ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

தெய்வ திருமகள் ஒரு பகிர்வு


தெய்வ திருமகள் ஒரு பகிர்வு

இந்த படம் நம்மை அழ வைத்து விடுமோ என்ற தயக்கத்தில் இந்த படம் சென்று பார்க்க யோசித்து கொண்டிருந்தேன். இருந்தும் ஆர்வம் அதிகமாக நேற்று சென்று பார்த்தேன் பார்த்த பின் ஏன் இவ்வளவு தாமதமாய் சென்றோம் என்று தான் தோன்றியது

வயதுக்கேற்ற மூளை வளர்ச்சி இல்லாத தந்தைக்கும் அவர் பெற்ற மகளுக்கும் நடக்கும் பாச போராட்டம் தான் கதை. (படம் வேறு மொழியிலிருந்து தழுவல் என்றெல்லாம் பேச்சு இருந்தாலும்) மெல்லிய நகைச்சுவை படம் முழுக்க இழையோட விட்டு நேர்த்தியாய் எடுத்திருக்கிறார்
இயக்குனர் விஜய்

விக்ரம்

விக்ரமின் முக்கிய படங்களில் ஒன்றாக இந்த படமும் பங்கு பெறுகிறது கிருஷ்ணா கேரக்டருக்குள் தன்னை நுழைத்து கொண்டாரா இல்லை தனக்குள் கிருஷ்ணா கேரக்டரை உள் வாங்கி கொண்டாரா என்று தோன்றும் வண்ணம் கன கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார் விக்ரம் . நாசர் கேள்வி கணைகளால் துளைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியாமல் கலங்கி தவிக்கும் போது மிளிர்கிறார் நடிப்பில்

சாரா

விகரமின் பெண்ணாக வரும் இந்த குட்டி ஏஞ்சல் சாரா வை வாரே வா என்று சொல்ல தோன்றுகிறது அவ்வளவு க்யூட் இந்த குழந்தை. நடிப்பிலும் விக்ரமுடன் கை கோர்த்து நம் மனதை கொள்ளை கொள்கிறது.


விக்ரம் தன குழந்தைக்காக போராடுவதை பார்க்கும் போது பார்க்கும் நமக்கு என்ன தோன்றும் அந்த குழந்தையை எப்பாடுபட்டாவது அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றும் அல்லவா அதை தான் அனுஷ்கா செய்கிறார் வெறும் அழகு பதுமை என்றெல்லாம் இல்லாமல் நிறைவாய் செய்திருக்கிறார்.

அமலா பால் குழந்தைக்காக தன் காதலையே தியாகம் செய்யும் கேரக்டர்
அவரும் குழந்தை நிலாவும் பழகும் பள்ளிக்கூட காட்சிகள் நம்மை ஈர்க்க வைக்கிறது

கிருஷ்ணா பள்ளிக்கூட வாசலில் வந்து நின்று வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட நிலா சைகையால் அதட்டி போக சொல்வது படுக்கையில் படுத்து கொண்டு கை விரல்களால் பேசி கொள்வது என்று காட்சிகள் மனசை வசீகரிக்கின்றன

நீதிமன்ற காட்சியில் விக்ரம் நிலா இருவரும் கண்களால் பேசி கொள்வதும் சமிக்சைகளால் குசலம் விசாரிப்பதும் நம் கண்களில் கண்ணீரால் திரையிட வைக்கிறது .

நீதிபதி இந்த இருவரின் உணர்வுபூர்வ உறவை பார்த்து தீர்ப்பு தருவது சிறப்பு

அனுஷ்காவுக்கு ஒரு பாடல். பாடல் படமாக்கப்பட்ட விதம் என்னை கவர்ந்தாலும் அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையில் அந்த பாடல் தேவையா என்று தோன்றுகிறது

சந்தானம் வழக்கம் போல் கல கல ரெண்டு தடவை கேட்டதுக்கே பொறுமை இல்லியே உனக்கு. நாங்க எல்லாம் ரெண்டாயிரம் தடவை கேட்கிறோமே என்று
ஆதங்கபடுவது சிரிக்க வைக்கிறது

ஒளிப்பதிவு ஒவ்வொரு ஷாட்டும் அசத்தலாய் படமாக்கியிருக்கும் நீரவ் ஷா வுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம் பேஷா

சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் அவையெல்லாம் பெரிதாய் தோன்றவில்லை

மனம் லயிக்க வைக்கிறாள் இந்த தெய்வ திருமகள்


ஆர்.வி.சரவணன்


அடுத்த படமாவது படம் வெளியானவுடனே எழுத முயற்சிக்கிறேன்


4 கருத்துகள்:

 1. பல சர்ச்சைகள் இருந்தாலும் இந்த படத்தை பார்த்து நெகிழாதவர்கள் குறைவுதான்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல விமர்சனம் சரவணன்.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மதுரை சரவணன்

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்