செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

முத்தான மூன்று தொடர் பதிவுமுத்தான மூன்று தொடர் பதிவு

நண்பர் பாலாவின் பக்கங்கள் பாலாஅவர்கள் என்னை மூன்று பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி கொஞ்சம் தாமதமாகி விட்டது
தொடர் பதிவு என்பது என்னை பொறுத்த வரை ஒரு நல்ல கான்செப்ட். ஏனெனில் இதன் மூலம் இணைய தள நண்பர்களுக்குள் கருத்து பரிமாற்றங்களும் அவர்களின் எண்ணங்களின் பகிர்வும் படிக்க சுவாரஸ்யமான ஒன்று

இதோ என் தொடர் பதிவு

விரும்பும் மூன்று

சினிமா
இசை
புத்தகம்

விரும்பாத மூன்று

பொய்
நம்பிக்கை துரோகம்
ஏமாற்றுதல்

மதிப்பிற்குரிய மூன்று மனிதர்கள்

மகாத்மா காந்தி
அன்னை தெரசா
தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய ராஜ ராஜ சோழன்

மூன்று திரைப்படங்கள்

பாட்ஷா
முதல் மரியாதை
மௌன ராகம்

மூன்று உணவு

ஐஸ் கிரீம்
பழங்கள்
சூடான வத்தல் குழம்பு சாதம்


என்னிடம் எனக்கு பிடித்த மூன்று

நம்பியவர் மட்டுமல்லாமல் என்னை நம்பாதவர்க்கும் உண்மையாய் இருப்பது
நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் உடனே மனதில் பட்டதை சொல்லி விடுவது

ஒரு வேலை செய்து முடிக்கும் வரை தொடர்ந்து போராடி ஜெயிக்கும் குணம்


பிடிக்காத மூன்று

அசாத்திய கோபம் அதன் விளைவால் என்னிடம் வெளிப்படும் வார்த்தைகள்

கஷ்டம் வரும் போது சோர்ந்து வாழ்க்கையே வெறுத்து போய் விடும் தன்மை

செண்டிமெண்ட் பார்ப்பது

வாழ்க்கை முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று

இறைவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும்

கஷ்டப்படும் நூறு குடும்பங்களாவது என்னால் பயன் பெற வேண்டும்

உலகின் அற்புத சுற்றுலா தலங்களில் சிலவற்றை என் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியுடன் கண்டு வர வேண்டும்

ஏக்கமான மூன்று

கல்லூரி காலம் வரையில் அன்பிக்காக ஏங்கி தவித்தது

எனக்கு தேவையான ஊக்கம் தந்திருந்தால் நான் இன்னும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பேனே என்று நினைப்பது

சாதனையாளர்களை பார்க்கும் போது நாம் எப்போது இப்படியெல்லாம் சாதனை செய்வோம் என்று நினைப்பது

கற்று கொள்ள விரும்பும் மூன்று

பாட கற்று கொள்ள வேண்டும் (மேடையில் பாட தீராத ஆசை)

ஆங்கிலம் தெளிவாக பேச எழுத கற்க வேண்டும் (என் அன்றாட வாழ்வில் நான் படும் கஷ்டம் இது )

குறும் படம் எடுக்க (இயக்குனர் ஆசையை இப்படியாவது நிறைவேற்றி கொள்ளலாம் )

பிடித்த நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
பாக்யராஜ்
ஜாக்கிசான்

பயப்படும் மூன்று

கடவுள் 100 %
பழி பாவத்திற்கு அஞ்சுவது
எந்த நேரத்தில் எந்த கஷ்டம் வந்து நிம்மதியை குலைக்குமோ என்ற டென்ஷன்

புரியாத மூன்று

வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகள்

பணக்காரர் ஏழை என்ற பேதங்கள்

தோல்வியில் துவண்டவரை கை தூக்கி விட முயலாமல் வெற்றி கண்டவரை நோக்கி கை குலுக்க முண்டியடிக்கும் உலகம்

பிடித்த உறவுகள்

அம்மா
மனைவி
குழந்தைகள்

இனிமையான மூன்று

மனதை வருடும் இசை
உறவுகளுடன் பேசி மகிழும் தருணங்கள்
அமைதியான நல்ல தூக்கம்

முணுமுணுக்கும் பாடல்கள்

ஜனனி ஜனனி
பூங்காற்று திரும்புமா
இந்த மான் உந்தன் சொந்த மான்

பிடித்த எழுத்தாளர்கள்

கல்கி
சாண்டில்யன்
சுஜாதா

பிடித்த ஊர்கள்

நான் பிறந்த குடந்தை
எனது அலுவலக பணியை வெற்றிகரமாய் செய்து முடித்த டில்லி
எப்போது சென்றாலும் எனை கவரும் திருச்சி

கேட்க விரும்பாத மூன்று

அதட்டி அதிகாரமாய் பேசுதல்
பிச்சை கேட்கும் குரல்
புறம் பேசுதல்

பெருமைப்படும் மூன்று

மிகுந்த கஷ்டப்பட்டு போராடி கொஞ்சமே ஆனாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பது

குடந்தையூர் தளம் தொடங்கி அதன் மூலம் என்னை வெளிப்படுத்தி கொண்டு எண்ணற்ற நண்பர்களையும் பெற்றிருப்பது

இந்தியனாய் பிறந்ததற்கு


இந்த தொடர் பதிவை தொடர விரும்புபவர்கள் தொடரலாம்

ஆர்.வி.சரவணன்

13 கருத்துகள்:

 1. மிகுந்த கஷ்டப்பட்டு போராடி கொஞ்சமே ஆனாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பது// well done.
  Super answers.

  பதிலளிநீக்கு
 2. உங்களை பற்றி அறிவதற்கு இந்த பதிவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது சரவணன்..

  உங்களின் ஆசைகள், கற்று கொள்ள நினைப்பவைகள் விரைவில் கைகூட என்னுடைய வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. ஒரு சாதாரண மனிதனின் அத்தனை எண்ணங்களின் வெளிப்பட்டையும் இதில் கண்டேன். என்னை மதித்து பதிவு எழுதியதற்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 4. ஒரு சாதாரண மனிதனின் அத்தனை எண்ணங்களின் வெளிப்பட்டையும் இதில் கண்டேன். என்னை மதித்து பதிவு எழுதியதற்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நல்ல பதில்கள் சரவணன். (கமன்ட் முதல்லவே பப்ளிஷ் ஆச்சா தெரியல :) )

  பதிலளிநீக்கு
 6. அருமை அருமை...கொட்டிவிட்டீர்கள் உங்கள் எண்ணத்தை...

  பதிலளிநீக்கு
 7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி

  Mobilil comment poduvathaal template comment thaan. sorry.
  அதனாலென்ன உங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சி தான் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்

  பதிலளிநீக்கு
 8. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நாடோடி

  என்னை மதித்து பதிவு எழுதியதற்கு நன்றி நண்பரே.
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

  என்னை மதித்து நீங்கள் தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி


  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் வாழ்க்கை முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. தெளிவான நல்ல எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்