புதன், ஜனவரி 08, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )

இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்படி ஒரு நாளும் வருமோ 
என்று எதிர்பார்த்ததுண்டு. அந்த நாள்  05-01-2014 என் வாழ்நாளின் முக்கிய நாட்களில் ஒன்றாய் தன்னை இணைத்து கொண்டது 

இறை அருளின் துணையால் எனது ஜனனி பதிப்பக வெளியீடான இளமை எழுதும்  கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் 05-01-2014 அன்று மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. முனைவர் திரு .எஸ் சங்கர் அவர்கள் முன்னிலையில்,கவிஞர் திரு. நா.முத்துக்குமார் அவர்கள் விழா தலைமையேற்று நூல் வெளியிட எழுத்தாளர் இயக்குனர் திருமதி.சந்திரா தங்கராஜ் அவர்கள் பெற்று கொண்டார்.நண்பர் எழுத்தாளர் திரு.சுரேகா அவர்கள்  தன் இனிமை குரலால் நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கினார். திரு. கரை சேரா அலை அரசன் வரவேற்புரையாற்ற, திரு. புலவர் அய்யா, திரு பால கணேஷ் வாழ்த்துரை வழங்க, சீனு மற்றும் கோவை ஆவி நன்றியுரை வழங்க மற்ற இணைய நண்பர்கள் வருகையும் என் குடும்பம் மற்றும் உறவினர்கள் வருகையும் விழாவை மேலும் மெருகூட்ட வைத்தன என்றால் அது மிகையல்ல.இளமை எழுதும் கவிதை நீ....
நூல் வெளியீடு திரு .புலவர் அய்யா ,திரு.செல்லப்பா,மற்றும் 
திரு.கவியாழி கண்ணதாசன் 


விழா மேடையில் புலவர் அய்யா, எஸ்.சங்கர் ,திரு .நா முத்துக்குமார் ,
திருமதி சந்திரா தங்கராஜ் மற்றும்  திரு.எம் .பாலசுப்ரமணியன் (என் சித்தப்பா )


நா.முத்துக்குமார் அவர்களுக்கு பொன்னாடை 
திருமதி .சந்திரா தங்கராஜ் அவர்களுக்கு என் அம்மா 
பொன்னாடை அணிவித்தார் சிறப்பு விருந்தினர்களுடன்
 நான், என் மனைவி,அம்மா 
மற்றும் என் தம்பி  பாடல் ஆசிரியருடன் இணைய நண்பர்கள் நா .முத்துகுமாருடன் என் மகன் ஹர்ஷவர்தன் 


வலைபதிவர் கீதா ரங்கன் மற்றும் பால கணேஷுடன் சீனு மற்றும் அரசன் சுரேகா,ஸ்கூல் பையன்,ஆரூர்.முனா.செந்தில்,சிவகுமாருடன் 


இணைய நண்பர்கள் உற்சாகம்  திரு.கணேஷமூர்த்தி (என் தாய் மாமா) சகோதரர் நவீன் 
மற்றும் சித்தப்பா 


என் தம்பி அரவிந்த் மற்றும் அவர் மனைவி, 
மகள் ஜெயபிரியா 


சிறப்பு விருந்தினர்களுடன்  திரு.கனகராஜ்
(என் தங்கை கணவர் ) 


எஸ்.சங்கர் ,வி.கே.சுந்தர், சந்திரா தங்கராஜ், நா முத்துக்குமார் 

  
இந்த விழாவுக்கு வந்திருந்து, சிறப்பித்து, வாழ்த்தி,இந்த நாளை
 என் வாழ்வில் முக்கியமான நாளாக மாற்றியமைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் (செல்போனில் வாழ்த்து  தெரிவித்த நண்பர்களுக்கும்) நான் என்றும் மாறாத அன்புடன் இருக்க கடமைப்பட்டுள்ளேன் 

அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 

தகவலுக்காக 


நூல் கிடைக்குமிடம் 
டிஸ்கவரி புக் பேலஸ்,கேகே,நகர்,சென்னை 
பக்கங்கள் 192, விலை ரூ 100

14 கருத்துகள்:

 1. நூல் வெளியீட்டுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் சார்... படங்களை பார்க்கும்போதே விழா மிக இனிதாக நடந்திருப்பது தெரிகிறது. இதைப் போல் இன்னும் பல படைப்புகள் உருவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. மிக்க மகிழ்ச்சி... படங்கள் மூலம் கலந்து கொண்ட திருப்தி... எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. புத்தக வெளியீட்டுவிழாவை ஒரு மினி பதிவர் சந்திப்பு போல் நடத்தியது உங்கள் உறவினர்களை சந்தித்தது - மனம் நிறைந்த விழா சார்

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் சார்! படங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. கலந்துகொண்டதில் பல இனிமையான நிகழ்வுகள்... பல பிரபலங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அருமை ஐயா
  விழாவில் கலந்து கொண்ட ஓர் உணர்வினைப் படங்களேத் தருகின்றன.
  வாழ்த்துக்கள் நண்பரே
  எழுத்துலகில் தங்களின் நீண்ட, நெடிய பயணம் தொடர வாழ்த்துகின்றேன்

  பதிலளிநீக்கு
 8. படங்கள் விழாவுக்கு வந்த உணர்வைக் கொடுத்தன...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான விழாவின் படத் தொகுப்பு, விழாவிற்கு வரமுடியாத ஏக்கத்தை நீக்கிவிட்டது.
  பயணங்கள் முடிவதில்லை...!

  பதிலளிநீக்கு
 10. படங்கள் எல்லாம் அருமை! எனக்கு வர முடியாமல் போனாலௌம் என் சார்பில் எனது தோழி வந்து,விழா பற்றி எல்லாம் உரைத்தார்.! மிக்க மகிழ்சி! நன்றி!

  தங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துக்கள் சார்,புத்தக வெளீயீட்டிற்கு.
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்