சனி, பிப்ரவரி 19, 2011

உன் கொலுசொலி .....
உன் கொலுசொலி .....

அன்பே உன் வீட்டு வாசலிலும் சன்னலிலும்
பால்கனியிலும் மொட்டை மாடியிலும்
உனை தேடி சலித்த என்னை சமாதானப்படுத்தியது
உன் கொலுசொலி

உன் காற் சதங்கையிடம் கொஞ்சம் சொல்லி வை எனை
எப்போதும் கிறக்கத்தில் வைத்திருப்பதை
வாடிக்கையாய் கொண்டிருக்கிறது


ஆயிரம் இரைச்சல்கள் அன்றாடம் எனை புயலாய் சூழ்ந்தாலும்
உன் கொலுசொலி மட்டும் அவற்றுக்கிடையே
புகுந்து புறப்பட்டு எனை தென்றலாய் வந்தடைகிறது

உன் கொலுசுக்கு மட்டும் ஏனிந்த பாரபட்சம்
நான் கைகளில் வாங்கி வரும் போது எழுப்பாத
இன்ப அதிர்வுகளை எல்லாம் உன் பாதங்களில்
நீ அணிந்தவுடன் மட்டும் ஏற்படுத்துகிறதே


ஆர்.வி.சரவணன்

17 கருத்துகள்:

 1. //ஆயிரம் இரைச்சல்கள் அன்றாடம் எனை புயலாய் சூழ்ந்தாலும்
  உன் கொலுசொலி மட்டும் அவற்றுக்கிடையே
  புகுந்து புறப்பட்டு எனை தென்றலாய் வந்தடைகிறது //.....ர‌ச‌னையான‌ வ‌ரிக‌ள்....
  மிக‌ அழ‌காக‌ கேட்கிற‌து கொலுசொலி!

  பதிலளிநீக்கு
 2. உங்கள் காதலியின் கொலுசைப் பாராட்டி,
  நீங்கள் இப்படி கவிதை எழுதியிருப்பது,
  அந்தக் கொலுசுக்குத் தெரியுமா?
  அட்லீஸ்ட் அந்தக் கொலுசை அணிந்துள்ள
  காலுக்குச் சொந்தக்காரிக்காவது தெரியுமா?

  பதிலளிநீக்கு
 3. அட.. கொலுசு படுத்தும் பாடு சூப்பரா இருக்கே..

  பதிலளிநீக்கு
 4. முத்துக்கள் போல கவிதையும் அழகு நண்பரே ...
  தொடரட்டும் கவி பயணம் ...

  பதிலளிநீக்கு
 5. சரிதான் உங்களுக்கும் இந்த வியாதி வந்து விட்டதா? குணப்படுத்துவது கடினம். கொலுசு காலுக்கு சொந்தமானவர் வந்தால்தான் குணமாகும்.

  பதிலளிநீக்கு
 6. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாணவன்

  பதிலளிநீக்கு
 7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா தெரியும் நிசாமுதீன்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 9. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி

  பதிலளிநீக்கு
 10. ஹா ஹா சும்மா கொலுசு பத்தி கவிதை எழுதலாமே என்று தான் பாலா

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

  பதிலளிநீக்கு
 11. உன் கொலுசுக்கு மட்டும் ஏனிந்த பாரபட்சம்
  நான் கைகளில் வாங்கி வரும் போது எழுப்பாத
  இன்ப அதிர்வுகளை எல்லாம் உன் பாதங்களில்
  நீ அணிந்தவுடன் மட்டும் ஏற்படுத்துகிறதே

  அழகான வரிகள். எனக்கு பிடித்து இருக்கிறது

  பதிலளிநீக்கு
 12. ரொம்ப அழகா இருந்ததுங்க..

  ஆனாலும் இந்த கொலுசுக்கு இவ்ளோ ஓரவஞ்சனை ஆகாது.. :-))

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பவி

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆனந்தி

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்