வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கண்ணன் வந்தான்



கண்ணன் வந்தான்


பதினைந்து வருடங்களுக்கு முன் கிருஷ்ண ஜெயந்தி யின் போது என் அம்மா கிருஷ்ண ஜெயந்திக்காக பட்சணம் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
நான் அப்போது கொஞ்சம் பண கஷ்டத்தில் இருந்த நேரம் அது நான் கடுப்பில் என் அம்மாவிடம் அம்மா நாம் தான் ஒவ்வொரு பண்டிகையையும் விரும்பி முழு மனதுடன் கொண்டாடுகிறோம் ஆனால் கடவுள் நம் குடும்பத்தை எப்போதும் கஷ்டத்திலேயே தான் வச்சிருக்கார் அப்புறம் என்னம்மா கொண்டாடறது என்றேன் விரக்தியாய்.

என் அம்மா, நம்பிக்கையை கை விட கூடாது நம்மால் முடிந்ததை செய்து வழிபடுவோம் என்றவுடன் சரி பால் மட்டும் வச்சி சாமி கும்பிடு அது போதும் என்று சொல்லி விட்டேன்





அன்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது கனவில் நான் ஒரு பெருமாள் கோயிலில் சன்னதியில் நின்று கொண்டிருக்கிறேன் கோயிலில் பிரசாதம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள் எனக்கும் கொடுக்கிறார்கள் நான் சந்தோசத்துடன் பெற்று கொள்கிறேன்

அப்போது ஒரு சிறுவன் என்னிடம் வந்து எனக்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை கேட்கிறான் நான் பிரசாதம் வைத்திருந்த கையை என் முதுகு பக்கம் கொண்டு சென்று மறைத்து கொண்டு அதோ கொடுக்கிறார்கள் பார் அங்கு சென்று வாங்கி கொள் என்று சொல்கிறேன் அவன் அகன்ற பின் நான் சன்னதியில் சாமியை வணங்கும் போது பின்னால் நான் வைத்திருந்த பிரசாத கையில் ஏதோ தட்டுப்படுவது போல் தோன்றவே நான் திரும்புகிறேன் அங்கே அந்த சிறுவன் என் கையில் இருந்த பிரசாதத்தை எடுத்து வாயில் வைத்து சாப்பிட்டு கொண்ட படியே ஒரு குழந்தையின் சிரிப்புடனே என்னை பார்க்கிறான். நான் பிரசாதத்தை எனக்கு தெரியாமல் எடுத்து கொண்டானே என்று கோபமுடன் முறைக்கிறேன்
கனவு கலைந்து விட்டது .

மறு நாள் நான் இதை பற்றி என் வீட்டில் சொன்ன போது எல்லோரும்
கிருஷ்ணர் தான் வந்திருக்கிறார் நீ எனக்கு கொடுக்கவில்லை என்றாலும்
நான் உன்னிடமிருந்து எடுத்து கொள்வேன் என்று சொல்லியிருக்கிறார் என்றார்கள். நான் பரவசமானேன்.

அன்று முதல் கிருஷ்ண ஜெயந்தியன்று ஒவ்வொரு வருடமும் நான்
என் மனைவி, அம்மா, குழந்தைகள் எல்லோரும் மிகுந்த ஈடுபாட்டுடன்
கிருஷ்ணருக்கு நகையெல்லாம் போட்டு அலங்கரித்து வீடு முழுக்க கோலமிட்டு பட்சணங்கள் பல விதங்களில் செய்து வைத்து பூஜை செய்து மகிழ்ச்சியுடன் பெரிய பண்டிகையாக கொண்டாடி வருகிறோம்

இந்த கனவு எனக்கு உணர்த்தியது
கவலைப்படாதே உன்னுடன் தான் நானிருக்கிறேன்
என்பதை தான் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று நினைத்து கொண்டேன்


நம் இல்லங்களில் கிருஷ்ணனின் வருகை
சந்தோசங்களைஅள்ளி வழங்கட்டும்

அவனது அருள்
அனைவருக்கும் கிடைக்கட்டும்


ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. அருமையான அனுபவத்தை பகிர்ந்துள்ளீர்கள்

    படிக்கும்பொழுதே பரவசமாக உள்ளது .
    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. இன்ட்லி -ல் மூன்றாவது வாக்கு அளித்துள்ளேன்

    எனக்கு பிடித்துள்ளது பதிவு

    பதிலளிநீக்கு
  3. r.v.s.,
    அருமையான அனுபவம்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்...
    கிருஷ்ணன் எல்லாருக்கும் நல்லதை கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நெகிழ்வான பதிவுக்கு வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்