சனி, ஏப்ரல் 30, 2011

வளையோசை கல கல கல கல வென ....

வளையோசை கல கல கல கல வென ....

மனம் கவர்ந்த பாடல்கள்


சில பாடல்கள் கேட்கிறதுக்கு மட்டும் நல்லா இருக்கும் சில பாடல்கள் விசுவல்ஆக பார்க்கிறதுக்கும் நல்லா இருக்கும் நான் எப்போதுமே பாடல்களைகேட்கிறதுக்கு ரொம்ப ஆசைபடுவேன். ஆனா பாருங்க நான் விசுவலா பார்க்கிறதுக்கும் ஆசைபடுற பாடல்களில் ஒன்னு தான் இப்ப நான் சொல்லபோறது

சத்யா படத்தில் வரும் வளையோசை கல கல கல வென .... பாடலும் சரி படமாக்கப்பட்ட விதமும் சரி எனக்கு ரொம்ப பிடிக்கும்

கமல் செய்யும் குறும்புகளும் அதை சிணுங்கலோடு அனுமதிக்கும் அமலாவின்நடிப்பும் எனை கவர்ந்த ஒன்று

உதாரணம் சொல்லனும்னா அமலா தன் கை முஷ்டியை உயர்த்தும் போது கமல்முத்தமிட உடனே அமலா கமல் தலையில் குட்டுவார் கவிதை போன்ற காட்சி இது

அதே போல் பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருக்கும் கமலைஉள்ளே வர சொல்லி அமலா சைகையில் அழைப்பார் அந்த சைகை, முக பாவனை ரொம்ப நல்லாருக்கும்

அதே போல் கமல் முத்தமிட்டதால் அமலா பொய் கோபத்துடன் சிணுங்க கமல் சமாதானம் செய்வதும், அவர் லா லா என்று ராகம் பாடும் போது கமல் அமலாவின் கழுத்தை கிள்ளுவதும் , அமலா கமலின் தாடியை பிடித்து இழுத்து விளையாடி அவரை தன் கைகளால் தாக்குவதும் கமல் அதை ரசிப்பதும் என்று படு சூப்பர் ஆனா பாடல் இது

எப்பொழுது இந்த பாடல் டிவியில் போட்டாலும் நான் கண்டிப்பாக பார்ப்பேன்

இந்த பாடலிலும் நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்கள் செய்திருக்கும்இசை ஜாலம் பற்றி, செவிக்கும் மனதுக்கும் இந்த பாடல் தரும் இன்பத்தை பற்றிஇதத்தை பற்றி நான் சொல்லவும் வேண்டுமோ காட்சியாய் கண்டதை என்றும் நம் நினைவில் நீங்காமல் வைத்திருப்பது எது இசை அரசரின் இந்த இசை தான் என்பதும் நீங்கள் அறிந்தது தானே

சரி முடிவா என்ன தான் சொல்றே ன்னு கேட்கறீங்களா

இந்த பாடலை பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த காதலின் மேல் பொறாமையே வந்துடும்


படம் சத்யா

பாடியவர்கள் எஸ் .பி .பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர்

பாடல் வாலி

இசை இளையராஜா

இயக்கம் சுரேஷ் கிருஷ்ணா

படம் வெளியான ஆண்டு 1988

இதோ அந்த பாடல்





ஆர்.வி.சரவணன்














13 கருத்துகள்:

  1. எனக்கும் மிகப் பிடித்த பாடலிது...

    பதிலளிநீக்கு
  2. சூப்பர்! நல்ல பாடல்தான். எனக்கும் ஏன் எல்லோருக்குமே பிடிக்கும்! :-)

    பதிலளிநீக்கு
  3. r.v.s.,
    ரொம்ப நல்லாவே ரசிச்சிருக்கீங்க!அதற்கு பிறகு எத்தனையோ பாடல்கள் வந்தாலும் காதலர்கள் ரசிக்க கூடியதாக உள்ளது சிறப்பு!

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு சரவணன்.. நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. இந்த‌ பாடல் என‌க்கும் ரெம்ப‌ பிடிக்கும் ச‌ர‌வ‌ண‌ன்.. எந்த‌ சேன‌லில் போட்டாலும் பார்த்துவிடுவேன்..

    பதிலளிநீக்கு
  6. இந்த‌ பாடல் என‌க்கும் ரெம்ப‌ பிடிக்கும் ச‌ர‌வ‌ண‌ன்.. எந்த‌ சேன‌லில் போட்டாலும் பார்த்துவிடுவேன்..

    பதிலளிநீக்கு
  7. எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் இது. கேட்பதற்கும் பார்ப்பதற்கும் அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. அடிச்சி கெளப்புங்க சார் ..
    காதல் இந்த பாடலில் நிரம்பி வழியும் ..
    இசை இன்னும் அழகு கூட்டும் ...
    வரிகளும் வசந்தங்களை சொல்லும் ..
    நானும் அடிக்கடி ரசிப்பேன் ..

    உங்களின் விளக்கம் சிறப்பா இருக்கின்றது சார் ...
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. அமலா தன் கை முஷ்டியை உயர்த்தும் போது கமல்முத்தமிட உடனே அமலா கமல் தலையில் குட்டுவார் கவிதை போன்ற காட்சி இது//
    நல்ல ரச்னை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்டீபன்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா

    பதிலளிநீக்கு
  12. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜ ராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்