வியாழன், மார்ச் 22, 2012

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

மனம் கவர்ந்த பாடல்கள்

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).

பாடலை எழுதியவர்: வைரமுத்து

இந்த பதிவு எனது நண்பர் வினோ அவர்களின் என்வழி வலைத்தளத்தில் 2010 ம் வருடம் நினைவுகளை மீட்டும் இசை தலைப்பில் வெளியானது. உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

 1. எப்போதா ஒரு முறை எங்க ஊரிலிருந்து செல்லும் மினி பேருந்தில் கேட்ட நினைவு ..
  மீண்டும் இப்போ தான் கேட்க முடிந்தது சார் ..
  இனிமையான இசை என்றால் அது ராசா தான் ..

  பகிர்வுக்கு என் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 2. நானும் இப்பாடலைக் கேட்டு ரசிப்பதுண்டு. நினைவலைகளை மீட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அந்த கால பாட்டுக்கள் எல்லாமே சுப்பர் தான் அண்ணா ...
  எனக்கும் பிடிக்கும் ... ஒரு கிளி உருகுது…, //////////paattu
  பகிர்ந்தமைக்கு நன்றிங்க அண்ணா

  பதிலளிநீக்கு
 4. 80 களில் ராஜாவின் ராச்சியம்... அனைத்துப் பாடலகளும் அருமை...
  உங்கள் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 5. ஒரு கிளி உருகுது பாடலை தவிர மற்றவை பற்றி தெரியவில்லை. இன்னும் இப்படி பல படங்களுக்கு முகவரியாக இருப்பவர் ராஜாதான்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்