சனி, ஜனவரி 22, 2011

சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்


சில நொடி சிநேகம் ஒரு பாலோ அப்

நான் ஏற்கனவே சில நொடி சிநேகம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அந்த சிறுகதையின் பாலோ அப் தான் இந்த இடுகை எனவே இந்த இடுகையை படிக்கும் முன் அந்த சிறுகதையை படித்துவிடுங்கள்


http://kudanthaiyur.blogspot.com/2010/09/blog-post_18.html


அதாவது அந்த சிறுகதையில் வரும் சரவ் நான் தான்


செப்டம்பர் மாதம் ஒரு விசேஷத்தில் கலந்து கொள்ள நான் தஞ்சாவூர் செல்லும் போது நடந்தது இது. நான் அந்த நண்பருக்காக இடம் போட்டு விட்டு உட்கார்ந்து அவருக்காக காத்திருந்த போது பேருந்து கிளம்பி விட்டது நம்மளை பத்தி அவர் என்ன நினைச்சுக்க போறாரோ என்ற கவலையுடன் தஞ்சாவூர் வந்து இறங்கிய எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது நான் இறங்கிய சில நொடிகளில் அடுத்து வந்து நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர்களில் அவரும் ஒருவர் என்னை பார்த்தவர் சார் உங்களுக்காக நான் இந்த பேருந்தில் இடம் பிடித்து அமர்ந்திருந்தேன் என்றார் அவர் .


நானும் அவருக்காக பேருந்தில் காத்திருந்தது பற்றி சொன்னேன் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்து கொண்டோம்


பின் அவரை ஹோட்டல் வரை கொண்டு விட்டு பின் நான் திருப்தியுடன் கிளம்பினேன்


இந்த நிகழ்வை தான் ஒரு சிறுகதையாக்கினேன் சில நொடி சிநேகம் என்ற பெயரில். இந்த இனிய நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

படம் நான் எடுத்தது
இடம் நாகப்பட்டினம் கடற்கரை
ஆர்.வி.சரவணன்

6 கருத்துகள்:

 1. சில நொடி சிநேகம் சந்திப்புகள் அருமை நண்பரே

  படமும் அற்புதம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையே
  சுவையான கதையாக்கி, அதையே
  ஒரு பதிவாகவும் தனியாகப் போட்டுவிட்டீர்களே,
  சுவாரஸ்யம்!

  'பாலோ அப்' -இதை
  ஃபாலோ அப் -என்றுபோடலாமே?

  பதிலளிநீக்கு
 3. உங்க அனுபவத்தையே மிக அழகா சிறுகதையாக்கிவிட்டீர்களே.....சூப்பர்ப்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. நல்ல பயணம்;
  நல்ல ரயில் (பஸ்) சினேகிதர்;
  நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 5. சார் அருமையான் எழுத்து நடை ...
  மிகவும் ரசித்தேன் உங்கள் சிறு கதையை ...
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்