புதன், மார்ச் 28, 2012

ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்


ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு முன்னணி இயக்குனரின் (அவர் இயக்குனர் மட்டுமே ) ரசிகனாய் இருந்தேன். 

சில வருடங்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் ஒரு புத்தக ஸ்டாலில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்த புத்தக ஸ்டாலில் புத்தகம் வாங்கி தான், அவரிடம் ஆட்டோகிராப் பெற்று கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். உடனே ஒரு புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்துக்கு நீட்டினேன். அவரும் கையெழுத்திட்டு கொடுத்தார். அவர் கையெழுத்து இடும் போது நான், சார் நான் உங்க படங்களின் ரசிகன் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உங்கள் பக்கத்தில் நிற்பதை ரொம்ப சந்தோசமா பெருமையா உணர்றேன் என்றேன். அதற்கு அவர் எந்த ஒரு ரியாக்சனும் செய்யவில்லை. ரு சின்ன ஸ்மைல் கூட வெளிபடுத்தவில்லை. இயந்திர தனமாய் தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் கையெழுத்து போடுவதிலேயே கவனமாக இருந்தார். என் மனது ரொம்பவும்  காயப்பட்டது.

அவ்வளவு பெரிய இயக்குனரின் எத்தனையோ ரசிகர்களில் நீயும் ஒருவன் எத்தனை பேரை தான் அவர் பார்த்து சிரிப்பார் இதை எல்லாம் எதிர் பார்ப்பது தவறு என்று தானே சொல்ல வருகிறீர்கள். நம் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த காசுகள் ஒரு ரூபாய் நாணயங்களாக இருக்கலாம் அதற்காக ஒரு நாணயத்தை யேனும் விட்டு விடுகிறோமா என்ன. அது போல் தான் ஒவ்வொரு ரசிகனும் அவருக்கு முக்கியமானவர். அவர் என்னுடன் பேச கூட வேண்டாம். ஒரு சின்ன பார்வையில் நான் சொன்னதை உள் வாங்கி கொண்டு சின்ன ஆச்சரியமேனும் முகத்தில் காட்டியிருக்கலாம். 
செய்யவில்லை  எனும்போது மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது .

அவரது படம் ஒன்றை கல்லூரி நாட்களில் பார்த்து விட்டு நீண்ட பாராட்டு கடிதம்  எழுதி அனுப்பி வைத்திருந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.


பின் குறிப்பு

இப்போதெல்லாம் ஏதேனும் வி ஐ பி யை பார்க்கும் போது அருகில் செல்ல மனம் வருவதில்லை. காரணம் நாம்  ஏற்கனவே அவர் மேல் கொண்டிருக்கும் ஒரு நல்ல இமேஜ் இதனால் ஸ்பாயில் ஆகிடுமோ எனபதால் தவிர்க்கிறேன். அதற்காக எல்லோரும் அப்படி தான் என்று நான் சொல்லவில்லை எனக்கு கிடைத்த அனுபவத்தை தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆர்.வி.சரவணன்

4 கருத்துகள்:

 1. //( நீங்க உங்க பல்லை நற நற னு கடிக்கிறீங்கனு நினைக்கிறேன்) //

  பாஸ் ... உண்மையை நீங்களே சொல்லிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 2. சில நேரங்களில் பல மனிதர்கள் .. இப்படிதான் ...

  பதிலளிநீக்கு
 3. நட்சத்திரங்கள் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு உரியவை. அவற்றை நெருங்காமல் இருப்பதே நல்லது

  பதிலளிநீக்கு
 4. இதில் இரண்டு பக்கமும் இருக்கிறது பாஸ்.பார்த்துப்பேசி தோள்தட்டி அணைக்கிறவர்கள் இருக்கிறார்கள்.அன்றி இப்படி தவிர்க்கிறவர்களும் இருக்கிறார்கள்.அந்த சிறப்பானகுணம்(?/)அந்த மட்டத்தில் உள்ளவர்களிடம் மட்டுமில்லை.நாலு காசுகள் பையில் இருந்தால் நெஞ்சு நிமிர்த்தி பக்கத்து வீட்டுக்காரர்களை அலட்சியம் செய்யும் மனிதர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை இதற்கு விதிவிலக்கில்லாமல்/

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்