வெள்ளி, செப்டம்பர் 27, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை
புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை 

எனக்கு சுற்றுலா செல்வதென்றால் கொள்ளை பிரியம். எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் சிறப்புகள் வரலாறு போன்றவற்றை 
ஆர்வமுடன் தெரிந்து வைத்து கொள்வேன். அது சின்ன ஊராக 
இருந்தாலும் சரி. அப்படிப்பட்ட எனக்கு புண்ணிய ஸ்தலங்களை 
நோக்கி ஒரு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்க பெற்றால்  
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் இதோ அதை பற்றிய தொடர் 
பதிவு தான் இது

என் அலுவலகத்தில் நான் என் நண்பரிடம் ஷிர்டி செல்ல வேண்டும் 
என்று ஆர்வமாய் சொல்லி கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று
முடிவெடுத்தோம் செல்லலாம் என்று. அதன் படி அலுவலக நண்பர்கள் மூவருடன் சேர்ந்து நானும்  இன்று இரவு ரயிலில் ஆன்மீக சுற்றுலா கிளம்புகிறோம் 

 நாங்கள் செல்லும் ஸ்தலங்கள்

ஷிர்டி சாய்பாபா கோவில் ,பண்டரிபுரம்,சனிசிக்னாபூர், நாசிக் கோயில்கள், (இவற்றுடன் அஜந்தா எல்லோரா ) சென்று விட்டு பின் மும்பை 
வந்து அங்கிருந்து சென்னை வருகிறோம்.

பரபரப்பான வாழ்க்கை சூழலில் சலித்து நிற்கும் போது இது போன்ற பயணங்கள் வாழ்க்கை மேல் ஒரு பிடிப்பினை ஏற்படுத்தும் என்பது 
என் எண்ணம் 


ஒரு நல்ல ஆன்மீக பயண கட்டுரை எழுதும் வாய்ப்பு இதன் மூலம் 
அமையும் என நினைக்கிறேன். ஆண்டவன் அருளுடன் உங்களின் 
அன்பும் ஆதரவும் சேர்ந்தால் இப் பதிவை வெற்றிகரமாய் தொடர வாய்ப்பிருக்கிறது

ஆர்.வி.சரவணன் 

11 கருத்துகள்:

 1. ஆன்மீக பயணக் கட்டுரை தொடருங்கள்... காத்திருக்கிறோம்...

  பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பயணம் நல்லபடியா அமைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 3. பயணம் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஆன்மீக சுற்றுலா அருமையாக அமைய வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 5. நன்முறையில் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று வாருங்கள்.
  புகைப்படங்களுடன் பயணக் கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 7. பயணம் சிறக்க வாழ்த்துக்கள். பயணக் கட்டுரைக்காக காத்திருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 8. // ஒரு நல்ல ஆன்மீக பயண கட்டுரை எழுதும் வாய்ப்பு இதன் மூலம் அமையும் என நினைக்கிறேன். ஆண்டவன் அருளுடன் உங்களின் அன்பும் ஆதரவும் சேர்ந்தால் இப்பதிவை வெற்றிகரமாய் தொடர வாய்ப்பிருக்கிறது //

  உங்கள் பயணக்கட்டுரையை அழகிய படங்களுடன் எதிர்பார்க்கிறேன். பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. இந்த வார வலைச்சர ஆசிரியர் ஆகி, சிறப்பாய் பணி செய்திட நல்வாத்துக்கள்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்