செவ்வாய், செப்டம்பர் 17, 2013

பல நேரங்களில் சில மனிதர்கள்பல நேரங்களில் சில மனிதர்கள்-1என்னதிது டைட்டில் என்று நினைப்பீங்களே (நன்றி திரு .ஜெயகாந்தன் சார் )
நான் பொது வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களில் பலர்  என் மனதை
வருடியும் இருக்கிறார்கள்.சிலர் மனதை கீரியும்  இருக்கிறார்கள்.இந்த அனுபவங்கள் எனக்கு பலவற்றை கற்று கொடுத்திருக்கிறது. இதை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 
தான் இந்த தலைப்பில் ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கிறேன். 

நான் காணும் நிகழ்வுகளில் மனிதாபிமானத்துடன் நடப்பவர்களை தட்டி கொடுப்பதும், அப்படி இல்லாதவர்களை ஏன் இப்படி என்று ஆதங்கத்துடன் அங்கலாய்க்கும் எண்ணமும் மட்டுமே  இந்த பதிவின் நோக்கம்.முதலில் 
என் மனதை வருடிய ஒருவரை பற்றி பார்ப்போம் மூன்று வருடங்களுக்கு முன், நான் சபரிமலை சென்று திரும்பி கொண்டிருக்கிறேன். எர்ணாகுளத்தில் ரயில் ஏற வேண்டும். மதியம் ரயில் நிலையம் வந்த நாங்கள் அங்கிருக்கும் ஹோட்டலில் சாப்பிட சென்றோம்.
சரியான பசி எனக்கு.லிமிடெட் சாப்பாடு வந்தது எனக்கு சாம்பார், ரசத்தை விட தயிர் சாதம் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசை இருந்தது.அதனால் கொஞ்சமே கொஞ்சம் பேருக்கு சாம்பார் ரசம் ஊற்றி சாப்பிட்டு விட்டு மற்ற சாதத்தில் தயிர் கிண்ணத்தை கவிழ்த்தேன் .

அவ்வளவு சாதத்திற்கு தயிர் பத்தவில்லை.  தண்ணீர் ஊற்றி பிசைந்து 
சாப்பிட ஆரம்பித்தேன். என்னை கவனித்து கொண்டிருந்த ஹோட்டல் முதலாளி (இவர் எதுக்கு நம்மை கவனிக்கிறாரு நாம தான் சாப்பாடுக்கு
 பணம் கட்டிட்டோமே ) எழுந்து என்னருகில் வந்தார். "என்ன சார்  தண்ணீர் ஊற்றி சாப்பிடுறீங்க" என்று கேட்டார். நான் சீரியசாக ஏன் என்ன தயிர் பத்தலை அதான் சாப்பிடறேன்" என்றேன் (கொஞ்சம் நக்கல் கலந்து)

அவர், "என்ன தம்பி எங்களை கேட்டால் தயிர் மோர் குடுப்போமில்ல" என்றார் 
சீரியஸ் முகத்துடன்.

"அதுக்கு எக்ஸ்ட்ரா காசு நான் கொடுக்கணுமே" என்றேன் இன்னும் சீரியசாய் 

" என்ன தம்பி இன்னொரு கிண்ணம் தயிர் அல்லது மோர் கொடுப்பதால் 
எனக்கு என்ன நஷ்டம் வந்துட போகுது.அதுல நான் குறைஞ்சா போயிட போறேன். நீங்க தண்ணீர் ஊற்றி சாப்பிடறதை பார்த்தால் கஷ்டமாக இருக்கு "

என்று சொன்னவுடன், நான் ராஜேந்திரகுமார் நாவலில் வரும் "ஙே" எழுத்து போல் விழிக்க ஆரம்பித்தேன். அவர் எனக்கு தயிர் மோர் கொடுக்க சொல்லி பணியாளரிடம் உத்தரவிட்டார்.  பின்னே என்ன ஆச்சு என்கிறீர்களா. நான் தயிரில் உருண்டு புரண்டு எழுந்தேன். விடைபெற்று கிளம்பும் போது சொன்னார் அவர் ஊர் நாகர்கோவில் என்று. 

அந்த ஹோட்டல் பேரு கூட மறந்து போச்சுங்க. அந்த சாப்பாடு அப்போது என்ன விலை  என்பது கூட மறந்து போச்சுங்க.அவ்வளவு ஏன்  அவர் முகம் கூட மறந்து போச்சுங்க. ஆனால் இன்னிக்கும் அவரோட அந்த உபசரிப்பு ஞாபகத்தில் இருக்குங்க. என்னிக்கும் இருக்கும்

அடுத்த வாரம் நெஞ்சை கீறியவர் பற்றி பார்ப்போம்

ஆர்.வி.சரவணன் 

20 கருத்துகள்:

 1. இதுவே நீங்களா கேட்டிருந்தீங்கன்னா எக்ஸ்ட்ரா அஞ்சு ரூபா வாங்கியிருப்பார்.... உலக நியதி.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி அவர் பணம் வாங்குபவராக இருந்தால் எழுந்து வந்து கவனிக்க தேவையில்லையே நண்பா

   நீக்கு
 2. அன்னம் இட்டவரையும் தயிர் மோர்
  கிண்ணம் தந்தவரையும் நீங்கள்
  மறக்கவில்லை என்பது மகிழ்ச்சி
  தருகிறது சார்!

  பதிலளிநீக்கு
 3. நல்ல மனிதர்... தொடர்ந்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல மனிதர்...

  தொடர்ந்து இதைப்போல் எழுதுங்கள்... நல்ல முயற்சி அண்ணா... பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 5. அப்போ நல்லவங்க இன்னும் இருக்காங்கன்னு சொல்றீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக நண்பா என்ன நாம் தான் கொஞ்சம் அக்கறை எடுத்து கவனிக்க வேண்டும்

   நீக்கு
 6. எல்லா விதமான மனிதர்கள் எங்கேயும் இருக்கத்தான் செய்கிறார்கள்... நம் பார்வையில் ஒரு சிலரே...

  பதிலளிநீக்கு
 7. நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்றாங்க.

  பதிலளிநீக்கு
 8. ஹோட்டல்களில் பெரும்பாலும் தயிர் ஒரு ஸ்பூன் அளவுதான் தருகிறார்கள்.அதற்கான கிண்ணத்தை எப்படித் தான் தயாரிக்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
 9. சில நல்லவர்களும் இருக்கிறார்கள்! நம்மால்தான் புரிந்துகொள்ள முடிவது இல்லை! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. இது போன்ற அனுபவங்களை பகிருங்கள் சார் .. எங்களுக்கும் சற்று உதவியாக இருக்கும்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்