வெள்ளி, ஏப்ரல் 08, 2011

தோள் கொடுப்போம் வாரீர்


தோள் கொடுப்போம் வாரீர்

இருட்டு இருட்டுன்னு புலமபறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று இது எனக்கு மிகவும் பிடித்த வரிகள்


72 வயதான அன்னா ஹஸாரே என்ற சமூகஆர்வலர் ஊழலுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் ஜன் லோக்பால் என்ற அமைப்பை செயல்படுத்த கோரியும் உண்ணாவிரதம் துவங்கி இருக்கிறார் அவரது இந்த போராட்டம் மக்களின் ஆதரவுடன் மிகுந்த வலுப்பெற்று வருகிறதுஊழல் என்ற இருட்டு சாம்ராஜ்யத்தை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற தீபத்தை மிகுந்த நம்பிக்கையுடன் ஏற்றியிருக்கும் இவரது இந்த முயற்சி வெற்றி பெற நாம் அனைவரும் உறுதியுடன் ஒருமித்த குரல் கொடுப்போம் வாரீர்


அவரது போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்


ஊழலுக்கு எதிராய் ஓர் போர் தொடுப்போம்உச்சநீதிமன்றம் ,தேர்தல் ஆணையம் போன்று ஜன் லோக்பால் என்ற இந்த அமைப்பு சுதந்திரமான அமைப்பு. அரசாங்கத்தின் ,எந்த ஒரு அதிகாரியின் குறிக்கீடும் இதற்கு இருக்காது என்பது குறுப்பிடத்தக்கது


எனது நண்பர் கிரி அவர்களின் தளத்தில் இது பற்றிய தெளிவான இடுகை வந்துள்ளது


http://www.giriblog.com/2011/04/anna-hazaare-against-corruption.html


படியுங்கள் நண்பர்களே


ஆர்.வி.சரவணன்

4 கருத்துகள்:

  1. ஊழலுக்கு எதிராய் ஓர் போர் தொடுப்போம்!!

    பதிலளிநீக்கு
  2. அரசாங்க‌ம் இப்போ ம‌ண்டைய‌ ம‌ட்டும்தான் ஆட்டியிருக்குது..அத‌ அம‌ல்ப‌டுத்தும்வ‌ரை விட‌க்கூடாது.. ந‌ல்ல‌ ப‌திவுங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்..

    த‌வ‌றாக‌ எண்ண‌க்கூடாது க‌ட‌மை தொட‌ர்ந்து அழைப்ப‌தால் யார் ப‌க்க‌மும் போக‌முடிவ‌தில்லை..உங்க‌ ப‌திவு தொட‌ர்ந்து ப‌டித்துக்கொண்டிருக்கிறேன் நேர‌ம் கிடைக்கும்போதெல்லாம் :))

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்