ஞாயிறு, ஜூலை 18, 2010

நம்ம ஊரு

நம்ம ஊரு
நான் சென்னையில் இருந்தாலும் பெங்களூர், டில்லி போன்ற ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எனது ஊரான கும்பகோணம் சென்றாலே, ஒரு சின்ன குழந்தையின் குதுகலம் தான் எப்போதுமே .தாயின் மடியில் சென்று அமர்ந்த சந்தோஷம் தான் எனக்கு (எங்களுக்கும் தான் என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்குது )சமீபத்தில் என் ஊருக்கு என் அம்மாவின் குலதெய்வமான காத்தாயம்மன்கோவிலுக்கு சென்றிருந்தோம் இந்த கோவில் உள்ள ஊரின் பெயர் கபிஸ்தலம். இது கும்பகோணம் டு தஞ்சாவூர் செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ளது.
அந்த இடத்தின் இயற்கையை கண்டு வியந்து நான் எடுத்த சில காட்சிகள்தென்னை மரங்களடர்ந்த அழகான அமைதியான இடம்கோவிலுக்கு வரும் சாலை
கோவிலை சுற்றி உள்ள வயல் வெளிவைக்கோல்போர் (அப்படிதான் சொல்வார்கள் ) அருகே என் மகனும் , என் உறவினர் மகனும்

பச்சை பசேல் என்ற வயல்வெளி எங்கும்


கோவில் நுழைவாயில்


ஆர்.வி.சரவணன்
17 கருத்துகள்:

 1. புகைப்ப‌ட‌ம் ந‌ல்லா வ‌ந்திருக்கு ச‌ர‌வ‌ண‌ன்..

  பதிலளிநீக்கு
 2. அந்த நூறு சிவலிங்கம் இருக்குமே அந்த கோயில் கூட கபிஸ்தலம் தானே ..என்ன சொல்லுங்க கும்பகோணம் அழகு தான் ...வெள்ளரி பிஞ்சு சாப்டீங்களா

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஸ்டீபன்

  என்ன சொல்லுங்க கும்பகோணம் அழகு தான் ...வெள்ளரி பிஞ்சு சாப்டீங்களா

  இந்த இடுகையில் சுற்றிலும் வயல்வெளி என்று நான் குறிப்பிட்டிருந்த படம் உள்ள இடத்தில் தான் வெள்ளரி தோட்டம் மே மாதத்தில் சென்றால் நிறைய சாப்பிடுவோம் நாங்கள் சென்றது ஜூன் மாதம் சாப்பிட முடியவில்லை
  நன்றி பத்மா

  பதிலளிநீக்கு
 4. எனக்கு கும்பகோணம் மிகவும் பிடிக்கும்
  கோயில்களுக்காகவும், தி.ஜா வுக்காகவும்
  இப்போ உங்களுக்காகவும்.

  பதிலளிநீக்கு
 5. இந்த படங்களைப் பார்த்ததும் என்னோட பள்ளி ஆண்டு விடுமுறைகளின் போது கும்பக்கோண‌ம் சென்றதுதான் நியாபகம் வருது. அங்கே என் சித்தி வீட்டுக்கு செல்வோம். பாண்டிச்சேரியில் இருந்து செல்லும் எனக்கு உண்மையிலேயே அந்த ஊர் மிகவும் அழகாக தெரியும். கடைசியாக நான் சென்றது 2008ல். உங்களின் படங்களை பார்த்ததும் மீண்டும் செல்ல ஆசை வருது.. ம்ம் எப்போது வாய்ப்பு கிடைக்குமோ?

  படங்கள் அழகா வந்திருக்கு!

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் படங்கள். தமிழ் சினிமாக்களில் வரும் ஊரல்லவா? பச்சைப் பசெலென்று இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ப்ரியா

  உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி

  நன்றி மது

  குடந்தையின் இயற்கை அழகை நான் தந்தது கொஞ்சம் தான் உங்களின் ஆர்வத்திற்காகஇனி அவ்வபோது தளத்தில்வெளியிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 8. புகைப்படங்கள் அருமை , வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அழகான படங்கள். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. கபிஸ்தலம்... எனது நண்பர் எழுத்தாளர்
  கபிஸ்தலம் எஸ்.ராஜேந்திரன் அங்குதான்
  வசிக்கிறார். ஆனால், அந்த ஊருக்கு நான்
  சென்றதில்லை. கும்பகோணத்திற்கு
  அடிக்கடி, அதாவது எழுத்தாளர் சங்க
  மாதாந்திரக் கூட்டங்களுக்கு வந்துள்ளேன்.

  புகைப்படங்கள் நன்றாக எடுத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 11. உங்க ஊருக்கே வந்த திருப்தி கிடைச்சது..!
  அழகான படங்கள்... பகிர்வுக்கு நன்றி :-))

  பதிலளிநீக்கு
 12. உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
  பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)

  http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 13. உங்கள் நட்பிற்கு ஒரு விருது (பரிசு) வழங்கி இருக்கிறேன்..
  பெற்றுக்கொள்ளுங்கள்.. நன்றி :-)

  http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

  பதிலளிநீக்கு
 14. நன்றி நிசாமுதீன்

  நன்றி ஜெய்லானி

  நன்றி தேவதர்ஷன்

  நன்றி ஆனந்தி உங்கள் திருப்திக்கும் உங்கள் விருதுக்கும் மிக்க நன்றி

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பிகா

  பதிலளிநீக்கு
 15. படங்கள்லாம் நல்லாயிருக்குங்க... நினைவுகளும்தான்... கபிஸ்தலம் வழியா போயிருக்கேன்...

  பதிலளிநீக்கு
 16. சரவணன் ஊருக்கு போய் இருந்தீங்களா! கலக்குங்க.. படங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்