ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

மூடர் கூடம்
மூடர் கூடம்

 இந்த படத்தின்  வித்தியாசமான டீசர் தான் என்னை படம் பார்க்க 
தூண்டியது. வேலையில்லாமல் ஏன் தங்களுக்கென்று குடும்பமே 
இல்லாமல் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நால்வர்,  வெளியூர் 
கிளம்பி செல்ல இருக்கும்  குடும்பத்தினரின் வீட்டில் கொள்ளையடிக்க 
திட்டம் போடுகிறார்கள் அவர்கள் வெளியூர் கிளம்பும் முன்பே இவர்கள் சென்று விடுவதால் நடைபெறும் களேபரங்கள் தான் படம். ஒரு பங்களாவுக்குள் தான் முழு கதையே  நடக்கிறது (சில காட்சிகள் தவிர்த்து)  

நால்வரில் சென்றாயன் பின்னி எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் கேரக்டரை  பார்க்கும் போது சாதாரணமாக தான் அந்த கேரக்டரை கடக்க நினைப்போம். ஆனால் அவருக்கு  தான் செம கேரக்டரே. ஓவியாவை பார்த்தவுடன் அவர் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதும், கோபத்தில் செல் போன்களை உடைத்து போடுவதும், ஓவியாவின் காதலனின் சட்டை ரெண்டாயிரம் என்றவுடன் பொறாமையில் கிழிப்பதும், பின் நெகிழ்ந்து 
போய் தன் சட்டையை கழட்டி கொடுத்து அனுப்புவதும் என்று அவர் 
செய்யும் அனைத்தும் தியேட்டரில் சிரிப்பலை ஏற்படுத்துகிறது 

அடுத்து இயக்குனர் நவீன் நண்பர்களுக்கு ஐடியா கொடுப்பது 
முதல் அவர்களின் முட்டாள் தனத்தை கண்டு கோபப்பட்டு கத்தாமல்  
டியுஷன் எடுப்பது போல் ட்ரை பண்ணுங்க என்று அழகாக தன் 
கோபத்தை வெளிபடுத்துவது என்று ஆச்சரியபடுத்துகிறார்.அவர் 
தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளாமல் மற்ற மூவருக்கும் 
சரியான பங்களிப்பு காட்சிகளில் தந்திருக்கிறார்

முட்டாள் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை என்று போட்டு புரட்டி எடுப்பவர் முட்டாள் என்று சிறுவனை திட்டும் தந்தையிடம் கோபப்பட்டு 
அச் சிறுவனை ஆதரவுடன் அணுகுவதும், தன் மாமன் வீட்டில் ஒரு காபி தந்து தன்னை அனுப்பி விட்டார்களே என்று நொந்து கொள்பவர் சிறுவன் தன்னை தாக்கிய கடுப்பில் அவனை நினைச்ச நேரத்தில் அடிப்பதும் ஓவியாவை அவர் காதலுடன் சேர்த்து வைப்பதும் என்று மற்ற இருவரும் 
சுவாரஸ்ய படுத்துகிறார்கள் 

ஓவியவிற்கு  பயப்படுவதும் அடிக்கடி சீ என்று சலித்து கொள்வதும் தான் வேலையே. இருந்தும் அவர் சென்ட்ரயனை கட்டி அணைத்து கொள்ளும் இடம் ஒரு நெகிழ்ச்சி


 இதே போல் சாப்பிடும் பொருட்களின் பட்டியலை செல் போனில் 
வாசிக்கும் சிறுமி, பயம் காட்டி  பின் பதுங்கும் ஆட்டோ காரர், ஜாப் 
எதிக்ஸ் பேசும் அந்த திருடன், வித்தியாச அணுகுமுறையுடன் உள்ள 
வட இந்திய தாதா, தன்னை நம்பி பொறுப்பு ஒப்படைக்கப்படும் போது 
அவன் அதை சந்தோசமாக சிரமேற் கொண்டு தன பெற்றோரையே  
மிரட்டும் சிறுவன்  ஏற்ற இறக்குமுடன் ஆங்கிலம் பேசும் சிறுமி தன் பார்வையால் நவீனை  அம்பேல் ஆக்குவது  என்று  ஒவ்வொரு கேரக்டரையும் ரசிக்க முடிகிறது. இயக்குனர் முழுக்க முழுக்க நகைச்சுவை  துணை கொண்டு உருவாக்கிய திரைக்கதை யில் வசனங்கள் படத்துக்கு மிக பெரிய பலம். தமிழ் தெரியாத இங்க்லீஷ் காரன் கிட்டே இங்க்லீஷ் மட்டும் பேசும் நீ, இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே இங்க்லீஷ் பேச கூடாது னு ஏன்டா தெரியல டயலாக் ஒரு சாம்பிள் (சில இடங்களில் மட்டும் ஓவர் டோஸ்) 


தாதா வரும் காட்சிகள் அந்த பாத்திர  படைப்பு எல்லாம் நன்றாக இருந்தாலும் அவ்வளவு பில்டப்  கொடுக்கப்பட்டவர் இப்படி  வந்து மாட்டி கொண்டு செத்து போவாரா என்று தோன்றுகிறது 

பங்களாவுக்குள் நடக்கும் கதை களம் அதை நாம் அங்கிருந்த படியே பார்ப்பது போன்ற உணர்வை தந்திருக்கிறது ஒளிப்பதிவு 


பணம் வந்தவுடன் அதை அவர்கள் உதவி  செய்ய போகிறார்கள் என்பது 
நமக்கு முன்பே தெரிந்து போகும் வகையில்  காட்சி அமைத்திருப்பது கொஞ்சம் மைனஸ். அவர்களின் உதவும் மனப்பான்மையை நாம் கை தட்டி வரவேற்கும் வண்ணம்  அமைந்திருக்க வேண்டும் அந்த காட்சி. (பண தேவை எதிர்பார்த்து  வரும்  பெண்மணியை முன்பே கதைக்குள் கொண்டு வந்து விடாமல் அவர்கள் பணம் வாங்கும் நேரத்தில் அந்த பெண்மணி வந்து 
கதறி அழ அதை பார்த்து அவர்கள் இரக்கம் கொண்டு உதவுவதாக இருந்திருக்கலாம்). முன் கதைகள் அவசியம் தான் இருந்தும் எல்லா கேரக்டர்களுக்குமா.(அந்த கார்ட்டூன் முன் கதை நல்லாருக்கு)
 கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடக தனமாய் 
அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் 

படத்தின் இடைவேளையின் போது நமக்கு அருகாமையில்
அமர்ந்திருப்பவர்களின் முகங்களில் தென்படும் சிரிப்பு   
இயக்குனர் நவீனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி 

(புத்திசாலி தனமான)  மூடர் கூடம் 

FINAL PUNCH

இந்த படத்தின் பதிவு எழுதி முடித்து வெளியிடும் நேரத்தில் ஒரு 
கொரிய மொழி படத்தை இது நினைவு படுத்துவதாக முக நூலில் 
செய்தி வந்திருக்கிறது

ஆர்.வி.சரவணன் 

7 கருத்துகள்:

 1. படமும் அருமை விமர்சனமும் அருமை

  பதிலளிநீக்கு
 2. இன்னும் படம் பார்க்கவில்லை...
  விமர்சனங்கள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன.

  நல்ல விமர்சனம் அண்ணா.

  பதிலளிநீக்கு
 3. படம் பார்ப்பதற்குப் பதிலாக உங்கள்
  விமர்சனத்தைப் படித்ததையே
  படம் பார்த்தாகக் கருதிக் கொண்டேன்.
  நன்றி சார் விரிவாய் விவரித்ததற்கு...

  பதிலளிநீக்கு
 4. படம் இன்னும் பார்க்கவில்லை...உங்கள் விமர்சனம் அருமை..பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. பார்க்க நினைத்து பார்க்க முடியாது போன திரைப்படம் சார்...

  பதிலளிநீக்கு
 6. பார்த்துட வேண்டியது தான் சார் ... எல்லா படங்களும் ஏதோ ஒன்றை தழுவியது போல் தான் தெரியும் .. என்ன பண்ணுவது ..?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்