ஞாயிறு, ஜனவரி 09, 2011

சென்னை புத்தக காட்சி


சென்னை புத்தக காட்சி

நான் ஒரு புத்தக பிரியன் நான் மட்டுமல்ல என் வீட்டில் அனைவருமே
புத்தக பிரியர்கள் அம்மா, மனைவி,சித்தி ,மாமா, அத்தை , தம்பி, தங்கை என்று வீட்டில் எல்லோரும் புத்தகம் படிப்பவர்கள்

குமுதம் ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்களாகட்டும் மாத இதழ்களாகட்டும்
வீட்டிக்கு பேப்பர்ஆள் கொண்டு வந்து போடும் போது அதை படிக்க வீட்டில்
சின்ன ரகளையேநடக்கும்

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் பதினான்கு வயதில் ஏற்பட்டது
அன்றிலிருந்துஇன்று வரை அது தொடர்ந்து கொண்டு இருக்கிறது
நான் படிக்கும் வயதில் என்னை படிப்பு கெட்டுடும் எனவே படிக்க கூடாது
என்றுதடை விதித்தார்கள் நான் மீறி வீட்டுக்கு தெரியாமல் படித்து திட்டு வாங்குவேன்

வேலைக்கு சேர்ந்தவுடன் என் சம்பாத்தியத்தில் புத்தகங்கள் வாங்க
ஆரம்பித்தேன் நுலகத்தில் சேர்ந்து உறுப்பினரானேன்
வாரம் ஒரு முறையேனும்நுலகம் சென்று படிப்பேன்

ஏதேனும் சொந்தகாரர் வீட்டுக்கு
சென்றால் கூடஉடனே அங்கிருக்கும் புத்தகங்களை புரட்ட
ஆரம்பித்து விடுவேன் பண்டிகை நாட்களில் வார மாத இதழ்கள்
பெரும்பாலும் வாங்கி விடுவேன்

படிக்க ஆரம்பித்து விட்டால் உலகையே மறந்து விடுவேன்
வார இதழ்களில்பிடித்த பக்கங்களை எடுத்து சேர்த்து புத்தகமாக்கி
சேகரிக்கும் பழக்கமும் இருந்துவருகிறது

பொன்னியின் செல்வன், தியாகபூமி, சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவு, தெய்வீகம், சமையல் , உடல்நலம், சுற்றுலா, என்று முடிந்தவரை சேர்த்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்

அப்படிப்பட்ட எனக்கு அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில
எனும் போது விடுவேனா

புத்தக கண்காட்சி பற்றி தான் சொல்கிறேன் வருடாவருடம் கண்காட்சி
சென்றுஎன் பொருளாதாரத்திற்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி விடுவேன்
தனியாகஒருமுறையும் மனைவி, மகன் ,மகள் என்று குடும்பத்துடன் அழைத்து கொண்டுஒரு முறையும் செல்வேன். எப்படியும் நான் குறைந்தது நான்கு மணி நேராமாவது அங்கே செலவிடுவேன்

இதோ இந்த வருடமும் புத்தக திருவிழா தொடங்கிவிட்டது
நேற்று அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன் டயமாகி விட்டதால் இரண்டு மணி நேரம் தான் இருக்க முடிந்தது இன்னும் ஒரு வாரம் இருக்கே மீண்டும் போகலாம் என்றிருக்கிறேன் நேற்று சுஜாதா அவர்களின் நாவல்கள் வாங்கினேன்

இது வரை வாங்கிய நூல்களில் சில

ராஜபேரிகை,கன்னிமாடம், யவன ராணி ,அலை ஓசை, ரத்தம் ஒரே நிறம்,மன்னன் மகள் , வந்தார்கள் வென்றார்கள் மற்றும் சுஜாதா பட்டுகோட்டை பிரபாகர், பாலகுமாரன் ,எழுதிய நாவல்கள்

என் நண்பர்கள் சிலர் ஏண்டா இப்படி புத்தகம் புத்தகம் என்று அலைகின்றாய் என்பார்கள் அவர்களுக்கு நான் சொன்னது

எனது பள்ளி கல்லுரி படிப்பில் நான் கற்றதை விட நான் படித்த புத்தகங்கள் தான் என் வாழ்க்கையை நான் சரியான முறையில் அமைத்து கொள்ளவும் நான் வாழ்க்கையில் முன்னுக்கு வரவும் உதவியது

நான் படித்த புத்தகங்கள் தான் ஒரு ஆசானாய் இருந்து என்னையும் பதிவுலகில் சில படைப்புகளை எழுத வைத்திருக்கிறது என்று சொன்னேன்

என்ன நான் சொன்னது சரிதானே

சென்னை புத்தக காட்சி எனும் இத் திருவிழா நமக்கான ஒரு விழா

ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. நான் இன்னைக்கு தாங்க திருவிழாவுக்கு போயிட்டு வந்தேன் ...
    என்ன கொஞ்சம் கூடம் அதிகம் ...
    மற்றபடி திருவிழா அமோகம் ....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. புத்தகங்கள் என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதாங்க.. புத்தகங்கள் நல்ல மனிதனையும் அடையாளம் காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  5. புத்தகக் கண்காட்சி பத்தி யார் பேசினாலும் எழுதினாலும் என் காதில புகை.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்