்கும்... இன்னும் பெரிய பெரிய உயரங்களை நீங்கள் தொட வேண்டும் வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் பெரிய பெரிய உயரங்களை நீங்கள் தொட வேண்டும் வாழ்த்துக்கள் சார்

   அப்படிப்பட்ட உயரங்களை நான் எட்டும் போது
   என் நண்பர்களான நீங்களும் என் கூட இருப்பீர்கள் சீனு
   வாழ்த்துக்கள்

   நீக்கு
 19. முழுதையும் மிக கச்சிதமாக கவர் பண்ணியிருக்கிங்க சார் ...

  பதிலளிநீக்கு
 20. விழா நிகழ்வுகளை அப்படியே கண் முன் காட்டி சென்றது உங்கள் வரிகள். இந்த முறை நீங்க இல்ல விழாவில் ஒருவராகவே இங்கும் அங்கும் காணப்பட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 21. உங்கள் உதவிக்கு நட்புக்கு நன்றி சரவணன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்