திங்கள், மார்ச் 26, 2012

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமான்.இங்கு புகழ் பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் இது வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று பாடை காவடி திருவிழா இங்கு புகழ் வாய்ந்த ஒன்றாகும். நேற்று 25-03-2012 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது


இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் உடல் நலம் சரியில்லாதவர்கள்அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் பாடை காவடி எடுத்து ஈமக்ரியை செய்வது போல் உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாவில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருந்தனர் இரவு முழுக்க சாலையோரம் முழுதும் இரு புறமும் கடை வீதிகள் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது நான் எடுத்த சில படங்களை இங்கே தந்திருக்கிறேன்
கோவில் நுழைவாயில்

பக்தர்கள் வெள்ளம்


நேர்த்தி கடன்

அம்மன் திரு வீதி உலா
மாரியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க உளமார வேண்டுகிறேன்

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

 1. இப்போதான் அறிந்து கொண்டேன் சார் ,, இப்படியும் ஒரு திருவிழா நடக்கும் என்று ..
  பகிர்வுக்கு என் நன்றிகள் சார்

  பதிலளிநீக்கு
 2. மிக வித்தியாசமான ஒரு நேர்த்திக்கடன். பகிர்வுக்கு நன்றி நண்பரே. ஏப்ரல் முதல் வாரம் எங்க ஊர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா

  பதிலளிநீக்கு
 3. சுப்பெர்ரா இருக்குங்க அண்ணா பதிவு ..படமெல்லாம் பக்கத்துல இருந்து பார்க்குற மாறி இருக்கு

  பதிலளிநீக்கு
 4. சுப்பெர்ரா இருக்குங்க அண்ணா பதிவு ..படமெல்லாம் பக்கத்துல இருந்து பார்க்குற மாறி இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த ஊருக்கு வலங்கைமான் என்ற பெயர் வரக் காரணமான வலது கையில் (வெகு அரிது) மானைக் கொண்டுள்ள சிவன் மற்றும் அவர் உறையும் கோயிலைப்பற்றி எதுவும் எழுதாததேன்? நான் உங்கள் மாவட்டத்தையே சேராதவன். ஆனாலும் எல்லா கோயில்களையும் நேசிப்பவன். வெளியிட்டால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி.

   நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்