புதன், ஆகஸ்ட் 10, 2011

நீ கண்டும் காணாது சென்றாலும் ......


எனது நண்பர்கள் சிலர் கமல் ரசிகர்கள் அவர்கள் கமல் பற்றி எழுது
என்று சொன்னார்கள் அவர்களுக்காக கமல் பட பெயர்களை வைத்து
நான் எழுதிய காதல் கவிதை இது

இதுவும் நான் தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டது தான்
எனது இந்த முயற்சி எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்




நீ கண்டும் காணாது சென்றாலும் ......



அன்பே
மகளிர் மட்டும் பேருந்தில்
தினம் வந்து இறங்குகிறாய் நீ


பேருந்து நிறுத்தத்தில் ஒரு
புன்னகை மன்னனாய் நிற்கிறேன் நான்


நீ கண்டும் காணாது
சென்றாலும்


என் வாழ்வே மாயம்
ஆகி விடும் என்றாலும்


உனை வைத்து

என் இளமை ஊஞ்சலாடி

கொண்டு தானிருக்கிறது


உனை பற்றி

நினைத்தாலே இனிக்கும்

எப்போதும்


என் கையில்

சிகப்பு ரோஜாக்கள்

இதோ இப்போதும்


என் காதலை

சொல்ல தான் நினைக்கிறன்


மூன்று முடிச்சிட்டு

உன் நாயகன் நானே ஆக வேண்டும்

என்று துடிக்கிறேன்


சொன்னால்
மறுப்பாயா


இல்லை காதலா காதலா

என்று ஏற்பாயா


மனது ஆடுகிறது

ஆடு புலி ஆட்டம்


இப்படியே

தொடர்கையில்


இன்றும் வந்து

இறங்குகிறாய்

நீ


என் ராஜ பார்வை

உன் மீது


எனை நோக்கி

வருகிறாய்


மனதுக்குள்

டிக் டிக் டிக்


எனை

நெருங்குகிறாய்


எல்லாம் இன்ப மயம்
ஆனது எனக்கு


உன் கரங்களால் நீட்டுகிறாய்

திருமண அழைப்பிதழ்


பெற்றோர் நிச்சயித்த
பையனோடு
திருமணம்


வர வேண்டும் என்று

வார்த்தைகளில் வைத்தாய் கண்டிப்பை


என் காதல் அலை வரிசைக்கு

கொடுத்தாய் துண்டிப்பை


அந்த ஒரு நிமிடம்

என் இதயம் எரிமலையாய்

வெடித்தது


அதற்கு துணை நின்று

என் கண்கள்

கண்ணீரை வடித்தது

நான்

உயர்ந்த உள்ளத்தோடு

என் சந்தோசங்கள் அனைத்தும்

உனக்கே வாய்க்கட்டும்


என்று உளமார

வாழ்த்திட்டேன்


இதையே

என் காதல் பரிசாக

அளித்திட்டேன்



ஆர். வி .சரவணன்

10 கருத்துகள்:

  1. சான்சே இல்ல...என்னமா சிந்திக்கிறீங்க...சூப்பர்... பட தலைப்புகளை வைத்து...
    நல்லாயிருக்கு r.v.s!

    பதிலளிநீக்கு
  2. ரெம்ப யோசிக்கிறீங்க போல!!!.. ஹா.ஹா..

    நல்லா இருக்கு சரவணன்.

    பதிலளிநீக்கு
  3. உலகநாயகனின் தலைப்புகளை கொண்டு நளினமான கவிதைக்கு வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  4. அட இது நல்லாருக்கே.. வேற நடிகர்களுக்கும் ட்ரை பண்ணுங்களேன் :)

    பதிலளிநீக்கு
  5. சான்சே இல்ல...என்னமா சிந்திக்கிறீங்க.

    உங்கள் அனைவரின் ஊக்கமே என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  6. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்

    பதிலளிநீக்கு
  8. வேற நடிகர்களுக்கும் ட்ரை பண்ணுங்களேன் :)

    முயற்சிக்கிறேன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி

    பதிலளிநீக்கு
  9. கமல் படங்கள் அருமை. எனக்கு கமலை பிடிக்கும். நடகனாக மட்டுமல்ல அவரின் சமூக அக்கறை காரணமாகவும் பிடிக்கும். கமலின் வழியில் அஜீத்தையும் இந்த காரணத்திற்காக பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்