ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

திருத்தாளமுடையார்கோவில்

திருத்தாளமுடையார்கோவில் ஸ்ரீ தாளபுரீஸ்வரர் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் திருத்தலம் நுழைவாயில்
இத்தலம் சீர்காழிக்கு மிக அருகில் இரு கிலோ மீட்டர் தொலைவில் திருக்கோலக்கா என்ற ஊரில் உள்ளது

சுவாமி ஸ்ரீ தாளபுரீஸ்வரர்என்ற பெயரிலும் அம்பாள் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் என்ற பெயரிலும் உள்ளார்கள் விநாயகர் பெரிய பிள்ளையார் என்ற பெயருடன் உள்ளார். சுப்பிரமணியர், மகாலட்சுமி சண்டிகேஸ்வரர், சனி பகவான் பிரகாரத்தில் உள்ளனர்

இக் கோயிலின் சிறப்பு திருஞான சம்பந்தர் அவர்கள் சிவன் பார்வதி யிடம்ஞானப்பால் பெற்ற பின் முதலில் இத்தலம் வந்து தான் பாடினார் அவர் தன் கைகளை தட்டி தட்டி பாட சிவன் எங்கே குழந்தையின் கை சிவந்து பொய் விடுமே என்று தாளம் வழங்கினார் அத் தாளங்களுக்கு அம்பாள் ஓசையை வழங்கினார் ஏழாம் நூற்றாண்டில் நடந்த இந்த அற்புதத்தை ,ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ சுந்தரமுர்த்தி சுவாமிகள் தாம் பாடிய இத் தல பதிகத்தில் உள்ள பாடலின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்


மேலும் பேச்சு வராத குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டு பேச்சு வரபெற்றவர்கள் எண்ணிக்கை 207ஆகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பேச்சு வந்த விபரத்தை தங்கள் கையாலேயே எழுதி உள்ளதை ஆலயத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் காணலாம் .


பிரார்த்தனையின் போது தேன் அபிசேகம் செய்து பேச்சு வராதவர்களுக்கு அளித்து அதை தினமும் காலை கொடுத்து வர வேண்டும்நாங்கள் குடும்பத்துடன் இத்தலம் சென்று வழிபட்டு வந்தோம் நான் எடுத்த சில படங்கள் தந்துள்ளேன்


ஸ்ரீ தாளபுரீஸ்வரர் பிரகாரம்


ஸ்ரீ ஓசை நாயகி அம்பாள் பிரகாரம்
அம்பாள் நுழைவாயில்

ஆலயத்தினுள் வரும் பாதை

தாளம் வழங்கும் சுவாமி ஓவியம்
ஓசை வழங்கும் அம்பாள்

தல விருட்சம் கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக உள்ளது
இவ்வுலகில் பேச்சு வராத அனைவருக்கும் ஸ்ரீ தாளபுரீஸ்வரர் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாள் பேரருள் கிடைக்கட்டும் அவர்கள் திருவாய் மலர்ந்து அதன் மூலம் அவர்கள் தம் பெற்றோர் மனங்களில் இன்பம் பெருகட்டும்

ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

 1. அழகான தரிசனம்!கோயிலின் அற்புதங்கள் ஆச்சரியமூட்டுபவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. singapore irunthalum kovilukku sentra thiruppthi irukkirathu nandri. enakku thirumanam nadanthu 6 varudam akirathu innum kulanthai illai amman arut paarvai pattau nallathae nadakkum endra nambikkai vanthullathu. anaivarum vazhga vazhamudan.

   நீக்கு
 2. உங்களின் மூலம் நாங்கள் அந்த கோவிலை பார்த்தோம் ...
  சிறப்பாக எழுதி இருக்கின்றீர் ..
  மிக்க நன்றி ...
  அம்மனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் ...

  பதிலளிநீக்கு
 3. ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ந‌ல்லாயிருக்கு ச‌ர‌வ‌ண‌ன்..

  பதிலளிநீக்கு
 4. உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தென்றல் சரவணன்

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அரசன்

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்டீபன்

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப நல்ல தகவல் சரவணன். நிச்சயம் இதை நான் யாருக்காகவது கூறப் பயன்படும்.

  கோவில் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிக அழகாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்